Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
kanchana-wijesekera-300x200.jpg

திருத்தம் செய்யப்பட்ட மின்சார சபைச் சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, அமைச்சரவையின் அனுமதிக்குப் பின்னர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

2024 மார்ச் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் மின்சார கட்டணத்தை 21.9% இனால் குறைக்க முடிந்தது. 30 அலகுகளுக்கு குறைவான மின் பாவனையாளர்களின் மின் அலகு ஒன்றுக்கான விலை 33% இனால் குறைக்கப்பட்டுள்ளது. 31 – 60 அலகுகளுக்கு இடையிலான பாவனையாளர்களுக்கு அலகு ஒன்றுக்கு 28% இனால் கட்டணம் குறைந்துள்ளது. 60 – 90 அலகுளுக்கு இடையிலான பாவனையாளர்களுக்கு 30% கடடண குறைப்புச் செய்யப்பட்டுள்ளது. மேலும் 90 – 180 இடையிலான பாவனையாளர்களுக்கு 24% இனால் கட்டண குறைப்புச் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், 180 அலகுகளுக்கு மேலான வீட்டு பாவனையாளர்களுக்கு 18% கட்டண குறைப்பும் வழிபாட்டுத் தலங்களுக்கு 33% கட்டண குறைப்பும் ஹோட்டல் மற்றும் தொழில்துறை துறைகளுக்கு 18% கட்டண குறைப்பும் அரச துறைக்கு 23% கட்டண குறைப்பும் தனியார் துறைக்கு 22% கட்டண குறைப்பும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அதற்கு நிகராக உணவு விலைகள் குறைக்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குரியாக உள்ளது. பொது சேவைகளில் ஈடுபடுவோரால் மக்களுக்கு பெருமளவான நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் . அதனை மின்சார சபையோ அல்லது அமைச்சுக்களோ செய்ய முடியாது என்பதே எனது நிலைப்பாடாகும்.

மேலும், அண்மைக் காலமாக கிடைத்த பெரும் மழைவீழ்ச்சியின் காரணமாக, மின் உற்பத்தி செயல்பாட்டில் உள்ள பிரச்னைகளை குறைந்துள்ளது. அதன் பலனாக 2022 ஆம் ஆண்டின் 270 பில்லியன் ரூபா இழப்பீட்டையும் அதனால் சரிசெய்ய முடிந்தது. இருப்பினும் இருள் யுகத்தில் கிடந்த நாடு பொருளாதார முன்னேற்றம் கண்டு வருவதன் பலனாகவே மின்சார கட்டணத்தை குறைக்க முடிந்துள்ளது.

அதனால் மின்சார உற்பத்திச் செலவு பெருமளவில் குறைவடைந்துள்ளதோடு, அதேபோலு மூன்றிலக்க பெறுமதியாக காணப்பட்ட வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளமையும் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

மேலும், இந்திய கடனின் கீழ் பெறப்பட்ட 100 மில்லியன் டொலர்களில் முதல் பகுதியைக் கொண்டு, பாடசாலைகள், பாதுகாப்பு முகாம்கள், பல்கலைக்கழகங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொது இடங்களில் மின்சாரம் பெறுவதற்கு சூரிய சக்தி படலங்களை வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். மின் கட்டணத்தை மேலும் குறைக்க, தற்போதுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் அல்லது தற்போது அதிக விலைக்கு மின்சாரம் கொள்வனவு செய்வதை விடுத்து குறைந்த செலவிலான மாற்று முயற்சிகளுக்கு செல்ல வேண்டும்.

2025 ஆம் ஆண்டில் சியாம்பலாண்டுவ மின் உற்பத்தித் திட்டத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் நூறு மெகாவோட் மின்சாரத்தை 25 – 26 ரூபாய்க்கு பெற்றுகொள்ள முடியும். இதேபோன்ற பல பாரிய மின் உற்பத்தி திட்டங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். அதற்காக ஏராளமான முதலீட்டாளர்கள் எம்மோடு இணைந்துகொண்டுள்ளனர்.

மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புதிய முதலீட்டாளர்களுக்காக 10 காற்றாலை மற்றும் சூரிய ஒளி திட்டங்கள் திறக்கப்பட்டுள்ளன. மன்னார் பகுதியை மையமாக கொண்டு 50 மெகாவாட் காற்றாலைக்கான விலைமனு அடுத்த வாரம் கோரப்படும்.

மேலும் உரியவர்களுடன் கலந்துரையாடி எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருள் விலையினையும் மேலும் குறைக்க எதிர்பார்க்கிறோம்.

அத்துடன், மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான வர்த்தமானி கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதன்படி, புதிய சட்டத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் மாற்றங்களை உரிய தரப்பினரும், அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கத்தினரும் சுட்டிக்காட்டியிருந்தனர். இது தொடர்பான 46 திருத்தங்களுடன் கூடிய சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து அமைச்சரவை அங்கீகாரத்துடன் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்பிக்க முடியும் என அமைச்சர்  தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/294967

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும்

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://thinakkural.lk/article/297573

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்சார சீர்திருத்த சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

Published By: VISHNU

08 APR, 2024 | 07:34 PM
image
 

திருத்தப்பட்ட மின்சார சீர்திருத்த சட்டத்திற்கு அமைச்சரவை திங்கட்கிழமை (08) ஒப்புதல் அளித்துள்ளது.

மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி திருத்தப்பட்ட மின்சார சீர்திருத்த சட்டமூலம் ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இந்த வாரத்திற்குள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/180767

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் மின்கட்டமைப்பை இருண்ட யுகத்துக்கு தள்ளும் - மின் பொறியியலாளர் சங்கம் எதிர்ப்பு

Published By: VISHNU    29 APR, 2024 | 09:27 PM

image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டின் மின்கட்டமைப்பை இருண்ட யுகத்துக்கு தள்ளும் வகையில் உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணத்தை தீர்மானிக்கும் உரிமையை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவது முறையற்றது என மின்சார சபையின் மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் தனுஸ்க பராக்ரம தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபை மின் பொறியியலாளர் சங்கத்தின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் செயற்பாடுகளை மாத்திரம் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன.

மின்சார சபையை 12 ஆக கூறுப்படுத்தி அதன் உரிமத்தை தனியார் நிறுவனங்களுக்கு உரித்தாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் பெறும் இலாபத்துக்கு அமைய மின்கட்டணம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படுவது பாரதூரமான நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

மின்சட்டத்தை திருத்தம் செய்வதுடன் மின்கட்டமைப்பில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் வகிபாகத்தை வரையறுப்பதற்கும் இச்சட்டமூலத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ளது. நியாயமற்ற வகையில் மின்கட்டணம் அதிகரிக்கப்படும் போது பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அதற்கு இடமளிக்காததால் ஆணைக்குழுவின் அதிகாரம் மட்டுப்படுத்தப்படவுள்ளது.

நாட்டின் மின்கட்டமைப்பை இருண்ட யுகத்துக்கு தள்ளும் வகையில் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்துக்கு அமைய செயற்பாடுகளை எதிர்வரும் நவம்பர் மாதமளவில் முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும். சில வேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அது அரசாங்கத்தை பொறுப்பேற்கும் தரப்புக்கு சவாலாக அமையும்.

உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தை நீதிமன்றில் சவாலுக்குட்படுத்துவோம். ஆகவே சட்டமூலத்தில் உள்ள குறைகளை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/182273

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்சார சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது

இலங்கை மின்சார சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த மின்சார சட்டமூலத்திற்கு எதிரான மனு விசாரணையின் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகரால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போதே, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இதனை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை மற்றும் வாக்கெடுப்பு மூலம் மட்டுமே சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற தீர்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் இதன்போது தெரிவித்தார்.

எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, குறித்த சரத்துக்கள் திருத்தப்பட்டால் சட்டமூலம் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/303069

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் 44 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்

Published By: VISHNU   06 JUN, 2024 | 06:31 PM

image

(இராஜதுரை ஹஷான்)

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு  மத்தியில் மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் 44 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 103 வாக்குகளும், எதிராக  59 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும், புதிய அரசாங்கத்துக்கு அதன் பொறுப்பை வழங்க வேண்டும் என கடந்த வாரம் அறிக்கை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தார். அத்துடன் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த வாக்கெடுப்பை தமிழ் தேசியக்கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகள் புறக்கணித்திருந்தன. அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா ஆகியோரும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு வியாழக்கிழமை (6) இடம்பெற்றது.

மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தில்  54 ஏற்பாடுகள் காணப்படுகின்ற நிலையில் அவற்றில் பெரும்பாலான சரத்து விதிகள் அரசியலமைப்புக்கு முரண் என்று உயர்நீதிமன்றம்  வியாக்கியானம் வழங்கியிருந்தது.

அத்துடன் அரசியலமைப்பின் 12(1) பிரிவின் விதிகளை மீறும் வகையில் ஒருசில ஏற்பாடுகள் காணப்படுவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. ஆகவே இதனை அலட்சியப்படுத்த முடியாது. சட்டமூலத்தை முழுமையாக ஆராய்ந்து  முறையான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதனால் உடனடியாக நிறைவேற்ற வேண்டாம். இரு நாள் விவாதத்தை நடத்துமாறு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள்.

சட்டமூலம் மீதான இரு நாள் விவாதத்தை நடத்துவது கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கலாம் என சபாநாயகர் குறிப்பிட்டிருந்த நிலையில்  ஆளும் தரப்பு அதற்கு இடமளிக்கவில்லை. இதனால் நேற்று காலை முதல் சபையில் ஆளும் தரப்புக்கும், எதிர்கட்சிகளுக்குமிடையில் இது தொடர்பில் கடும் சர்ச்சை மற்றும் தர்க்கம் ஏற்பட்ட நிலையிலேயே எதிர்க்கட்சிகளின் இரு கோரிக்கைகளையும் நிராகரிக்கப்பட்ட நிலையில்  மின்சாரத்துறை அமைச்சர்  சட்டமூலத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்.

இவ்வாறான நிலையில் விவாத முடிவில் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல வாக்கெடுப்பைக் கோரினார்.

இதனையடுத்து இடம்பெற்ற இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 103  வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும்  அளிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 44 மேலதிக வாக்குகளினால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. 162 பேர் வாக்களிப்பில் கலந்துக் கொண்டனர். 62 பேர் வாக்களிப்பில் கலந்துக் கொள்ளவில்லை.

https://www.virakesari.lk/article/185475

புறக்கணித்தவை எதிர்த்து வாக்களித்தால் தோல்வி உறுதி, இதனால் மக்களுக்கு ஏற்படப்போகும் தீமைகளுக்கு இவர்கள் பொறுப்பேற்கவேண்டும்.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்சார சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார் 

Published By: DIGITAL DESK 3

28 JUN, 2024 | 03:57 PM
image
 

மின்சார சட்டமூலத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வியாழக்கிழமை (27) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினர்.

மின்சாரத் தொழிலுக்கான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யும் நோக்கிலான இந்த சட்டமூலம் 2024 ஏப்ரல் 25 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டது. அதனையடுத்து, கடந்த 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 44 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. 

அதற்கமைய, இந்த சட்டமூலம் 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரம் சட்டமாக நடைமுறைக்கு வருகின்றது.

https://www.virakesari.lk/article/187187

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.