Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

12 ஆவது இந்துக்களின் பெருஞ்சமரில் யாழ். இந்து கல்லூரி ஆதிக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: NANTHINI

01 JUL, 2023 | 10:29 AM
image
 

(நெவில் அன்தனி)

யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கும் கொழும்பு இந்து கல்லூரிக்கும் இடையில் கொழும்பு சரவணமுத்து ஓவல் சர்வதேச விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (30) ஆரம்பமான 12ஆவது இந்துக்களின் பெருஞ்சமர் கிரிக்கெட் போட்டியில் யாழ். இந்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

கே. பரேஷித் குவித்த அரைச் சதம், ரீ. கஜநாத், கே. தரணிசன், எஸ். பரத்வாசன் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சு என்பன முதல் நாள் ஆட்டத்தில் யாழ். இந்து ஆதிக்கம் செலுத்த உதவின.

357108052_1708207209601499_7333059982543

கொழும்பு இந்து முதல் இன்னிங்ஸில் பெற்ற 183 ஓட்டங்களுக்கு பதிலளித்த கொழும்பு இந்து 49 ஓட்டங்களுக்கு சுருண்டது. பலோ ஒன் முறையில் 2ஆவது இன்னிங்ஸில் தொடர்ந்து துடுப்பெடுத்தாடும் கொழும்பு இந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 41 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

357720966_809951343775216_69870987665839

அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட யாழ். இந்து சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப வீரர் கே. பரேஷித் 147 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 80 ஓட்டங்களைப் பெற்றார்.

3ஆவது விக்கெட்டில் எல். பிரியந்தனுடன் 55 ஓட்டங்களைப் பகிர்ந்த பரேஷித், 5ஆவது விக்கெட்டில் எம். கஜனுடன் 44 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

பரேஷித்தை விட துடுப்பாட்டத்தில் எம். கஜன் (28), எஸ். சுபர்ணன் (23), எல். பிரியந்தன் (19), ரீ. ப்ரேமிகன் (13) ஆகியோர் இரட்டை இலக்க எண்ணிக்கைளை பெற்றனர்.

357695247_299682369147900_90630519860891

கொழும்பு இந்து பந்துவீச்சில் ஆர். தேஸ்கர் 36 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் எம். அபிஷேக் 57 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

கொழும்பு பம்பலப்பிட்டி இந்து கல்லூரி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 49 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஆ. டிரோஜன் (17), பி. தாருஜன் (15) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

357687504_1327540071173704_5816697695186

யாழ். இந்து பந்துவீச்சில் ரீ. கஜநாத் 4 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 11 ஓவர்களில் 22 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் கே. தரணிசன் 3 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் எஸ். பரத்வாசன் 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

357613160_224834203832287_71196507673231

பலோன் ஒன் முறையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட நிர்ப்பந்திக்கப்பட்ட பம்பலப்பிட்டி இந்து, முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 41 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஆர். டிலுக்ஷன் 24 ஓட்டங்களுடனும், எஸ். மிதுசிகன் 10 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

(படப்பிடிப்பு : எஸ். சுரேந்திரன்)

download.jpg

IMG_7788.JPG

IMG_7789.JPG

https://www.virakesari.lk/article/158952

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12ஆவது இந்துக்களின் பெருஞ்சமர் : பந்துவீச்சில் கஜநாத், தரணிசன் அபாரம், யாழ். இந்து வெற்றி

02 JUL, 2023 | 06:56 AM
image
 

(நெவில் அன்தனி)

யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கும் கொழும்பு இந்து கல்லூரிக்கும் இடையில் கொழும்பு சரவணமுத்து ஓவல் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற 12ஆவது இந்துக்களின் பெருஞ்சமர் கிரிக்கெட் போட்டியில் யாழ். இந்து 9 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.

ரீ. கஜநாத், கே. தரணிசன் ஆகிய இருவரும் தங்களது அற்புத சுழல்பந்துவீச்சு ஆற்றல்கள் மூலம் தங்களிடையே 18 விக்கெட்களைப் பகிர்ந்து யாழ். இந்துவின் வெற்றியை இலகுபடுத்தினர். கே. பரஷித் குவித்த அரைச் சதமும் அவ்வணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியிருந்தது.

இந்த வெற்றியுடன் இந்துக்களின் பெருஞ்சமரில் 4ஆவது வெற்றியை யாழ். இந்து ஈட்டியது.

பலோ ஒன் முறையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்து கல்லூரி ஒரு கட்டத்தில் 4 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றிருந்தால் ஆட்டம் பெரும்பாலும் வெற்றிதோல்வியின்றி முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கடைசி 6 விக்கெட்களை இழந்த கொழும்பு இந்து கல்லூரி இறுதியில் 9 விக்கெட்களால் தொல்வி அடைந்தது.

வெள்ளிக்கிழமை (ஜூன் 30) ஆரம்பமான அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். இந்து கல்லூரி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப்  பெற்றது.

ஆரம்ப வீரர் கே. பரஷித் 147 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 80 ஓட்டங்களைப் பெற்றார்.

3ஆவது விக்கெட்டில் எல். பிரியந்தனுடன் 55 ஓட்டங்களைப் பகிர்ந்த பரஷித், 5ஆவது விக்கெட்டில் எம். கஜனுடன் 44 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

பரஷித்தைவிட துடுப்பாட்டத்தில் எம். கஜன் (28), எஸ். சுபர்ணன் (23), எல். பிரியந்தன் (19), ரீ. ப்ரேமிகன் (13) ஆகியோர் இரட்டை இலக்க எண்ணிக்கைளைப் பெற்றனர்.

கொழும்பு இந்து பந்துவீச்சில் ஆர். தேஸ்கார் 36 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் எம். அபிஷேக் 57 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

கொழும்பு இந்து கல்லூரி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 49 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஆ. டிரோஜன் (17), பி. தாருஜன் (15) ஆகிய இருவரே இரட்டை இலக்கை எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

யாழ். இந்து பந்துவீச்சில் ரி. கஜநாத் 4 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 11 ஓவர்களில் 22 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் கே. தரணிசன் 3 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் எஸ். பரத்வாசன் 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பலோன் ஒன் முறையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட நிர்ப்பந்திக்கப்பட்ட  கொழும்பு  இந்து, முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 41 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டம் சனிக்கிழமை (ஜூலை 01) தொடர்ந்தபோது யாழ். இந்து நிதானத்துடன் துடுப்பெடுத்தாடியது.

ஆரம்ப வீரர் ஆர். டிலுக்ஷன் சுமார் 3 மணி நேரம் துடுப்பெடுத்தாடி 165 பந்துகளை எதிரகொண்டு 72  ஓட்டங்களைப்    பெற்று 3ஆவதாக ஆட்டம் இழந்தார்.

ஆரம்ப விக்கெட்டில் டி மிதுசிகனுடன் 59 ஓட்டங்களைப் பகிர்ந்த டிலுக்ஷன் இரண்டாவது விக்கெட்டில் தரிஜனுடன் 30 ஓட்டங்களையும் 3ஆவது விக்கெட்டில் என். நிருபனுடன் 39 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.

மிதுசிகன், பி. தருஜன் ஆகிய இருவரும் தலா 16 ஓட்டங்களைப் பெற்றதுடன் நிரூபன் 35  ஓட்டங்களைப் பெற்றார்.

மத்திய வரிசையில் ஆர். டிலோஜன் 10 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ரீ. கஜநாத் 71 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் கே. தரணிசன் 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

37 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவத இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய யாழ். இந்து ஒரு விக்கெடடை இழந்து 38 ஓட்டங்களைப் பெற்று வெற்றீயிட்டியது.

எஸ் அர்ஜன் 21 ஓட்டங்களுடனும் ரீ. பிரேமிகன் 7 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். முதலாவது இன்னிங்ஸில் அரைச் சதம் குவித்த ஹீரோ பரஷித் 9 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.

ஆட்டநாயகன்: கே. பரஷித் (80 ஓட்டங்கள் - யாழ். இந்து), சிறந்த துடுப்பாட்ட வீரர்: ஆர். டிலுக்ஷன் (72 - ஓட்டங்கள் கொழும்பு இந்து), சிறந்த பந்துவீச்சாளர்: ரீ. கஜநாத் (11 விக்கெட்கள் - யாழ். இந்து), சிறந்த களத்தடுப்பாளர்: ரீ. பிரேமிகன் (யாழ். இந்து)

WhatsApp_Image_2023-07-01_at_18.57.55.jp

man_of_the_match__preshshith.jpg

match_play___1_.JPG

celebrations.JPG

match_play___2_.JPG

https://www.virakesari.lk/article/159018

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.