Jump to content

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் திடீர் தாக்குதல் - தாலிபன் அரசுடன் என்ன பிரச்னை?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஆப்கானிஸ்தான் vs பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பாகிஸ்தானிலிருந்து கரோலின் டேவிஸ் & லண்டனிலிருந்து ஃப்ளோரா ட்ரூரி
  • பதவி, பிபிசி
  • 18 மார்ச் 2024, 12:10 GMT
    புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர்

ஆப்கானிஸ்தானில் ஒரே இரவில் 2 இடங்களில் பாகிஸ்தான் நடத்திய திடீர் வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் எட்டு பேர் கொல்லப்பட்டதாக தாலிபன்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திங்கள்கிழமை (மார்ச் 18) உள்ளூர் நேரப்படி 03:00 மணியளவில் நடந்த இந்த "பொறுப்பற்ற" தாக்குதல்களில், பாகிஸ்தானுடனான எல்லைக்கு அருகிலுள்ள வீடுகள் தாக்கப்பட்டதாக, தாலிபன் அரசின் செய்தித் தொடர்பாளர் ஸைபுல்லா முஜாஹித் தெரிவித்தார்.

பாகிஸ்தான் இதுகுறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

ஆனால், கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் துருப்புகள் 7 பேரை அடையாளம் தெரியாத ஆயுதக்குழுவினர் கொன்றதற்காக, “வலுவான பதிலடியை கொடுப்போம்” என, அந்நாட்டு குடியரசு தலைவர் ஆசிஃப் அலி சர்தாரி உறுதியளித்ததைத் தொடர்ந்து இத்தாக்குதல் நடந்துள்ளது.

உயிரிழந்த பாகிஸ்தான் படையினர் இருவரின் இறுதிச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆசிஃப் அலி சர்தாரி, இதற்கு காரணமானவர்கள் “யாராக இருந்தாலும், எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பதிலடி கொடுக்கப்படும்” என தெரிவித்தார்.

வடக்கு வசீரிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் பாகிஸ்தான் ராணுவ தளத்தின் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தானிலிருந்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது. பாகிஸ்தான் அரசாங்கத்தின்படி, இத்தகைய தாக்குதல்களின் எண்ணிக்கை சமீப மாதங்களாக அதிகரித்து வருகின்றன.

பாகிஸ்தான் துருப்புகள் மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடியாகவே இன்று ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் தாக்குதல் நடைபெற்றதாக, பெயர் தெரிவிக்க விரும்பாத உள்ளூர் அரசு அதிகாரியை மேற்கோள் காட்டி ஏ.எஃப்.பி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

 

பாகிஸ்தானுக்கு தாலிபன் பதிலடி

தலிபான் நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் ஒரு அறிக்கையில், "ஆப்கானிஸ்தான் பிரதேசத்தின் பாதுகாப்பில் சமரசம் செய்ய யாரையும் அனுமதிக்காது. இந்த தாக்குதல்களில் கிழக்கு எல்லையான கோஸ்ட் மற்றும் பக்திகா மாகாணங்களில் ஐந்து பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டனர்", என்று குறிப்பிட்டுள்ளார்.

தலிபான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடியாக எல்லையில் பாகிஸ்தான் துருப்புகளை அதன் பாதுகாப்புப் படைகள் குறிவைத்ததாகக் கூறியுள்ளது.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே மோதல்கள் நடந்ததாக அல்ஜசீரா மற்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே உச்சக்கட்ட பதற்றம்

வான்வழி தாக்குதல்களில் 8 பேரை கொன்றதாக பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டு

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

உயிரிழந்த பாகிஸ்தான் படையினரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட ஆசிஃப் அலி சர்தாரி

ஆனால், தாலிபன் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஸைபுல்லா முஜாஹித் சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், "கட்டுப்பாடு இல்லாதது மற்றும் தங்கள் பிரதேசத்தில் உள்ள பிரச்னைகளுக்கு ஆப்கானிஸ்தானை குறை கூற வேண்டாம்" என்று பாகிஸ்தானை எச்சரித்தார்.

”இதுபோன்ற சம்பவங்கள், பாகிஸ்தானால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்,” என்றும் அவர் கூறினார்.

இந்த தாக்குதல்களில் "மக்கள் குடியிருந்த வீடுகள்" தாக்கப்பட்டதாகவும் இதில் ஐந்து பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

2021-ம் ஆண்டில் தாலிபன்கள் நாட்டை மீண்டும் கைப்பற்றியதில் இருந்து ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டின் பிற்பகுதியில், பாகிஸ்தான் பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்களை பாகிஸ்தானை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தியது. பாகிஸ்தானில் தங்குவதற்கு அவர்களிடம் சரியான ஆவணங்கள் இல்லை என அந்நாடு கூறியது. பல அகதிகள் மற்றும் புகலிடம் கோரி வந்தவர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதாக மனித உரிமைக் குழுக்கள் விமர்சித்தன.

பாதுகாப்புக் காரணங்களுக்காக இதைச் செய்ததாக அந்த நேரத்தில் பாகிஸ்தான் காபந்து அரசாங்கத்தின் அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர். ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் மீண்டும் கைப்பற்றிய பிறகு, அதனை ஆயுதக் குழுக்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், ஆயுதக் குழுக்களை ஆதரிக்கவில்லை என தாலிபன்கள் மறுத்துள்ளதாக, ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cx9zxqy4er5o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8 பேர் பலி

Published By: SETHU   18 MAR, 2024 | 02:05 PM

image
 

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான்  இன்று நடத்திய வான்வழித் தாக்குதல்களால் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என  தலிபான் அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோஸ்ட் மற்றும் பக்திக்கா மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும்,  உயிரிழந்தவர்கள் அனைவரும் பெண்கள் மற்றும் சிறார்கள் எனவும் ஸபிஹுல்லா முஜாஹித் கூறியுள்ளார். 

வீடுகளை இலக்குவைத்து விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக அவர் கூறியுள்ளார். 

தீவிரவாதிகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் வடக்கு வஸிரிஸ்தான் மாவட்டத்தில் பொலிஸ் நிலையமொன்றின் மீது நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 படையினர் உயிரிழந்திருந்தனர். 

இத்தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸிப் அலி ஸர்தாரி சூளுரைத்திருந்தார்.

https://www.virakesari.lk/article/179016

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கட்சிக் காரருக்கு "ஜூலை 4 ஆம் திகதிக்கு முன்பாக மூடும் உத்தரவு கிடைக்கவில்லை" என்கிறார். வடமாகாண சபை தளத்தில் ஜூலை 4 ஆம் திகதிக்குரிய செய்தியில் மூடும் உத்தரவு பற்றிய செய்தி இருக்கிறது. அதையே ஒரு பத்திரிகை பிரசுரிக்கலாம். ஆணை புறாவின் காலில் கட்டி கட்சிக் காரருக்கு கிடைக்கும் வரை பொறுத்திருக்க வேண்டிய சட்டத் தேவை இல்லை. அனேகமாக இது நீதிமன்றம் போய் இழுபடும் கேஸாக தெரிகிறது. இனி கொடுக்கும் நன்கொடையில் ஒரு பகுதி சட்டத்தரணிகளிடம் போய்ச் சேருமென நினைக்கிறேன். 
    • நானும் வாட்ஸப்பில் இப்போது பார்த்தேன்..  கட்டடத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் சரவணபவான், அதைத் கேட்ட ஆறு திருமுகன் மேல் சேறு பூச உதயனில் செய்தி போட்டிருக்கின்றார் என்கின்றார்கள். ஊடக அடியாட்களின் வேலையா என்பதைத் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
    • இல்லை! @புலவர் ஐயாவின் கட்சிக்காரர்கள் வென்றுவிட்டார்கள். மூன்றாவதாகத்தான் கிருஷ்ணி வந்தார்!  
    • ச‌ம்ப‌ந்த‌ர்  த‌மிழ‌ர்க‌ளுக்கு தேவை இல்லா ஆணி................யாழ்ப்பாண‌த்து இள‌ம் யூடுப்ப‌ர்க‌ள் கூட‌ இவ‌ரின் இறுதி ச‌ட‌ங்கை நேர‌டி ஒளிப‌ர‌ப்பு செய்ய‌ வில்லை.................யாரும் இவ‌ருக்காக‌ க‌ண் க‌ல‌ங்க‌ வில்லை சுவை அண்ணா...................ஊர் பேர் தெரியாம‌ இருந்த‌ சும‌த்திர‌ன‌ சூழ்ச்சி முறையில் அர‌சிய‌லுக்கு கொண்டு வ‌ந்து வெல்ல‌ வைச்ச‌ க‌போதி தான் இந்த‌ ச‌ம்ப‌ந்த‌ர்    தானும் த‌ன்ர‌ குடும்ப‌மும் உல்லாச‌மாய் இருக்க‌ ச‌ம்ப‌ந்த‌ர்  எந்த‌ எல்லைக்கும் போய் சிங்க‌ள‌வ‌னுக்கு ந‌ல்லா முட்டு கொடுப்பார்...................ச‌ம்ப‌ந்த‌ர்  முக‌மூடி போடாத‌ லக்சுமன் கதிர்காமர்................அது தான் எம் இன‌த்தை அழித்த‌ ம‌கிந்தா ச‌ம்ம‌ந்த‌னின் இறுதி ச‌ட‌ங்கில் க‌ல‌ந்து கொண்டு இருந்தான்..................இவ‌ருக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் கூட‌ இவ‌ரின் இழ‌ப்பை நினைசு க‌வ‌லைப் ப‌ட்டு இருக்க‌ மாட்டின‌ம்.................2002ம் ஆண்டு த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் தான் பெரும்பாலான‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு ச‌ம்ம‌ந்த‌னை அறிமுக‌ம் செய்து வைச்ச‌வ‌ர்........................2009 போரால் பாதிக்க‌ ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு இவ‌ர் ஏதும் ந‌ல்ல‌து செய்த‌வ‌ரா........................   குடும்ப‌த்துட‌ன் உல்லாச‌மாய் வாழ்ந்து குடும்ப‌த்துக்கு சொத்து சேர்த்து வைத்து விட்டு போய் சேர்ந்து விட்டார்........................   இவ‌ர் ஒன்றும் த‌மிழ்செல்வ‌ன் அண்ணா . யோசப் பரராஜசிங்கம் ஜயா கிடையாது................யாரோ ஒருத‌ர் இற‌ந்து போய் விட்டார் என்ர‌ நிலையில் தான் ச‌ம்ப‌ந்த‌ரின் இற‌ப்பு .....................................
    • நாங்கள்... சாந்தன், சம்பந்தனின் செத்த வீட்டுக்கு வந்த சனத்தைப் பற்றிக் கதைக்க, நீங்கள் கில்மிசாவின் களியாட்ட நிகழ்ச்சியை பற்றி கதைக்கின்றீர்கள்.  அப்படி என்றால்... தமன்னாவுக்கு வந்த ஆட்களையும்  ஒப்பிட்டு  பார்க்க வேண்டியதுதானே.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.