Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
நிலைமின் தூண்டல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
  • பதவி, பிபிசி தமிழ்
  • 27 ஆகஸ்ட் 2023
    புதுப்பிக்கப்பட்டது 28 ஆகஸ்ட் 2023

இரு தினங்களுக்கு முன்பாக நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது தற்செயலாக அவரின் கையைத் தொட நேர்ந்தது. அப்போது உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது.

ஒருமுறை அலுவலக உணவகத்தின் கதவைத் திறக்கும்போதும் இதேபோன்று சில விநாடிகளுக்கு உடலில் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது நினைவில் வந்து சென்றது.

உங்களில் பலருக்கும் இதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். ஒருவரைத் தொடுவதன் மூலமோ, கதவைத் திறப்பதன் மூலமோ வேறு சில செயல்பாடுகள் மூலமோ நமது உடலில் மின்சாரம் சிறிய அளவில் பாய்ந்தது போன்ற உணர்வு ஏற்படக்கூடும்.

ஆனால், அதற்கான காரணம் என்ன என்பது பற்றி என்றாவது ஆராய்ந்துள்ளீர்களா?

 
நிலைமின் தூண்டல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நிலைமின் தூண்டல் என்றால் என்ன?

அணுவின்றி அசையாது உலகு என்பார்கள். ஏனெனில் இங்கு அனைத்துமே அணுவால் (Atoms)ஆனது.

இந்த அணுவில் உள்ள ப்ரோட்டான், எலெக்ட்ரான் இடையே ஏற்படும் சமமின்மை நிலையே நிலைமின் தூண்டல் என்று அழைக்கப்படுகிறது என குறிப்பிடுகிறார் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மின்னணு மற்றும் கருவியல்துறை பேராசிரியரான முனைவர் ஜி சக்திவேல்.

நம்மைச் சுற்றி இருப்பது அனைத்துமே அணுக்கள்தான். அணுவில் ப்ரோட்டன்(proton), எலெக்ட்ரான் (Electron), நியூட்ரான்(Neutron) ஆகியவை உள்ளன. இதில் ப்ரோட்டான் என்பது நேர்மின்னி(Positive Charge) என்றும் எலெக்ட்ரான் எதிர்மின்னி (Negative Charge) என்றும் அழைக்கப்படுகின்றன.

அணுவில் ப்ரோட்டானும் எலெக்ட்ரானும் சமமாக இருப்பதை நியூட்ரல் என்று கூறுகிறோம். சில நேரங்களில் அணுக்களில் சமமின்மை (Imbalance) ஏற்படும். இதைத்தான் நிலைமின் தூண்டல் என்று அழைக்கிறோம்,” என்றார்.

 
நிலைமின் தூண்டல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஷாக் அடிப்பது போன்ற உணர்வு ஏற்படுவது ஏன்?

ஒருவரைத் தொடும்போதோ, ஒரு பொருளைத் தொடும்போதோ நமது உடலில் அதிர்ச்சிக்கு (Shock) ஏற்படும் ஏன்?

ஒருவரையோ, ஒரு பொருளையோ தொடும்போது, மின் சமநிலையை மீண்டும் நிலைநிறுத்த நேர்மறை மின்னூட்டம் கொண்ட ஒரு பொருளுக்குப் பயணிக்கும் எலெக்ட்ரான்களின் மின்னோட்டடமே அதற்குக் காரணம் என்று சக்திவேல் குறிப்பிடுகிறார்.

அணுக்களில் சமமின்மை ஏற்படும்போது எலெக்ட்ரான் வெளியே செல்ல முயற்சி செய்யும். அவ்வாறு ஒருவரிடம் கூடுதல் எலெக்ட்ரான் இருந்தால் அது நெகட்டிவ் சார்ஜ்.

இந்த எலெக்ட்ரான் பாசிட்டிவ் சார்ஜ் எலெக்ட்ரான் எங்கு உள்ளதோ அதை ஈர்க்க முயலும். இவ்வாறு எலெக்ட்ரான் இடம் மாறும்போதுதான் நமது உடலில் மிகச் சிறிய அளவில் ஷாக் அடித்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது," என விளக்குகிறார் சக்திவேல்.

அதேபோல், "எந்தளவு எலெக்ட்ரான் இடம் மாறுகிறது என்பதைப் பொறுத்து நமது உணர்வில் வித்தியாசம் இருக்கும். குறைந்த அளவில் எலெக்ட்ரான் இடம்பெயரும்போது ஊசி குத்துவது போன்று இருக்கும். அதிகளவில் எலெக்ட்ரான் இடம்பெயரும்போது ஷாக் அடித்தது போன்ற உணர்வு இருக்கும்.”

மின்னல் ஏற்படுவது இதற்குச் சரியான உதாரணம். மேகங்களை காற்று தீண்டுவதால்தான் மின்னல் ஏற்படுகிறது.

அதேபோல், நாம் டிவியை ஆன் செய்யும்போதும் அணைக்கும் போதும் திரையின் அருகே சென்று கைகளை வைத்தால் நம் கையிலுள்ள முடிகள் ஈர்க்கப்படுவதை உணரலாம். இதுவும் நிலைமின் தூண்டலுக்கான உதாரணம்தான்.

பருவ காலமும் இதற்கு முக்கிய காரணம்

பருவ காலத்திற்கும் நிலைமின் தூண்டலுக்கு அதிக தொடர்பு இருக்கிறது என்கிறார் சக்திவேல்.

பொதுவாக குளிர்காலத்தில் அல்லது நம்மை சுற்றி வறண்ட காலநிலை நிலவும்போது உடலில் மின்னூட்டம் உருவாகிறது. காற்று வறண்டு இருப்பதால், நமது சருமத்தின் மேற்பரப்பில் எலெக்ட்ரான்கள் எளிதாக உருவாகி விடுகின்றன.

கோடையில் காற்றின் ஈரப்பதம் எதிர்மறை மின்னூட்டம் கொண்ட எலெக்ட்ரான்களை அழித்து விடுகிறது என்பதால் நிலைமின் தூண்டலை அரிதாகவே நாம் உணர்கிறோம்.”

 
நிலைமின் தூண்டல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நிலைமின் தூண்டல் ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி?

உடலில் இவ்வாறு சிறியளவில் எலெக்ட்ரான் வெளியேறுவதால் நமக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதால் இதுகுறித்துப் பெரிதாக கவலைப்படத் தேவையில்லை.

அதேவேளையில், இது உங்களை அசௌகரியமாக உணர வைத்தால், சில நடவடிக்கைகள் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்தலாம் என்று சக்திவேல் கூறுகிறார்.

  • ஒருசில இடங்களில், இவ்வாறு உடலில் சிறிய அளவில் ஷாக் அடிப்பது போன்ற உணர்வு ஏற்படாமல் இருக்க ஈரப்பதமூட்டி(humidifier) பயன்படுத்தப்படுகிறது.
  • தடிமனான காலணிகளை அணியக்கூடாது. வீட்டில் இருக்கும்போது முடிந்த அளவு வெறும்காலில் நடப்பது நல்லது
  • நைலான் மற்றும் பாலிஸ்டர் ஆடைகளை அணிவதைத் தவிர்த்து பருத்தி ஆடைகளை அணியலாம்.
  • தற்போது சந்தைகளில் நிலைமின் தூண்டல் எதிர்ப்பு கருவிகள் (Antistatic device) அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. இதைப் போன்ற நிலைமின் தூண்டல் எதிர்ப்பு பேண்ட், நிலைமின் தூண்டல் எதிர்ப்பு ஷூ, நிலைமின் தூண்டல் எதிர்ப்பு ஆடைகள், நிலைமின் தூண்டல் கால்மிதிப்பான் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

https://www.bbc.com/tamil/articles/c4n50j432yro



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கந்தப்பு இந்தக் கேள்வி பில்லியன் டாலர் கேள்வி. எனவே இதற்கு 5 புள்ளிகளாவது வழங்க வேண்டும்.
    • என்னவொரு திமிர் , “மக்கள் என்னை நிராகரித்தால்” என்று கூறும் போது ஒரு ஏளனச் சிரிப்பு 
    • பொதுவாக கதை கவிதை என்று எழுத வரும்போது நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஒரு "சொல் வாக்குக்குள்" கவிஞராய் ,  எழுத்தாளராய் வருகிண்றீர்கள் . ....... அதனால் கூடுமானவரை எதிர்மறை சொற்களைத் தவிர்த்து நேர்மறை சொற்களைப் பாவித்தல் நல்லது . .......! --- "என்கதை முடியும் நேரமிது "  பாடல் பாடிய சௌந்தராஜன் அதன்பின் எழும்பவே இல்லை . ......! --- " கவலை இல்லாத மனிதன் "  எடுத்த கண்ணதாசன் & சந்திரபாபு போன்றோரின் நிலைமையும் அத்தகையதே ........! இவைபோன்று பல உதாரணங்கள் உள்ளன .....! ஏதோ தோணினதை சொன்னேன் . ..... வேறொன்றுமில்லை .......!  
    • தீவிர தமிழ் தேசியவாதம் மென் தமிழ் தேசியவாதம் என்று ஒன்று ஒருபோதும் இல்லை. சும் செய்தது தேவையானபோது தமிழ் தேசியத்தை முகமூடி போன்று உபயோகித்துது.  இன்று மட்டக்களப்பில் சும்மின் சகா சாணக்கியன் வெற்றி பெற்றபின் கூறியது “தமிழரசுக் கட்சி தமிழ் தேசியத்திற்காக தொடர்ந்தும் போராடும் “ என்று. இது சும் & Co வின் இரட்டை வேடம். உங்கள் சந்தேகத்திற்கு கள உறவுகள் ஏற்கனவே பதில் அளித்துள்ளனர்.  சும்மின் அல்லக்கைகளான தாயக புலம்பெயர் பலாக்காய்களின் பரப்புரை தான் மதவாதம்.
    • எம்ம‌வ‌ர்க‌ள் போடும் கூத்தை பார்க்கையில் ம‌ண்ணுக்காக‌ போராடி ம‌டிந்த‌ மாவீர‌ர்க‌ளை நினைக்க‌ தான் க‌வ‌லையா இருக்கும்....................   2009க்கு முன்னும் ச‌ரி 2009க்கு பின்னும் ச‌ரி எம‌க்காக‌ உயிர் நீத்த‌வ‌ர்க‌ளுக்கு நானோ நீங்க‌ளோ துரோக‌ம் செய்து இருக்க‌ மாட்டோம்   ஆனால் 2009க்கு பிட் பாடு ப‌ல‌ துரோக‌ங்க‌ளை பார்த்த‌ பின் தான் அண்ணா இல‌ங்கை அர‌சிய‌லை எட்டியும் பார்க்காம‌ விட்ட‌ நான்   த‌மிழ் தேசிய‌ம் என்று எம் ம‌க்க‌ளை ந‌ம்ப‌ வைச்சு க‌ழுத்து அறுத்த‌ கூட்ட‌ம் தான் ம‌க்க‌ள் ப‌டும் அவ‌ல‌ நிலைய‌ க‌ண்டு கொள்ளாம‌ த‌ங்க‌ட‌ குடும்ப‌த்தோட‌ சொகுசு வாழ்க்கை வாழ்ந்வை   ம‌கிந்தாவோ அல்ல‌து ம‌கிந்தாவின் ம‌க‌ன் இப்ப‌வும் ஆட்சியில் இருந்து இருந்தால் ப‌ல‌ இளைஞ‌ர்க‌ளின் ர‌த்த‌ம் இன்னும் கொதிச்சு இருக்கும் எம் இன‌த்தை அழித்த‌ குடும்ப‌ம் எங்க‌ளை ஆட்சி செய்வாதான்னு   இப்ப‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்கும் புரிந்து இருக்கும் இனி நாட்டை யார் ஆண்டால் நாடு ந‌ல்ல‌ நிலையில் இருக்கும் என்று   ம‌கிந்தா குடும்ப‌ம் கொள்ளை அடிச்ச‌ காசை அனுரா அர‌சாங்க‌ நிதிதுறையில் போட்டால் இல‌ங்கையின் பாதி க‌ட‌னை க‌ட்டி முடித்து விட‌லாம்     ஆம் இனி எம்ம‌வ‌ர்க‌ள் ம‌க்க‌ளை ஏமாற்ற‌ முடியாது உல‌க‌ம் கைபேசிக்குள் வ‌ந்து விட்ட‌து ந‌ல்ல‌து கெட்ட‌தை அறிந்து அவையே சுய‌மாய் முடிவெடுப்பின‌ம்....................   இனி வ‌ரும் கால‌ம் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் கால‌ம் அவ‌ர்க‌ள் கையில் தான் எல்லாம்..................      
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.