Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
01 DEC, 2023 | 05:30 PM
image

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ள மாணவர்களுக்கு கடந்த வருடத்தைப் போன்று, இந்த வருடமும் ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.     

அதற்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலில் மேற்படி புலைமைப்பரிசில் திட்டம் இன்று வெள்ளிக்கிழமை (01) ஆரம்பிக்கப்பட்டது. 

அதன்படி நாட்டிலுள்ள 100 கல்வி வலயங்களும் உள்ளடங்கும் வகையில் ஒரு கல்வி வலயத்தில் இருந்து 50 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு, 5000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா புலைமைபரிசில் வழங்கப்படவுள்ளது.  

கடந்த வருடத்தில் 3000 மாணவர்களுக்கு 24 மாதங்களாக ஜனாதிபதி நிதியத்தினால் புலைமைப் பரிசில் வழங்கப்பட்டது. 

2022 (2023) ஆண்டில் க.பொ.த (சா.த) பரீட்சைக்கு முதன்முறையாக தோற்றி, சித்தியடைந்து உயர்தரப் பயில்வதற்கு தகுதிபெற்றிருப்பது, அரச அல்லது கட்டணம் அறவிடப்படாத தனியார் பாடசாலையில் கல்வி கற்பது, குடும்ப மாத வருமானம் 100,000 ரூபாவிற்கு குறைவாக இருப்பது இந்த புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பிக்க அடிப்படை தகுதியாக கருதப்படுகிறது.

இந்த புலைமைப்பரிசில் வேலைத்திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தை ஜனாதிபதி செலயகம் presidentsoffice.gov.lk, ஜனாதிபதி நிதியம் presidentsfund.gov.lk ஜனாதிபதி ஊடகப் பிரிவு pmd.gov.lk ஆகிய இணையதளங்களில் தறவிறக்கம் செய்யலாம்.  

அந்த விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து சாதரண தரம் கற்ற பாடசாலை அதிபர்களிடத்தில் கையளிக்கப்பட வேண்டும்.

இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க பாடசாலை மாணவர்கள் மற்றும் அதிபர்களின் ஒத்துழைப்பை ஜனாதிபதி நிதியம் எதிர்பார்க்கிறது.

https://www.virakesari.lk/article/170755

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் தொடர்பான அறிவித்தல்!

Scholarships.jpg

உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தின் பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது டிசம்பர் 22 ஆம் திகதி முடிவடைகிறது என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இம்முறை க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி வழங்கிய பணிப்புரைக்கு அமைவாக கடந்த வருடமும் இவ்வருடமும் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல் டிசம்பர் மாதம் 01ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

நாட்டின் 100 கல்வி வலயங்களையும் உள்ளடக்கும் வகையில், ஒவ்வொரு வலயத்திலிருந்தும் 50 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, 5000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா புலமைப்பரிசில்கள் வழங்கப்படும்.

2022 (2023) ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு முதல் முறையாகத் தோன்றி, பரீட்சையில் சித்தி பெற்று, உயர்தரம் கற்கத் தகுதிபெற்று, அரச பாடசாலையிலோ அல்லது கட்டணம் அறவிடாத தனியார் பாடசாலையிலோ கல்வி பயிலும், விண்ணப்பதாரரின் குடும்பத்தின் மாத வருமானம் ரூ. 100,000 வுக்கு குறைவாக காணப்படுகின்றமை இந்த புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படைத் தகுதியாகக் கருதப்படுகிறது.

இந்த புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் அது தொடர்பான விபரங்களை ஜனாதிபதி செயலகத்தின் இணையத்தளங்கள்: presidentsoffice.gov.lk
ஜனாதிபதி நிதியம்: presidentsfund.gov.lk மற்றும்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு: pmd.gov.lk ஆகியவற்றிற்குச் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களை முறையாகப் பூர்த்தி செய்த பின், குறித்த மாணவர்கள், 2023 டிசம்பர் 22-ஆம் திகதிக்கு முன், தாங்கள் பரீட்சை எழுதிய பாடசலையின் அதிபரிடம் விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும்.

செல்லுபடியாகும் காலம் மீண்டும் நீட்டிக்கப்படாது என எதிர்பார்க்கப்படுவதால், எனவே தகுதியுடைய சகல மாணவர்களும் டிசம்பர் 22 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி நிதியம் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுத்துள்ளது.

https://thinakkural.lk/article/285415

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகை அதிகரிப்பு!

Published By: VISHNU   28 JAN, 2024 | 12:59 PM

image

2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதன் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் கொடுப்பனவை 2024 பெப்ரவரி மாதம் முதல் ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். 

மாணவ, மாணவிகளின் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்திய நிலையில் ஜனாதிபதி ரணில் விகரமசிங்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். 

இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும், கற்கும் திறன் கொண்ட, ஆனால் பொருளாதாரச் சிரமங்களுள்ள  மாணவர்களை இனங்கண்டு அவர்களின் எதிர்காலத்தை   மேம்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி நிதியம் இந்த புலமைப்பரிசில் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.  

2021/2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ், ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசில் பெறுபவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டதுடன் இதுவரை 10 மாதாந்த தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, புலமைப்பரிசில் தொகை அதிகரிப்புடன், 2024 பெப்ரவரி முதல் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் வரை ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் ஜனாதிபதி நிதியிலிருந்து 6,000 ரூபா மாதாந்த உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும் 2022/2023 ஆண்டு தொடர்பாக க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர்   தேர்ச்சி பெற்ற 5,000 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அந்த மாணவர் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் வரை மாதாந்தம்  ரூ. 6000 தொகையை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன்படி, இலங்கையின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும்  வகையில் தற்போது பிராந்திய மட்டத்தில் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், தெரிவுகள் நிறைவடைந்தவுடன் உரிய மாணவ மாணவிகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்க  எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான  புதுப்பிக்கப்படும் தகவல்களை எதிர்காலத்தில் அறிந்து கொள்வதற்கு , ஜனாதிபதி நிதியத்தின் www.facebook.com/president.fund என்ற உத்தியோகபூர்வ பேஸ்புக்  பக்கத்தை மற்றும் உத்தியோகபூர்வ YouTube சேனலான www.youtube.com/@PresidentsFund ஐ like/follow அல்லது subscribe  செய்யுமாறும் www.presidentsfund.gov.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் இது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி நிதியம் அறிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/174979

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருடத்துக்கு ஒரு இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு 'ஜனாதிபதி புலமைப்பரிசில்கள்' : ஜனாதிபதி நிதியம் 3600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

25 FEB, 2024 | 04:27 PM
image

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியம் "ஜனாதிபதி கல்வி புலமைப்பரிசில் 2024/2025" திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

அதன்படி, மொத்தமாக இலங்கையில் உள்ள 10,126 பாடசாலைகளையும் உள்ளடக்கிய வகையில், தரம் 01 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும் ஒரு இலட்சம் மாணவர்களுக்கு வருடாந்தம் இந்த நிதி உதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

அத்துடன், இந்த முழுமையான திட்டத்துக்கு 3600 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியம் ஒதுக்கியுள்ளது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களில் உள்ள மாணவர்கள் பாடசாலை உபகரணங்கள், பயிற்சி புத்தகங்களைப் பெற்றுக்கொள்வது மற்றும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொள்வது போன்ற விடயங்களில் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

ஒவ்வொரு பாடசாலையிலும் மிகக் குறைந்த வசதியுடைய திறமையான மாணவர்களைத் தெரிவு செய்து, அந்தப் பிள்ளைகளுக்கு கல்வி கற்றலுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் இந்நாட்டு மாணவர்களுக்கு தொடர்ச்சியான பாடசாலைக் கல்வியை வழங்கி, அதன் ஊடாக நாட்டின் மனித வளத்தை மேம்படுத்த முதலீடு செய்வதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எதிர்பார்ப்பாகும்.

அதன்படி, இந்தப் புலமைப்பரிசில் பெறுவோரைத் தெரிவு செய்யும் செயல்முறை மற்றும் அது தொடர்பான அனைத்து தகவல்களும் ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கமான www.facebook.com/president.fund மூலம் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும்.

https://www.virakesari.lk/article/177262

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.