Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோவிட் தடுப்பூசியை உருவாக்க உதவிய விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கோவிட் தடுப்பூசி உருவாக்க உதவிய விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

பட மூலாதாரம்,THE NOBEL PRIZE

4 மணி நேரங்களுக்கு முன்னர்

கோவிட் தொற்றுநோய்க்கான எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளை கண்டுபிடிக்க வழிவகுத்த தொழில்நுட்பத்தை உருவாக்கிய இரண்டு விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

டாக்டர் கேட்டலின் கரிகோ மற்றும் டாக்டர் ட்ரூ வேஸ்மேன் ஆகியோர் இதைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

இந்தத் தொழில்நுட்பம் பெருந்தொற்றுப் பேரிடருக்கு முன்பு சோதனை கட்டத்திலேயே இருந்தது. ஆனால், தற்போது அது உலகம் முழுக்கப் பல கோடி உயிர்களைக் காப்பாற்றி வருகிறது.

கோவிட் தொற்றுநோய்க்காக உருவாக்கப்பட்ட இந்த எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பம் தற்போது புற்றுநோய் உட்படப் பல்வேறு நோய்களுக்கும் பலன் தருமா என்பது குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன.

வைரஸ், பாக்டீரியா போன்ற அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டு எதிர்செயலாற்ற நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தயார்படுத்தும் வேலையை தடுப்பூசிகள் செய்கின்றன.

கோவிட் தடுப்பூசி உருவாக்க உதவிய விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

பட மூலாதாரம்,THE NOBLE PRIZE

பாரம்பரிய தடுப்பூசி தொழில்நுட்பமானது அசல் வைரஸ் அல்லது பாக்டீரியாவின் இறந்த அல்லது பலவீனமான பதிப்புகளை அடிப்படையாகக் கொண்டது.

அதற்கு மாறாக, mRNA தடுப்பூசிகள் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையைப் பயன்படுத்துகின்றனர்.

கோவிட் பேரிடரின்போது உருவாக்கப்பட்ட மாடர்னா, ஃபைசர்/பயோஎன்டெக் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை.

தடுப்பூசி ஒரு குறிப்பிட்ட நோய்க்கிருமிக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கத் தூண்டுகிறது. இது பிற்கால வெளிப்பாட்டின்போது நோய்க்கு எதிராக எதிர்செயலாற்ற நம் உடலுக்கு ஒரு தொடக்கத்தைக் கொடுக்கிறது.

எந்தெந்த தேதிகளில் என்னென்ன நோபல் பரிசுகள் வழங்கப்படும்?

கோவிட் தடுப்பூசி உருவாக்க உதவிய விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • இன்று(அக்டோபர் 2), இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இனி அடுத்தடுத்து அக்டோபர் 9ஆம் தேதி வரை வெவ்வேறு துறைகளில் நோபல் பரிசு வழங்கப்படும்.
  • அக்டோபர் 3ஆம் தேதி, இந்திய நேரப்படி மதியம் 3:15 மணிக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படும்.
  • அக்டோபர் 4ஆம் தேதியன்று, இந்திய நேரப்படி மதியம் 3:15 மணிக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும்.
  • அக்டோபர் 5ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும்.
  • அக்டோபர் 6ஆம் தேதி, மதியம் 2:30 மணிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும்.
  • அக்டோபர் 9ஆம் தேதியன்று, மதியம் 3:15 மணிக்கு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும்.

நோபல் பரிசு வென்றவர்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்?

நோபல் பரிசு வென்றவர்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்?

இந்த ஆண்டு நோபல் பரிசு வெல்பவர்களுக்கு கூடுதலாக சுமார் எழுபது லட்சம் ரூபாய் கொடுக்கப்படும். இந்த ஆண்டு பரிசு பெறுவோர் மொத்த வெகுமதியாக 8 கோடியே 20 லட்சம் ரூபாய் பெறுவார்கள் என்று நோபல் விருதுகளை நிர்வகிக்கும் நோபல் அறக்கட்டளை கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் பரிசுத் தொகை சரி செய்யப்பட்டு வருகிறது. மேலும், அறக்கட்டளையின் வலுவான நிதி நிலையைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த ஆண்டு தொகையின் அளவை அதிகரிப்பதாக விருது வழங்குவோர் தெரிவித்தனர்.

https://www.bbc.com/tamil/articles/cy918kn0vp2o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொவிட் தடுப்பூசி உற்பத்திக்கு முக்கிய பங்காற்றிய இரு விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு

03 OCT, 2023 | 11:44 AM
image
 
கொவிட் வைரசுக்கு எதிரான எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசிகளுக்கு வழிவகுத்த இரு விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

எம்ஆர்என்ஏ தொழிநுட்பத்தை உருவாக்கிய பேராசிரியர்களான கட்டலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோரே இந்த பரிசைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

தொற்றுநோய் காலப்பகுதியில் குறித்த எம்ஆர்என்ஏ தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகள் சோதனை கட்டத்திலேயே காணப்பட்ட  போதும் தற்பொழுது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை கொவிட் -19 பரவலில் இருந்து பாதுகாக்க இந்த தொழிநுட்பம் வழி செய்துள்ளது.

இதேநேரம் இதே எம்ஆர்என்ஏ தொழில்நுட்பம் தற்போது புற்றுநோய் உள்ளிட்ட பிற நோய்களுக்கு எதிராக செயற்படுமா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னோடியில்லாத ஒரு விடயத்தை ஆராய்ந்து குறித்த தொழிநுட்பத்தை கண்டறிந்து இந்த நவீன காலத்தில் மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக காணப்பட்ட விடயத்துக்கு பரிசு பெற்றவர்கள் பங்களித்துள்ளனர் என இது குறித்து நோபல் பரிசு குழு தெரிவித்துள்ளது.

அசல் வைரஸ் அல்லது பக்டீரியாவின் இறந்த அல்லது பலவீனமான பதிப்புகளை அடிப்படையாகக் கொண்டே  பாரம்பரிய தடுப்பூசி தொழில்நுட்பம் காணப்பட்டது.

அதற்கு மாறாக, mRNA தடுப்பூசி மாறுபாடான அணுகுமுறையை கொண்டவை.

கொவிட் 19 பரவளின் போது உருவாக்கப்பட்ட, மொடர்னா, ஃபைசர்/பயோஎன்டெக் தடுப்பூசிகள் எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/165933

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இயற்பியலுக்கான நோபல் பரிசு கூட்டாக 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு - மூவரும் சாதித்தது என்ன?

நோபல் பரிசு யாருக்கு?

பட மூலாதாரம்,DETLEV VAN RAVENSWAAY/SCIENCE PHOTO LIBRARY

2 அக்டோபர் 2023
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒளியில் மிகக் குறுகிய, கண நேரத்தில் நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்வது குறித்த ஆய்வுக்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது ஆய்வு தான் எலக்ட்ரான்கள் குறித்து புரிந்து கொள்வதற்கான கதவுகளை திறந்துள்ளது.

பியர்ரி அகோஸ்டினி, ஃபெரன்க் கிரௌஸ், ஆன்னி எல் ஹூய்லியர் ஆகிய 3 விஞ்ஞானிகள் இயற்பியலுக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர்.

அணுக்களுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பதை பதிவு செய்யவும், புரிந்ந்து கொள்ளவும் உதவக் கூடிய மிகமிகக் குறுகிய அதிர்வு கொண்ட ஒளியை உருவாக்குவது எப்படி என்பதை அவர்களது ஆய்வு செய்து காட்டியது.

மூவருக்கும் கூட்டாக இந்திய மதிப்பில் சுமார் 8.26 கோடி ரூபாய் பரிசாக கிடைக்கும்.

நோபல் பரிசு யாருக்கு?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோவிட் தொற்றுநோய்க்கான எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளை கண்டுபிடிக்க வழிவகுத்த தொழில்நுட்பத்தை உருவாக்கிய இரண்டு விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

டாக்டர் கேட்டலின் கரிகோ மற்றும் டாக்டர் ட்ரூ வேஸ்மேன் ஆகியோர் இதைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

இந்தத் தொழில்நுட்பம் பெருந்தொற்றுப் பேரிடருக்கு முன்பு சோதனை கட்டத்திலேயே இருந்தது. ஆனால், தற்போது அது உலகம் முழுக்கப் பல கோடி உயிர்களைக் காப்பாற்றி வருகிறது.

கோவிட் தொற்றுநோய்க்காக உருவாக்கப்பட்ட இந்த எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பம் தற்போது புற்றுநோய் உட்படப் பல்வேறு நோய்களுக்கும் பலன் தருமா என்பது குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன.

வைரஸ், பாக்டீரியா போன்ற அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டு எதிர்செயலாற்ற நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தயார்படுத்தும் வேலையை தடுப்பூசிகள் செய்கின்றன.

கோவிட் தடுப்பூசி உருவாக்க உதவிய விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

பட மூலாதாரம்,THE NOBEL PRIZE

பாரம்பரிய தடுப்பூசி தொழில்நுட்பமானது அசல் வைரஸ் அல்லது பாக்டீரியாவின் இறந்த அல்லது பலவீனமான பதிப்புகளை அடிப்படையாகக் கொண்டது.

அதற்கு மாறாக, mRNA தடுப்பூசிகள் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையைப் பயன்படுத்துகின்றனர்.

கோவிட் பேரிடரின்போது உருவாக்கப்பட்ட, மாடர்னா, ஃபைசர்/பயோஎன்டெக் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை.

தடுப்பூசி ஒரு குறிப்பிட்ட நோய்க்கிருமிக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கத் தூண்டுகிறது. இது பிற்கால வெளிப்பாட்டின்போது நோய்க்கு எதிராக எதிர்செயலாற்ற நம் உடலுக்கு ஒரு தொடக்கத்தைக் கொடுக்கிறது.

எந்தெந்த தேதிகளில் என்னென்ன நோபல் பரிசுகள் வழங்கப்படும்?

கோவிட் தடுப்பூசி உருவாக்க உதவிய விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இனி அடுத்தடுத்து அக்டோபர் 9ஆம் தேதி வரை வெவ்வேறு துறைகளில் நோபல் பரிசு வழங்கப்படும்.
  • அக்டோபர் 4ஆம் தேதியன்று, இந்திய நேரப்படி மதியம் 3:15 மணிக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும்.
  • அக்டோபர் 5ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும்.
  • அக்டோபர் 6ஆம் தேதி, மதியம் 2:30 மணிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும்.
  • அக்டோபர் 9ஆம் தேதியன்று, மதியம் 3:15 மணிக்கு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும்.

நோபல் பரிசு வென்றவர்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்?

நோபல் பரிசு வென்றவர்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்?

இந்த ஆண்டு நோபல் பரிசு வெல்பவர்களுக்கு கூடுதலாக சுமார் எழுபது லட்சம் ரூபாய் கொடுக்கப்படும். இந்த ஆண்டு பரிசு பெறுவோர் மொத்த வெகுமதியாக 8 கோடியே 20 லட்சம் ரூபாய் பெறுவார்கள் என்று நோபல் விருதுகளை நிர்வகிக்கும் நோபல் அறக்கட்டளை கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் பரிசுத் தொகை சரி செய்யப்பட்டு வருகிறது. மேலும், அறக்கட்டளையின் வலுவான நிதி நிலையைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த ஆண்டு தொகையின் அளவை அதிகரிப்பதாக விருது வழங்குவோர் தெரிவித்தனர்.

https://www.bbc.com/tamil/articles/cy918kn0vp2o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3 விஞ்ஞானிகளுக்கு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Published By: DIGITAL DESK 3

04 OCT, 2023 | 04:26 PM
image
 
இரசாயனவியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,  மவுங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ் மற்றும் அலெக்ஸி எகிமோவ் ஆகியோர் நோபல் பரிசினை பெற உள்ளனர். குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக அவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு நோபல் பரிசுடன், 8 கோடி ரூபாய்க்கான ரொக்கப் பரிசும் அளிக்கப்படும். ஆய்வாளர் ஆல்ப்ரெட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி, ஆண்டுதோறும் இந்த பரிசுகள் வழங்கப்படும்.

https://www.virakesari.lk/article/166083

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2023க்கான நோபல் பரிசை வெல்லும் நோர்வே எழுத்தாளர்

சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் (Alfred Nobel) எனும் வேதியியல் பொறியாளரின் பெயரில் 1901லிருந்து மருத்துவம், பெளதீகம், வேதியியல், இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய 5 துறைகளில் மனித குலத்திற்கு பயனுள்ள சாதனைகளை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு எனும் உலக புகழ் பெற்ற விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான மருத்துவம், பெளதீகம் மற்றும் வேதியியல் துறைக்கு தகுதியானவர்களின் பெயர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு தகுதி பெற்றவரின் பெயர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

2-2.jpg

நோர்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளரான ஜான் ஃபாஸ் (Jon Fosse) என்பவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் பரிசுக்கான ஸ்வீடன் நாட்டு அகாடமி அறிவித்திருக்கிறது.

தனது புதுமையான நாடகங்கள், நாவல்கள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் மூலம் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக நோர்வே நாட்டின் நைனார்ஸ்க் இலக்கியத்தில் சாதனை புரிந்தவர் ஜான் ஃபாஸ். அவரது படைப்புகளுக்காக அவரை கெளரவிக்கும் விதமாக இந்த பரிசினை வழங்குகிறோம்” என அந்த அகாடமி தெரிவித்திருக்கிறது.

“மிகவும் அதிக சந்தோஷத்தில் இருக்கிறேன். அதே சமயம் சற்று அச்சமாகவும் உள்ளது. இதை இலக்கியத்திற்கான பரிசாக நான் பார்க்கிறேன்” என தனக்கு கிடைத்திருக்கும் விருதினை குறித்து ஜான் ஃபாஸ் தெரிவித்தார்.

1901 லிருந்து தற்போது 2023 வரை இலக்கியத்திற்கான நோபல் பரிசு 116 முறை வழங்கப்பட்டிருக்கிறது.

https://thinakkural.lk/article/275853

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு.!

Published By: DIGITAL DESK 3

06 OCT, 2023 | 03:21 PM
image
 
2023 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் மருத்துவம், பௌதீகவியல், இரசாயனவியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதன்படி, மருத்துவம், பௌதீகவியல், இரசாயனவியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரானில் பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும், மனித உரிமை மற்றும் சுதந்திரத்திற்கான அவரது போராட்டத்திற்காக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/166262

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க பேராசிரியருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு

Published By: DIGITAL DESK 3

09 OCT, 2023 | 04:17 PM
image
 
2023 ஆண்டுக்கான  பொருளாதார அறிவியல் நோபல் பரிசு, அமெரிக்க பேராசிரியர் கிளாடியா கோல்டினுக்கு (Claudia Goldin) அறிவிக்கப்பட்டுள்ளது. 

"தொழிலாளர் சந்தையில் (labour market) பெண்களின் பங்களிப்பு பற்றிய புரிதலை மேம்படுத்தியதற்காக"  கிளாடியா கோல்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

1946-ம் ஆண்டு நியூயோர்க்கில் பிறந்த க்ளாடியா கோல்டின், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். 

பெண்களின் வருவாய் மற்றும் தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கு குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளார். 

இவரது ஆராய்ச்சி 200 ஆண்டுகளாக தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கேற்பு எப்படி மாறியுள்ளன என்பதையும் வருவாய் மற்றும்  வேலைவாய்ப்பு விகிதங்களில் பாலின வேறுபாடுகள் எப்படி உள்ளன என்பது பற்றிய தரவுகளை வழங்கியுள்ளது என நோபல் பரிசு வழங்கும் தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி தெரிவித்துள்ளது.

F7_Tbc8WQAA0Pl6.jpg

https://www.virakesari.lk/article/166482

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.