Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஏலியன் புகைப்படங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிராண்டன் லைவ்சே
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 15 செப்டெம்பர் 2023
    புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த ஆண்டு அக்டோபரில் பெரு நாட்டின் தலைநகர் லிமா விமான நிலையத்தில் மர்மமான முறையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு 'ஏலியன் மம்மிகள்' மனிதனால் உருவாக்கப்பட்டவை என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

லிமாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பெருவின் கலாச்சார அமைச்சகம் இந்த மம்மிகள் மனித உருவ பொம்மைகள் என்று கூறியது.

இது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் எலும்புகளில் இருந்து தயாரிக்கப்பட்டது என்று டிஎன்ஏ சோதனை முடிவுகளின் அடிப்படையில் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பெருவின் நாஸ்கா பகுதியில் காணப்படும் மற்றொரு 'மூன்று விரல் கை'யையும் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். நிபுணர்களைப் பொறுத்தவரை, அந்த உயிரினத்திற்கும் வேற்றுகிரகவாசிகளுடன் எந்த தொடர்பும் இல்லை.

பெருவின் சட்ட மருத்துவம் மற்றும் தடயவியல் அறிவியல் கழகத்தின் தொல்பொருள் ஆய்வாளர் ஃபிளேவியோ எஸ்ட்ராடா, "அவை வேறொரு உலகத்தைச் சேர்ந்தவை அல்ல. பூமியின் விலங்குகளின் எலும்புகளால் செய்யப்பட்ட பொம்மைகள், நவீன செயற்கை பசையுடன் இணைக்கப்பட்டுள்ளன. அவை வேற்றுகிரகவாசிகள் என்று நம்பப்படுகிறது. ஆனால், அது முற்றிலும் புனையப்பட்டது,"என்றார்.

சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு, லிமா விமான நிலையத்தில் அமைந்துள்ள டிஹச்எல்(DHL) என்ற கூரியர் நிறுவனத்தின் அலுவலகத்தில் அட்டைப் பெட்டியில் அடைக்கப்பட்டிருந்த இந்த இரண்டு மம்மிகளும் கண்டெடுக்கப்பட்டன.

அவை ஏலியன் மம்மிகளாக இருக்கலாம் என்று பல ஊடக நிறுவனங்கள் ஊகித்தன.

கடந்த ஆண்டு செப்டம்பரில், மெக்சிகோ நாடாளுமன்றத்தில் நீண்ட தலைகள் மற்றும் மூன்று விரல்களைக் கொண்ட இரண்டு சிறிய மம்மிகள் ஏலியன்களின் உடல்களா இல்லையா என்பது குறித்து விவாதம் நடந்தது. ஆனால் பெரும்பாலான வல்லுநர்கள் அன்னியக் கோட்பாட்டை நிராகரித்துள்ளனர். இதுகுறித்து நாசாவும் ஒரு அறிக்கையை அப்போது வெளியிட்டிருந்தது.

 

என்ன சொன்னது நாசா?

மனிதர் அல்லாத பழைய சடலங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நாசா நிர்வாகி பில் நெல்சன், அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகளை பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதோடு, அதன் தரவுகளும் வெளிப்படைத்தன்மையோடு மக்கள் பார்வைக்கு வைக்கப்படுவதாகக் கூறினார்

இது வரையில் தென்பட்ட நூற்றுக்கணக்கான யுஎப்ஒ-க்களை ஆய்வு செய்த அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா, இந்த விவரிக்கப்படாத நிகழ்வுகளுக்கு பின்னால் வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறியுள்ளது.

ஆனால், அப்படி வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான சாத்தியத்தை முற்றிலும் நிராகரிக்க முடியாது என்றும் கூறியுள்ளது.

உண்மையை சொல்லப்போனால் நீண்டகாலமாக எதிர்பார்கப்பட்ட இந்த நாசாவின் அறிக்கை எந்த உறுதியான ஆதாரத்தையும் அளிக்கவில்லை.

ஆனால், இந்த அறிக்கையில் யுஏபி எனப்படும் அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகளை எப்படி மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டும், செயற்கை நுண்ணறிவைக் கொண்டும் நாசா ஆய்வுக்கு உட்படுத்துகிறது என விவரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய நாசா நிர்வாகி பில் நெல்சன், அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகளை பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதோடு, அதன் தரவுகளும் வெளிப்படைத்தன்மையோடு மக்கள் பார்வைக்கு வைக்கப்படுவதாகக் கூறினார்.

நாசாவின் அந்த 36 பக்கங்கள் கொண்ட அறிக்கை மிகவும் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான ரீதியிலான தன்மையில் இருப்பதால், அதில் முக்கியமாகக் கூறப்பட்டுள்ளவை இங்கே உள்ளன.

 
கேமராவில் பதிவானவை

பட மூலாதாரம்,US NAVY

படக்குறிப்பு,

கேமராவில் பதிவானவை

வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா ?

மனிதர் அல்லாத பழைய சடலங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சூரிய குடும்பத்தில் பூமிக்கு அப்பாற்பட்ட இடங்களில் உயிரினங்கள் இருப்பதாக நாசா முடிவு செய்யவில்லை

நாசாவின் அறிக்கையின் கடைசிப் பக்கத்தில், நூற்றுக்கணக்கான யுஏபி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர், வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வருவதற்கான எந்த காரணமும், ஆதரமும் இல்லை என்று கூறியுள்ளது.

"இருப்பினும், அந்த பொருட்கள் இங்கு வருவதற்கு நமது சூரிய குடும்பத்தின் வழியாக பயணித்திருக்க வேண்டும்" என்று அறிக்கையில் கூறுயுள்ளது.

சூரிய குடும்பத்தில் பூமிக்கு அப்பாற்பட்ட இடங்களில் உயிரினங்கள் இருப்பதாக நாசா முடிவு செய்யவில்லை, இருப்பினும், புவி வளிமண்டலத்தில் அறியப்படாத வேற்றுகிரக தொழில்நுட்பத்தின் சாத்தியம் உள்ளது என்றும் கூறியுள்ளது.

 

ஏலியன்ஸ் குறித்த ஆய்வுக்கு தரவுகள் உண்டா ?

மனிதர் அல்லாத பழைய சடலங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இதுவரை நாம் பார்த்திடாத ஒரு மிகப்பெரிய மர்மங்களில் இந்த யுஏபி ஒன்று

நாசாவின் அறிவியல் இயக்க இயக்குநரகத்தின் இணை நிர்வாகி நிக்கோலா பாக்ஸ் கூறுகையில், “இதுவரை நாம் பார்த்திடாத ஒரு மிகப்பெரிய மர்மங்களில் இந்த யுஏபி ஒன்று. இதற்கு காரணம், நம்மிடம் அவை தொடர்பாக எந்த ஒரு தரவுகளும் இல்லை,” என்றார்.

அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகள் பலவும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பதிவு செய்யப்பட்டு வந்தாலும், அவை குறித்து போதுமான தரவுகள் நம்மிடம் இல்லை என்கிறார் பாக்ஸ்.

"யுஏபி.யின் தன்மை மற்றும் அவற்றின் தோற்றம் குறித்து உறுதியான அறிவியல் ரீதியிலான முடிவுகளை எடுக்க நம்மிடம் போதுமான தரவுகள் இல்லை,” என்றார் பாக்ஸ்

இதுபோன்று அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகளின் எதிர்கால தரவுகளை மதிப்பிடுவதற்கும், ஒரு வலுவான தரவுத்தளத்தை நிறுவுவதற்கும் இந்த புதிய இயக்குநரை நியமித்துள்ளதாக பாக்ஸ் கூறினார்.

 

மெக்ஸிகோவில் இருந்து வைரலான 'ஏலியன்' புகைப்படங்கள் உண்மையா ?

ஜெய்ம் மவுசன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

யுஎஃப்ஒ நிபுணரான ஜெய்ம் மவுசன், இரண்டு பழைய "மனிதர் அல்லாத" அன்னியர்களின் சடலங்களை அவர் ஆய்வுக்கு கொண்டு வந்தார்.

மெக்சிகோ அதிகாரிகளால் இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வந்த வேற்று கிரகவாசிகளின் புகைப்படங்கள் குறித்து பிபிசி செய்தியாளர் சாம் கம்பரால் நாசா அதிகாரிகளிடம் கேட்டார்.

யுஎஃப்ஒ நிபுணரான ஜெய்ம் மவுசன், இரண்டு பழைய "மனிதர் அல்லாத" அந்நியர்களின் சடலங்களை அவர் ஆய்வுக்கு கொண்டு வந்தார்.

2017 ஆம் ஆண்டில் பெருவின் குஸ்கோ பகுதியில் அந்த மனிதர் அல்லாத சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ரேடியோகார்பன் சோதனையில் 1,800 ஆண்டுகள் பழமையான பொருள்கள் அவை என்றும் அவர் கூறினார்.

இந்த மாதிரிகளின் நம்பகத்தன்மை அறிவியல் வட்டாரங்களில் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. இதற்கு முன்னதாக ஒரு முறை மௌசானே வேற்று கிரகவாசிகள் மற்றும் அவர்கள் வாழ்க்கை குறித்த நம்பிக்கைகளை நிராகரித்திருந்தார்.

நாசா விஞ்ஞானி டேவிட் ஸ்பெர்கெல் பிபிசியிடம் பேசுகையில், “உலக அறிவியல் சமூகத்திற்கு இந்த மாதிரிகளை ஆய்வுக்காக கிடைக்கச் செய்யுங்கள, அங்கே என்ன இருக்கிறது என்று பார்ப்போம்," என்றார்.

 

விஞ்ஞானிகள் அச்சுறுத்தப்படுகிறார்கள் !

மனிதர் அல்லாத பழைய சடலங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நாசாவின் ஆராய்ச்சிக்கான உதவி நிர்வாகியும் விஞ்ஞானியுமான டேனியல் எவன்ஸ், ஆராய்ச்சி குழு உறுப்பினர்கள் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறினார்.

 

யுஏபி ஆராய்ச்சிக்காக நாசா சார்பில் புதிய இயக்குனர் இருப்பார், ஆனால், அவரின் அடையாளம் தற்போதைக்கு வெளியிடப்படாது.

யுஏபி ஆராய்ச்சியில் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என நாசா அறிவித்திருந்தபோதிலும், புதிய இயக்குனர் பற்றிய விவரங்கள், அவருக்கு எவ்வளவு மாதச் சம்பளம், அவர் என்ன மாதிரியான ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறார் போன்ற தகவல்கள் வியாழக்கிழமை (செப்டம்பர் 14) அன்று நடந்த கூட்டத்தில் பகிரப்படவில்லை.

புதிய இயக்குநரை வெளியில் இருந்து வரும் அழுத்தங்கள் மற்றும் இடையூறுகளில் இருந்து பாதுகாக்க இத்தகைய முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நாசாவின் ஆராய்ச்சிக்கான உதவி நிர்வாகியும் விஞ்ஞானியுமான டேனியல் எவன்ஸ், ஆராய்ச்சி குழு உறுப்பினர்கள் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறினார்.

புதிய இயக்குநரின் பெயரை வெளியிடாததற்கு நாசா குழுவின் பாதுகாப்பை மிகவும் தீவிரமாக கருதுவதும் ஒரு காரணம் என்று அவர் கூறினார்.

 

AI கருவிகளைப் பயன்படுத்த நாசா பரிந்துரைக்கிறது

செயற்கை நுண்ணறிவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகளை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவின் துணை மிகவும் அத்தியாவசியனது

நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகளை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவின் துணை மிகவும் அத்தியாவசியனது என அந்த அறிக்கை கூறுகிறது. ஏனெனில், யுஏபியை புரிந்துக்கொள்ள முக்கியமான அம்சங்களில் செயற்கை நுண்ணறிவு மிகவும் அவசியமாக நாசா விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

யுஏபி.களை நன்கு புரிந்துகொள்வதற்கும் அடையாளம் காண்பதற்கும் உள்ள மிகப்பெரிய சவால்களில் ஒன்று தரவு பற்றாக்குறை என்று கூறிய நாசா, அந்த இடைவெளியை 'க்ரவுட் சோர்சிங்' நுட்பங்கள் மூலம் சரி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதில், ஓப்பன் சோர்ஸ் ஸ்மார்ட்போன் அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும் "உலகளவில் பல பார்வையாளர்களின் பிற ஸ்மார்ட்போன் மெட்டாடேட்டாவும் அடங்கும்.

தற்போது வரை பொது மக்களால் கூறப்படும் அல்லது பார்க்கப்படும் அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகளை ஒருங்கிணைத்து ஒழுங்கமைக்க தரப்படுத்தப்பட்ட அமைப்பு எதுவும் இல்லை, அதன் விளைவாக குறைவான மற்றும் முழுமையற்ற தரவுகளே உள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

https://www.bbc.com/tamil/articles/cgle4d0j8e8o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.