Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சூரியனைத் தொட தொடரும் முயற்சிகள்

பட மூலாதாரம்,NASA-JHU-APL

படக்குறிப்பு,

பார்க்கர் விண்கலம் எப்போதும் தனது வெப்பக் கவசத்தை சூரியனை நோக்கியே வைத்திருக்க வேண்டும்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜொனாதன் அமோஸ்
  • பதவி, பிபிசி நியூஸ், அறிவியல் செய்தியாளர்
  • 52 நிமிடங்களுக்கு முன்னர்

விண்வெளி ஆய்வு வரலாற்றில் தற்போதைய காலகட்டம் ஒரு குறிப்பிடத்தக்க தருணமாக இருக்கும் என்று உறுதியாகத் தெரிகிறது.

இன்னும் ஓராண்டு கழித்து, டிசம்பர் 24 அன்று, நாசாவின் ‘பார்க்கர் சோலார் ப்ரோப்’ 4 லட்சத்து 35 ஆயிரம் மைல் வேகத்தில் சூரியனைக் கடந்து செல்லும்.

மனிதனால் இதுவரை உருவாக்கப்பட்ட எந்தப் பொருளும் இவ்வளவு வேகமாக நகர்ந்திருக்காது அல்லது உண்மையில் சூரியனுக்கு மிக அருகில் சென்றிருக்காது. அதாவது சூரியனின் "மேற்பரப்பிற்கு" வெறும் 6.1 மில்லியன் கிலோமீட்டர் அல்லது 3.8 மில்லியன் மைல்கள் தொலைவுக்குச் சென்றிருக்காது.

"நாம் அடிப்படையில் கிட்டத்தட்ட ஒரு நட்சத்திரத்தில் இறங்குகிறோம்," என்று பார்க்கர் திட்ட விஞ்ஞானி டாக்டர் நூர் ரவுவாஃபி கூறினார்.

"இது அனைத்து மனித இனத்திற்கும் ஒரு மகத்தான சாதனையாக இருக்கும். இது 1969ஆம் ஆண்டு நிலவில் இறங்கியதற்குச் சமம்" என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பயன்பாட்டு இயற்பியல் ஆய்வக விஞ்ஞானி பிபிசி செய்தியிடம் கூறினார்.

சூரியனின் ஈர்ப்பு விசை காரணமாக அங்கே பார்க்கர் விண்கலம் விழும்போது அதன் வேகம் அது உணரும் அபரிமிதமான ஈர்ப்பு விசையால் உருவாகும். இது நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு 30 விநாடிகளுக்குள் பறந்து செல்வதற்கு ஒப்பானது.

 
சூரியனைத் தொட தொடரும் முயற்சிகள்

பட மூலாதாரம்,NSO/NSF/AURA

படக்குறிப்பு,

சூரிய மேற்பரப்பு அல்லது ஒளிக்கோளத்தின் உயர் தெளிவுத்திறன் காட்சிகள்.

அமெரிக்க விண்வெளி ஏஜென்சியான நாசாவின் ‘பார்க்கர் சோலார் ப்ரோப்’ இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிக துணிச்சலான திட்டங்களில் ஒன்று.

இந்தத் திட்டம் 2018இல் தொடங்கப்பட்டது. இது சூரியனுக்கு மிக அருகில் செல்லும் முயற்சிகளை இலக்கைக் கொண்டுள்ளது.

‘பார்க்கர்’ விண்கலம் 2024இன் பிற்பகுதியில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தில் (149 மில்லியன் கிமீ/93 மில்லியன் மைல்கள்) வெறும் 4% மட்டுமே கடக்க வேண்டியிருக்கும்.

சூரியனுக்கு அவ்வளவு நெருக்கமாகச் செல்ல பார்க்கர் விண்கலம் எதிர்கொள்ளும் சவால் மிகப் பெரியதாக இருக்கும். அப்போது பெரிஹேலியனில், விண்கலத்தின் முன்பகுதியில் உள்ள வெப்பநிலை 1,400 செல்ஷியஸை அடையும்.

தடிமனான வெப்ப கவசத்திற்குப் பின்னால் இருந்து பயன்படுத்தப்படும் கருவிகளின் தொகுப்பைக் கொண்டு சூரியனின் சூழலை அளவீடு செய்வதே பார்க்கரின் உத்தி.

இதன் பயனாக, சூரியனில் என்ன நடக்கிறது என்பது குறித்து சில முக்கிய தகவல்களைப் பற்றிய எதிர்பாராத அளவுக்குப் புதிய விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இவற்றில் முதன்மையானது, சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான கரோனாவின் செயல்பாடுகள் பற்றிய தெளிவான விளக்கமாகும்.

 
சூரியனைத் தொட தொடரும் முயற்சிகள்

பட மூலாதாரம்,S R HABBAL AND M DRUCKMÜLLER

படக்குறிப்பு,

முழு சூரிய கிரகணத்தின்போது பூமியில் மட்டுமே நமக்குத் தெரியும் கரோனாவில் பார்க்கர் விண்கலம் நிலைநிறுத்தப்படும்.

எதிர்-உள்ளுணர்வு சூப்பர் ஹீட்டிங் போலத் தோன்றுவதை இது அனுபவிக்கிறது. சூரியனின் ஒளிக்கோளத்தில், மேற்பரப்பின் வெப்பநிலை தோராயமாக 6,000 செல்ஷியஸ். ஆனால் கரோனாவுக்குள் அது ஒரு மில்லியன் டிகிரி மற்றும் அதற்கும் அதிகமாக இருக்கும்.

நட்சத்திரத்தின் அணுக்கரு மையத்தில் இருந்து தொலைவில் வெப்பநிலை குறையும் என்று நீங்கள் நினைக்கலாம்.

மின்னூட்டம் கொண்ட துகள்களின் வெளிப்புற ஓட்டம் - எலக்ட்ரான், புரோட்டான் மற்றும் கனமான அயனிகள் - திடீரென்று விநாடிக்கு 400 கி.மீ வேகத்தில் நகரும் சூப்பர்சோனிக் காற்றாற்றலாக முடுக்கி விடப்படுவதும் கரோனா பகுதிக்குள்தான்.

 
சூரியனைத் தொட தொடரும் முயற்சிகள்

பட மூலாதாரம்,NASA/JHU-APL/NRL

படக்குறிப்பு,

சூரியனின் கரோனாவில் ஒளி சிதறிய துகள்களைக் கண்டறிய பார்க்கர் ஒரு பக்கவாட்டுத் தோற்றமளிக்கும் கேமராவை கொண்டுள்ளது.

விஞ்ஞானிகளால் இதை இன்னும் முழுமையாக விளக்க முடியவில்லை. ஆனால் சூரியனின் தன்மை மற்றும் "விண்வெளி வானிலை" நிகழ்வின் முன்னறிவிப்புகளை மேம்படுத்துவதற்கு இது மிகவும் முக்கியமானது.

மற்றொன்று, சூரியனில் இருந்து வரும் துகள்கள் மற்றும் காந்தப்புலங்களின் சக்தி வாய்ந்த வெடிப்புகளைக் குறிக்கிறது. அவை பூமியில் உள்ள தகவல் தொடர்புகளைச் சீர்குலைப்பது மட்டுமின்றி மின் கட்டமைப்புகளைக்கூட தகர்க்கலாம். விண்வெளி வீரர்களுக்கு இது போன்ற கதிர்வீச்சு உடல்நல அபாயங்களையும் ஏற்படுத்துகிறது.

"இது ஒரு புதிய பரிமாணத்தைப் பெறுகிறது. குறிப்பாக இப்போது நாங்கள் மனிதர்களை மீண்டும் சந்திரனுக்கு அனுப்பவும், சந்திர மேற்பரப்பில் நிரந்தர முகாமை அமைக்கவும் யோசித்து வருகிறோம்," என்று டாக்டர் ரவுவாஃபி கூறினார்.

 
சூரியனைத் தொட தொடரும் முயற்சிகள்

பட மூலாதாரம்,BLUE ORIGIN

படக்குறிப்பு,

பார்க்கர் அளிக்கும் தகவல்கள் எதிர்காலத்தில் நிலவுக்கு மேற்கொள்ளும் பயணங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை அளிக்கும்.

பார்க்கர் விண்கலம் வெள்ளிக்கிழமை சூரியனை மிக அருகில் நெருங்கும் முயற்சிகளில் ஒன்றை மேற்கொண்டது. அதன் சுற்றுப்பாதையை வளைத்து நவம்பர் மாதத்துக்கு முன் வீனஸை சுற்றி வந்து சூரியனை மிக நெருக்கமாகத் தொட அடுத்த ஆண்டு மேலும் மூன்று முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இப்படி 2024 டிசம்பரில் ஒரு வரலாற்று நிகழ்வை பார்க்கர் ஏற்படுத்தும்.

நாசாவில் அறிவியல் துறையின் தலைவராக டாக்டர் நிக்கி ஃபாக்ஸ் பணியாற்றுகிறார். அவர் தனது தற்போதைய பொறுப்புக்கு வந்ததற்கு முன்பாக பார்க்கர் திட்டத்தின் முன்னணி விஞ்ஞானியாக இருந்தார்.

டிசம்பர் 2024இல் பார்க்கர் விண்கலம் நிகழ்த்தும் இந்த நிகழ்வின் முக்கிய நன்மை என்னவென்றால், சூரியனின் கரோனாவில் மிக அதிக நேரம் அது இருக்கப் போகிறது. இதற்கு முன் இல்லாததைவிட அந்தக் காலகட்டம் அதிகமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

"நாங்கள் எதைக் கண்டுபிடிப்போம் என்று எங்களுக்குத் தெரியாத. ஆனால் வெப்பத்துடன் தொடர்புடைய சூரியக் காற்று ஆற்றலில் அலைகளைத் தேடுவோம்," என்று அவர் பிபிசி செய்தியிடம் கூறினார்.

"பல ஆண்டுகளாக மக்கள் வாதிடும் செயல்முறைகளின் கலவையைச் சுட்டிக்காட்டும் பல்வேறு வகையான அலைகளை நாங்கள் உணர்வோம் என்று நான் நம்புகிறேன்."

இந்த 2024ஆம் ஆண்டு பார்க்கருடைய பணியின் உச்சமாக இருக்கும்; டிசம்பர் மாதத்திற்குப் பிறகு அது சூரியனை நெருங்க முடியாது. ஏனென்றால் அதன் சுற்றுப்பாதை வீனஸை சுற்றியே இருந்து சூரியனை நோக்கி இன்னும் தெளிவான பாதையில் பயணிக்கக் கற்றுக்கொள்ளும். அதோடு வேறு பல காரணங்களும் உள்ளன.

ஆனால் சூரியனுக்கு மிக அருகில் செல்வது, பார்க்கரின் பெரிய நோக்கத்தின் நிழலைச் சுருக்கி, விண்கலத்தின் பின்புறத்தைத் தாங்க முடியாத வெப்பநிலைக்கு உட்படுத்தும் அபாயமும் ஏற்படலாம்.

https://www.bbc.com/tamil/articles/ce5j6gzl817o

  • 11 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுட்டெரிக்கும் சூரியனின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த நாசா விண்கலம் - அதீத வெப்பத்தை தாங்குவது எப்படி?

பார்க்கர் சோலார் புரோப், நாசா

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு, அதீத வெப்பம் நிலவும் இடத்தில் இந்த விண்கலம் இருப்பதால், பல நாட்களாக இதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ரெபேக்கா மோரெல்
  • பதவி, அறிவியல் செய்தி ஆசிரியர்

நாசா விண்கலம் ஒன்று சூரியனுக்கு மிக அருகில் நெருங்கிச் சென்று, ஒரு புதிய வரலாறு படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

பார்க்கர் விண்கலம் (Parker Solar Probe) எனப்படும் அந்த ஆளில்லா விண்கலம் சூரியனின் அதீத வெப்பம் மற்றும் தீவிர கதிர்வீச்சை தாங்கிக்கொண்டு, அதன் வெளிப்புற வளிமண்டலத்தில் நுழைந்துள்ளது.

அதீத வெப்பம் நிலவும் இடத்தில் இந்த விண்கலம் இருப்பதால், பல நாட்களாக இதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 28 அன்று 05:00 (GMT) மணிக்கு (இந்திய நேரப்படி காலை 10.30 மணி), இந்த விண்கலத்திலிருந்து சமிக்ஞை கிடைக்கும் என விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள். அதன் பிறகு தான் இது தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளதா என்பது தெரிய வரும்.

சூரியன் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நன்கு புரிந்துகொள்ள இந்த ஆய்வு உதவும் என்று நம்பப்படுகிறது.

 

சூரியனை நோக்கிய பார்க்கர் விண்கலத்தின் பயணம்

சூரியனை நோக்கிய பார்க்கர் விண்கலத்தின் பயணம்

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு, சூரியன் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நன்கு புரிந்துகொள்ள இந்த ஆய்வு உதவும் என்று நம்பப்படுகிறது

நாசாவின் அறிவியல் துறை தலைவர் டாக்டர் நிக்கோலா ஃபாக்ஸ் பிபிசியிடம் பேசுகையில், "பல நூற்றாண்டுகளாக, மக்கள் சூரியனைப் பற்றி ஆய்வு செய்துள்ளனர். ஆனால் நேரடியாக (விண்கலத்தின் பயணம்) சென்று அதை ஆய்வு செய்யாத வரை, அதன் வளிமண்டலத்தைப் பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்துகொள்ள முடியாது" என்கிறார்.

"எனவே அதன் வழியாக பயணம் செய்தால் மட்டுமே, நமது நட்சத்திரத்தின் (சூரியன்) வளிமண்டலத்தை உண்மையில் உணர முடியும்"

பார்க்கர் விண்கலம் 2018-ஆம் ஆண்டில் செலுத்தப்பட்டது. இது நமது சூரிய மண்டலத்தின் மையத்தை நோக்கி பயணிக்கிறது.

இது ஏற்கனவே சூரியனை 21 முறை நெருங்கிச் சென்றுள்ளது. ஒவ்வொரு முறையும் சூரியனுடனான அதன் தூரம் குறைந்து வந்தது. ஆனால் இந்த முறை மிக நெருக்கமாக சென்று புதிய சாதனை படைத்துள்ளது.

சூரியனை நோக்கிய பார்க்கர் விண்கலத்தின் பயணம்

சூரிய வெப்பத்தை பார்க்கர் எப்படி தாங்குகிறது?

இந்த முறை, பார்க்கர் விண்கலம் சூரியனின் மேற்பரப்பில் இருந்து 3.8 மில்லியன் மைல் (6.2 மில்லியன் கி.மீ) தொலைவில் உள்ளது.

இந்த தூரம், நமக்கு அவ்வளவு நெருக்கமானதாக தெரியவில்லை என்றாலும்கூட, நாசாவின் நிக்கோலா ஃபாக்ஸ் இதை வேறு ஒரு அணுகுமுறையில் பார்க்கிறார்.

"நாம் (பூமி) சூரியனிலிருந்து 93 மில்லியன் மைல்கள் தொலைவில் இருக்கிறோம். உதாரணத்திற்கு சூரியனுக்கும் பூமிக்குமான தொலைவு ஒரு மீட்டர் என்று வைத்தால், இந்த பார்க்கர் விண்கலம் சூரியனிலிருந்து நான்கு சென்டிமீட்டர் தொலைவில் உள்ளது என்று கூறலாம். எனவே அது மிக நெருக்கமாக தான் உள்ளது." என்கிறார்.

இந்த விண்கலம் 1,400 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையும், அதன் மின்னணு சாதனங்களை தாக்கும் கதிர்வீச்சையும் தாங்க வேண்டியிருக்கும்.

இது 11.5 செ.மீ (4.5 அங்குலம்) தடிமன் கொண்ட கார்பன்-ஃபைபர் கவசத்தால் பாதுகாக்கப்படுகிறது, ஆனால் அதன் உத்தி என்னவென்றால் வேகமாக உள்ளே சென்று பின்னர் மீண்டும் வேகமாக வெளியேறுவது தான்.

பார்க்கர் விண்கலம், மனிதனால் உருவாக்கப்பட்ட எந்தவொரு பொருளையும் விட வேகமாக நகரும். அதாவது மணிக்கு 4,30,000 மைல் வேகத்தில் செல்லும். இந்த வேகத்தில் பறந்தால், லண்டனில் இருந்து நியூயார்க் செல்ல 30 வினாடிகளுக்கும் குறைவாகவே தேவைப்படும்.

பார்க்கர் விண்கலத்தின் இந்த வேகம், அது சூரியனை நோக்கி செல்லும் போது உணரக்கூடிய அபரிமிதமான ஈர்ப்பு விசையிலிருந்து வருகிறது.

துருவ ஒளிகள்

பட மூலாதாரம்,PA MEDIA

படக்குறிப்பு, வானில் தோன்றும் அழகான துருவ ஒளிகளுக்கு சூரிய காற்று காரணமாக உள்ளது

இந்த ஆய்வின் பயன் என்ன?

ஆனால், சூரியனைத் 'தொட' இவ்வளவு கடுமையான முயற்சியை ஏன் எடுக்க வேண்டும்?

இந்த விண்கலம் சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தை (Corona- கொரோனா) கடந்து செல்வதன் மூலம், நீண்டகாலமாக நிலவும் ஒரு மர்மம் தீர்க்கப்படும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

"கொரோனாவில் மிகமிக அதீத வெப்பம் நிலவுகிறது. ஆனால் அதற்கு காரணம் என்ன என்பது எங்களுக்குத் தெரியவில்லை" என்று கூறுகிறார் வேல்ஸில் உள்ள ஃபிஃப்த் ஸ்டார் ஆய்வகங்களின் வானியலாளர் டாக்டர் ஜெனிபர் மில்லார்ட்.

"சூரியனின் மேற்பரப்பு சுமார் 6,000 டிகிரி செல்சியஸ் அல்லது அதைவிட அதிகமான வெப்பநிலையைக் கொண்டது. ஆனால் சூரிய கிரகணங்களின் போது, நீங்கள் காணக்கூடிய இந்த கொரோனா எனும் மெல்லிய வெளிப்புற வளிமண்டலம், லட்சக்கணக்கான டிகிரி வெப்பநிலையை அடைகிறது."

"அத்தனைக்கும் அது சூரியனின் மேற்பரப்பிலிருந்து தொலைவில் தான் உள்ளது. அப்படியானால் அந்த வளிமண்டலம் இந்தளவுக்கு சூடாவது ஏன் என்பது தான் கேள்வி?" என்கிறார் மில்லார்ட்.

சூரிய காற்றைப் (Solar Wind) பற்றி நன்கு புரிந்துகொள்ளவும் விஞ்ஞானிகளுக்கு இந்த ஆய்வு உதவும். இந்த சூரிய காற்று என்பது சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தில் இருந்து வெடித்து வெளியேறும் சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் ஆகும்.

இந்த துகள்கள் பூமியின் காந்தப்புலத்துடன் தொடர்பு கொள்ளும்போது, வானில் அழகான துருவ ஒளிகள் தோன்றும்.

ஆனால் இந்த விண்வெளி நிகழ்வு, மின் கட்டமைப்புகள், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி, பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

"சூரியன், அதன் செயல்பாடுகள், விண்வெளிச் சூழல், சூரிய காற்று, இவற்றைக் குறித்து நன்றாக புரிந்துகொள்வது, பூமியில் நமது அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்" என்று டாக்டர் மில்லார்ட் கூறுகிறார்.

சூரியன் குறித்த சில மர்மங்களை தீர்க்க இந்த ஆய்வு உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு, சூரியன் குறித்த சில மர்மங்களை தீர்க்க இந்த ஆய்வு உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்

சமிக்ஞைக்காக காத்திருக்கும் விஞ்ஞானிகள்

விண்கலம் இப்போது பூமியுடன் தொடர்பில் இல்லாத நிலையில், நாசா விஞ்ஞானிகள் கவலையுடன் காத்திருக்கின்றனர்.

"பார்க்கர், பூமிக்கு ஒரு சமிக்ஞை அனுப்பியவுடன், விண்கலம் சரியாக தான் செயல்படுகிறது என்பதை அதற்கு தெரியப்படுத்த விஞ்ஞானிகள் குழு 'ஒரு பச்சை நிற இதய சின்னத்தை' குறுஞ்செய்தியாக அனுப்பும்." என்று நிக்கோலா ஃபாக்ஸ் கூறுகிறார்.

துணிச்சலான இந்த முயற்சி பற்றி சற்று பதற்றம் இருப்பதை நிக்கோலா ஒப்புக்கொள்கிறார். ஆனாலும் பார்க்கர் விண்கலம் மீது அவருக்கு முழு நம்பிக்கை உள்ளது.

"நான் விண்கலத்தைப் பற்றி சற்று கவலைப்படுகிறேன். ஆனால் மிக மோசமான நிலைமை அனைத்தையும் தாங்கும் வகையில் தான் நாங்கள் அதை வடிவமைத்துள்ளோம். ஒரு சிறிய, ஆனால் மிகமிக வலிமையான ஒரு விண்கலம் அது" என்கிறார் நிக்கோலா.

இந்த சவாலில் பார்க்கர் விண்கலம் தப்பிப் பிழைத்தால், சூரியனைச் சுற்றி தனது அடுத்தகட்ட பணிகளை அது தொடரும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Edited by ஏராளன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.