Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3    11 MAR, 2024 | 03:14 PM

image

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரும் கைவிலங்குகளுடன் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

மகாசிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக சட்டத்தரணிகள் கடந்த சனிக்கிழமை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர். 

இதனையடுத்து நேற்று (10) ஞாயிற்றுக்கிழமை குறித்த 8 பேரையும் மன்றின் உத்தரவுக்கமைய வவுனியா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அழைத்து சென்றிருந்தனர்.

இதன்போது குறித்த 8 பேரினதும் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கைவிலங்குடன் அவர்கள் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

https://www.virakesari.lk/article/178426

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் மீதான விசாரணை நீதிமன்றில்

Published By: DIGITAL DESK 3   12 MAR, 2024 | 12:53 PM

image

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும்  12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (12)  வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற போது சப்பாத்துக் கால்களுடன் ஆலயத்திற்குள் நுழைந்த பொலிஸார் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து தடுத்து வைத்திருந்தனர்.

குறித்த 8 பேரையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் நெடுங்கேணி பொலிஸார் கடந்த (09) மாலை முன்னிலைப்படுத்தினர். இதன்போது ஆலய  பூசகர் உள்ளிட்ட 8 பேர் சார்பாக சட்டத்தரணிகளான க.சுகாஸ், தி.திருஅருள், அ.திலீப்குமார் உள்ளிட்ட குழுவினர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

வெடுக்குநாறி ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டது. குறித்த வழக்கு தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதால்  12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளமை தொடபில் மன்றுக்கு தெரிவித்தமையால் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துக்கும் தெரிவிக்கப்பட்டது

இந்நிலையில் தற்போது குறித்த வழக்கு மீதான விசாரணை வவுனியா மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்று வருவதுடன் சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் ஆகியோரும் நீதிமன்றினுள் சென்றுள்ளனர்.

https://www.virakesari.lk/article/178515

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

Published By: DIGITAL DESK 3   12 MAR, 2024 | 04:45 PM

image

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஆலயத்திற்குள் நுழைந்த பொலிசார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் வழிபாட்டில் ஈடுபட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.

அவர்களை கடந்த 9 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியா நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் விசாரணைகள் நிறைவுபெறாத காரணத்தால் இன்று செவ்வாய்க்கிழமை  (12) வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் இன்றைய தினம் மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

காலை 9 மணி முதல் மூன்று தடவைகள் குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், தொல்பொருள் திணைக்களத்தினர் அங்குள்ள தொல் பொருட் சின்னங்களை சேதப்படுத்தியதாக மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதனையடுத்து குறித்த 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் சார்பில் ஜனாபதிதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான ஸ்ரீகாந்தா, க.சுகாஸ், தி.திருஅருள், கிறிஸ்ரினா, ஜிதர்சன், சஜித்தா, சாருகேசி, விதுசினி, கீர்த்தனன், யூஜின் ஆனந்தராஜா, கொன்சியஸ் உள்ளிட்ட பலர் மன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/178545

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறிமலை சம்பவம்; கைதுசெய்யப்பட்டவர்கள் உண்ணாவிரதம்!!

Published By: DIGITAL DESK 3    13 MAR, 2024 | 02:45 PM

image

வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனர்.

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று  கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து அவர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் நேற்றையதினம் மாலை அடைக்கப்பட்டனர்.இந்நிலையில் தங்களை விடுதலைசெய்யகோரி அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

குறிப்பாக நேற்றயதினம் காலை நீதிமன்றிற்கு கொண்டுசெல்லப்படும் போதே அவர்கள் உணவினை எடுத்திருக்கவில்லை. இந்நிலையில் இன்றையதினமும் அவர்கள் உணவினை உட்கொள்வதற்கு மறுத்துள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட எட்டுபேரில் ஆலய பூசாரியார் த.மதிமுகராசா மற்றும் து. தமிழ்ச்செல்வன்,  தி.கிந்துயன், சு.தவபாலசிங்கம், விநாயகமூர்த்தி ஆகியோரே உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/178625

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது நாளாக தொடரும் உண்ணாவிரதம்; சட்டத்தரணிகள் பார்வையிட்டனர்

Published By: DIGITAL DESK 3    14 MAR, 2024 | 03:11 PM

image

வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களின் உண்ணாவிரத போராட்டம்  இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவர்களை வவுனியா சட்டத்தரணிகள் சிலர் இன்று வியாழக்கிழமை (14) பார்வையிட்டனர். 

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று  கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று நேற்றுமுன்தினம் உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து அவர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் தமக்கான நீதி வழங்கக்கோரி அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

நேற்றுமுன்தினம் தொடங்கிய குறித்த உண்ணாவிரத போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் நீடித்து வருகின்றது. 

கைதுசெய்யப்பட்ட எட்டுபேரில் ஆலயபூசாரியார் த.மதிமுகராசா மற்றும்து தமிழ்ச்செல்வன், தி.கிந்துயன்,சு.தவபாலசிங்கம், விநாயகமூர்த்தி ஆகியோரே உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை அவர்கள் வழமை போல உணவினை உட்கொள்வதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் நேற்றயதினம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து வவுனியாவைசேர்ந்த சட்டத்தரணிகளான கொன்சியஸ் மற்றும் திலிப்காந் ஆகியோர் இன்றையதினம் சிறைச்சாலைக்கு சென்று அவர்களை பார்வையிட்டனர். இதன்போது அவர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றமையினை அவர்கள் உறுதிப்படுத்தியிருந்தனர்.

https://www.virakesari.lk/article/178721

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறி மலை விவகாரம்: மனிதவுரிமை ஆணைக்குழுவும் சட்டவிரோத கைதுகளுக்கு துணை போகின்றதா? - கஜேந்திரன் எம்.பி ஆதங்கம்

Published By: DIGITAL DESK 3   14 MAR, 2024 | 04:46 PM

image
 

மனிதவுரிமை ஆணைக்குழுவும் சட்டவிரோத கைதுகளுக்கும், குற்றச்சாட்டுக்களுக்கும் துணை போகின்றதா என்ற கேள்வி எழுகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் வெடுக்குநாறி மலை ஆலய பூசகர் உள்ளிட்ட கைதிகளை இன்று வியாழக்கிழமை (14) பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறைச்சாலைக்கு சென்று 8 பேரையும் பார்வையிட்டு இருந்தேன். அதில் 5 பேர் 3 ஆவது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பொய்யான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை. அவர்களது உடல் நிலை மோசமடைகின்றது. அதில் சிலருக்கு ஆஸ்மா, சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உள்ளன. அவர்கள் உரிய முறையில் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்படவில்லை. மனிதவுரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் இதுவரை அவர்களை பார்வையிடவில்லை. கைது இடம்பெற்ற அன்றே மனிதவுரிமை ஆணைக்குழுவுக்கு அறிவித்த போதும் இதுவரை பார்வையிடவில்லை. மனிதவுரிமை ஆணைக்குழுவும் சட்டவிரோத கைதுகளுக்கும், குற்றச்சாட்டுக்களுக்கும் துணை போகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.

சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் தெரிவித்த கருத்து முற்றுமுழுதாக பொய். கடந்த செவ்வாய்கிழமை நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்பிருந்தே அவர்கள் உணவு எதனையும் உண்ணவில்லை. அதற்கு பிற்பாடும் அவர்கள் உணவு உண்ணவில்லை. மூன்றாவது நாளாக அவர்கள் உணவு உண்ணவில்லை. அவர்களது குடும்பத்தினர் நேரடியாக சென்று பார்வையிட்ட போதும் அவர்கள் உணவு உண்ணவில்லை என்பதை தெரிவித்திருக்கிறார்கள். ஆலய நிர்வாகத்தினரும் சென்று பார்வையிட்டிருந்தனர். அவர்களும் உண்ணாவிரதம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். ஆகவே, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் கூறியது தவறானது. இவர்கள் மீது நெருக்குவாரத்தை உருவாக்கி பொய்யாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை அவர்களை ஏற்றுக் கொள்ள வைக்க இவ்வாறு செயற்படுகின்றார்களா அல்லது அவர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்த வைக்க முயல்கின்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆகவே, இதனை விளங்கிக் கொண்டு புலம்பெயர் தமிழ் மக்களும் இராஜதந்திர அழுத்தங்களை கொடுக்க வேண்டும். கொழும்பில் உள்ள இராஜதந்திர செயலங்களும் இந்த விடயத்தில் கரிசனை செலுத்த வேண்டும்.

வெள்ளிக்கிழமை நெடுங்கேணியில் ஆலய நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரண்டு ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்வதுடன், சனிக்கிழமை கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் வவுனியாவில் இடம்பெறவுள்ள போராட்டத்திலும் சகலரும் அணிதிரண்டு அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொளகின்றேன் எனத் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/178736

  • கருத்துக்கள உறவுகள்
On 11/3/2024 at 11:53, ஏராளன் said:

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

IMG-6020.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இனி கோயில் பக்கம் எவரும் வருவதையோ, பூசை செய்வதையோ கனவிலும் நினைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தவே இந்த காட்சிகள் எல்லாம் அரங்கேறுகின்றதோ என்னவோ.

தொல்பொருள் திணைக்களம் தான் நினைப்பதை சாதிக்கின்றது.

வேறு என்னதான் கூறுவது.. 😟 

  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விவகாரம் : வவுனியாவில் போராட்டம் ! 

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று வழிபாட்டில் ஈடுபட்ட போது கைதுசெய்யப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னடுக்கப்பட்டது.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெறும் இப் போராட்டமானது இன்று காலை நெடுங்கேணி சந்தியில் ஆரம்பமாகி பேரணியாக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தை அடைந்து அங்கு மகஜர் கையளிக்கப்பட்டதுடன் அங்கிருந்து நெடுங்கேணி பொலிஸ் நிலையம் நோக்கி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இப் போராட்டத்தில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

01-7.jpg02-8.jpg03-8.jpg

https://thinakkural.lk/article/295874

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

இப் போராட்டத்தில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தெரிகிறது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறி மலை விவகாரம் : முறைப்பாடின்றி கைதிகளை பார்வையிடும் அதிகாரம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு உண்டு - அம்பிகா சற்குணநாதன்

17 MAR, 2024 | 10:02 AM
image

(நா.தனுஜா)

வெடுக்குநாறி மலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை முறைப்பாடளித்ததன் பின்னரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் இன்னமும் சென்று பார்வையிடாத நிலையில், இவ்வாறான சம்பவங்களில் முறைப்பாடின்றியே கைதிகளை பார்வையிடுவதற்கான அதிகாரம் ஆணைக்குழுவுக்கு உண்டென முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த 8ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று பூஜை வழிபாடுகளில் ஈடுபடச் சென்ற பக்தர்களுக்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டதுடன், இரவு வேளையில் அங்கு வழிபாடுகளைத் தொடர முற்பட்டோர் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். 

அதுமாத்திரமன்றி, ஆலய பூசகர் உள்ளடங்கலாக 8 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவர்களில் 5 பேர் கடந்த 5 தினங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கைது சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அலுவலகத்திலும், அதனைத் தொடர்ந்து கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்திலும் முறைப்பாடு அளித்த போதிலும், ஆணைக்குழு அதிகாரிகள் எவரும் கைது செய்யப்பட்டவர்களை வந்து பார்வையிடவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இது குறித்த தெளிவுபடுத்தலை பெற்றுக்கொள்வதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் நீதியரசர் (ஓய்வுபெற்ற) எல்.ரி.பி.தெஹிதெனியவையும், வவுனியா பிராந்திய அலுவலகத்தின் ஒருங்கிணைப்பாளர் ரோஹித பிரியதர்ஷனவையும் தொடர்புகொள்ள முற்பட்ட போதிலும், அது சாத்தியமாகவில்லை. 

அதனையடுத்து, ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ரி.தனராஜிடம் வினவியபோது, இது பற்றிய தகவல்களை நாளைய தினம் அறியத்தருவதாக உறுதியளித்தார்.

இந்நிலையில் மேற்குறிப்பிட்டவாறான சம்பவங்களின்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு செயற்படவேண்டிய விதம் மற்றும் அதற்கு வழங்கப்பட்டுள்ள ஆணை தொடர்பில் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதனிடம் வினவினோம்.

முதலாவதாக கைது இடம்பெறும்போது அதற்குரிய தெளிவான காரணம் காணப்படல், அக்காரணத்தை கைது செய்யப்படும் நபரிடம் கூறுதல், கைதுசெய்யப்படுபவர்களில் பெண்களும் உள்ளடங்கும் பட்சத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கட்டாயமாக இருத்தல், கைதுசெய்யப்படும் நபர் எங்கு அழைத்துச் செல்லப்படுகிறார் என்பது பற்றி அவரது குடும்பத்தாருக்கு அறியத்தரல், அழைத்துச்செல்லப்பட்ட இடத்துக்கு வருகைதரும் குடும்பத்தார் கைதுசெய்யப்பட்ட நபரை பார்வையிடுவதற்கு இடமளித்தல் என்பன உள்ளடங்கலாக உரிய செயன்முறை பின்பற்றப்படவேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

அதுமாத்திரமன்றி, வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் மீது அநாவசியமான அழுத்தம் மற்றும் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டமையும், அங்கு வைக்கப்பட்டிருந்த பூஜை பொருட்கள் தட்டிவிடப்பட்டமை போன்ற நடவடிக்கைகளும் ஏற்புடையவையல்ல எனவும் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டினார்.

மேலும், இவ்வாறான சந்தர்ப்பங்களில் எந்தவொரு தரப்பினரும் முறைப்பாடு அளிக்கப்படாமலேயே சிறைச்சாலைக்கு சென்று கைதுசெய்யப்பட்டவர்களை பார்வையிடுவதற்கும், அவர்களுடன் கலந்துரையாடுவதற்கும், அவர்கள் தாக்கப்பட்டிருப்பின் நீதிமன்ற மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துமாறு வலியுறுத்துவதற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/178914

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.