Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

"ஒப்பனையியல் / அழகுக் கலை" / "cosmetology" 

ஒப்பனையியல் பற்றிய பண்டைய அறிவியல் எகிப்திலும் இந்தியாவிலும் ஆரம்பமாகியதாக பொதுவாக ஏற்றுக் கொள்ளப் பட்டாலும், ஒப்பனை பொருட்கள், அதன் பாவனைகள் பற்றிய முன்னைய குறிப்புகளை காண நாம் கி மு 2500-15000 ஆண்டு இந்தியா உபகண்டத்தின் சிந்து சம வெளி நாகரிகத்திற்கு போக வேண்டியுள்ளது. அங்கே, சிந்து சம வெளி பெண்கள் உதட்டுச் சாயம் (Lipstick) பூசினார்கள் என தெரிய வந்துள்ளது. உலகிலேயே முதன் முதலில் உதட்டுச் சாயம் தயாரித்து பயன்படுத்தியவர்கள் இவர்களே என்பதை இது உறுதிப்படுத்துகிறது. ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த இந்த மக்கள் திருமண வைபவங்களின் போது மணப் பெண்களை அலங்கரிக்கச் சில ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர். அவற்றுள் ஒன்று தான் இந்த உதட்டுச் சாயமாகும். இவர்கள் தேன்மெழுகு [beeswax], தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட நிறமிகள் [pigments] என்பனவற்றைக் கலந்து திரவ வடிவில் கிடைத்த கூழ் மத்தைத் (Colloid) தங்களது உதடுகளில் பூசிக் கொண்டனர். இதுவே இன்றைய நவீன உதட்டுச் சாயங்களின் முன்னோடியாகும் என்பது குறிப்பிடத் தக்கது.

 
இதே போல பண்டைய தமிழகத்திலும் ஆணும் பெண்ணும் தம்மை பலதரப்பட்ட ஒப்பனைகளில் ஈடுபடுத்தியதுடன் அதைப்பற்றிய மிகவும் ஆழமான எண்ணங்களை கொண்டிருந்தார்கள் என்பதற்கான சான்றுகள் அங்கு காணக்கிடைக்கிறது. ஒப்பனை பொருட்களின் பாவனை இன்றைய காலத்தை போல இல்லாமல், அவை குறிப்பாக அக தோற்ற அழகுடன் மட்டும் நில்லாமல், நீடித்து வாழ்வதற்கும் நல்ல உடல்நலம் பேணுதற்கும் உகந்தவையாக தேர்ந்து எடுக்கப்பட்டன. 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க கால ஆண்களும் பெண்களும் எண்ணெய் பாவிப்பதிலும், நறுமண முள்ள இயற்கை வாசனை திரவியம் மற்றும் பல வண்ண இயற்கை பொடிகள், பூச்சுக்கள் பாவிப்பதிலும் கவனம் செலுத்தினார்கள். இதனை குறிஞ்சிப்பாட்டு 107-108 மிக அழகாக 


"எண்ணெய் நீவிய சுரி வளர் நறும் காழ்த் தண் நறும் தகரம் கமழ மண்ணி" 


என தலைவனின் எழிலை வர்ணிக்கிறது. அதாவது எண்ணெய் தடவிய சுருண்ட தலை முடியில் மணம் வீசும் அகில், சந்தனம் போன்ற வற்றையும் மணம் தரும் குளிர்ச்சியான மயிர்ச் சாந்தினையும் மணக்கப் பூசியிருந்தான் என்கிறது. மேலும் பொதுவாக சந்தனம் பெரிதும் மார்பில் பூசப்பட்டது. பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதியின் பெருமையையும் அவன் வலிமையையும் சிறப்பித்துக் கூறும் புறநானூறு 3, அவனை, கால்களில் பொன்னாலான கழல்களும், உலர்ந்த சந்தனம் பூசிய பரந்து அகன்ற மார்பும் உடையவனே!  


-"பொலங் கழல் கால் புலர் சாந்தின் விலங்கு அகன்ற வியன் மார்ப"-


என்று கூறுகிறது. சந்தனம் பொதுவாக சிறந்த கிருமிநாசினி யாகவும் அதே நேரம்  உடம்பை குளிரவும் செய்கிறது. பண்டைய தமிழ் பெண்கள் மேல் சட்டை அணிவ தில்லை. ஆனால், அவர்கள் தமது மார்புகளில் சந்தனச் சாந்தைக் குழைத்து அல்லது வாசனைப் பொருள்களால் கோலம் எழுதி தமது மார்புகளை மறைக்கிறார்கள். இதை தொய்யில் என்பார்கள். 

தொய்யில் என்பது தோய்த்தல் என்று பொருள்படும். இது மார்பகங்கள் தவிர, நெற்றியிலும், தோளிலும், கூட வரைகிறார்கள். மேலும் இத்தகைய ஒப்பனைக் கலையை மேற் கொள்வோர் தொய்யில் மகளிர் என்ற பெயரால் அழைக்கப் பட்டனர். இவளது வண்ண முலைகள் பார்ப்பவர் கண்ணை உருத்தும்படி எழுகின்றன. அதில் தொய்யில் எழுதி மேலும் உருத்தச் செய்துள்ளாள். பார்ப்பவர் என்ன ஆவர் என்பது எழுதியவளுக்குத் தெரியவில்லையே


-"உருத்தெழு வன முலை ஒளி பெற எழுதிய தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்"- 


என கேள்வி கேட்கிறது, குறுந்தொகை  276. சங்க கால மகளீர் வேறு பல வழிகளிலும் தம்மை அழகூட்டினர். அவர்கள் கண்மை போட்டு தம்மை ஒப்பனை செய்தார்கள் என்பதை அவ்வை யார். மணிகள் கோத்த அணிகள் விளங்கும்  இடையும், மை தீட்டிய கண்களும் ஓளிபொருந்திய நெற்றியும் கொண்ட நாட்டியம் ஆடும் வெகுளிப் பெண்ணே!


-"இழை யணிப் பொலிந்த ஏந்துகோட்டு அல்குல் மடவரல் உண்கண் வாள்நுதல் விறலி!"-


என புறநானூறு 89 அடிகளால் சான்று பகிர்கிறார். மேலும் அவர்களுக் கிடையில் எந்த விழா நடந்தாலும் அது மகிழ்ச்சிகரமாக அல்லது துக்ககரமாக இருந்தாலும் அங்கு மலர் அலங்காரம் முதல் இடத்தை பெறுகின்றன. மற்ற முக்கிய ஒப்பனை நெற்றியில் ‘பொட்டு இடுதல்’ ஆகும். சங்க இலக்கிய நூல்களுள் ஒன்றான திருமுருகாற்றுப்படையில் 


"திலகம் தைஇய தேம்கமழ் திரு நுதல்" 


என்ற அடி 24, திலகமிட்ட நறுமணம் பொருந்திய அழகிய நெற்றி என்கிறது. சங்க காலத்து மக்கள் தங்களை அழகுபடுத்த இப்படி சில ஒப்பனை முறைகளைக் கையாண்டுள்ளதுடன் ஒப்பனை செய்வதற் கென்று தனியறைகளும் [மல்லல் வினையிடம்], பணியாட்களும் [வண்ணமகளிர்] இருந்துள்ள தன்மையையும் சங்க இலக்கியங்கள் எடுத்தியம்பியுள்ளன.


ஒப்பனை என்ற சொல்லிற்கு அழகுபடுத்தல் என்று பொருள். இத்தகைய ஒப்பனைக் கலை தமிழிலக் கியங்களில் பழங்காலந் தொட்டு இடம் பெற்றுள்ளது. சங்க இலக்கியங்களில் மேற் கூறிய ஒப்பனைகள் மலிந்துள்ளன. புறநானூற்றில் கூந்தல் ஒப்பனையை வருணிக்கும் பொழுது,


"...........................................வந்ததைக்
கார் வான் இன் உறை தமியள் கேளா
நெருநல் ஒரு சிறைப் புலம்பு கொண்டு உறையும்
அரி மதர் மழைக் கண் அம் மா அரிவை
நெய்யொடு துறந்த மை இரும் கூந்தல்
மண்ணூறு மணியின் மாசு அற மண்ணிப்
புது மலர் கஞல இன்று பெயரின்
அது மன் எம் பரிசில் ஆவியர் கோவே".
[புறநானூறு 147]


என்று சங்ககாலப் புலவர் குறித்துள்ளார். நேற்று உன் இல்லம் சென்றபோது உன் மனைவி மழைக்கால மேகம் இடி முழக்கத்தைக் கேட்டுக் கொண்டு தனியே இருந்தாள். கண்ணீரை அடக்கிக் கொண்டு இருந்தாள். கூந்தலில் எண்ணெய் வைக்காமல் இருந்தாள். அவள் தலையில் எண்ணெய் வைத்துக் குளித்துவிட்டுப் புதுமலர் சூடிக் கொள்ளும்படி நீ அவளிடம் செல். ஆவியர் குடி மக்களின் அரசனே! நீ எனக்குப் பரிசில் தர விரும்பினால் அது நீ உன் மனைவியிடம் செல்வதுதான். என்கிறார் புலவர். 

மேலும், குறுந்தொகை 5, இல் தலைவி தோழியிடம் குருகுகள் [ஒரு வித பறவை] உறங்குவதற்கு இடமாகிய இனிய நிழலையுடைய புன்னை மரங்களை கொண்டவனும், கரையை அலைகள் மோதும் போது உடைகின்ற நீரால் வீசப்படும் துளியால் அரும்புகின்ற கண்ணுக்கு இனிதாகிய நீர்ப் பரப்பையுடைய மெல்லிய கடற் கரையையுமுடைய எம் தலைவன் எம்மை விட்டுப் பிரிந்ததால் பல இதழ்களையுடைய தாமரை மலரைப் போன்ற கண் மை இட்ட எம் கண்கள் காம நோயால் தூங்க முடியாதவை ஆக வாடுகின்றன. இது தான் காதல் நோயின் தன்மையோ?என வினாவுகிறார்,. 


"அது கொல் தோழி காம நோயே
வதி குருகு உறங்கும் இன் நிழல் புன்னை
உடை திரைத் திவலை அரும்பும் தீ நீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல் இதழ் உண் கண் பாடு ஒல்லாவே"


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

"cosmetology" 

The ancient science of cosmetology is believed to have originated in Egypt and India, but the earliest records of cosmetic substances and their application dates back to about 2500 and 1550 B.C, to the Indus valley civilization. where We came to know that Woman applied lipstick by 2000 BC. There is evidence of highly advanced ideas of self beautification and a large array of various cosmetic usages both by men and women, in ancient Tamilakam too. Significantly, the use of cosmetics was directed not only towards developing an outwardly pleasant and attractive personality, but towards achieving merit, Longevity with good health. For example, the men and women of Sangam age were fond of using oil, aromatic scents, coloured powders and paints, while the sandal paste was heavily applied on their chests. Kurunjippaaddu clearly said in line 107-108 that


"The hero was handsome with oiled, curly hair, on which fragrant pastes and perfumes had been rubbed."
sandal paste is believed to cool the body’s temperature. Purananuru 3 confirmed the use of sandal paste as cosmetic substance
-"Your broad chest is smeared across with sandal paste and your feet are adorned with golden anklets".


Tamil women of the early centuries were not wearing blouses and they covered their breasts only with the ornamental paste of sandalwood and even some time, according to sangam literature, women had pictures drawn on their bodies in coloured patterns. This is called toyyil. Kurunthogai 276 question


- "Somebody painted bright thoyyil designs on her beautiful, budding breasts. without knowing it will sweep others eye. What happen to her if I appeal in the court of the king?"


The Tamil women have also other ways of adding to their beauty. From the very early days the habit of putting Collyrium to the eye is very familiar (Kanmai). Purananuru 89 confirm this beautification


-"O Virali[female musician] with a bright forehead, kohl[an ancient eye cosmetic] decorated eyes, delicate nature and lifted loins wearing splendid jewels!".


There is no Tamil function without flowers whether it is a happy or sad. Pattinapalai (10:110), refers to the gender-wise differences  even in the making of garlands for adornment. Another important custom is to have Kumkum pottu /Bindi on the fore head. We can find this in early period as well,


In Purananuru 147,the poet advising the hero [King] while he is living other lady than his wife that If you want to award me please join with your wife. Yesterday, I met her. She is suffering loneliness without your company. Your presence will make her to dress her hair oiling, bathing and flower decoration.


"King of Aviyars!  Grant me the gift of you going
to your wife today, the beautiful dark woman, who,
yesterday, stood alone in despair listening to the
sweet sounds of rain drops, tears dripping from her
pretty, streaked, moist eyes, her hair without oil,
so that her hair can be adorned with flowers, after
being washed perfectly, to shine like sapphire gems".


[Purananuru 147]


In Kurunthokai 5, the heroine asked her friend "Is this how love sickness is, my friend? My kohl-lined eyes refuse to sleep"


"Is this how love sickness is, my friend?
The lord of the delicate shores,
……….where residing herons sleep in the
……….sweet shade of punnai trees,
……….which bloom when the breaking
……….waves spray their sweet mist,
has left me.
My kohl-lined eyes that resemble flowers
with many petals refuse to sleep."


[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna] 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இவரும் பல தடவைகள் பொதுவெளியில் நான் டொக்டர் என்னுடன் நீ எப்படி இது போல் பேசலாம் என த்ன்னுடைய ஒளிவட்ட பேச்சுகளை பேசியுள்ளார் ... 
    • ஊழல் அற்ற பட்டம் வேணும் ...லஞ்சம் கொடுப்பது வாங்குவது எல்லாம் நம்ம தோழருக்கு பிடிக்காது..😅 மிச்ச மூன்று பேரையும் யாழில் இலகுவாக எடுத்து போடுவேன் என்ட கிறுக்கல்கள் யாழில் ஒரு மாதத்தில் 500 பேருக்கு மேல பார்க்கினம் வெள்ளி விழா,வைர விழா எல்லாம் தாண்டி ஒடுது ...ஆகவே கலாநிதி பட்டத்திற்கு கையொப்பம் எடுப்பது   இலகுவான விடயம் என நினைக்கிறேன்....😅
    • புலிகள் குடும்பங்களை பிடித்து வைத்திருந்தார்கள் என்பதனை  நானும் கேள்விப்பட்டதில்லை, ஆனால் 1995 இறுதிக்காலப்பகுதியில் புலிகளின் 3 போராளிகள் இயக்கத்திலிருந்து விலகியிருந்தார்கள், அவர்களுக்கு 3 மாத தண்டனைக்காலத்தில் தண்டனையாக சமையலறை வேலை இருந்தது, அந்த காலப்பகுதி முடிவடைவதற்கு வெகு சில நாள்கள் மட்டும் இருந்த நிலையில் அவர்கள் இருந்த சமையலறை மேல் புக்கார வீசிய குண்டில் 3 போராளிகளும் உடல் சிதறி பலியாகியிருந்தனர். அதில் ஒரு போராளி சாகவச்சேரியினை சேர்ந்தவர், அந்த குண்டு வீச்சு யாழ் மாவட்டத்திற்குள் நிகழ்ந்தது, இருந்தும் அந்த போராளிகளின் உடல்களை புலிகள் தாமே தகனம் செய்துவிட்டனர், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவில்லை, இறந்தவர்களுக்கு போராளிகள் எனும் அந்தஸ்தும் வழங்கப்படவில்லை, 5 பேருக்கும் குறைவானவர்களே அவர்களது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
    • இவருக்கும் எனக்கும் கல்வியில் ஒரு கள்ளத் தொடர்புண்டு . ......!  😂
    • முதலில் செய்து விட்டு சொல்லுங்கடா வாயளையும்  வெடித்தது காணும் .
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.