Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'நீதிபதிக்கே உயிரச்சுறுத்தல் என்றால் எமக்கான நீதி எப்போது?' - முல்லைத்தீவு போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
01 OCT, 2023 | 11:52 AM
image

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று (01) காலை 10 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் சங்கத்தினரது போராட்ட இடத்துக்கு முன்பாக இப்போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'நீதிபதிக்கே உயிரச்சுறுத்தல் உள்ள நாட்டில் எமக்கு நீதி எப்போது?', 'சர்வதேசமே எமக்காக குரல் கொடுக்க எழுந்திரு', 'கையளிக்கப்பட்ட மாணவர்கள் எங்கே?’, ‘குடும்பமாக ஒப்படைக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே?’, 'தமிழ் குழந்தைகள் என்ன பயங்கரவாதிகளா?', 'சின்னஞ்சிறு சிறார்களும் ஆயுதம் ஏந்தியவர்களா?', 'பாடசாலை சென்ற மாணவன் எங்கே?' போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோஷங்களையும் எழுப்பினர்.

இலங்கையில் காணாமல்போன தமிழ் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் ஒளிப்படங்களையும் இதன்போது கைகளில் ஏந்தியிருந்தனர்.

இந்த போராட்டத்தில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன், காணாமலாக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், சிறுவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

IMG_20231001_101301.jpg

20231001101149_IMG_8660.JPG

20231001101100_IMG_8659.JPG

20231001100925_IMG_8651.JPG

20231001100808_IMG_8646.JPG

20231001100606_IMG_8641.JPG

20231001100725_IMG_8644.JPG

https://www.virakesari.lk/article/165813

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாக்க கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமும் கையெழுத்து வேட்டையும்

01 OCT, 2023 | 12:41 PM
image

கிளிநொச்சியில் நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாக்க கோரி தமிழ் தேசிய இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கையும் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரீ.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாக்க கோரி இத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

IMG20231001110247.jpg

IMG20231001103808.jpg

https://www.virakesari.lk/article/165818

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

02 OCT, 2023 | 12:57 PM
image
 

இலங்கையில் நீதித்துறை மீது அரச நிருவாகத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வகை நெருக்கீடுகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜாவுக்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்கக் கோரியும், நீதித்துறையினது சுயாதீனத்தை பாதுகாக்கக் கோரியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி) கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (02) கிளிநொச்சி நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின்  பொதுச்செயலாளர் மாண்புமிகு அன்ரனியோ குட்ரெஸுக்கு அனுப்பிவைப்பதற்கு ஏதுவாக, நாளைய தினம் கொழும்பில் வைத்து, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிரான்ச்சிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் கையளிக்கப்படவுள்ள 'இலங்கை நீதித்துறை மீதான அரச நெருக்கீடுகளுக்கு பரிகாரம் காண்பதற்கான பரிந்துரைப்பு மனு' வாசிக்கப்பட்டது.

அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

IMG20231002094657.jpg

இலங்கைத் தீவில் கடந்த எழுபது (70) ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகின்ற இன முரண்பாடுகள் தொடர்பிலும், சிங்களத்தின் கட்டமைக்கப்பட்ட இன ரீதியான வஞ்சிப்புகள் தொடர்பிலும், அது இனப்படுகொலையாக வியாபகம் பெற்ற வரலாறு தொடர்பிலும் தங்கள் அறிக்கையாளர்கள் ஊடாக தாங்கள் அறிந்துள்ளீர்கள் என்பதை நாம் அறிவோம்.

ஒரு தேசிய இனத்தின் பாரம்பரிய வாழ்விடங்கள் மீதும், அதன் கூட்டுப் பண்பாடுகள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நீதி, நிருவாகத் துறை ரீதியான பாகுபாடுகள் மற்றும் காலத்துக்குக் காலம் அரசியல் யாப்புச் சீர்திருத்தங்களின் மூலமாக மேற்கொள்ளப்படுகின்ற வன்பறிப்புகள் என்பவை உலகத்தில் வாழ்கின்ற எண்ணிக்கையில் குறைந்த ஒரு தேசிய இனக்குழுமத்தை எவ்வாறு நிர்மூலமாக்கும் என்பதை உணர்ந்துகொள்வது அத்தனை சிரமமானதல்ல.

IMG20231002094729.jpg

இலங்கை தீவில் தமிழ்த் தேசிய இனம் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையும் ஓரவஞ்சகப் போக்கும் இன்று இலங்கைத்தீவில் உள்ள தேசிய இனங்கள் அனைத்தினதும் ஜனநாயக நீதித்துறை சார் உரிமைகளைப் பறித்துள்ளது என்பது நிதர்சனமாகும். 

அரசுக்குப் பலம் கிடைக்கின்ற போதெல்லாம் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொண்டு நிருவாகத் துறையின் கைப்பொம்மையாக செயற்படும் விதமாகவே நீதித்துறை உருவாக்கப்பட்டு வருகிறது. 

நீதிச்சேவை ஆணைக்குழுவை நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கி அதனூடாக நீதிபதிகளின் நியமனங்கள், பதவி உயர்வுகள், நலனோம்பு நயக்கொடைகள், பயிற்சிகள் மற்றும் பாதுகாப்பு என்பவையெல்லாம் அரசியல் அதிகார விருப்பப்படியே மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் மூலம் அரசு விரும்பிய தீர்ப்புகளைப் பெறவும், ஆணைகளை வழங்கவும், அரசியல் அதிகாரத்தை காபந்து செய்யவும் ஏற்ற வகையில் இலங்கையின் நீதித்துறை ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டத்தின் ஆட்சி பறிக்கப்பட்டு நிருவாகத்துறையின் நோக்கங்களை அடையும் வகையில், விசேடமாக அரசாங்கத்தினது போர்க்குற்றங்கள், இனப்படுகொலை விடயங்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயங்கள், மனிதப் புதைகுழி விவகாரங்கள், பௌத்தமயமாக்கல், நில மற்றும் பண்பாட்டு ஆக்கிரமிப்பு என்பவற்றை சட்டமுறைமைகளுக்கு முரணாகக் கையாள்வதற்கு நீதித்துறை நிர்ப்பந்திக்கப்பட்டதன் விளைவே கௌரவ நீதிபதி சரவணராஜா அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிய நிகழ்வாகும்.

மதிப்பார்ந்த பொதுச்செயலாளர் அவர்களே!

IMG-20231002-WA0019.jpg

சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை தனது ஆட்சியின் நோக்காகக் கொண்டு சர்வாதிகாரச் சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் ஜனநாயக முலாம் பூசிக்கொண்டு திடமான வெளியுறவு, பொருளாதாரக் கொள்கைகள் எவையுமின்றி, உறுதியான அரசியலமைப்பு ஏற்பாடுகளின்றி வெறும் இனத்துவேசச் சிந்தனைகளின் மேல் ஏறி நின்று இலங்கையின் நீதித்துறையினையும் இங்கு வாழ்கின்ற தமிழ்த் தேசிய இனத்தையும் கட்டமைக்கப்பட்ட வழிமுறைகளின் ஊடாக அரசு அழித்து ஒழித்து வரும் உச்ச தருணமாகிய இவ்வேளையில் தாங்களும் சர்வதேச சமூகமும் நேரடியாக தலையீடு செய்து அமைதி, சமாதானம், நல்லிணக்கம், நீதித்துறையின் சுயாதீனம் என்பவற்றை பாதுகாக்கவும் சகோதரத்துவம் மிக்க இலங்கையை கட்டியெழுப்பவும் தங்கள் எல்லா வகை வல்லமைகளும் அணுகுமுறைகளும் சமரசங்களற்ற வகையில் இலங்கைத் தீவுக்குத் தேவையென தங்களை அழைத்து நிற்கிறோம் -என்றுள்ளது.

IMG-20231002-WA0013.jpg

IMG-20231002-WA0014.jpg

https://www.virakesari.lk/article/165889

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையில் சட்டத்தரணிகள் போராட்டம் !

news-02.jpg

முல்லைதீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றத்துக்கு முன்பாக சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று திருகோணமலையில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டத்தில் சட்ட ஆட்சியை நிலை நிறுத்து, நீதித்துறையில் தலையிடாதே, நீதித் துறையை சுயமாக இயங்கவிடு, போன்ற பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/275325

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் : யாழில் மனித சங்கிலிப் போராட்டம்

Published By: VISHNU

04 OCT, 2023 | 11:03 AM
image
 

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் புதன்கிழமை (4) முன்னெடுக்கப்பட்டது.

32__7_.jpg

யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில் நீளுகின்ற ஓர் மனித சங்கிலி போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

32__3_.jpg

குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி என்பன ஆதரவு வழங்கி போராட்டத்தில் கலந்து கொண்டனர். 

01__13_.jpg

01__9_.jpg

01__11_.jpg

01__12_.jpg

01__8_.jpg

01__5_.jpg

01__7_.jpg

01__4_.jpg

01__1_.jpg

01__2_.jpg

https://www.virakesari.lk/article/166034

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறுபான்மையின நீதிபதியினை மத்திய பெரும்பான்மையினர் அடக்குகின்றனர் - விக்கினேஸ்வரன்

Published By: VISHNU

04 OCT, 2023 | 07:21 PM
image
 

தம் இனம் சார்ந்த தீர்ப்புக்களை வழங்கமுடியாமல் போய்விடும் என்பதற்காகவே சிறுபான்மையின நீதிபதியினை மத்திய பெரும்பான்மையினர் அடக்குகின்றனர் என தமிழ் தேசியக் கூட்டணியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் ஒய்வுபெற்ற நீதியரசருமான க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்டதற்கு நீதிவழங்ககோரி புதன்கிழமை (04) யாழ்ப்பாணம் மருதனார் மடத்தில் இருந்து யாழ்ப்பாண நகர் வரை இடம்பெற்ற சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்டபின் ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கையில் அவர்இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும்தெரிவிக்கையில்,

நீதிபதிகளின் தீர்ப்புக்கள் பிழையாக இருக்கும் பட்சத்தில் அதனை மேல்நீதி மன்றத்திற்கு கொண்டு வரலாம். அதனை விடுத்து தனிப்பட்ட ரீதியாக அச்சுறுத்தல் செய்வது அது நீதித்துறைக்கும் ஆகாது. நாட்டின் வருங்காலத்தினை பாதிக்கும்.

சிறுபான்மையினரின் நீதிபதியினை இவ்வாறு அச்சுறுத்துவது சிறுபாண்மையினம் சம்பந்தமான உண்மையான சரியான தீர்ப்புக்களை கொடுக்க முடியாமல் போய்விடும். தம் இனம் சார்ந்த தீர்ப்புக்களை வழங்கமுடியாமல் போய்விடும்.

இவ்வாறு அச்சுறுத்துவது பெரும்பான்மையினரின் அடக்குமுறையினை  காட்டுகின்றது. அரசாங்கம் இதனை உரியவகையில் நிறுத்தவேண்டும் என்பதுடன் இதற்கு சரியான முறையில் தீர்ப்புக்களை வழங்கவேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/166101

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.