Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் திட்டம்: ககன்யான் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
09 OCT, 2023 | 12:36 PM
image
 

புதுடெல்லி: 

 2024 டிசம்பரில் விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் ககன்யான் விண்கலத்தின் புகைப்படத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கான ஆளில்லா விண்கலப் பரிசோதனையை விரைவில் தொடங்கவுள்ளதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது.

ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய3 நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன. இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன்படி கடந்த 2007-ல் ரூ.10,000 கோடி பட்ஜெட்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 2014-ல்இந்த திட்டத்துக்கு ககன்யான் என பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ. தூர சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 2-3 விண்வெளி வீரர்களை அனுப்பி, அங்கு 1 முதல் 3 நாள் ஆய்வுப் பணிக்குப் பிறகுஅவர்களை பத்திரமாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது, அதாவது குறிப்பிட்ட இந்திய கடல்பகுதியில் இறங்கச் செய்வதுதான் ககன்யான் திட்டத்தின் நோக்க மாகும். வரும் 2024-ம் டிசம்பரில்இத்திட்டத்தை நிறைவேற்ற இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ககன்யான் விண்கலத்தின் புகைப்படங்களை நேற்று இஸ்ரோ வெளியிட்டது. இதுகுறித்து இஸ்ரோ தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறுகையில், “ககன்யான் திட்டத்தின் ஆளில்லா விண்கலப் பரிசோதனையை இஸ்ரோ தொடங்க உள்ளது. அவசர காலத்தில் ஏவு வாகனத்தில் இருந்து விண்வெளி வீரர்களின் வாகனம் தன்னை விடுவித்துக் கொள்ளும் (க்ரூ எஸ்கேப் சிஸ்டம்) திட்டத்தின் செயல்திறனை இந்த பரிசோதனை வெளிப்படுத்தும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்தப் பரிசோதனையின் வெற்றி, எஞ்சிய ஆளில்லா விண்கலப் பரிசோதனைகளுக்கு களம்அமைக்கும். இது இந்திய விண்வெளி வீரர்களின் ககன்யான் திட்டப் பயணத்துக்கு வழிவகுக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

கட்டமைப்பை தயாரிக்கும் கேசிபி நிறுவனம்: சென்னையைச் சேர்ந்த கேசிபி நிறுவனத்தின் ஹெவி இன்ஜினியரிங் பிரிவு ககன்யான் திட்டத்துக்கு தேவையான உயர் தொழில்நுட்பம் கொண்ட "இன்டகிரேடட் ஏர் ட்ராப் டெஸ்ட்-க்ரூ மாடல்" என்னும் கட்டமைப்பை தயாரித்து இஸ்ரோவிடம் ஒப்படைத்துள்ளது.

கேசிபி குழுமத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான இந்திரா தத், இந்த கட்டமைப்பை இஸ்ரோவின் மனித விண்வெளி விமான மைய செயல் இயக்குநர் ஆர்.ஹட்டன் வசம் வழங்கியதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ககன்யானின் முன்னோட்ட தொழில்நுட்பத் தயார்நிலையை பரிசோதிப்பதற்கும், அதன் திறனை நிரூபிப்பதற்கும் இந்த கட்டமைப்பு மிக முக்கியமானதாகும். சுமார் 3.1 மீ அகலம், 2.6 மீ. உயரம் கொண்ட அலுமினியம், 15சிடிவி6 உருக்கு ஆகியவற்றுடன் 100-க்கும் மேற்பட்ட பாகங்களால் ஏர்ட்ராப் உருவாக்கப்பட்டுள்ளதாக கேசிபி தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/166450

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்: இஸ்ரோ என்ன செய்யப் போகிறது?

என்ன செய்யப் போகிறது இஸ்ரோவின் ககன்யான்?

பட மூலாதாரம்,X/ISRO

2 மணி நேரங்களுக்கு முன்னர்

ககன்யான் திட்டத்திற்கான முன்னோட்ட சோதனையை இஸ்ரோ விஞ்ஞானிகள் வரும் சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குகின்றனர்.

ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் மனிதர்களை அனுப்புவதற்கான குப்பியின் பாதுகாப்பு செயல்பாட்டை பரிசோதனை செய்கின்றனர்.

ககன்யான் திட்டம் என்பது என்ன?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் தனது திட்டத்திற்கு ககன்யான் எனப் பெயரிட்டுள்ளது. ககன் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு வானம் என்று பொருள். வானத்தை நோக்கிச் செல்லும் வாகனம் என்ற பொருளில் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ககன்யான் திட்டத்தின் மூலம் வரும் 2025ஆம் ஆண்டில், மூன்று இந்திய விண்வெளி ஆய்வாளர்கள் விண்வெளி ஆய்வுக்காக அனுப்பப்படுவார்கள்.

ராக்கெட் ஏவும் வாகனம் மார்க் -3 (LVM-3) மூலம் செலுத்தப்படும் இந்திய விண்வெளி வீரர்கள் பூமியில் இருந்து 400 கி.மீ சுற்றுப்பாதையில் 3 நாட்கள் ஆய்வு செய்வார்கள். பிறகு மீண்டும் பூமியில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டு இந்திய கடற்பரப்பில் விழச் செய்து மீட்டு வரப்படுவார்கள். இதுதான் ககன்யான் திட்டத்தின் நோக்கம்.

இந்தத் திட்டம் விண்வெளி ஆய்வில் உள்நாட்டு நிபுணத்துவம், இந்திய தொழில்துறையின் அனுபவம், இந்திய கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் அறிவுசார் திறன்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடனான ஒத்துழைப்பில் இருந்து கிடைக்கக்கூடிய நவீன தொழில்நுட்பங்களைக் கருத்தில் கொண்டு வகுக்கப்பட்ட உத்தியின் மூலம் நிறைவேற்றப்படுகிறது.

 

இப்போது நடக்கும் சோதனையின் இலக்கு என்ன?

என்ன செய்யப் போகிறது இஸ்ரோவின் ககன்யான்?

பட மூலாதாரம்,X/ISRO

வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் அழைத்து வருவது மிகவும் சவாலான பணி. அதற்கான பல கட்ட தயாரிப்புகள் தேவைப்படுகின்றன.

மனிதர்களை அனுப்புவதற்கான குப்பியை எதிர்பாராத சவால்களில் இருந்து பாதுகாப்பதுதான் இப்போதைய ஆய்வின் நோக்கம். இந்தக் குப்பியில் 3 வீரர்கள் அமரலாம்.

ஏவுகணையை விண்ணுக்கு அனுப்பும்போது எதிர்பாராத விபத்துகள் நேரலாம். அவ்வாறான சூழலில் குப்பியை மட்டும் தனியாகப் பிரித்து பாதுகாப்பான விதத்தில் கடற்பரப்பில் விழச் செய்வதுதான் இப்போது நடக்கும் ஆய்வின் இலக்கு.

அதற்காக ஜி.எஸ்.எல்.வி எம்.கே III ஏவுகணையில் குப்பியை இணைத்து சுமார் 17 கி.மீ உயரம் வரை பறக்கச் செய்து பின்னர் அதைத் தனியாகப் பிரித்து கடலில் வீழச் செய்து சோதிக்கவுள்ளனர். அந்தக் குப்பியை மீட்டு வந்த பின்னர் அதன் பாதுகாப்புத் தன்மையைப் பரிசோதித்து அதற்கு ஏற்ற விதத்தில் மேம்படுத்தவுள்ளார்கள்.

 

இந்த சோதனை எப்படி நடக்கும்?

என்ன செய்யப் போகிறது இஸ்ரோவின் ககன்யான்?

பட மூலாதாரம்,X/ISRO

அக்டோபர் 21 அன்று நடக்கும் சோதனைக்கு திரவ தள்ளுவிசையால் இயங்கும் ஒற்றை நிலை ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. இது இந்தப் பரிசோதனை பணிக்காக சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டது.

அந்த ராக்கெட்டின் மேலே ஒரு சிறப்புக் குப்பி இணைக்கப்பட்டிருக்கும். அதில்தான் மனிதர்கள் பாதுகாப்பாக இருத்தப்படுவார்கள். அதில் வீரர்களுக்கான இருக்கைகள் அமைந்திருக்கும்.

அவசரக் காலத்தில் விண்வெளி வீரர்கள் தப்பிப்பதற்கான ஏற்பாடுகளும் அதில் இருக்கும். அது பெரிய காற்றுப்பை போல அமைந்திருக்கும். ஏவுகணை புறப்படுவதில் ஏதாவது பிரச்னை இருந்தால் குப்பியை விரைவாக வெளியே இழுத்துத் தள்ள முடியும்.

இப்போது நடக்கும் சோதனையில் ஏவுகணையின் சோதனைப் பறப்பு நடக்கிறதா என்று சரி பார்க்கப்படும். அதன் பின்னர் குப்பியில் உள்ள பாராசூட் மற்றும் பிற மீட்பு அமைப்புகள் சரியாக வேலை செய்கின்றனவா என்று பரிசோதிக்கப்படும்.

பின்னர் கடற்பரப்பில் அது விழுந்து மீட்டு எடுத்து வருவதற்கான செயல்முறை பரிசோதிக்கப்படும். இந்தப் பரிசோதனையில் கிடைக்கும் முடிவுகள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு அவசியமான ஏராளமான படிப்பினைகளை வழங்கும்.

 
என்ன செய்யப் போகிறது இஸ்ரோவின் ககன்யான்?

பட மூலாதாரம்,X/ISRO

என்ன செய்யப் போகிறது இஸ்ரோவின் ககன்யான்?

பட மூலாதாரம்,X/ISRO

ககன்யான் திட்டத்தின் அடுத்தகட்டம் என்ன?

திட்டத்தைச் செயல்படுத்த இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் மேலும் பல்வேறு நிலைகளை ககன்யான் கடக்க வேண்டும். இப்போது நடக்கவிருப்பது முதல் முன்னோட்ட சோதனை.

அடுத்து இதேபோல வாகனத்தைப் பரிசோதிப்பதற்கான D2, D3, D4 என்ற மூன்று சோதனைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்தப் பரிசோதனைகளின்போது அவசரகால பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விண்வெளியின் கடுமையான சூழல் மற்றும் கதிர்வீச்சு சாத்தியங்களை எதிர்கொள்ளும் திறன் உள்ளிட்டவை பரிசோதிக்கப்படும்.

பலகட்ட பரிசோதனைகளை முடித்து திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் நான்காவது நாடு என்ற சாதனையை இந்தியா எட்டிப்பிடிக்கும்.

ஏற்கெனவே நிலவில் தரையிறங்கி சாதித்த இந்தியாவிற்கு இது மற்றுமொரு முக்கிய சாதனையாக அமையும். மேலும் விண்வெளி ஆய்வில் அதன் வளர்ந்து வரும் திறன்களையும் நிரூப்பதாகவும் இது அமைந்திடும்.

 
என்ன செய்யப் போகிறது இஸ்ரோவின் ககன்யான்?

பட மூலாதாரம்,X/ISRO

என்ன செய்யப் போகிறது இஸ்ரோவின் ககன்யான்?

பட மூலாதாரம்,X/ISRO

இஸ்ரோவின் அடுத்தடுத்த இலக்குகள் என்ன?

ககன்யான் திட்டத்தின் முன்னேற்றத்தைp பரிசீலிப்பதற்கான கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்றார். அப்போது இஸ்ரோவின் அடுத்தடுத்த இலக்குகளையும் அதில் பேசியுள்ளனர்.

வரும் 2035ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி நிலையம் அமைப்பது, 2040க்குள் சந்திரனுக்கு முதல் இந்தியரை அனுப்புவது உள்ளிட்டவற்றை இலக்காகக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோதி பேசினார்.

இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமானால் நம்முடைய ஏவுகணை தொழில்நுட்பங்கள் முன்னேற வேண்டும். மனிதர்கள் தங்குவதற்கு ஏற்ற விண்வெளி ஆய்வகங்களை நிலைநிறுத்துவதில் ஆராய்ச்சிகளை முன்னெடுக்க வேண்டும்.

அதற்கேற்ற எண்ணிக்கையில் ஏவுதளங்களையும் அமைக்க வேண்டும். இவற்றோடு வெள்ளி, செவ்வாய் ஆகிய கோள்களில் தரை இறங்குவதற்கான திட்டமும் இஸ்ரோவின் பட்டியலில் உள்ளது.

https://www.bbc.com/tamil/articles/ck5x3d964j3o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ககன்யான் சோதனை: மூன்று முறை ஒத்திவைக்ப்பட்ட பின், வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சோதனைக்கலன்

ககன்யான் சோதனை: விண்ணில் செலுத்த 5 நொடிகளே இருந்தபோது நிறுத்தப்பட்டது ஏன்?

பட மூலாதாரம்,X/ISRO

21 அக்டோபர் 2023, 03:42 GMT
புதுப்பிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர்

ககன்யான் திட்டத்திற்கான முன்னோட்ட சோதனை இன்று காலை 8 மணியிலிருந்து மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட பின், மற்றொரு நாளில் சோதனை நடைபெறும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியிருந்தார்.

இந்நிலையில், சோதனைக்கலனில் ஏற்பட்ட கோளாரைக் கண்டுபிடித்து, சீரமைத்து, மீண்டும் 10 மணிக்கு சோதனைக்கலன் விண்ணில் ஏவப்பட்டது.

ககன்யான் திட்டத்திற்கான முன்னோட்ட சோதனையை இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று காலை 8 மணிக்கு விண்ணில் ஏவுத் திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், வானிலை காரணமாக காலை 8 மணியில் இருந்து 8.30 மணிக்கு ஒத்திவைக்கபட்டது. பின்னர், மீண்டும் 8.30 மணிக்கான கவுன்ட்டவுன் நிறுத்தப்பட்டு, 8.45 மணிக்கு விண்ணல் ஏவி சோதனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

 
ககன்யான் சோதனை: விண்ணில் செலுத்த 5 நொடிகளே இருந்தபோது நிறுத்தப்பட்டது ஏன்?

பட மூலாதாரம்,X/ISRO

தொடர்ந்து, 8.45 மணிக்கு சரியாக விண்ணில் ஏவுவதற்கு ஐந்து விநாடிக்கு முன்னதாக கவுன்ட்டவுன் நிறுத்தப்பட்டது.

பிறகு இன்று சோதனை நடைபெறாது என்றும், மற்றொரு நாளில் சோதனை நடைபெறும் என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார். மேலும் அடுத்து எப்போது மாதிரி விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட் ஏவுதல் சோதனை நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

சுமார் 45 நிமிட சோதனைக்குப் பின், கடைசி விநாடியில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டதாகவும் காலை 10 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்றும் கூறினார்.

மேலும், சோதனைக்கான டிவி-டி1 ராக்கெட் பாதுகாப்பாகவே உள்ளதாகவும் சோம்நாத் கூறினார். தரையிலிருந்த 16.6 கிலோ மீட்டர் விண்ணில் ஏவப்பட்டு, பாராசூட் மூலம் வங்கக்கடலில் இறக்கும் சோதனை இது.

ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் மனிதர்களை அனுப்புவதற்கான குப்பியின் பாதுகாப்பு செயல்பாட்டை பரிசோதனை செய்கின்றனர்.

 
ககன்யான் சோதனை: விண்ணில் செலுத்த 5 நொடிகளே இருந்தபோது நிறுத்தப்பட்டது ஏன்?

பட மூலாதாரம்,X/ISRO

வானிலை காரணமாக நிறுத்தப்பட்டதா?

இன்று இரண்டு முறை வானிலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட ககன்யான் திட்டத்தின் சோதனை, மூன்றாவது முறையாக கடைசி ஐந்து விநாடிகளில் ஒத்தி வைக்கப்பட்டதற்கு வானிலை காரணம் இல்லை என்கிறார் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநர் பாண்டியன்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "எந்தவொரு ராக்கெட் ஏவப்படும்போதும் கடைசி 10 நிமிடங்கள் மனிதர்களின் கட்டுப்பாட்டில் இருந்து தானியங்கி கட்டுப்பாட்டிற்குச் சென்றுவிடும். வானிலை உள்ளிட்ட புறக்காரணிகள் சரியாக இருந்தால் மட்டுமே தானியங்கியின் கட்டுப்பாட்டிற்குச் செல்லும்."

"தானியங்கிக் கட்டுப்பாட்டிற்கு சென்ற பிறகு நிறுத்தப்படுகிறது என்றால் அதற்கு வானிலை காரணமாக இருக்காது. இயந்திரக் கோளாறோ அல்லது மென்பொருள் கோளாறோ அல்லது வேறு ஏதேனும் சிக்கலோ இருக்கலாம்.

ஆனால், என்ன சிக்கல் என்பதை சோதனைக்கலனில் உள்ள கணினியை எடுத்து ஆய்வு செய்த பிறகே தெரியும்," என்கிறார் பாண்டியன்.

இன்றைய சோதனையில் என்ன நடக்கவிருந்தது?

ககன்யான் சோதனை: விண்ணில் செலுத்த 5 நொடிகளே இருந்தபோது நிறுத்தப்பட்டது ஏன்?

பட மூலாதாரம்,X/ISRO

அக்டோபர் 21 அன்று நடக்கும் சோதனைக்கு திரவ தள்ளுவிசையால் இயங்கும் ஒற்றை நிலை ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. இது இந்தப் பரிசோதனை பணிக்காக சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டது.

அந்த ராக்கெட்டின் மேலே ஒரு சிறப்புக் குப்பி இணைக்கப்பட்டிருக்கும். அதில்தான் மனிதர்கள் பாதுகாப்பாக இருத்தப்படுவார்கள். அதில் வீரர்களுக்கான இருக்கைகள் அமைந்திருக்கும்.

அவசரக் காலத்தில் விண்வெளி வீரர்கள் தப்பிப்பதற்கான ஏற்பாடுகளும் அதில் இருக்கும். அது பெரிய காற்றுப்பை போல அமைந்திருக்கும். ஏவுகணை புறப்படுவதில் ஏதாவது பிரச்னை இருந்தால் குப்பியை விரைவாக வெளியே இழுத்துத் தள்ள முடியும்.

இப்போது நடக்கும் சோதனையில் ஏவுகணையின் சோதனைப் பறப்பு நடக்கிறதா என்று சரி பார்க்கப்படும். அதன் பின்னர் குப்பியில் உள்ள பாராசூட் மற்றும் பிற மீட்பு அமைப்புகள் சரியாக வேலை செய்கின்றனவா என்று பரிசோதிக்கப்படும்.

பின்னர் கடற்பரப்பில் அது விழுந்து மீட்டு எடுத்து வருவதற்கான செயல்முறை பரிசோதிக்கப்படும். இந்தப் பரிசோதனையில் கிடைக்கும் முடிவுகள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு அவசியமான ஏராளமான படிப்பினைகளை வழங்கும்.

https://www.bbc.com/tamil/articles/ckd991kx5zzo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் பெண்கள்: இஸ்ரோ தலைவர் விருப்பம்

23 OCT, 2023 | 01:41 PM
image

திருவனந்தபுரம்: 

விண்வெளிக்கு பெண்களை அனுப்புவது குறித்து ஆர்வமாக உள்ளதாக இஸ்ரோவின் தலைவர் தெரிவித்துள்ளார்

இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேற்று கூறியதாவது: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பெண்களும் பங்கேற்க வேண்டும் என்பதே இஸ்ரோவின் விருப்பம். அப்போதுதான் எதிர்காலத்தில் அவர்களை விண்ணுக்கு அனுப்ப முடியும். அடுத்த ஆண்டு அனுப்பப்படவுள்ள ஆளில்லா ககன்யான் விண்கலத்தில் பெண் உருவம் - மனிதனைப் போன்ற ஒரு ரோபோ அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு சோம்நாத் கூறினார்.

மனிதர்களை பூமியிலிருந்து 400 கி.மீ. சுற்றுவட்டப்பாதைக்கு விண்ணுக்கு அனுப்பி 3 நாட்கள் தங்க வைத்து ஆய்வு மேற்கொண்டு பின்பு அவர்களை பூமிக்கு பத்திரமாக அழைத்து வருவது ககன்யான் திட்டத்தின் நோக்கம். இந்த திட்டத்தின் முதல் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ககன்யான் திட்டம் 2025-ம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும். இந்த பணி மிக குறுகிய காலத்தில் நிறைவேற்றப்படவுள்ளது என்று சோம்நாத் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/167557

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.