Jump to content

96 ஆவது ஒஸ்கர் விருது விழா - 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஓப்பன்ஹெய்மர் படத்திற்கு ஏழு ஆஸ்கர் விருதுகள் - கிறிஸ்டோபர் நோலன் கூறியது என்ன?

நோலன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

20 நிமிடங்களுக்கு முன்னர்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2024ஆம் ஆண்டுக்கான அகாடமி விருதுகள் (ஆஸ்கார் விருதுகள்) விழாவில் ஓப்பன்ஹைமர் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் ஏழு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த படம், சிறந்த இயக்குநர் (கிறிஸ்டோபர் நோலன்), சிறந்த நடிகர் (சிலியன் மர்பி), சிறந்த துணை நடிகர் (ராபர்ட் டவுனி ஜூனியர்), சிறந்த ஒளிப்பதிவாளர் (ஹாய்ட் வான் ஹோய்டெமா), சிறந்த திரைப்பட எடிட்டிங் (ஜெனிஃபர் லெம்ம்), சிறந்த இசை, சிறந்த படத்தொகுப்பு ஆகியவற்றுக்கு ஓபன்ஹெய்மர் பரிந்துரைக்கப்பட்டு விருதும் வென்றுள்ளது.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய இந்தப் படம் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில் மொத்தம் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. ஓபன்ஹைமர் படம் ஏழு பிரிவுகளிலும், மற்ற படங்கள் ஆறு பிரிவுகளிலும் விருதுகளை வென்றன.

 

ஓபன்ஹைமர் படக்குழுவினர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிறந்த இயக்குநருக்கான விருதை கிறிஸ்டோபர் நோலன் பெற வந்தபோது, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அவருக்கு கோப்பையை வழங்கினார்.

அந்தச் சந்தர்ப்பத்தில், நோலன் தனது மனைவியும் இந்த படத்தின் இணை தயாரிப்பாளருமான எம்மா தாமஸுக்கு நன்றி தெரிவித்தார்.

அப்போது பேசிய எம்மா தாமஸ், அந்த தருணத்தைப் பற்றி தான் நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்ததாகவும், அந்தத் தருணத்திலேயே தான் நின்றிருப்பதாகவும் கூறினார்

அவர் தனது கணவரை 'தனித்துவமானவர் என்று வர்ணித்தார். இருப்பினும், ஒட்டுமொத்த அணியின் சிறப்பான செயல்பாட்டிற்காக அவர் பெருமையடைவதாகக் கூறினார். மேலும் தனது மூன்று குழந்தைகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

 

ஓபன்ஹைமர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதைப் பெற்ற எம்மா ஸ்டோன்

எம்மா ஸ்டோன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எம்மா ஸ்டோன் சிறந்த நடிகையாக அவரது பெயர் அறிவிக்கப்பட்டபோது அதிர்ச்சியடைந்தார்.

"நான் அந்த நேரத்தில் அப்படியே சுயநினைவு இழந்துவிட்டேன். நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்,” என்று அவர் மேடைக்குப் பின்னால் கூறினார்.

"நான் கொஞ்சம் கொஞ்சமாகச் சுழல்வது போல் உணர்கிறேன். இது ஒரு பெரிய மரியாதை. எனக்கு இது ஆச்சரியமாக உள்ளது," என்றார்.

யோர்கோஸ் லாந்திமோஸ் படத்தில் பெல்லா பாக்ஸ்டராக நடித்ததில் இருந்து தான் நிறைய கற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.

"புதிதாக ஆனால் உருவகமாக நடிப்பதற்கான ஒரு வாய்ப்பு... மொழி மற்றும் திறமைகளை வேகமாகப் பெறும் ஒரு நபராக நடிக்கும் வாய்ப்பு... அவள் மகிழ்ச்சியும் ஆர்வமும் உண்மையான அன்பும் நிறைந்தவளாக இருந்தாள்," என அந்தக் கதாப்பத்திரத்தைப் பற்றி அவர் பேசினார்.

 

ஓபன்ஹைமர் சிலியன் மர்பிக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது

சிலியன் மர்பி

பட மூலாதாரம்,GETTY IMAGES

சில்லியன் மர்பி செய்தியாளர் அறைக்குள் வரும்போது அவர் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்பதைப் போலத் தெரிந்தது. (அவர் வெற்றி பெற்றதில் ஆச்சரியமில்லை என்றாலும்).

"நான் கொஞ்சம் திகைப்புடன் இருக்கிறேன், இன்று இங்கு நிற்கும் ஐரிஷ் நாட்டவராக இருப்பதில் நான் மிகவும் வியப்படைகிறேன், பணிவாகவும் நன்றியுடனும் இருக்கிறேன், மிகவும் பெருமைப்படுகிறேன்," என்று அவர் கூறுகிறார்.

“இந்தத் திரைப்படம் எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனக்கும் கிறிஸுக்கும் (நோலன்) அத்தகைய சிறப்பு உறவு இருக்கிறது. நாங்கள் 20 வருடங்களாக இணைந்து பணியாற்றி வருகிறோம், அவர் சரியான இயக்குநர் என்று நினைக்கிறேன்...என் அதிர்ஷ்டத்தை என்னால் நம்ப முடியவில்லை. நான் சிறுவயதில் அவருடன் ஒரு ஸ்கிரீன் டெஸ்ட் செய்தேன், அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன்!"

ஐரிஷ் நாட்டில் பிறந்த, ஆஸ்கார் வாங்கும் முதல் நடிகராக இங்கு நிற்பதில் அவர் பெருமை கொள்வதாகத் தெரிவித்தார்.

"நான் என்ன சொன்னேன் என்பது எனக்கு நினைவில் இல்லை (ஏற்புரையில்), ஆனால் அயர்லாந்தில் கலைஞர்களை ஆதரிப்பதில் நாங்கள் மிகவும் சிறந்தவர்கள். அது தொடர வேண்டும்," என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c51w4gqq9pqo

Edited by ஏராளன்
heading changed
Link to comment
Share on other sites

  • ஏராளன் changed the title to 96 ஆவது ஒஸ்கர் விருது விழா - 2024
  • கருத்துக்கள உறவுகள்

96 ஆவது ஒஸ்கர் விருது விழா : வெற்றியாளர்களின் முழு விபரம் இதோ!!

Published By: DIGITAL DESK 3   11 MAR, 2024 | 11:55 AM

image

திரைத்துறையில் உலக அளவில் உயரிய விருதாக ஒஸ்கர் காணப்படுகின்றது. 1929 ஆம் ஆண்டு முதல் ஒஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர் உள்பட பல்வேறு பிரிவுகளில் ஒஸ்கர் விருது வழங்கப்படுகிறது.

இந்நிலையில், 96வது ஒஸ்கர் விருது நிகழ்ச்சி அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டொல்பி திரையரங்கில்  நடைபெற்றது.

இதில் சிறந்த படம், நடிகர், துணை நடிகர், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட 7 விருதுகளை ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படம் தட்டிச்சென்றுள்ளது.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்பி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஓபன்ஹெய்மர் திரைப்படம் அணுகுண்டை தயாரித்த ஜே. ரொபர்ட் ஓபன்ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்டு உருவானது.

ஜப்பான் நாட்டில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகி நகர்களின் மீது அணுகுண்டு போடப்பட்டு பல லட்சம் உயிர்கள் பலியாக தான் காரணமாகி விட்டோம் என வருந்தும் காட்சிகளிலும், இந்த உலகமே அழியப்போகுது என நினைக்கும் காட்சிகளிலும் தனது நடிப்பால் சிலியன் மர்பி அசத்தியிருந்தார். 

வெற்றியாளர்களின் முழு விபரம் இதோ...!

சிறந்த திரைப்படத்திற்கான ஒஸ்கர் விருதை வென்ற ஓப்பன்ஹெய்மர்

சிறந்த திரைப்படத்திற்கான (Best Picture) ஒஸ்கர் விருதை ஓப்பன்ஹெய்மர் (Oppenheimer) வென்றுள்ளது. கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மெர்பி நடிப்பில் வெளியான ஓப்பன்ஹெய்மர்  திரைப்படம் ஒஸ்கர் விருதை வென்றுள்ளது.

GIW1DiEWMAA_WDQ.jpg

சிறந்த நடிகை:

சிறந்த நடிகைக்கான (Best Actress) ஒஸ்கர் விருதை நடிகை இமா ஸ்டோன் வென்றுள்ளார். புவர் திங்ஸ் (Poor Things) திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகை இமா ஸ்டோனுக்கு சிறந்த நடிகைக்கான ஒஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

Emma_Stone.jpg

சிறந்த இயக்குனர்:

சிறந்த இயக்குனருக்கான ஒஸ்கர் விருதை ஓப்பன்ஹெய்மர் திரைப்பட இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் வென்றார். 

GIW5j7yX0AAzk3y.jpg

சிறந்த நடிகர்

சிறந்த நடிகருக்கான ஒஸ்கர் விருதை வென்றார் சிலியன் மெர்பி. ஓப்பன்ஹெய்மர் படத்தில் நடித்தமைக்காக சிலியன் மெர்பிக்கு  சிறந்த நடிகருக்கான ஒஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

Cillian_Murphy.jpg

சிறந்த ஆவண திரைப்படம்

சிறந்த ஆவண திரைப்படத்திற்கான (Best Documentary Feature) ஒஸ்கர் விருதை 20 டேஸ் இன் மரியப்போல் (20 Days in Mariupol) ஆவணப்படம் வென்றுள்ளது.

GettyImages-2074532178.jpg

சிறந்த ஆவண குறும்படம்:

சிறந்த ஆவண குறும்படத்திற்கான (Best Documentary Short) ஒஸ்கர் விருதை தி லாஸ்ட் ரிபெர் ஷாப் (The Last Repair Shop) குறும்படம் வென்றுள்ளது.

The_Last_Repair_Shop.jpg

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம்

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படத்திற்கான (Best Live Action Short) ஒஸ்கர் விருதை தி வொண்டர்புல் ஸ்டோரி ஆப் ஹெண்ட்ரி சுகர் (The Wonderful Story of Henry Sugar) குறும்படம் வென்றுள்ளது. 

The_Wonderful_Story_of_Henry_Sugar.jpg

சிறந்த ஒலி அமைப்பு

சிறந்த ஒலி அமைப்புக்கான (Best Sound) ஒஸ்கர் விருதை புவர் திங்ஸ் (Poor Things) திரைப்படம் வென்றுள்ளது.

சிறந்த துணை நடிகை

சிறந்த துணை நடிகைக்கான (Best Supporting Actress) ஒஸ்கர் விருதை தி ஹொல்ட் ஓவர் (The Holdovers) திரைப்படத்திற்காக டாவினி ஜாய் ரண்டொல்ப் வென்றார்.

The_Holdovers.jpg

சிறந்த அனிமேஷன் திரைப்படம்:

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான (Best Animated Feature) ஒஸ்கர் விருதை தி பாய்ஸ் அண்ட் தி ஹிரோன் (The Boy And The Heron) திரைப்படம் வென்றது. 

The_Boy_And_The_Heron_oscar.jpg

சிறந்த அனிமேஷன் குறும்படம்:

சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான (Best Animated Short) ஒஸ்கர் விருதை வார் இஸ் ஓவர் இன்ஸ்பயர்டு பை தி மியூசில் ஆப் ஜான் அண்ட் யொகொ (War Is Over! Inspired By The Music Of John And Yoko) வென்றுள்ளது.

GIWL9x1WkAEFZkP.png

சிறந்த திரைப்பட தயாரிப்பு வடிவமைப்பு

சிறந்த திரைப்பட தயாரிப்பு வடிவமைப்புக்கான (Best Production Design) ஒஸ்கர் விருதை புவர் திங்ஸ் (Poor Things) திரைப்படம் வென்றுள்ளது.

Best_Production_Design__Poor_Things.jpg

சிறந்த திரைப்பட எடிட்டிங்:

சிறந்த திரைப்பட எடிட்டிங்கிற்கான (Best Film Editing) ஒஸ்கர் விருதை ஓப்பன்ஹெய்மர் (Oppenheimer) திரைப்படம் வெற்றுள்ளது.

Oppenheimer_Best_Film_Editing.jpg

சிறந்த ஆடை அலங்காரம்:

சிறந்த ஆடை அலங்காரத்திற்கான (Best Costume Design) ஒஸ்கர் விருதை புவர் திங்ஸ் (Poor Things) திரைப்படம் வென்றுள்ளது.

Best_Production_Design.jpg

சிறந்த சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனை:

சிறந்த சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனைக்கான (Best Hair And Makeup) ஒஸ்கர் விருதை புவர் திங்ஸ் (Poor Things) திரைப்படம் வென்றுள்ளது.

2024-03-11T005304Z_1376245895_HP1EK3B02G

சிறந்த காட்சி அமைப்பு

சிறந்த காட்சி அமைப்புக்கான (Best Visual Effects) ஒஸ்கர் விருதை காட்சிலா மைனஸ் ஒன் (Godzilla Minus One) திரைப்படம் வென்றுள்ளது.

Best_Visual_Effects_Godzilla_Minus_One.j

சிறந்த பாடல்

சிறந்த பாடலுக்கான (Best Song) ஒஸ்கர் விருதை Barbie பாடல் பெற்றுள்ளது.

சிறந்த  இசை

சிறந்த  இசைக்கான (Best Music) ஒஸ்கர் விருதை The Zone Of Interest திரைப்படம் வென்றுள்ளது.

சிறந்த துணை நடிகர்

சிறந்த துணை நடிகருக்கான ஒஸ்கர் விருதை ஓப்பன்ஹெய்மர் படத்திற்காக ராபர்ட் டவ்னி வென்றார்.

Robert_Downey.jpg

சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஒஸ்கர் விருதை வென்ற ‘தி சோன் ஆப் இண்டரஸ்ட்’

சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஒஸ்கர் விருதை ‘தி சோன் ஆப் இண்டரஸ்ட்’ திரைப்படம் வென்றது.

The_Zone_of_Interest.jpeg

https://www.virakesari.lk/article/178391

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

oscar-750x375.webp

ஏழு ஒஸ்கார் விருதுகளை வென்று குவித்த ‘ஓப்பன்ஹெய்மர்‘

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 96 ஆவது ஒஸ்கார் விருது வழங்கல் விழாவில் ஓப்பன்ஹெய்மர்” திரைப்படமானது ஏழு ஒஸ்கார் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

அந்தவகையில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த எடிட்டிங், ,சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் ஆகிய பிரிவுகளில் குறித்த திரைப்படம் விருதை வென்றுள்ளது.

இதன் அடிப்படையில் சிறந்த நடிகருக்கான விருதை சிலியான் முர்பியும் (Cillian Murphy), சிறந்த இயக்குனருக்கான விருதை கிறிஸ்டோபர் நோலனும், பெற்றுள்ளனர்.

இதேநேரம் புவர் திங்ஸ் திரைப்படமானது  சிறந்த புரோடக்சன், சிறந்த ஆட வடிவமைப்பு, சிறந்த நடிகை ,சிறந்த ஒப்பனை மற்றும் ஹேர்ஸ்டைல் ஆகியவற்றுக்கான விருதுகளை வென்றுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1373027

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒஸ்கர் மேடைக்கு நிர்வாணமாக வந்த ஜோன் சீனா.. அதிர்ந்து போன அரங்கம்! 

John-Cena-1024x683.jpgசிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஒஸ்கர் விருதினை அறிவிக்க முழு நிர்வாணமாக மேடை ஏறி அரங்கத்தையே அதிர வைத்து விட்டார் ஜோன் சீனா. இதனால், அரங்கே சில நிமிடம் திக்குமுக்காடிப்போய், பார்வையாளர்கள் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

96வது அகாடமி விருது விழா இன்று காலை  தொடங்கியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள டால்பி தியேட்டரில் இந்த விழா நடைபெற்று வருகிறது. ஜிம்மி கிம்மல் 4வது முறையாக ஒஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்கி வருகிறார்.  பார்பி படத்தில் வரும் காட்சியுடன் ஒஸ்கர் விருது விழா ஆரம்பம் ஆனது.  சிறந்த தழுவல் திரைப்படத்துக்கான விருதை அமெரிக்கன் ஃபிக்‌ஷன் திரைப்படம் வென்றது. சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை ‘The Boy and the Heron’ திரைப்படத்தை இயக்கிய Hayao Miyazaki வென்றார்.

மேலும், கிறிஸ்டோபர் நோலனின் ஓபன்ஹைமர் திரைப்படம் பல விருதுகளை அள்ளியது. சிறந்த நடிகராக சிலியன் மர்பி, சிறந்த துணை நடிகராக ரொபர்ட் டவுனி ஜூனியர், திரைப்பட எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவுக்காகவும் விருதை வென்றது.

ரசிகர்களை வியக்க வைத்த ஜோன் சீனா:

john.jpg

இந்த விழாவில் வித்தியாசத்தை காட்டுகிறேன் என்று சிறந்த ஆடை வடிவமைப்பு விருதை வழங்க ஜோன் சீனா ஒஸ்கார் மேடைக்கு நிர்வாணமாக வந்தார். இதை சிறிதும் எதிர்பாராதா தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் திகைத்து நிற்க, விளக்கு அணைக்கப்பட்டு, அரங்கில் இருந்தவர்கள் ஓடி வந்து அவருக்கு அவசர அவசரமாக ஆடை மாற்றினார்கள். இதையடுத்து, சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை புவர் திங்ஸ் படத்துக்கு வழங்கினார். இதனால்,  விருது வழங்கும் மேடையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

https://thinakkural.lk/article/295165

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாஜிகளின் வதைமுகாம் குறித்த திரைப்படத்திற்கு ஒஸ்கர் விருது - காசா குறித்து இயக்குநர் கருத்து

Published By: RAJEEBAN   11 MAR, 2024 | 12:02 PM

image

ஒஸ்கர் விருதுவழங்கும் விழாவில் யூத இயக்குநர் ஜொனாதன் கிளேசர் காசா குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ஹொலொகாஸ்ட் மற்றும் நாஜிகளின் வதைகள் முகாம்கள் குறித்த அவரது  The Zone of Interest  திரைப்படத்திற்கு சர்வதேச திரைப்படங்களில் சிறந்த திரைப்படத்திற்கான விருது கிடைத்துள்ளது.

இந்த திரைப்படம் நாஜி வதை முகாம்களின் தளபதியாக நீண்டகாலம் பதவிவகித்த ருடொல்வ் ஹொஸின் குடும்பத்தை  பற்றி பேசுகின்றது.

the_zone_of_intrest.jpg

1940 முதல் 43 வரை ஹிட்லரின் வதைமுகாம்களிற்கு பொறுப்பாக  ருடொல்வ் ஹொஸின் காணப்பட்டார் இந்த முகாம்களில் 1.1 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர் - 

இந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டு உரையாற்றிய இயக்குநர் தனது யூததன்மையையும் ஹொலொஹாஸ்டினையும் ஆக்கிரமிப்பு தனக்கு சாதகமாக பயன்படுத்துவதை நிராகரித்தார்.

இஸ்ரேலிலும் காசாவிலும் பலியானவர்கள் மனித தன்மையின்மைக்கு பலியானவர்கள்  என இயக்குநர் தெரிவித்தார்.

எங்களின் தெரிவுகள் அனைத்தும் நிகழ்காலத்தில் நம்மை பிரதிபலிக்கவும் எதிர்கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்டவை என தெரிவித்துள்ள இயக்குநர், கடந்தகாலத்தில் அவர்கள் என்ன செய்தார்கள் என தெரிவிப்பதற்காக அவற்றை உருவாக்கவில்லை நாங்கள் என்ன செய்தோம் என்பதை தெரிவிப்பதற்காகவே அவற்றை உருவாக்கினோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

the_zone_of_intrsst_dire.jpg

இந்த திரைப்படம் மனிதாபிமானம் இன்மை எங்களை எங்கே இட்டுச்செல்கின்றது என்பதை காண்பிக்கின்றது மனிதாபிமானம் இன்மை நமது கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் வடிவமைத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

யூத தன்மையையும் ஹொலொஹாஸ்டினையும் ஆக்கிரமிப்பிற்கு சாதகமாக பயன்படுத்துவதை எதிர்ப்பவர்களாக நாங்கள் இங்கு பிரசன்னமாகியுள்ளோம். இது ஆயிரக்கணக்கான அப்பாவிகளை மோதலில் தள்ளியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் ஒக்டோபர் ஏழாம் திகதி கொல்லப்பட்டவர்களும் காசாவில் தற்போது கொல்லப்படுபவர்களும் மனிதநேயமற்ற தன்மைக்கு பலியானவர்களே இதனை நாங்கள் எப்படி எதிர்க்கப்போகின்றோம் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

https://www.virakesari.lk/article/178407

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Oscars 2024: “இப்படி ஒரு படத்தை நான் எடுத்திருக்கக்கூடாது!”

“ரஷ்யர்கள், எனது சக உக்ரேனியர்கள் பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்று வருவதை நிறுத்த வேண்டும்!” –

Mstyslav Chernov

96வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டர் அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.

ஜிம்மி கிம்மல் 4வது முறையாக இவ்விருது விழாவைத் தொகுத்து வழங்கினார். இதில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கிலியன் மர்ஃபி நடித்துள்ள ‘ஓப்பன்ஹெய்மர்’ படம் 13 பிரிவுகளில் போட்டியிட்டு 7 பிரிவுகளில் விருதினை வென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து ‘புவர் திங்ஸ்’ திரைப்படம் நான்கு விருதுகளை வென்றுள்ளது.

Oscars 2024 - 20 Days In Mariupol

இதில் உக்ரைன் போரை மையப்படுத்தி எடுத்த ’20 டேஸ் இன் மரியுபோல்’ (20 Days In Mariupol) சிறந்த ஆவணப்படத்திற்கான விருதைப் பெற்றிருக்கிறது. இப்படத்திற்கான விருதைப் பெற்றுக்கொண்ட பின் பேசிய படத்தின் இயக்குநர் மிஸ்டிஸ்லாவ் செர்னோவ், “உக்ரைனுக்குக் கிடைத்த முதல் ஆஸ்கர் விருது என்று சொல்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இப்படி ஒரு படத்தை எடுக்க எனக்கு விருப்பமில்லை.

அதாவது போரை மையமாக வைத்துப் படத்தை எடுக்கக்கூடிய ஒரு சூழல் வந்திருக்கக்கூடாது. இந்த விருதை ரஷ்யாவுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அதற்குப் பதிலாக ரஷ்யர்கள், எனது சக உக்ரேனியர்கள் பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்று வருவதை நிறுத்த வேண்டும்.

Oscars 2024 - 20 Days In Mariupol

அதுமட்டுமின்றி பணயக்கைதிகள், தங்கள் நிலங்களைப் பாதுகாக்கும் இராணுவ வீரர்கள், தற்போது சிறையில் உள்ள பொதுமக்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

https://thinakkural.lk/article/295297

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.