Jump to content

கத்தரிக்காயில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் கத்திரிக்காய்களில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பது தெரியவந்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நடத்திய ஆய்வில், சந்தையில் இருந்து எடுக்கப்படும் புதிய கத்தரிக்காய் மாதிரிகளில் 23 சதவீதம் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

எனவே காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்ந்த நீரில் கழுவுவதற்குப் பதிலாக, வினிகர் அல்லது உப்பு சேர்த்து கழுவ வேண்டும். இதன் மூலம் இரசாயனங்களை அகற்ற முடியும். மேலும் காய்கறிகள் மற்றும் பழங்களின் வெளிப்புற தோலை அகற்றுவதன் மூலம் உணவில் உள்ள நச்சு இரசாயனங்களை எளிதில் அகற்ற முடியும் என்று ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர். ஏ. அபேசுந்தர தெரிவித்துள்ளார்.

அருண

https://thinakkural.lk/article/294783

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.