Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)

1992 காலப்பகுதியில் கடற்புலிகள் அமைப்பிற்கு வந்த நாட்களிலிருந்து எட்டு வருடங்கள் தொடர்ந்த நட்பொன்று மூச்சிழந்துபோனது.

எந்தக் கடல் சண்டையெனிலும் படகுக் கட்டளை அதிகாரியாய் அங்கே பழனி நிற்பான்.

"பப்பா வண்" எனும் கோட்வேட் அவனுக்கு பொருத்தமாய் அனைவர் வாயினிலும் உச்சரிக்கலானது.

பூநகரி தவளைப்பாச்சல் சமர் தொடக்கம், முல்லை வெற்றிச்சமர், ஆனையிறவு முப்படைத்தள அழிப்பு வரை குறிப்பாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்பு தரையிறக்க நடவடிக்கையின் கதாநாயகன் எங்கள் பழனி என்பது தமிழர் வரலாற்றுப்பதிவுகளில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டியது.

சிங்களத்தின் கடற்கலங்களை எல்லாம் புரட்டிப் போட்ட சமர்களிலெல்லாம் பழனியின் கொமாண்டும் கணிசமாய் இருக்கும். உகண, பபதா, வலம்புரி, லங்காமுடித போன்ற சிங்களத்தின் ஆழ்கடல் வினியோக கலங்களை கடலுக்கடியில் 28 Njrj;jpd; Fuy; Fuy; 31 அனுப்பிவைத்த கடற்சண்டைகளில் முன்னின்று சமராடிய மூத்த கடற்புலி போர்வீரன் எங்கள் பழனி.

மொத்தத்ததில் அவனின்றி கடற்புலிகளின் வரலாற்றுச் சாதனைகளை முழுமையாக எழுதி விடமுடியாத கடற்புலி மறவன் இந்த லெப் கேணல் பழனி.

சிங்களக்காடையரின் இனக்கலவரமொன்றில் குடும்ப உறவுகள் அனைவரையும் பறிகொடுத்து எங்கோ அநாதரவாய் கைவிடப்பட்ட பிள்ளையாய் பதுளையிலிருந்து தனது 15வது வயதில் போராடப் புறப்பட்டு வந்தவனை வன்னிக்காடு அரவணைத்துக்கொண்டது, அன்றிலிருந்து இயக்கமே அவனது குடும்பமென்றானது. விடுமுறையில் வீட்டுக்குச் செல்ல குடும்ப உறவுகள் இல்லாத போராளியாய் பழனி இருந்தான்.

போர்க்களமே அவனுக்கு பொழுதுபோக்காய் ஆனது. 1991 இல் எமது விடுதலை இயக்கத்தால் முதன் முதலில் பெயர்சூட்டி நடத்தப்பட்ட மரபுவழிப்போர் நடவடிக்கையான ஆகாயக்கடல் வெளிச்சமரில் இயக்கத்தின் முதல் மரபுவழி தாக்குதல் படையணியான சாள்ஸ் அன்ரனி படையணியின் போர்வீரனாய் களமிறங்கியவன், 1992 காலப்பகுதியில் கடற்புலிகள் அமைப்பு உருவாக்கம் பெற்றபோது அதில் இணைந்துகொள்கிறான்.

யாழ் வடமராட்சி திக்கம் பகுதியில் அமைந்திருந்த 1-6  (வண் சிக்ஸ்) எனப்படும் கடற்போக்குவரத்து வழிகாட்டுதல் கற்கைநெறி முகாமில் கடல்சார் கற்கை நெறியை முடித்துக்கொண்டு கிளாலி கடல்நீரேரியின் பொதுமக்களின் போக்குவரத்து காவலனாய் கண்விழித்துக் களமாடினான்.

படிப்படியாய் உயர்ந்தவன் சிறந்த கடலோடியாக, கனரக பீரங்கி சூட்டாளராக, படகுக்கட்டளை அதிகாரியாக, ஆழ்கடலில் பன்னாட்டுப் பெருங்கடலில் ஆயுத நடவடிக்கையில் ஈடுபட்ட கப்பலொன்றின் கப்டனாக, ஒரு சிறந்த பொறுப்பாளராக, தாக்குதல் தளபதியாக, அனைவ ருக்கும் அன்பான அண்ணனாக, சகோரதனாக, நண்பனாக தன்னை அமைத்துக் கொண்டான்.

தேசியத்தலைவர் தோள்தட்டி வளர்க்கும் தளபதியாய் வளர்ந்து உயர்ந்தவன்.

கடலில் நடைபெற்ற மூர்க்கமான சண்டைகளிலெல்லாம் பழனியைச்சுற்றி எமது அலைவரிசைக் கருவிகள் முழுதும் குரலெழுப்பிய காலங்கள் தான் இன்றும் காதுகளில் இரைகின்றது.

பலவெற்றிச் சமர்களுக்கெல்லாம் வித்திட்டு நின்ற வீரவேங்கையவன்.

சிங்களத்தின் திட்டமிட்ட நில அபகரிப்பு நடவடிக்கைகளான ஜெயசிக்குறு, சத்ஜெய போன்ற பாரிய படையெடுப்புகளை முறியடித்து முடக்க கடற்புலிகளின் கனரக பீரங்கிப்படைகளை தரையால் கொண்டுசென்று மோதித்தகர்த்த மூர்க்கப் போர்வீரன் அவன்.

இயக்கத்தின் கடைசி மூச்சென்று தலைவரால் கூறப்பட்டு பெயர்சூட்டி நடத்தப்பட்ட அந்த இரகசிய கடல் நடவடிக்கையான ‘மூச்சு நடவடிக்கை’ எனும் ஆழ்கடல் ஆயுத வினியோக நடவடிக்கையில் தொடராக 25 நாட்கள் முக்குளித்து நின்று வானில் எமது வான்கலங்கள் பறப்பதற்காய் அந்தக் கலங்களையே சுமந்துவந்த படகில் இவனுமாய் பத்திரமாய் கரைசேர்த்த பாரி அவன்.

ஒன்றாயிருந்து ஒருவேளைகூட விட்டுப்பிரியா உறவாகி தோள்கொடுத்துநின்ற நண்பனிவன் 15/08/2000 அன்று தனது இன்னுயிரை எம் தேசத்துக்காய் தந்து வீரவரலாறாய் மண்ணை முத்தமிட்டான்.

 

விட்டுப்பிரிய முடியாத நினைவுககளுடன்,

புலவர்,

கடற்புலிகள்.

Edited by நன்னிச் சோழன்


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.