Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செப்டெம்பர் 11இல் ஆரம்பமாகிறது ஐ.நா.வின் 54ஆவது கூட்டத்தொடர் : உள்நாட்டு முன்னேற்றங்கள் வெளிப்படுத்தப்படும் என்கிறது அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
26 AUG, 2023 | 07:38 PM
image
 

ஆர்.ராம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.

இதன்போது இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் ட்ரக்கினால் எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதற்கு முன்னதாக ஒழுங்கமைப்புக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (28) ஜெனிவாவில் நடைபெறவுள்ளதோடு, இம்முறை நடைபெறும் ஜெனிவா அமர்வின்போது இலங்கை தொடர்பில் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51 கீழ் 1 தீர்மானத்தின் உள்ளடக்கங்களின் அமுலாக்க அடைவு மட்டம் சம்பந்தமான மதிப்பீடும் வெளிப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் எவ்விதமான விசேட தூதுக்குழுவும் பங்கேற்காது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளார்.

அதேநேரம், உள்நாட்டில் இலங்கை அரசாங்கம் எட்டியுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹிமாலி சுபாஷினி அருணாதிலக இம்முறை அமர்வு தொடர்பிலான விடயங்களை தலைமையேற்று முன்னெடுக்கவுள்ளதோடு, இலங்கையின் சார்பிலான பதிலளிப்புக்களையும் வழங்கவுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் செயற்படும் இராஜதந்திரிகளிடத்தில் இலங்கையின் முன்னேற்றகரமான செயற்பாடுகள் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/163243

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனின் ஏற்பாட்டில் இணையனுசரணை நாடுகளுடனான சந்திப்பு இன்று - இதில் பங்கேற்க எம்.ஏ.சுமந்திரன் ஜெனிவா பயணம்

06 SEP, 2023 | 10:29 AM
image
 

(நா.தனுஜா)

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடருக்கு முன்னரான நாடுகளுடனான சந்திப்பு இன்று (6) ஜெனிவாவில் நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்துகொள்வதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேற்று செவ்வாய்க்கிழமை (05) ஜெனிவா பயணமானார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரையான ஒரு மாத காலத்துக்கு நடைபெறவுள்ளது. பேரவை அமர்வின் தொடக்க நாளான 11ஆம் திகதியன்று ஏற்கனவே இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தலைப்பிலான 511 தீர்மானத்தின் உள்ளடக்க அமுலாக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதனைத் தொடர்ந்து இலங்கை தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் நடைபெறும்.

இவ்வாறானதொரு பின்னணியில் பிரிட்டன் தலைமையிலான அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, வட மெசிடோனியா, மாலாவி மற்றும் மொன்ரனேக்ரோ ஆகிய இணையனுசரணை நாடுகள் கடந்த வாரம் அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான மெய்நிகர் முறைமையிலான சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யும் என்றும், இதன்போது இலங்கையின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கேட்டறியப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது, இருப்பினும் அச்சந்திப்பு நடைபெறவில்லை.

இந்நிலையில் மெய்நிகர் முறைமையில் நடாத்துவதற்குத் திட்டமிட்டிருந்த அச்சந்திப்பை நேரடியாகவே நடாத்துவதற்கு இணையனுசரணை நாடுகள் தீர்மானித்துள்ளன. அதன்படி, பிரிட்டனின் ஏற்பாட்டில் ஜெனிவாவில் இன்றைய தினம் (6) நடைபெறவுள்ள நாடுகளுடனான சந்திப்பில் கலந்துகொள்வதற்காக இலங்கை தமிழரசு கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேற்று செவ்வாய்கிழமை ஜெனிவா பயணமானார். சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதி ஒருவருக்கும் இச்சந்திப்பில் கலந்துகொள்வதற்கு அழைப்புவிடுக்கப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது. 

இதன்போது இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக அதற்கு எதிர்மறையான சூழ்நிலையொன்று அரசாங்கத்தினால் தோற்றுவிக்கப்பட்டிருப்பதாக இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைக்கப்படவிருப்பதுடன் தேர்தல்களை நடத்துவதில் நிலவும் காலதாமதம் மற்றும் அதன் விளைவாக நாட்டு மக்களின் ஜனநாயக இடைவெளி புறக்கணிக்கப்பட்டுள்ளமை, வட- கிழக்கு மாகாணங்களில் தொடரும் நில அபகரிப்பு, குருந்தூர் மலை, தையிட்டி உள்ளிட்ட பகுதிகளில் பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் என்பன உள்ளடங்கலாக அண்மைய காலங்களில் நாட்டில் இடம்பெறும் அடக்குமுறைகள் குறித்தும் அவர்களுக்கு அறியத்தரப்படவுள்ளது.

https://www.virakesari.lk/article/163922

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் முன்னேற்ற அறிக்கை சமர்ப்பிக்க இருக்கின்றது. ஆமாம், நல்ல முன்னேற்றமுண்டு. சனல் 4 இடம் கேடடால் இன்னும்நல்ல முன்னேற்ற அறிக்கை தருவார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் - ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர்

07 SEP, 2023 | 10:21 AM
image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒரு வருடத்துக்கு முன்னர் இடம்பெற்ற பாரிய மக்கள் போராட்டங்களை கருத்தில் கொண்டு, வரலாற்று மாற்றத்தின் சவால்களை யதார்த்தமாக்குவதற்கு அர்ப்பணிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

யுத்தம் முடிவடைந்து 14 வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதனால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நீதி, நியாயம், உண்மை என்பன நிறைவேற்றப்படாமல் வேதனையுடன் வாழ்ந்து வருவதாக உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் பொறிமுறையொன்று அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள நிலையில், அவ்வாறானதொரு பொறிமுறைக்காக உண்மையான பின்னணியை தயார் செய்ய வேண்டும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச கொள்கைக்கு முரணானது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலமானது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனத்தின் 19-3 பிரிவு மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தின் மீது தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk சுட்டிக்காட்டியுள்ளார்.

தனிமனித உரிமைகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை போன்றே இதுவும் அமைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/163999

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வட, கிழக்குகில் தொடரும் நில அபகரிப்புக்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்புநாடுகளிடம் எடுத்துரைத்த சுமந்திரன்

10 SEP, 2023 | 09:57 AM
image

(நா.தனுஜா)

வட, கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து நிகழும் நில அபகரிப்புக்கள் உள்ளடங்கலாக தமிழ்மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளிடம் எடுத்துரைத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இலங்கை விவகாரத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடியுள்ளார்.  

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், கூட்டத் தொடருக்கு முன்னதாக பேரவையின் உறுப்பு நாடுகளுடனான சந்திப்பின் நிமித்தம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கடந்த செவ்வாய்கிழமை ஜெனிவா பயணமானார்.

அங்கு பிரிட்டனால் சுமார் 15 உறுப்புநாடுகளின் பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் கலந்துகொண்ட சுமந்திரன், நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் விளக்கமளித்தார். குறிப்பாக பொறுப்புக்கூறல் செயன்முறைகளில் முன்னேற்றம் அடையப்படாமை, தேர்தல்களை நடாத்துவதில் நிலவும் காலதாமதம், வட-கிழக்கு மாகாணங்களில் தொடரும் நில அபகரிப்பு, குருந்தூர்மலை மற்றும் தையிட்டி உள்ளடங்கலாக தமிழ்மக்கள் செறிந்துவாழும் பகுதிகளில் பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் என்பன உள்ளடங்கலாக அண்மையகாலங்களில் தமிழ்மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளிடம் விரிவாக எடுத்துரைத்தார்.

இச்சந்திப்பில் சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்திய ஆய்வாளரும், இலங்கையைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான த்யாகி ருவன்பத்திரணவும் கலந்துகொண்டிருந்தார்.

அதே வேளை ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் ஆசிய பசுபிக் பிரிவின் தலைவர் ரோரி மங்கோவனுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்றும் நடைபெற்றது. இதன்போது இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை குறித்தும், இலங்கை விவகாரத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

 மேலும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கிவரும் அரச சார்பற்ற அமைப்பான இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் (பேர்ள்) அமைப்பின் பிரதிநிதியையும் சந்தித்த சுமந்திரன், அவரிடம் நாட்டின் சமகால நிலைவரங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.

https://www.virakesari.lk/article/164208

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை இலங்கை இடைநிறுத்தவேண்டும் - ஐரோப்பிய ஒன்றியம் மனித உரிமை பேரவையில் வேண்டுகோள்.

Published By: RAJEEBAN

11 SEP, 2023 | 08:07 PM
image
 

இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச சட்டங்கள் சர்வதேச தாரதங்களை பின்பற்றும் வரை அதனை பயன்படுத்துவதை இடைநிறுத்தி வைக்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் பொறுப்புக்கூறல் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தலை நி;றுத்துதல் ஆகியவற்றையும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை  மேலும் உறுதியான   நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 54 அமர்வு இன்று ஆரம்பமானவேளை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை குறித்த அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையின் நல்லிணக்க பொறிமுறைகளை கருத்தில் எடுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தின் பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக இலங்கை எதிர்கொண்ட சவால்களை  கவனத்தில் எடுத்துள்ள அதேவேளை கருத்து சுதந்திரம் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் மற்றும் இலங்கையின் அனைவரினதும் பொருளாதார சமூக கலாச்சார சுதந்திர உரிமைகள் ஆகியன உட்பட மனித உரிமைகளை உறுதி செய்வதற்கான அவசியத்தை வலியுறுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக எடுக்கப்பட்ட சாதகமான நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதார ஸ்திரதன்மைக்கு வழிவகுத்ததை ஏற்றுக்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் பலவந்தமாக காணாமல்செய்யப்பட்ட பல சம்பவங்களிற்கு தீர்வை காணல்  ஆகியவற்றையும் வலியுறுத்தியுள்ளது.

அமைதியான ஒன்று கூடுதலிற்கான உரிமையை உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் அமைதியான வழியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு  எதிராக பலத்தை பிரயோகிப்பதை தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தை பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை அது சர்வதேச சட்டங்கள் தராதரங்களை முழுமையாக பின்பற்றும் வரை இடைநிறுத்திவைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் பொறுப்புக்கூறல் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தலை நிறுத்துதல் ஆகியவற்றையும் வலியுறுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/164364

  • கருத்துக்கள உறவுகள்
On 27/8/2023 at 15:33, ஏராளன் said:

அதேநேரம், உள்நாட்டில் இலங்கை அரசாங்கம் எட்டியுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் தெளிவு படுத்துங்கள், அதை ஏற்று நாங்கள் உறுதிப்படுத்தி உங்களுக்கு பாராட்டு பெற்றுத்தருவோம். "யாம் இருக்கபயமேன்?"

5 hours ago, ஏராளன் said:

இலங்கையின் நல்லிணக்க பொறிமுறைகளை கருத்தில் எடுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இவர் எதைக்குறிப்பிடுகிறார்? பாதிக்கப்பட்ட மக்களின் காணிகளில் அடாவடியாக விகாரைகளை கட்டி விட்டு சண்டைக்கிழுப்பதையும் தெருக்களில் நின்று ஊழையிடுவதையுமா?

On 27/8/2023 at 15:33, ஏராளன் said:

, இலங்கையின் சார்பிலான பதிலளிப்புக்களையும் வழங்கவுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

இவர் பொய் புழுகு மூட்டைகளை அவிழ்ப்பதற்கு முன் நடைமுறை தரவுகளை காட்டும்படி கேட்கவேண்டும். சும்மா வழமைபோல் ஆள் மாறி ஆள் புழுகுவதும், பிறகு வேறொன்றை செய்வதும் காலத்தை இழுத்தடித்து காரியம் இல்லாமல் செய்யும் வேலை. அவர்கள் சொல்வதை செய்திருந்தால் இன்னும் ஏன் இந்த கூட்டம் தொடர்கிறது? சொல்வதை கேட்டு பாராட்டுவதற்கா? கேள்வி கேட்பதில்லை, வந்து பார்ப்பத்தில்லை என்ன சாதிக்கப்போகிறார்கள்? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.