Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

பிரிட்டன் நாட்டின் டோர்செட்டில் உள்ள ஜுராசிக் கடற்கரையின் பாறைகளிலிருந்து பிரமாண்டமான கடல் அசுரனின் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பெருங்கடல்களை பயமுறுத்திய ஒரு மூர்க்கமான கடல் ஊர்வனவாக விளங்கிய ப்ளியோசருக்கு சொந்தமானது.

2 மீட்டர் நீளமுள்ள இந்தப் புதைபடிவம் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட இதே போன்ற படிவங்களிலேயே முழு வடிவத்தில் கிடைத்த மாதிரிகளில் இதுவும் ஒன்று. மேலும் இந்த பழங்கால வேட்டையாடும் விலங்கு குறித்த புதிய பல தகவல்களை இது அளிக்கிறது.

புத்தாண்டு தினத்தன்று ‘பிபிசி ஒன்’னில் நடைபெறும் சிறப்பு ‘டேவிட் அட்டன்பரோ’ நிகழ்ச்சியில் இந்த மண்டை ஓடு குறித்த புதிய தகவல்கள் வெளியிடப்படும்.

கடற்பாறைகளில் இருந்து மீட்கப்பட்டுள்ள மிகப்பெரிய அசுர விலங்கின் எலும்பு

பட மூலாதாரம்,BBC STUDIOS

பார்க்க பார்க்க ஆச்சர்யம்

“எவ்வளவு அற்புதமாக இருக்கிறது!”

அந்த புதைபடிவ மாதிரியை மூடியிருந்த விரிப்பு திறக்கப்பட்டு முதன்முறையாக அந்த மண்டை ஓட்டை பார்க்கும்போது நமக்கு திகைப்பு மேலிடுகிறது.

இந்த ப்ளியோசரை பார்க்கும்போது அது மிக பெரிதாக இருந்ததும் நேர்த்தியாக பதப்படுத்தப்பட்டிருந்ததும் உடனடியாக புலப்படுகிறது.

வேறு எங்கும் இதுபோன்ற ஒரு புதைபடிவ மாதிரியை பொருத்திப் பார்க்க முடியாது என நம்புகிறார், உள்ளூரைச் சேர்ந்த பழங்கால ஆராய்ச்சியாளர் ஸ்டீவ் எட்செஸ்.

“நான் ஆராய்ந்ததிலேயே மிகவும் சிறந்த புதைபடிவ மாதிரி இதுதான். இது மிகவும் முழுமையானது என்பதுதான் இதன் தனிச்சிறப்பே,” என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

“உயிருடன் இருக்கும்போது எப்படி இருந்திருக்குமோ அதேபோன்று அதன் கீழ்த்தாடையும் மேல் மண்டை ஓடும் ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளது. இந்தளவு விவரிப்புகளுடன் உலகளவில் வேறு எந்த புதைபடிவ மாதிரியும் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படி கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அதில் சில பகுதிகள் இல்லாமல் இருந்திருக்கும். ஆனால், இந்த ப்ளியோசர் கொஞ்சம் சிதைந்திருந்தாலும் எல்லா எலும்புகளும் இதில் உள்ளன,” என அவர் தெரிவித்தார்.

 
கடற்பாறைகளில் இருந்து மீட்கப்பட்டுள்ள மிகப்பெரிய அசுர விலங்கின் எலும்பு

பட மூலாதாரம்,BBC STUDIOS

சவரக்கத்தி போன்ற கூரான பற்கள்

பெரும்பாலான மனிதர்களின் உயரத்தைவிட இதன் மண்டை ஓடு உயரமாக இருக்கிறது என்பது, இந்த உயிரினம் மொத்தத்தில் எவ்வளவு பெரிதாக இருந்திருக்கும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

அதன் 130 பற்களை, குறிப்பாக முன்வரிசையில் உள்ள பற்களை கவனிக்காமல் உங்களால் இருக்க முடியாது.

நீளமான, சவரக்கத்தி போன்ற கூர்மையான பற்களை கொண்ட அந்த விலங்கு ஒரே கடியில் தன் இரையை கொன்றுவிடும். உங்களுக்கு தைரியமிருந்தால் கொஞ்சம் அதன் ஒவ்வொரு பற்களின் பின்னால் உள்ள கூர்மையான முகடுகளை நன்றாக உற்றுப்பாருங்கள். இவை, இந்த அசுர மிருகம் தன் இரையை குத்தி எடுத்து அதன் சதையை ’பட்டாக்கத்தி’ போன்ற கோரைப்பற்கள் மூலம் பிரித்தெடுத்து விரைவாக அடுத்த தாக்குதலுக்குத் தயாராக உதவியிருக்கும்.

 
கடற்பாறைகளில் இருந்து மீட்கப்பட்டுள்ள மிகப்பெரிய அசுர விலங்கின் எலும்பு

பட மூலாதாரம்,BBC/TONY JOLLIFFE

சிறப்பாக கொல்லும் இயந்திரம் போன்றிருக்கும் இந்த ப்ளியோசர் 10-12 மீட்டர் நீளத்துடன் அதிவேகத்தில் நீந்தும் அளவுக்கு நான்கு தட்டையான கை, கால்களை கொண்டது. இது கடலில் வேட்டையாடும் விலங்குகளில் முதன்மையானதாகும்.

“அதன் வாழ்விடத்தில் எதிர்வரும் துரதிருஷ்டவசமான எதையும் திறம்பட தன் இரையாக்கிக் கொள்ளும் அளவுக்கு அந்த விலங்கு மிக பெரிதாக இருந்திருக்கும் என நான் நினைக்கிறேன்,” என பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் அன்ட்ரே ரோவ் தெரிவித்தார்.

“கடலுக்கடியில் வாழும் டைரனோசெரஸ் ரெக்ஸ் வகையை சேர்ந்த உயிரினமாக இது இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை,” என்கிறார் அவர்.

 

கடிக்கும் திறன் ஒப்பீடு

கடற்பாறைகளில் இருந்து மீட்கப்பட்டுள்ள மிகப்பெரிய அசுர விலங்கின் எலும்பு

இந்த உயிரினத்தின் இரைகள் என்னென்ன?

நீண்ட கழுத்து கொண்ட அதன் உறவினரான பிளெஸியோசர் மற்றும் டால்பின் போன்ற இச்த்யோசர் (டைனோசர் காலத்தில் வாழ்ந்த உயிரினம்) போன்ற மற்ற ஊர்வன வகையை சேர்ந்த உயிரினங்கள் இதன் உணவாக இருந்திருக்கக்கூடும். மேலும், தன்னை கடந்து செல்லும் மற்ற ப்ளியோசர்களையும் இது சாப்பிட்டிருக்கக்கூடும் என்பது அதன் புதைபடிவ சான்றுகள் உணர்த்துகின்றன.

இந்த புதைபடிவ மண்டை ஓடு எப்படி தோண்டி எடுக்கப்பட்டது என்ற கதையும் அதிசயமானது.

தெற்கு இங்கிலாந்தின் புகழ்பெற்ற உலகப் பாரம்பரியச் சின்னமான ஜுராசிக் கடற்கரையில் கிம்மெரிட்ஜ் விரிகுடாவுக்கு அருகில் ஒரு கடற்கரையில் உலா வரும்போது இதை கண்டெடுக்கும் வாய்ப்பு தொடங்கியது.

ஸ்டீவ் எட்செஸின் நண்பரும் சக புதைபடிவ ஆர்வலருமான பில் ஜேக்கப்ஸ் கூழாங்கற்கள் குவியலில் கிடந்த ப்ளியோசரின் மூக்கின் நுனியைக் கண்டார். எடுத்துச் செல்ல முடியாத அளவுக்கு கனமாக இருந்ததால், அவர் ஸ்டீவை அழைத்து வந்தார். இந்த புதைபடிவத் துண்டை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல அவர்கள் இருவரும் தற்காலிக ஸ்ட்ரெச்சர் ஒன்றையும் தயார் செய்தனர்.

 
கடற்பாறைகளில் இருந்து மீட்கப்பட்டுள்ள மிகப்பெரிய அசுர விலங்கின் எலும்பு

பட மூலாதாரம்,BBC STUDIOS

ஆனால், விலங்கின் மற்ற பாகங்கள் எங்கே? உயரமான குன்றில் ட்ரோன் மூலம் ஆய்வு செய்ததில் அவை எங்கே இருக்கலாம் என்ற ஒரு சாத்தியமான இடம் புலப்பட்டது. குன்றின் மேலே இருந்து கீழே இறங்குவதுதான் அதை தோண்டி எடுப்பதற்கான ஒரே வழி.

பாறையிலிருந்து புதைபடிவங்களை அகற்றுவது எப்போதும் கடினமான, நுட்பமான வேலை. ஆனால், கடற்கரையிலிருந்து 15 மீட்டர் உயரத்தில் இடிந்து விழும் பாறையில் இருந்து கயிறுகளில் தொங்கியபடியே போது இதைச் செய்வது இன்னும் கடினமானது.

துணிச்சல், அர்ப்பணிப்பு மற்றும் மண்டை ஓட்டை சுத்தம் செய்ய செலவழித்த மாதங்கள் நிச்சயமாக மதிப்புக்குரியவை. உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள், இந்த அற்புதமான ஊர்வன இனத்தைச் சேர்ந்த உயிரினங்கள் எவ்வாறு வாழ்ந்தன, எவ்வாறு நமது சுற்றுச்சூழல் அமைப்பில் ஆதிக்கம் செலுத்தின என்பதைப் பற்றிய புதிய கண்ணோட்டத்தைப் பெற டோர்செட் புதைபடிவத்தைப் பார்வையிட ஆர்ப்பரிப்பார்கள்.

 
கடற்பாறைகளில் இருந்து மீட்கப்பட்டுள்ள மிகப்பெரிய அசுர விலங்கின் எலும்பு

ப்ளியோசரின் சிறப்பம்சங்கள்

பழங்கால உயிரியியலாளர் பேராசிரியர் எமிலி ரேஃபீல்ட் ஏற்கனவே அதன் தலையின் பின்புறத்தில் உள்ள பெரிய வட்டமான திறப்புகளை ஆய்வு செய்துள்ளார். ப்ளையோசரின் தாடைகளை இயக்கும் தசைகளின் அளவைப் பற்றியும், வாயை மூடிக்கொண்டு தன் இரையை நசுக்கும்போது உருவாகும் சக்தி பற்றியும் பேராசிரியர் எமிலியிடம் அவர்கள் விளக்கினர்.

இந்த விலங்கு தன் இரையை நசுக்கும்போது அதிகபட்சமாக சுமார் 33,000 நியூட்டன்கள் (விசை அலகு) வெளிவருகின்றன. தற்போது வாழும் விலங்குகளில் மிகவும் சக்திவாய்ந்த தாடைகள் உப்பு நீர் முதலைகளில் 16,000 நியூட்டன்களாக உள்ளன.

"உங்களால் மிகவும் சக்தியுடன் கடிக்க முடிந்தால், உங்கள் இரையை நீங்கள் செயலிழக்கச் செய்யலாம்; இதனால் உங்கள் இரை வெளியேறும் வாய்ப்பு குறைவு. சக்திவாய்ந்த கடி என்றால் இரையின் திசு மற்றும் எலும்பை மிகவும் திறம்பட நசுக்க முடியும் என்பதுதான்" என்று பிரிஸ்டல் ஆராய்ச்சியாளர் விளக்கினார்.

"உணவு உத்திகளைப் பொறுத்தவரை முதலைகள் தங்கள் தாடையை எதையாவது சுற்றி இறுக்கி, பின்னர் முறுக்கி, ஒருவேளை தன் இரையின் மூட்டைத் திருப்பலாம். பெரிய தலைகளை கொண்டிருக்கும் விலங்குகளின் சிறப்பியல்பு இது. இதனை நாங்கள் ப்ளியோசரில் காண்கிறோம்" என்கிறார் அவர்.

 
கடற்பாறைகளில் இருந்து மீட்கப்பட்டுள்ள மிகப்பெரிய அசுர விலங்கின் எலும்பு

பட மூலாதாரம்,BBC/TONY JOLLIFFE

”இன்னும் தடயங்கள் மிஞ்சியிருக்கலாம்”

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மாதிரியானது சில குறிப்பிட்ட தீவிரமான மற்றும் மிகவும் பயனுள்ள உணர்வுகளைக் கொண்டிருப்பதாகக் கூறும் அம்சங்களைக் கொண்டுள்ளது.

அதன் நீள் மூக்கு சிறிய குழிகளால் ஆனது. தன் இருப்பிடத்தை நோக்கி ஒரு இரை வரும்போது நீரின் அழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிய உதவும் சுரப்பிகளின் தளமாக இது இருக்கலாம். அதன் தலையில் ஒரு துளை உள்ளது. அதில், மண்டை ஓட்டின் இணைப்புகளில் ஒன்று அல்லது மூன்றாவது கண் என அழைக்கப்படும் பாரியட்டல் உள்ளது. தற்போது வாழும் பல்லிகள், தவளைகள் மற்றும் மீன்கள் இதை கொண்டுள்ளன. குறிப்பாக ஆழமான, இருண்ட நீரில் ப்ளையோசர் இருக்கும்போது இது ஒளி உணர்திறனாக செயல்பட்டு பிற விலங்குகளைக் கண்டறிய உதவியிருக்கலாம்.

ஸ்டீவ் எட்செஸ் இந்த மண்டை ஓட்டை அடுத்த ஆண்டு கிம்மெரிட்ஜில் உள்ள ‘எட்செஸ் கலெக்‌ஷன்’ எனும் தனது அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்க உள்ளார்.

இதன் தலையின் பின்புறத்தில் கூர்மையான சில முதுகெலும்புகள் உள்ளன. ஆனால் சில எலும்புகளுக்குப் பின்னர் அதை காணமுடியவில்லை. அதன் எச்சங்கள் இன்னும் அந்த குன்றின் மீது இருக்கக்கூடும் என்பதற்கான அதிர்ச்சியூட்டும் துப்பு தான் இது. தான் தொடங்கியதை முடிக்க ஆர்வமாக உள்ளார் ஸ்டீவ்.

 
கடற்பாறைகளில் இருந்து மீட்கப்பட்டுள்ள மிகப்பெரிய அசுர விலங்கின் எலும்பு

பட மூலாதாரம்,BBC/TONY JOLLIFFE

"மீதமுள்ள புதைபடிவங்களை கண்டெடுக்க எனது உயிரையும் பணயம் வைப்பேன்" என்று அவர் பிபிசி செய்தியாளரிடம் கூறுகிறார்.

"அது மிக வேகமாக கடல் அரிப்பு ஏற்படும் சூழலில் இருப்பதால் அந்த புதைபடிவங்களை விரைவில் கண்டறிந்தாக வேண்டும். புதைபடிவங்கள் கண்டெடுக்கப்பட்ட குன்றின் பகுதி ஓராண்டுக்கு ஒரு அடி என பின்னோக்கி செல்கிறது. இதனால், ப்ளையோசரின் எஞ்சிய பகுதிகள் தொலைந்துபோவதற்கு அதிக நேரம் ஆகாது. இது வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு” என அவர் தெரிவித்தார்.

ரெபெக்கா மோரெல்லே மற்றும் டோனி ஜோலிஃப் இருவரும் கூடுதல் தகவல்களை வழங்கியுள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/c98385vdr57o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.