Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கிறிஸ்துவம், இஸ்லாம், கிறிஸ்துவர்கள், இயேசு கிறிஸ்து, முஸ்லீம்கள், குர்ஆன், பைபிள்

பட மூலாதாரம்,THINKSTOCK

கட்டுரை தகவல்
  • எழுதியவர், தாரீஃப் காலிதி
  • பதவி, பிபிசி செய்திகள்
  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

இஸ்லாத்தின் கடைசி நபி முஹம்மது, மெக்காவைக் கைப்பற்ற வேண்டும் என்ற தனது நீண்ட கால கனவை கி.பி 630இல் நிறைவேற்றிக் கொண்டார்.

இதற்குப் பிறகு, மெக்கா நகரத்திலிருந்த உருவ வழிபாட்டின் ஒவ்வொரு தடயத்தையும் அழிக்க உத்தரவு பிறப்பித்தார்.

மெக்கா மீதான முகமது சாஹேப்பின் இந்த மத வெற்றியில், ஆழமான அரசியல் குறியீடுகளும் மறைந்திருந்தன. மெக்கா புதிய மதத்தின் மையமாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு மெக்கா வெற்றி என்பது அல்லாஹ்விடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது போல் இருந்தது.

காபாவுக்குள் நுழைந்த பிறகு, அதாவது நகரத்தின் சிலைகள் வைக்கப்பட்டிருந்த மைய கட்டிடத்தில் நுழைந்த பிறகு, முகமது நபி அனைத்து சிலைகளையும் அங்கிருந்து அகற்ற அல்லது அழிக்க உத்தரவிட்டார்.

காபாவில் வைக்கப்பட்டிருந்த அந்த சிலைகளில், ஒரு கன்னிப் பெண், தன்னுடைய குழந்தையுடன் இருக்கும் சிலையும் இருந்தது. இந்த கிறிஸ்தவ சிலைக்கு அருகில் சென்ற முகமது சாஹேப், தனது மேலங்கியால் அதை மூடிவிட்டு, மற்ற சிலைகளை அங்கிருந்து அகற்ற உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் உண்மையா அல்லது கற்பனையா? இந்தக் கேள்வி முக்கியமில்லை. நான் மேற்கோள் காட்டியுள்ள இந்தக் கதை குறைந்தது 1200 ஆண்டுகள் பழமையானது மற்றும் இஸ்லாமிய வரலாற்று பதிவுகளின் தொடக்க காலத்தைச் சேர்ந்தது.

 
கிறிஸ்துவம், இஸ்லாம், கிறிஸ்துவர்கள், இயேசு கிறிஸ்து, முஸ்லீம்கள், குர்ஆன், பைபிள்

பட மூலாதாரம்,ALAMY/GETTY IMAGES

இயேசு கிறிஸ்துவைப் பற்றி குர்ஆனில் எழுதப்பட்டுள்ளது என்ன?

ஆனால் இந்த சம்பவம் நமக்குச் சொல்வது என்னவென்றால், இஸ்லாத்துக்கும் இயேசு கிறிஸ்துவின் சிலைக்கும் இடையே ஒரு நீண்ட இலக்கியப் பாரம்பரியம் இருந்து வருகிறது. இது சுமார் 1500 வருடங்களாக தொடர்ந்து வரும் வரலாற்று உறவு. இஸ்லாத்தின் ஹஸ்ரத் ஈஸாவுடன் இந்த இணைப்பு மிகவும் தனித்துவமானது.

இந்த வரலாற்று சம்பவத்தின் பின்னணியை நிரூபிக்க, எனக்கு மிகப்பெரிய ஒரு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இயேசுவுக்கும் இஸ்லாத்துக்கும் இடையே உள்ள உறவை நான் தோராயமாக சொல்ல முயற்சித்தால் நன்றாக இருக்கும்.

இந்த இணைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் மற்றும் தீர்க்கமான தருணங்களை மட்டும் உங்களுக்கு சொல்கிறேன்.

இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் இஸ்லாமிய நாகரிகத்தின் மையக்கருத்து எனப்படும் ஆவணம். இவ்வாறான நிலையில் இஸ்லாத்தின் பார்வையில் நாம் உருவாக்க முயலும் இயேசுவின் சித்திரம் குர்ஆனிலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது தெரிந்ததே.

குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கு முகமது நபிக்கு முந்தைய தீர்க்கதரிசிகளைப் பற்றியது, மேலும் அதில் பெரும்பாலானவை பைபிளை (கிறிஸ்தவ புனித நூல்) மேற்கோள் காட்டுகின்றன.

கிறிஸ்துவம், இஸ்லாம், கிறிஸ்துவர்கள், இயேசு கிறிஸ்து, முஸ்லீம்கள், குர்ஆன், பைபிள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

குர்ஆனின் ஹஸ்ரத் ஈஸா

குர்ஆனில் குறிப்பிடப்பட்ட அனைத்து தீர்க்கதரிசிகளிலும், இயேசு கிறிஸ்து மட்டுமே மிகப்பெரிய புதிராகத் தோன்றுகிறார். மற்ற எந்த தீர்க்கதரிசியின் கதையையும் விட இயேசுவின் கதை குர்ஆனில் மிகவும் யதார்த்தமாக சொல்லப்பட்டுள்ளது.

அவ்வாறு சொல்லப்பட்டுள்ளதால், ஹஸ்ரத் ஈஸாவின் முற்றிலும் மாறுபட்ட ஒரு பாத்திரம் குர்ஆனில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

வெளிப்படையாக, இயேசுவைப் பற்றிய அக்கால கிறிஸ்தவர்களின் பார்வையை மாற்றும் வகையிலான ஒரு புதிய இயேசு குர்ஆனில் இருக்க வேண்டுமென்பதே இதன் நோக்கம்.

இதை வாசிக்கும் ஒரு கிறிஸ்தவருக்கு அல்லது கேட்பவருக்கு இது அதிர்ச்சியாக இருக்கலாம். குர்ஆனில் மற்ற தூதர்களை விட இயேசுவைக் குறித்து கதைகளை விட அதிகம் மதம் சார்ந்த சம்பவங்களாக எழுதப்பட்டுள்ளது.

இங்கே ஹஸ்ரத் ஈஸா முற்றிலும் மாறுபட்டவராகத் தோன்றுகிறார். அவர் கடவுளாக அவதாரம் எடுக்கவில்லை, அவர் ஒரு மத போதகர் இல்லை. கிறிஸ்தவர்களின் கூற்றுப் படி, உலக மக்களின் பாவங்களைச் சுமக்க வேண்டிய துன்பமும் இயேசுவுக்கு இல்லை.

குர்ஆனில், இயேசு தன்னை ஒரு கடவுள் என்று கூறவில்லை அல்லது கடவுளின் பார்வையில் அவர் நேரடியாக தெய்வீக நிலைக்கு வரவில்லை. இந்த குணங்கள் அனைத்தும் இயேசுவின் குணாதிசயத்திலிருந்து பிரிக்கப்பட்டால், பின்னர் இயேசுவின் முக்கியத்துவம் என்ன என்ற கேள்வியை எந்த கிறிஸ்தவரும் எழுப்பலாம் அல்லவா?

ஹஸ்ரத் ஈஸா சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்க்கதரிசி என்று குர்ஆனில் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் அவரை அனைத்து தீர்க்கதரிசிகளிலும் தனித்துவமானவர் என்று விவரித்துள்ளது, "அவர் அல்லாஹ்வின் அற்புதம், அவர் அல்லாஹ்வின் மொழி. அவனுடைய ஆன்மா" என்று அதில் உள்ளது.

 
கிறிஸ்துவம், இஸ்லாம், கிறிஸ்துவர்கள், இயேசு கிறிஸ்து, முஸ்லீம்கள், குர்ஆன், பைபிள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இஸ்லாத்தில் சித்தரிக்கப்படும் இயேசு

எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசுவைப் பற்றிய அத்தகைய ஒரு சித்தரிப்பு இஸ்லாத்தில் எவ்வாறு உருவானது மற்றும் அது இஸ்லாமிய கலாச்சாரத்தில் எவ்வாறு வளர்ந்தது?

ஹதீஸில் (முஹம்மது நபி பேசிய வார்த்தைகளின் தொகுப்பு), இயேசு ஒரு தீர்க்கதரிசியாக குறிப்பிடப்பட்டுள்ளார், அவர் தீர்ப்பு நாளில் வந்து உலகை அதன் முடிவுக்கு அழைத்துச் செல்வார்.

இதன் பொருள் என்னவென்றால், இஸ்லாத்தின் சகாப்தத்தின் முடிவை அறிவிக்கும் தீர்க்கதரிசி இயேசு. இஸ்லாத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை இரு முனைகளிலும் அவர் நிற்பார். ஹதீஸின் இந்த குறிப்புக்குப் பிறகு, இஸ்லாமிய இலக்கியத்தின் வளர்ந்து வந்த மரபுகள் இஸ்லாம் பரவிய இடங்களில் இயேசுவை தீர்க்கதரிசியாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கின.

இஸ்லாமிய இலக்கியத்தில் இயேசுவின் போதனைகள் மற்றும் அவை தொடர்பான கதைகளின் ஒரு பெரிய தொகுப்பு உள்ளது. அதை ஒன்றாகச் சேர்த்து முஸ்லிம் சுவிசேஷம் என்று அழைக்கலாம் (நான் சமீபத்தில் இயேசு தொடர்பான கதைகளின் தொகுப்பை 'முஸ்லிம் இயேசு' என்ற பெயரில் வெளியிட்டேன்).

இயேசுவின் அந்த செய்திகள் மற்றும் கதைகளின் தொகுப்பில் சிலவற்றை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்: 'இதயக் கண்களால் பார்ப்பவன், ஆனால் தான் எதைப் பார்க்கிறோமோ அதில் ஆர்வம் காட்டாதவன், அவனே அதிர்ஷ்டசாலி என்று இயேசு சொன்னார்'

ஒரு பிரசங்கம் இப்படி செல்கிறது, 'இயேசு, இந்த உலகம் ஒரு பாலம் என்றார். இந்த பாலத்தை கடந்து செல்லுங்கள், ஆனால் அதைக் கடக்க வேறு எதையும் கட்ட வேண்டாம்'.

மற்றொரு சிறு உரையாடலில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது, 'இயேசு ஒரு மனிதனைச் சந்தித்து, 'நீங்கள் என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்டார், அதற்கு அந்த மனிதர், 'கடவுளின் பாதத்தில் சரணடைகிறேன்' என்று பதிலளித்தார்.

'உங்களை யார் கவனித்துக்கொள்கிறார்கள்?' என்று இயேசு கேட்டார். அதற்கு அந்த மனிதர், 'என் சகோதரர்' என்று பதிலளித்தார். அப்போது இயேசு சொன்னார், 'உன்னைவிட உன் சகோதரன் கடவுளிடம் அதிக பக்தி கொண்டவன்'.

இந்த உரையாடல் மேலும் தொடர்கிறது. இஸ்லாமிய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இயேசுவின் இத்தகைய பிரசங்கங்களும் கதைகளும் சுமார் முன்னூறு உள்ளன.

ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளாகப் பதிவுசெய்யப்பட்ட இந்த விரிவுரைகளில், ஹஸ்ரத் ஈஸாவின் குணாதிசயங்கள் மற்றும் அவரது அனைத்து வடிவங்களிலும் இஸ்லாமிய கலாச்சாரத்தின் பற்றுதலை நாம் காண முடியும்.

கிறிஸ்துவம், இஸ்லாம், கிறிஸ்துவர்கள், இயேசு கிறிஸ்து, முஸ்லீம்கள், குர்ஆன், பைபிள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இஸ்லாமிய இலக்கியத்தில் இயேசு

இந்த இஸ்லாமிய கதைகளில், சில சமயங்களில் கர்த்தராகிய இயேசு ஒரு கண்டிப்பான துறவியாகவும், சில சமயங்களில் அவர் இஸ்லாமிய ஆன்மீகத்தின் பாதுகாவலராகவும், படைப்பின் ரகசியங்களின் தூதராகவும், இயற்கை மற்றும் மனிதனின் நலனுக்காக பாடுபடுகிறவராகவும் சித்தரிக்கப்படுகிறார்.

சரி இயேசுவை வடிவமைப்பதற்கான எனது முயற்சிக்குத் திரும்புவோம், இஸ்லாமிய இலக்கியத்தில் இயேசுவைப் பற்றி விரிவாக இருக்கும் வரலாற்றுப் பதிவுகளில் சில முக்கியமான விஷயங்களைக் காண்போம்.

கி.பி பத்தாம் நூற்றாண்டில், பாக்தாத்தில் ஒரு பெரிய மாயத் துறவி இருந்தார், அவர் பெயர் அல்-ஹல்லாஜ். பிரபல பிரெஞ்சு அறிஞரான லூயிஸ் மெசினெஸ், அல்-ஹல்லாஜின் வாழ்க்கையைப் பற்றியும், அவர் சிலுவையில் அறையப்பட்ட கதையைப் பற்றியும் 'The Passion of al-Hallaj' என்ற பெயரில் எழுதியுள்ளார்.

நீங்கள் நம்ப மாட்டீர்கள், மனிதகுல வரலாற்றில் அல்-ஹல்லாஜ், சாக்ரடீஸ், காந்தி மற்றும் ஓரிரு புனிதர்கள் கிறிஸ்துவை மிகவும் ஒத்தவர்களாக இருந்தனர். அல்-ஹல்லாஜுக்கும் இயேசுவுக்கும் இடையிலான ஒற்றுமைக்கு ஒரு முக்கிய காரணம், அவர்கள் மனித ஆத்மாவின் இயல்பை முழுமையாக ஏற்றுக்கொண்டர்.

ஆன்மா என்பது வாழ்க்கையின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று என்று அல்-ஹல்லாஜ் நம்பினார்.

இந்த யதார்த்தத்திற்கான தேடுதலே, தனது சொந்த ஆன்மீகத்தை கோருவதற்கு அல்-ஹல்லாஜூக்கு வழிவகுத்தது. ஆனால் அதே நேரத்தில், அல்-ஹல்லாஜ் சட்டத்தின் மீதான அர்ப்பணிப்பு உணர்வையும் கொண்டிருந்தார், அதை அவர் தனது உயிரை தியாகம் செய்வதன் மூலம் நிறைவேற்றினார்.

அல்-ஹல்லாஜின் மரணம் சட்டத்தின் வரம்புகளுக்குள் நிகழ்ந்தது, எனவே மதத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கடந்து, அவற்றை அவரால் வெல்ல முடிந்தது.

அதனால் தான் அல்-ஹல்லாஜ் தனது சீடர்களுக்கு ஒருமுறை இவ்வாறு அறிவுரை கூறினார், 'நீங்கள் ஏன் ஹஜ்ஜு செய்ய மக்கா செல்ல வேண்டும்?'

'உங்கள் வீட்டிற்குள் ஒரு சிறிய வழிபாட்டுத் தலத்தை உருவாக்கி, அதை முழு மனதுடன், பக்தியுடன் சுற்றி வாருங்கள். இதன் மூலம் ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியும்' என்றார்.

 
கிறிஸ்துவம், இஸ்லாம், கிறிஸ்துவர்கள், இயேசு கிறிஸ்து, முஸ்லீம்கள், குர்ஆன், பைபிள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹஸ்ரத் ஈசா- இஸ்லாமிய சூஃபித்துவத்தின் புரவலர்

அல்-ஹல்லாஜின் முழு வாழ்க்கையும், மதத்தின் எழுதப்பட்ட விதிகளுக்கும் கடமை உணர்வுக்கும் இடையிலான ஒரு இழுபறி பதிவாகும்.

அவரது சோதனை காலத்திலும், அவரது துயரமான கடைசி நாட்களிலும் அவரைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் தோன்றி, சிலுவையில் அறையப்படும் தருணத்தில் அது உச்சக்கட்டத்தை அடைகிறது.

அல்-ஹல்லாஜ் முன்வைத்த தூய்மையின் தரநிலை, இயேசு இருந்த வரை முஸ்லிம் மாயவாதத்தில் நிலைத்திருந்தது. ஹஸ்ரத் ஈஸா இஸ்லாமிய சூஃபித்துவத்தின் புரவலர் ஆனார்.

இப்போது நாம் பின்னோக்கி நோக்கிச் செல்வோம். சிலுவைப் போர்களின் போது, இரண்டு நூற்றாண்டுகளாக நீடித்த போர்களில், ஐரோப்பிய கிறிஸ்தவப் படைகளுக்கும் மேற்கு ஆசியாவைச் சேர்ந்த இஸ்லாமியப் படைகளுக்கும் இடையே போர் நிலவியது.

சிலுவைப் போரின் போது, அமைதியின் தூதராகிய இயேசுவுக்கும், அவரைப் பின்பற்றுபவர்களின் காட்டுமிராண்டித்தனத்துக்கும் இடையே வளர்ந்து வரும் இடைவெளியை சுட்டிக்காட்ட முஸ்லிம் அறிஞர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. பன்னிரண்டாம் நூற்றாண்டில், முஸ்லிம் இலக்கியம் இயேசுவை மீண்டும் தழுவ முயன்றது.

அவருடைய புதிய பாத்திரம் இஸ்லாமிய வேதங்களில் உருவாக்கப்பட்டது. சிலுவைப் போரில் இயேசு கிறிஸ்து அவரின் சீடர்கள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களுடன் பக்கபலமாகவும் நின்றார்.

இயேசுவின் வாரிசுரிமைக்கான இந்தப் போரில், இயேசு இஸ்லாத்தை சேர்ந்தவர் என்பதில் முஸ்லிம்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஒருவகையில் குர்ஆனில் ஏசுவின் காட்சி பதிவாகி இருந்ததைப் போல இருந்தது. இப்போது இயேசுவின் தேவை முன்பை விட அதிகமாகிவிட்டது.

நாம் இப்போதைய காலத்தை வைத்து பார்க்கும்போது, முன்பு விவரிக்கப்பட்ட கிறிஸ்துவின் பல உருவங்கள் சமகால இஸ்லாமிய ஆன்மீக சிந்தனையில் இருப்பதைக் காண்கிறோம்.

கிறிஸ்துவம், இஸ்லாம், கிறிஸ்துவர்கள், இயேசு கிறிஸ்து, முஸ்லீம்கள், குர்ஆன், பைபிள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இரண்டு இயேசுகளுக்கு இடையே அதிகரிக்கும் இடைவெளி

இவற்றில், நான் குறிப்பாக இயேசுவின் இரண்டு சித்தரிப்புகளை குறிப்பிட விரும்புகிறேன். ஒன்று இயற்கையாக மனிதனின் தூதுவனாக இருக்கும் இயேசு. இதற்காக டமாஸ்கஸுக்கு வடக்கே அமைந்துள்ள சிட்னாயா மடாலயம் அல்லது ஈரானில் உள்ள ஷிராஸ் நகரத்திற்கு உங்களை அழைத்துச் செல்ல விரும்புகிறேன்.

சிட்னாயா மடாலயம் கி.பி ஆறாம் நூற்றாண்டில் பைசண்டைன் பேரரசர் ஜஸ்டினியன் என்பவரால் நிறுவப்பட்டது. இந்த மடாலயம் பள்ளத்தாக்கின் மேலே ஒரு உயர்ந்த பாறையில் கட்டப்பட்டுள்ளது.

மேரி மாதா மற்றும் அவருக்குப் பிறந்த குழந்தையின் ஆசிர்வாதத்தைப் பெற விரும்பும் ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் இந்த மடத்தை நோக்கி நடந்து செல்வதைக் காணலாம்.

இவர்களில் பெரும்பாலான பக்தர்கள் இஸ்லாமியர்கள், கடந்த ஆயிரம் ஆண்டுகளாக தங்கள் முன்னோர்கள் கொண்டிருந்த அதே பக்தியுடன் இன்றும் இந்த கிறிஸ்தவ மடத்திற்கு வருகிறார்கள்.

இதற்குப் பிறகு நீங்கள் ஷிராஸைப் பார்க்கலாம். புகழ்பெற்ற நகரமான ஷிராஸ், முஸ்லீம் கலை மற்றும் கட்டிடக்கலையின் பொக்கிஷம் என்று அழைக்கப்படுகிறது.

இது தவிர, கவிஞர்கள் மற்றும் சூஃபி துறவிகளின் தோட்ட நகரமும் உள்ளது. இங்கு இஸ்லாமிய பாரம்பரிய மருத்துவ முறைப்படி காயங்களைக் குணப்படுத்துவது அல்லது இயேசுவின் குணப்படுத்தும் முறை போன்ற வழிகள் இன்னும் நடைமுறையில் உள்ளது.

பெரும் பாரசீகக் கவிஞர் ஹபீஸ் ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்பே தனது கவிதைகளில் இந்தப் பாரம்பரியத்தைப் பிரதிபலித்திருந்தார். இந்த வழியில், இலக்கியத்தில் அல்லது ஈரானின் பாரம்பரிய சிகிச்சையில், இயேசுவின் 'இரட்சகன்' எனும் அவதாரத்தின் உருவகத்தை நாம் காணலாம்.

கிறிஸ்துவம், இஸ்லாம், கிறிஸ்துவர்கள், இயேசு கிறிஸ்து, முஸ்லீம்கள், குர்ஆன், பைபிள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஷியா இஸ்லாத்தில் இயேசுவின் வாழ்க்கை

ஈரானில் ஆதிக்கம் செலுத்தும் ஷியா இஸ்லாத்தில், கி.பி 682இல் நடந்த, முகமது நபியின் பேரன் ஹுசைனின் தியாகத்தை நினைவுகூறுவது ஒரு முக்கிய ஆன்மீக நிகழ்வாக உள்ளது.

குறிப்பாக ஷியா இஸ்லாமில், இயேசுவின் வாழ்க்கை மற்றும் இறப்பு ஹுசைனின் காலத்தில் நடந்த மத நிகழ்வு. இயேசு/ஹுசைன் இடையேயான இந்த ஒற்றுமை ஷியா இஸ்லாத்தின் மத அனுபவத்தில் எப்போதும் இருப்பது போல் தெரிகிறது.

இப்போது இன்னொரு கவிஞரைக் குறிப்பிட வேண்டும். ஈராக்கின் பத்ர் ஷகிர் அல்-சயாப், இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த அரபுக் கவிஞராகக் கருதப்படுகிறார்.

நாடு கடத்தல், சிறைவாசம், உடல்நலக்குறைவு மற்றும் ஒடுக்குமுறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக அவரது வாழ்க்கை அர்ப்பணிக்கப்பட்டது.

பத்ர் ஷாகிரின் கவிதையின் வடிவம் மிகவும் நவீனமானது, ஆனால் அவரது பாணி முற்றிலும் பாரம்பரியமானது. நவீன அரபு/இஸ்லாமிய இலக்கியத்தில் இயேசுவின் மிக ஆழமான மற்றும் மறக்கமுடியாத தாக்கத்தை அவருடைய கவிதைகளில் காணலாம்.

பத்ர் ஷாகிரின் ஒரு கவிதை, அதன் தலைப்பு 'சிலுவை மரணத்திற்குப் பிறகு இயேசு', குறிப்பாக இயேசுவின் துன்பத்தை விவரிக்கிறது. இந்த கவிதையில், இயேசு இயற்கையின் கடவுளாகவும், துன்பத்தின் மெசியாவாகவும் கற்பனை செய்யப்பட்டுள்ளார்.

அதன் முதல் மற்றும் கடைசி சரணங்களை நான் இப்போது மேற்கோள் காட்டுகிறேன்:

'அவர்கள் என்னை சிலுவையில் ஏற்றியபோது, காற்றில் அழுகுரல் கேட்டது'.

'வரிசையில் நின்று அழுது கொண்டிருந்தவர்களுடைய சத்தத்தால் இலைகள் சலசலத்தன. மதியம் தொடங்கி மாலை முழுவதும் சிலுவையில் நான் தொங்கவிடப்பட்டும் கூட, எனது காயங்களும் என்னைக் கொல்லவில்லை'.

'ஊருக்கும் எனக்கும் இடையே உள்ள சமவெளி வழியாக காற்றில் ஒலித்த அந்த அழுகுரலை நான் கேட்டுக் கொண்டே இருந்தேன். ஒரு மூழ்கும் கப்பலை கடலின் அடிப்பகுதிக்கு இழுத்துச் செல்லும் கயிறு போல அந்த அழுகுரல்'.

'அது குளிர்காலத்தின் இருள் நிறைந்த வானத்தில், நள்ளிரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட ஒரு ஒளி நூலைப் போல இருந்தது.'

'நகரம் அதன் உணர்ச்சிகளை கவ்வியவாறு தூங்கிக் கொண்டிருந்தது. அதன் தொடக்க காலத்தில் நான் இருந்தேன். அப்போது அங்கேயும் வறுமை தான் இருந்தது. என் பெயரில் மக்கள் அப்பம் புசிப்பதற்காக நான் மரித்தேன்.'

'நான் எத்தனையோ வாழ்க்கைகளை வாழ்ந்திருக்க முடியும்! ஏனென்றால், நிலத்தில் வரையப்பட்ட ஒவ்வொரு கோடுகளையும் போல நான் ஒரு விதியாக மாறிவிட்டேன். மேலும் விதையாக மாறிவிட்டேன்.'

'நான் ஒரு புதிய மனித இனமாக மாறிவிட்டேன். ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் என் இரத்தத்தின் ஒரு துளி, ஒரு சிறு துளி இருக்கிறது.'

'அவர்கள் என்னை சிலுவையில் அறைந்தபோது, நான் நகரத்தை நோக்கி என் கண்களைத் திருப்பினேன், அந்த வயல், அந்த சுவர் மற்றும் கல்லறையை என்னால் அடையாளம் காண முடியவில்லை'.

'நான் பார்த்த வரையில் காட்டில் வசந்த காலம் இருப்பது போல் ஒரு காட்சி தென்பட்டது. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் ஒரு சிலுவையும், அழுதுகொண்டிருக்கும் ஒரு அம்மாவும் தான் தெரிந்தார்கள். கடவுள் அதை புனிதப்படுத்தட்டும்.'

 
கிறிஸ்துவம், இஸ்லாம், கிறிஸ்துவர்கள், இயேசு கிறிஸ்து, முஸ்லீம்கள், குர்ஆன், பைபிள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இயேசுவின் மிகவும் மாறுபட்ட மற்றும் விரிவான சித்தரிப்புகள்

இந்தக் கவிதை அரசியல் மற்றும் மத விடுதலையைப் பற்றியது. இதிலுள்ள கதைகள் இயேசுவின் பாத்திரத்தை ஒரு இரட்சகனாக, ஒரு வெற்றியாளராகப் பதிவு செய்கிறது.

இந்த பூமியில் துன்புறுத்தப்பட்ட மக்களின் கடவுள் இயேசு, இயற்கையின் கடவுள் மற்றும் தூதுவர் இயேசு என அவரை சித்தரிக்கிறது. இறுதி நாளின் தாக்கங்களும் இதில் உள்ளன.

இது ஒரு கவிதை வடிவில் உள்ள ஒரு சுவிசேஷ நற்செய்தியாகும். அதில் இயேசு, வலியை கடந்து வாழும் ஒருவராக சித்தரிக்கப்பட்டுள்ளார், இறுதியில் அவர் வெற்றியும் பெறுகிறார்.

அதனால் தான், மற்ற கிறிஸ்தவம் அல்லாத கலாச்சாரத்தை விட இஸ்லாமிய கலாச்சாரம் இயேசுவின் மிகவும் மாறுபட்ட மற்றும் மிகவும் விரிவான ஒரு சித்தரிப்பை முன்வைக்கிறது என்று நான் நம்புகிறேன்.

குறைந்தபட்சம் என் அறிவின்படி, இயேசுவின் இரண்டு வடிவங்களிலும், அதாவது வரலாற்றில் வாழ்ந்த ஒரு மனிதனாகவும், இரட்சகனாகவும் அவர் மீது இவ்வளவு பற்றும் அர்ப்பணிப்பும் காட்டிய வேறு எந்த மதமும் இல்லை.

இன்றைய ஆபத்தான மற்றும் குறுகிய மனப்பான்மையுள்ள காலங்களில், இந்த இஸ்லாமிய பாரம்பரியத்தை நாம் தீவிரமாக ஊக்குவிக்க வேண்டும்.

இந்த கதையின் சாராம்சம் மிகவும் தெளிவாக உள்ளது, ஒரு மதம் அதன் பின் வந்த மதத்திற்கு முன்னோடி என்பதே உண்மை.

ஒரு மதம் தனது தியாகம் அல்லது சாட்சியத்திற்காக முந்தைய மதத்தின் உதவியைப் பெறுகிறது. இரண்டு மதங்களும் பரஸ்பரம் ஒன்றையொன்று சார்ந்திருப்பதற்கு, இயேசுவையும் இஸ்லாத்தையும் விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

என் பார்வையில் கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரை, இயேசுவின் மீதுள்ள பற்றுதல் என்பது மற்ற மதங்களில் அவர் எப்படி நேசிக்கப்பட்டார், பாராட்டப்பட்டார் என்பதை அறிந்து கொள்வதையே குறிக்கும்.

https://www.bbc.com/tamil/articles/cd1dvnlx1lzo

  • கருத்துக்கள உறவுகள்

குருடன் யானை பார்த்த கதை. 

😉

  • கருத்துக்கள உறவுகள்
On 25/12/2023 at 22:40, ஏராளன் said:
 

என் பார்வையில் கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரை, இயேசுவின் மீதுள்ள பற்றுதல் என்பது மற்ற மதங்களில் அவர் எப்படி நேசிக்கப்பட்டார், பாராட்டப்பட்டார் என்பதை அறிந்து கொள்வதையே குறிக்கும்.

https://www.bbc.com/tamil/articles/cd1dvnlx1lzo

குரானை வாசித்தால் உண்மையாக ஈஷா நபி (இயேசு கிறிஸ்து ) மிகவும் நேசிக்க படடவராக காணப்படுகிறார். ஆனால் மிகவும் மோசமாக மும்மது விபரிக்கப்படுகிறார். ஆனாலும் அவரது அந்த மோசமான , தீவிரமான கொள்கைகளையே அவர்கள் பின்பற்றுகிறார்கள்.

அவர் இறுதியாக கூறிய ஒன்றுதான் யூதர்கள், கிறிஸ்தவர்கள், காபிர்கள் (பிற மதத்தவர்) எல்லோரையும் கொலை செய்ய வேண்டுமென்று. இது எப்படி இருக்குது? 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.