Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் மௌனம் எதற்காக?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் மௌனம் எதற்காக?

[30 - September - 2007]

-ச.ப.நிர்மானுசன்-

"உபாயங்கள் எல்லாவற்றையும் சொல்லமுடியாது, சொல்வது எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்த முடியாது. மறுமுனையில் நோக்கினால், நடைமுறைப்படுத்தப்பட்டது எல்லாம் சிந்திக்கப்பட்டதாக இருக்கும், கணிசமானளவு வெளியில் கூறக்கூடியதாக இருக்கும்". களம் காலத்தை மாற்றுமா, காலம் களத்தை மாற்றுமா என்ற வினாவிற்கும் மேற்கூறிய சூட்சுமத்துக்கும் பலத்த பொருத்தப்பாடுகள் உள்ளது என கடந்த வாரப் பத்தியிலே குறிப்பிட்டிருந்தேன்.

மேற்கூறிய எனது குறிப்பு பல்வேறு தரப்பினரிடம் வெவ்வேறு விதமான விமர்சனங்களை தோற்றுவித்ததாக அறிய முடிந்தது. ஆயிரம் கருத்துக்கள் மோதட்டும், ஆக்கபூர்வமான விமர்சனங்கள்மலரட்டும் என்று மக்களுக்காக போராடியவர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே விமர்சனங்களுக்கு மதிப்பளித்து எனது விடயத்துக்கு வருகிறேன்.

புதிய உலக ஒழுங்கினுடைய தாக்கத்தினை நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் 62 ஆவது கூட்டத் தொடர் படம்பிடித்துக் காட்டுகிறது. ஆயுதங்களின் பிதாமகன்களில் முக்கியமான அமெரிக்கா "காலநிலை மாற்றம்' தொடர்பாக முக்கியத்துவம் கொடுக்க, அதற்குப் பின்னால் அமெரிக்காவின் "சூழ்நிலைத் தோழர்கள்' அணிவகுத்து அமெரிக்காவின் கருத்தை ஆதரித்து பேசியுள்ளார்கள்.

அதேவேளை, தென் ஆபிரிக்க ஜனாதிபதி தபோ எம்பெகி சக்திமிக்க நாடுகளே உலக மாநாடுகளில் மேலாண்மை செலுத்துவதாகவும், உலகிலுள்ள அரசியல், பொருளாதார, சமூக, இராணுவ மற்றும் தொழில்நுட்ப நிலையில் நிலவும் சமச்சீரற்ற பலம் வறிய மக்களில் பெரும்பான்மையானவர்களுக்கு பாதகமானதாகவே அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். அத்துடன் "காலநிலை மாற்றம்' , உலக வர்த்தகம், புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி அடைவிலக்குகள் போன்றவையின் ஊடாக ஆரோக்கியமான நாடுகளே சாதகத்தன்மைகளை அடைவதாகவும், ஐ.நா. தனது தீர்மானங்களை உரிய முறையில் அமுல்படுத்துவதில் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், முதன்மையான இந்த உலகில் சுதந்திரம், நீதி, சமத்துவம் போன்றவற்றின் கருத்துக்கள் மேலாண்மை சக்திகளினாலேயே நிர்ணயிக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கொலஸ் சாக்கொஸி `எமக்குத் தேவையானது நேர்மையான, புதிய கையாளல் தன்மை' எனக் குறிப்பிட்டிருந்தார்.

முக்கியமான இரு ஜனாதிபதிகளினதும் மேற்கூறிய கருத்துகள் தற்போதைய உலக ஒழுங்கின் மீதான `அதிருப்தி தெறிப்புகளாகவே' நோக்கப்பட வேண்டும். நிகராக வளர்ந்து வரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எழுச்சி, சவாலாக உருவாகும் ஆபிரிக்க ஒன்றியத்தின் வளர்ச்சி ஐக்கிய நாடுகள் சபையின் 62 ஆவது கூட்டத் தொடரிலும் அதிர்வுகளை உண்டாக்கியுள்ளது. முன்னதாக ஜி 8 மாநாடும் அமெரிக்காவுக்கு சோதனையாகவே அமைந்திருந்தது.

இன்னொரு புறத்தில் கொசோவோவின் விடுதலை தொடர்பாக அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமிடையில் இடம்பெற்று வரும் பனிப்போர், ஈராக்கில் அந்தரத்தில் தொங்கும் அமெரிக்காவின் உபாயங்களும் (Strategies) உத்திகளும் (Tactics) ஆப்கானில் ஆப்பிழுத்த குரங்காக மாறியுள்ள நிலைமை, இதோ உன்னை முட்டி மோத தயார் எனக் கூறுவதுபோல் அபரிதமான வளர்ச்சியடைந்துள்ள சீனா, ஈரானினதும், வெனிசுலாவினதும் ஜனாதிபதிகளின் அறிக்கைப் போர்கள் என நீண்டு செல்லும் அமெரிக்காவுக்கு சாதகமற்ற சூழல் புதிய உலக ஒழுங்கில் நிச்சயமாக தாக்கத்தை உண்டு பண்ணும். அந்த தாக்கத்தை எவ்வாறு தந்திரோபாய ரீதியில் பயன்படுத்துவது என்பது சவாலானதொன்றாகவே இருக்கப் போகிறது. அந்தச் சவாலை வெல்பவர்களே தமது தேசத்தின் இருப்பை நிலைநிறுத்துபவர்களாக மிளிர்வார்கள். எதிர்காலத்தை ஆக்கபூர்வமான தூரநோக்கோடும், பொறுமை கலந்த ஆழமான அவதானிப்போடும் உரிய காலப்பகுதிவரை நோக்குபவர்களே புதிய உலக ஒழுங்கின் தலைவர்களுக்கான அடையாளங்களாக இருக்கப் போகிறார்கள்.

மேற்கூறியவை போன்ற நிலைகளை கருத்தில் கொண்டே இலங்கைத் தீவினுடைய இனக்குழும மோதுகையின் இன்றைய நிலையையும், இனிவரும் காலத்தையும் நோக்குதல் பயனுள்ளதாக அமையும். இங்கே முன்வைக்கின்ற வாதங்கள் உண்மையை விரும்பாதவர்களுக்கு கசப்பானதாக அமையலாம். ஆனால், மக்களை மாயைகளிலிருந்து வெளியே கொண்டு வந்து காலக் கண்ணாடியை அவர்களுக்கு காட்டி, யதார்த்தத்தை புரிய வைக்க வேண்டிய தார்மீக பொறுப்பு ஒவ்வொரு ஊடகவியலாளனுக்கும் உண்டு. அந்தப் பொறுப்பை இந்த பத்தியில் நிறைவேற்ற முயல்கிறேன்.

"என்ன நடக்கப் போகுது? எல்.ரி.ரி.ஈ. இனர் உண்மையிலேயே பலவீனம் அடைந்து விட்டார்களா? `கொட்டி (புலி) கதை முடியப்போகுது", "இருந்து பார் பெடியள் பெரிய அடி குடுக்கப் போறாங்கள்", "தலைவரின் திட்டத்தை யாருமே அறிய முடியாது" போன்ற வினாக்களும் அபிப்பிராயங்களும் கிராமங்கள் தொடக்கம் தூதுவராலயங்கள் வரை பேசப்படுகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் திட்டங்கள் என்ன என்பதை சுலபமாக அறிய முடியாது என்பது மெய்நிலை. அவர்களினுடைய மௌனத்திற்கு ஒரு `அர்த்தம்' இருக்கின்றது என்பதை யாரும் மறுதலிக்க முடியாது. ஏனெனில் 12 போராளிகளை இழந்தபோது பிராந்திய வல்லரசொன்றுடனே போரிடத் துணிந்த புலிகள், இன்று இரு தசாப்தங்கள் கடந்த நிலையில் பல்வகைப் பரிமாணங்களுடன் வளர்ச்சியடைந்துள்ள நிலையில் அமைதியா இருக்கிறார்கள். இந்த வளர்ச்சி நிலை முற்றுமுழுதாக நிரூபணமாகாத ஒரு நிலையிலேயே, புலிகளின் கதை முடியப் போவதாக தென்னிலங்கை முழங்குகிறது. புலம்பெயர்ந்த தமிழர்களும், இலங்கைத் தீவில் வாழுகின்ற தமிழர்களும் குழம்புகிறார்கள். இத்தகைய நிலைக்கு புதிய உலக ஒழுங்கை முன்னிலைப்படுத்தி வரவுள்ள `காலக்கனிவே' பதில் வழங்கப் போகிறது.

அந்தக் காலக் கனிவையும், களநிலை சாதகத்தையும் உண்டாக்குவது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அவ்வளவு இலகுவானதல்ல. இதற்காக பலத்த சவால்களை எதிர்ரிகொள்ள வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் எந்தளவிற்கு வளர்ந்துள்ளார்களோ அதனைச் சோதிப்பது போல சவால்களும் மேலெழுந்துள்ளது. வளர்ச்சிக்கேற்ற சவால்கள் இருக்கத்தான் செய்யும். அது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மட்டுமானதல்ல. வல்லாண்மைகளுக்கு ஏற்ப சவால்கள் இருக்கும். அது அமெரிக்காவுக்கும் பொருந்தும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் பொருந்தும். ஆனால், சவால்களை திடத்துடன் எதிர்கொண்டு அதனை வெற்றி கொள்வதிலேயே அவரவர் இருப்பு தங்கியுள்ளது. கடந்த காலத்தில் புலிகளுக்கு ஏற்பட்ட சவால்களை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வெற்றி கொண்டிருக்கிறார்கள். மாறிவரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப மாறப்போகும் காலநிலைக்கு அமைய எவ்வாறு களநிலையை புலிகள் மாற்றப் போகிறார்கள் என்பது ஈழப்போராட்டத்தின் போக்கைப் புரியாதவர்களுக்கு சிதம்பர சக்கரமாகவே இருக்கப் போகிறது.

தெளிவாக புரிந்துகொள்ள வேண்டிய ஒரு யதார்த்தம் யாதெனில், புலிகளினுடைய வெற்றியை ஒட்டுமொத்த தமிழர்களும் மனப்பூர்வமாக கொண்டாடுவதில்லை. ஆனால், புலிகளினுடைய தோல்வியை முழுமொத்த தமிழினத்தின் வீழ்ச்சியாகவே நோக்குகிறார்கள். அத்துடன், பிராந்திய வல்லரசுகளோ அல்லது உலக வல்லரசுகளோ தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவையல்ல விரும்புவது, மாறாக அவர்கள் பலவீனமாக வேண்டும் என்பதையே. தமது எதிரி தன்னை பலவீனமானவனாக எண்ண வேண்டும் என்பதற்காகவே பல வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது ஒரு போரியல் உத்தி. அதனைத் தான் தமிழீழ விடுதலைப் புலிகளும் தற்போது மேற்கொள்வது போல் புலப்படுகிறது. ஏனெனில், கடந்த இரு வருட காலத்தில் முகமாலை முறியடிப்புச் சமர் வானுலா, ஹபரண கலக்கல், நெடுந்தீவு பாய்ச்சல் என்பனவற்றை விட பெரும் தாக்குதல்களை புலிகள் மேற்கெள்ளவில்லை. அதேவேளை புலிகளுக்கு படுதோல்விகள் தொடர்கிறது என்ற ஆரவாரம் தென்னிலங்கையூடாக மேலெழும்புகிறது.

வெற்றிகள் என்பது தனித்து தாக்குதல் நடவடிக்கைகளினூடாக கணிப்பிடப்படக்கூடியதல்ல. மாறாக, பல இரகசிய நகர்வுகளும், தந்திரோபாய நகர்வுகளும், இராஜதந்திர நகர்வுகளையும் உள்ளடக்கியே கணிப்பிட வேண்டும். ஆனால், தாக்குதல் நடவடிக்கைகள் போல ஏனைய நகர்வுகள் வெளித்தெரிவது அரிது. ஒரு முழு அளவிலான போரின் அறுவடையின் பின்பே வெற்றியின் பரிமாணங்களை அளவிட முடியும்.

இவையனைத்தினதும் வெளித்தருகையைப் பார்ப்பதற்கு பொறுமை அவசியம். அந்தப் பொறுமையை காப்பதென்பது மிகக் கடினமானது. "இன்று உலகு எதிர்கொள்ளும் ஒரு பெரும் சவால் பொறுமையின்மை" என ஐக்கிய நாடுகள் சபையின் 62 ஆவது கூட்டத் தொடரின் ஆரம்ப உரையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீன் மூன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளோ அவர்களுடைய போராட்ட வரலாற்றில் என்றைக்குமே கடைப்பிடிக்காத பொறுமையை, நிதானத்தை தற்போது கடைப்பிடித்து வருகிறார்கள். அதனை பலவீனமாகக் கருதினால் அதன் தாக்கம் படுபாதகமானதாகவே அமையும். அது இலங்கைத் தீவு முழுவதையும் இரத்தக் களரியாக்கக் கூடும்.

அதனுடைய தாக்கத்தை எதிர்கொள்வதில் பெரும்பான்மையினராக மக்களே இருப்பார்கள். எந்த நடவடிக்கையும் மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்தே முன்னெடுக்கப்பட வேண்டும். ஏனெனில் போராட்டம் மக்களுக்கானது. மக்களினுடைய உறுதியான ஆதரவே போராட்டங்களின் நிலையான வெற்றியாக இருக்கும். அதுதான் மக்களின் வெற்றியும் ஆகும்.

ஆக மொத்தத்தில் மக்களின் உறுதியான ஆதரவுத் தளம், மனோதிடம், ஆத்மபலம், அர்த்தம் பொதிந்த, நிதானம் கலந்த பொறுமை, மாறிவரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ற நுட்பம் மிகு திட்டமிடல் போன்றவையே, எதிர்வுகூற முடியாதுள்ள இன்றைய சூழலுக்கு விரைவில் விடைதரப் போகிறது.

அந்த விடையே உண்மையான விடுதலையின் வாசலாக அமையும்.

http://www.thinakkural.com/news/2007/9/30/...s_page37199.htm

மாறிவரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப மாறப்போகும் காலநிலைக்கு அமைய எவ்வாறு களநிலையை புலிகள் மாற்றப் போகிறார்கள் என்பது ஈழப்போராட்டத்தின் போக்கைப் புரியாதவர்களுக்கு சிதம்பர சக்கரமாகவே இருக்கப் போகிறது.

தெளிவாக புரிந்துகொள்ள வேண்டிய ஒரு யதார்த்தம் யாதெனில், புலிகளினுடைய வெற்றியை ஒட்டுமொத்த தமிழர்களும் மனப்பூர்வமாக கொண்டாடுவதில்லை. ஆனால், புலிகளினுடைய தோல்வியை முழுமொத்த தமிழினத்தின் வீழ்ச்சியாகவே நோக்குகிறார்கள். அத்துடன், பிராந்திய வல்லரசுகளோ அல்லது உலக வல்லரசுகளோ தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவையல்ல விரும்புவது, மாறாக அவர்கள் பலவீனமாக வேண்டும் என்பதையே. தமது எதிரி தன்னை பலவீனமானவனாக எண்ண வேண்டும் என்பதற்காகவே பல வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது ஒரு போரியல் உத்தி. அதனைத் தான் தமிழீழ விடுதலைப் புலிகளும் தற்போது மேற்கொள்வது போல் புலப்படுகிறது. ஏனெனில், கடந்த இரு வருட காலத்தில் முகமாலை முறியடிப்புச் சமர் வானுலா, ஹபரண கலக்கல், நெடுந்தீவு பாய்ச்சல் என்பனவற்றை விட பெரும் தாக்குதல்களை புலிகள் மேற்கெள்ளவில்லை. அதேவேளை புலிகளுக்கு படுதோல்விகள் தொடர்கிறது என்ற ஆரவாரம் தென்னிலங்கையூடாக மேலெழும்புகிறது.

வெற்றிகள் என்பது தனித்து தாக்குதல் நடவடிக்கைகளினூடாக கணிப்பிடப்படக்கூடியதல்ல. மாறாக, பல இரகசிய நகர்வுகளும், தந்திரோபாய நகர்வுகளும், இராஜதந்திர நகர்வுகளையும் உள்ளடக்கியே கணிப்பிட வேண்டும். ஆனால், தாக்குதல் நடவடிக்கைகள் போல ஏனைய நகர்வுகள் வெளித்தெரிவது அரிது. ஒரு முழு அளவிலான போரின் அறுவடையின் பின்பே வெற்றியின் பரிமாணங்களை அளவிட முடியும்.

இவையனைத்தினதும் வெளித்தருகையைப் பார்ப்பதற்கு பொறுமை அவசியம். அந்தப் பொறுமையை காப்பதென்பது மிகக் கடினமானது. "இன்று உலகு எதிர்கொள்ளும் ஒரு பெரும் சவால் பொறுமையின்மை" என ஐக்கிய நாடுகள் சபையின் 62 ஆவது கூட்டத் தொடரின் ஆரம்ப உரையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீன் மூன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளோ அவர்களுடைய போராட்ட வரலாற்றில் என்றைக்குமே கடைப்பிடிக்காத பொறுமையை, நிதானத்தை தற்போது கடைப்பிடித்து வருகிறார்கள். அதனை பலவீனமாகக் கருதினால் அதன் தாக்கம் படுபாதகமானதாகவே அமையும். அது இலங்கைத் தீவு முழுவதையும் இரத்தக் களரியாக்கக் கூடும்.

முணுமுணுக்கும் புலி ஆதரவாளர்களும் கிண்டலடிக்கும் புலியெதிப்பாளர்களும்!

தேசிய விடுதலைப்பேராட்டம் ஒன்று இப்படித்தான் இருக்கம் என்று எந்த ஒரு சமன்பாடும் கிடையாது. தேசியவிடுதலைப் போராட்டம் இப்படி இந்த இந்த விதிகளுக்கு ஏற்பதான் நடை பெற வேண்டும் என்பதற்கு இது ஒன்றும் விஞ்ஞானம் அல்ல. கடந்த சில மாதங்களாக சிறீ லங்கா இராணுவ நடவடிக்கைகள் மேலோங்கியிருப்பதை அவதானித்த பலர் தாங்களும் இக்பால் அத்தாஸ் என்ற சிந்தனையுடன் இணையத் தளங்கள், வானொலிகள், தொலைக்கட்சிகள் என்று விளாசித் தள்ளுகிறார்கள். புலியாதரவாளர்களோ ம் இவங்கள் என்ன இப்படி இருக்கிறாங்கள் ஐந்து வருசமா என்ன செய்தவங்கள் என்று கேள்வி எழுப்ப புலி எதிர்ப்பாளர்களே புலிகள் முடிந்தார்கள் என்று அவர்களின் செத்த வீட்டுக்கு பாடை கட்ட வெளிக்கிட்டு விட்டார்கள். ஆனால் இவர்கள் இருவருமே ஏனோ யாதர்த்தமாக சிந்திக்காது தமது உணர்வுகளுக்கு மட்டுமே வடிவம் கொடுத்து சிந்திக்கிறார்கள்.

புலிஆதரவாளர்கள் பலர் வெளி நாடுகளுக்கு வந்த பின் புலிகளின் இராணுவ வெற்றிகளை கண்டு ஆதரவாளர்கள் ஆனவர்கள். இவர்கள் முன்பு விடுதலைப்போராட்டம் மீது அவ்வளவு நம்பிக்கையற்றவர்களாக இருந்தவர்கள். விடுதலைப்புலிகளின் வெற்றியே இவர்களுக்கு தமிழ் தேசியப்போராட்டம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை கொடுத்தது. புலிகள் பலம் மிக்கவர்கள் அவர்களை அழிக்க முடியாது என்று ஒரு நம்பிக்கையை கடந்த 5 வருடகாலத்தில் கட்டியவர்கள். இதற்கு அப்போதைய கள யதார்தமும் ஒரு காரணமாகிப்போனது. புலிகளின் இறுதி யுத்தத்தை ஆனையிறவு சமருடன் ஒப்பிட்டார்கள். தொடங்கினால் ஒரு மதத்திற்குள் எல்லாம் முடிந்து வி;டும். வடக்கு கிழக்கில் இருந்த இராணுவம் ஓடிவிடும் என்று அதீதமாக கற்பனை பண்ணினார்கள். அண்மையில் தொடங்கிய சண்டை இறுதி யுத்தம் என்று ஒரு பிரமையை புலம் பெயர் ஊடகங்கள் கொடுக்க அதை நம்பிய இந்த மக்கள் ஆரம்ப வெற்றியை கண்டு திகைத்து பின்னர் பின்வாங்கல்களுடன் புஸ்வானம் போல் ஆகி விட்டனர்.

அதனை தொடர்ந்து சிறீ லங்கா இராணுவத்தின் இரண்டு வெற்றிகள் இவர்களை இன்னமும் குளப்பத்தில் ஆழ்த்தி விட்டது. வெளி நாடுகளில் வாழும் பல தமிழ் மக்கள் இன்று மிகவும் குளம்பி;போயுள்ளனர். ஆனால் இவர்கள் ஏன் குளம்பியுள்ளனர் என்பதுதான் மிகவும் சந்தேகமாக உள்ளது. புலிகள் இதனைவிட பாரிய தோல்விகளை சந்தித்தே பல வெற்றிகளை சாதித்தவர்கள் என்பது வரலாறு. ஆனால் இன்று இவர்கள் குளம்பியமைக்கு வேறு ஒரு கரணமும் உள்ளது. வடக்க கிழக்கில் அண்மை காலமாக கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் கொலைகள் இந்த மக்களை நிச்சயமாக ஆழந்த சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்தியுள்ளது.

விடுதலைப் போராட்டங்களின் வரலாறுகளை எடுத்தப்பாரத்தால் நாம் பலவிதமான உதாரணங்களை காணலாம். வியட்நாம் போராட்டத்தில் 20 வருடகாலத்திற்கு மேல் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளை வியட்கொங்குகள் இழந்தார்கள். பின்னர் மீண்டும் தமதாக்கினார்கள். நாம் புலிகள் மீது காதல் கொண்டவர்கள் கிடையாது. புலிகளை நாம் நேரடியாக விமர்சிக்க தவறியதும் கிடையாது. அனால் புலிகள் இன்று எடுத்தள்ள இந்த பொறுமை தான் நமது தேசிய விடுதலைப் போராட்டதின் ஒரு பெரும் மைற் கல்லாக இருக்கப்போகிறது. சாம்புரில் இருந்து புலிகள் என் பின்வாங்கினார்கள் என்பதற்கு விடை தெரிந்தவர்கள் புலிகளே. இந்த சாம்புரை விட்டு விலகி 3 நாட்களின் பின் தான் சிறீ லங்க அரசிற்கு புலிகள் பின்வாங்கி விட்டார்கள் என்று தெரிந்துள்ளது. கருணாவின் உளவுதான் சாம்புரில் புலிகளை வென்றது என்று மடத்தனமாக பேசும் புலியெதிரப்பளர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் மூன்று நாட்கள் புலிகள் இந்தப் பகுதியில் நிலை கொண்டுள்ளனர் என்ற நினைப்பில் விமானப்படையும் இராணுவ ஆட்லறி மற்றும் மல்றிபரலும் தமது குண்டுகளை அநியாயமாக விரயம் செய்தது. சாம்புரை விட்டகன்ற புலிகள் ஒரு கண்ணிவெடிகூட வைக்காது விலகியதன் மர்மம் என்ன?

புலிகளுக்மட்டுமே தெரிந்த விடைகள் நமக்க தெரிய வேண்டிய அவசியம் இல்லை. இராணுவ இரகசியம் வேறு அரசியல் உண்மைகள் வேறு. மிகவும் மடத்தனமான அறிவீனமாற்ற புலியெதிர்ப்பாளர்கள் புலிகள் ஏன் இவற்றை மறைக்கிறார்கள் என்று மக்களை குளப்புகிறார்கள். புலிகள் தான் இன்று தமிழ் பேசும் மக்களின் இராணுவம். அத்துடன் புலிகள் தான் இன்று தேசிய விடுதலைப் போராட்டத்தை தம் அகத்தே வைத்திருக்கிறரர்கள். கடந்த பத்து வருட காலத்தில் பாரிய விலை கொடுத்து இந்த போராட்டத்தை புதிய எல்லைக்கு கொண்டு சென்றுள்ளனர். விடை தெரியாத கேள்விகளுக்கு விடை காணுவதை விடுத்து கடந்த கால வரலாற்றின் அனுபவத்தை மனதில் வைத்து புலிகள் மீது நம்பக்கை வைப்பதே தற்போதைய புலம் பெயர் தமிழர்களின் தலையாய கடமை. புலிகள் தமது இலக்கை விட்டு தவறினால் அதை கேட்க நாம் என்றும் தயங்க கூடாது. ஆனால் சுடுகுது மடியைய் பிடி என்ற நிலையும் கூடாது. இறுதியுத்தம் என்பது ஒரு காலவரையற்ற ஒரு போராட்டம். ஆனால் மிகவும் உக்கரமான ஒரு போராட்டம.;. இந்த போராட்டம் வெடிக்க முன் நாம் நம்மை அரசியல் ரீதியாக தயார்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்கான தயாரிப்புகளே இன்று நடைபெறுகிறது.

புலியெதிர்பு ஊடகங்களே நீங்கள் ஏன்தான் உங்கள் புதைகுழியை மிக வேகமாகத் தோண்டுகிறீர்களோ தெரியாது. நின்று நிதானித்து உங்கள் குழியை தோண்டுங்கள் அது தான் உங்களுக்கம நல்லது.

http://www.thenee.ca/artical/sub_31.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.