Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

"சிந்து சம வெளியில் ஏறு தழுவல்" / "Bull fighting in Indus valley"


மொஹெஞ்ச தாரோவில் கண்டெடுக்கப்பட்ட, ஏறு தழுவல் கல் முத்திரை, நீலகிரி மாவட்டத்தில் கரிக்கியூர் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட 3500-4000 ஆண்டுகளுக்கு முந்தைய காளை துரத்தும் பாறை ஓவியம், சேலம் மாவட்ட அருங்காட்சியகத்தில் உள்ள ஏறு தழுவல் கல்வெட்டு என்பன ஜல்லிக்கட்டு என இன்று அழைக்கப்படும் எருதுவேட்டை என்ற மாடு பிடிக்கும் அல்லது ஏறு தழுவும் விளையாட்டுக்கு பண்டைய சாட்சியாக உள்ளன.   

ஏறு தழுவல் என்பது காளையை அடக்கி அமைதி ஆக்குபவருக்கு மாட்டின் கொம்புகளில் முன்னமே துணியில் கட்டி வைத்துள்ள 'சல்லி காசை' அல்லது 'நகைகளை' பரிசாக கொடுக்கும் ஒரு வீர விளையாட்டு ஆகும்.இது இன்றைய வடிவில், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்ற,திருமலை  நாயக் காலத்தில்,கி பி 1623-1659  இல், 400 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது என பெரும்பாலும் நம்பப்படுகிறது.எனினும் இந்த மாடு அடக்கும் அல்லது பிடிக்கும் வீர விளையாட்டு உண்மையில் மிக நீண்ட சரித்திரத்தை தமிழ் நாட்டில் கொண்டுள்ளது.கி மு 700 தொடக்கம் கி பி 300 காலம் கொண்ட சங்க இலக்கியம் இதற்கு சான்றாக உள்ளது. மேலும் 1930-களில் மொஹெஞ்சதாரோவில் கண் டெடுக்கப்பட்ட, நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல் முத்திரை ஒன்றில் தெளிவாக ஏறு தழுவல் சிற்பமாக பொறிக்கப்பட்டு, இந்த ஜல்லிக்கட்டுக்கான முன்னைய ஆதாரம் இப்ப கிடைத்துள்ளது. இது டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது ஜல்லிக் கட்டின் சரித்திரத்தை கி மு 2000 ஆண்டுவரை கொண்டு செல்கிறது. அது மட்டும் அல்ல சிந்து வெளியில் இந்த வீர விளையாட்டின் முக்கியத்தையும் எமக்கு எடுத்து காட்டுகிறது என தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் சுட்டிக் காட்டுகிறார்.

அத்துடன் கி பி 2004 இல் நீலகிரி மாவட்டத்தில் கரிக்கியூர் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட 3500-4000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்களிலும் ஏறு தழுவல் காணப்படுகின்றது. இது 4000 ஆண்டுகளாக, சங்க காலத்திற்கு முன்பே, தமிழ் நாட்டிலும் ஏறு தழுவல் அல்லது மஞ்சு விரட்டு இருந்ததை உறுதிப்படுத்துவதுடன் தமிழரை சிந்து வெளியுடன் பண்பாட்டு ரீதியாக இணைக்கிறது. இங்கு காளையுடன் சண்டையிடுவதற்கு பதிலாக, மனிதர்கள் காளையை அல்லது காளைகளை துரத்துகிறார்கள். இந்த காளைகள் நல்ல தேகக் கட்டுடையதுடன் பெரிய திமிழையும் [எருத்தின் கொண்டை] நீண்ட நேரான கொம்பையும் கொண்டுள்ளது. பெரும்பாலும் இது காளையுடன் சம்பந்தப்பட்ட முன்னைய விளையாட்டாக அல்லது காளை சண்டைக்கு முற்பட்ட  ஒரு ஆரம்ப விளையாட்டாக இருக்கலாம்? இது மனிதனுக்கும் காளைக்கும் இடையேயான ஒருவித ஓட்ட பந்தயம் ஆகும். இவ்விளையாட்டில், ஓடும் காளைகளை துரத்தி அவைகளை கடப்பதையே வெல்வதாக கொள்ளப் பட்டது. இவ்விளையாட்டு எந்த வித உடல் சேதமும் வராத வண்ணம், மக்களை மகிழ்விக்க விளையாடப்பட்ட விளையாட்டாக இருக்கலாம். 


மேலும் மொஹெஞ்ச தாரோ கல் முத்திரையில் ஒரு காளை மாடு தன்னை அடக்க முயலும் வாலிபர்களை முட்டி தூக்கி வீசுவது போலவும், வாலிபர்கள் அந்தரத்தில் பறப்பது போலவும் செதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த முத்திரையில் எழுத்துகள் எதுவும் இடம்பெறவில்லை. இந்த முத்திரை அஸ்கோ பர்போலா என்பவர் எழுதிய ஒரு புத்தகத்தில் வண்ண புகைப்படமாக இடம் பெற்றுள்ளது. இதில் உள்ள படத்தை வைத்து இருவிதமான கருத்துகள் தெரிவிக்கப் படுகின்றன.


ஒருசாரார் ஒரு காளை, ஒன்றுக்கு மேற்பட்ட ஏறு தழுவும் வீரர்களை தூக்கி வீசுவதாக கூறுகிறார்கள். 2 வீரர்கள் அந்தரத்தில் பறப்பது போலவும், ஒரு வீரர் காளையை பிடிக்க முயல்வது போலவும், மற்றொருவர் குட்டிக் கரணம் [பல்டி / somersault] அடிப்பது போலவும், 5-வது நபர் பரிதாபகரமாக தரையில் விழுந்து கிடப்பது போலவும் இந்த சித்திரம் அமைந்திருப்பதாக கூறு கிறார்கள். என்றாலும் இது குறித்து சிந்து சம வெளி மற்றும் பிராமி கல் வெட்டு ஆய்வாளர் திரு  ஐராவதம் மகாதேவன் கூறும் போது இந்த முத்திரையை சற்று கூர்ந்து பார்த்தால், இன்றைக்கு ஜல்லிக்கட்டில் மாடு பிடி வீரர்கள் காளையை பிடிக்கும் களம் போன்று தத்ரூபமாக உள்ளது என்றும் ஒருவரே பல கோணங்களில் தூக்கி அடிப்பது போலவும் அல்லது பலர் காளையால் அடிபட்டு நாலாபுறமும் சிதறுவதைப் போலவும் இருக்கலாம் என்றும், எது எப்படி இருந்தாலும் தெளிவாக காளை தான் வெற்றி பெற்றுள்ளது என்பதை உணர முடிகிறது என்கிறார். இதை பல்வேறு ஆராய்ச்சி யாளர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த வீர விளை யாட்டின் எச்சமிச்சம் இன்னும் தமிழ் நாட்டில் தொடர்ந்து கடைப்பிடிப்பதை காணலாம். 


ஆனால் இந்த பாரம்பரியம் ஸ்பெயின், போர்த்துகல் போன்ற நாடுகளிலும் காணப்படுகின்றன. ஒரு வேளை இவைகளுக்கு இடையில் வரலாற்றுக்கு முந்தைய ஏதாவது தொடர்பு இருந்து இருக்கலாம்?


இன்னும் ஒரு சிந்து வெளி முத்திரையில் வீரன் ஒருவன் நீண்ட வேல் ஒன்றை தனது வலக்கையில் தூக்கி காளையின் பிடரியில் தாக்குகிறான். அப்பொழுது தனது இடைக்கையால் காளையின் ஒரு கொம்பை பிடித்தும் தனது இடக்காலால் அதனது நெற்றியை உதைத்து காளையை அடக்குகிறான். அத்துடன் இம்முத்திரையில் பசுபதி என்ற சிறப்புப் பெயர் கொண்ட சிந்து வெளி சிவனும் இருக்கிறார். சில ஆய்வாளர்கள் இதை ஒரு பலியிடும் நிகழ்வாக கருதுகின்றனர். அப்படி ஒரு ஆண்டவனுக்கு பலியிடும் சம்பவமாக இருந்தால், அந்த வீரனின் கால் கட்டாயம் நெற்றியில் இருக்காது. அதே போல இடக்கையும் கொம்பை பிடிக்காது. அது மட்டும் அல்ல ஆண்ட வனுக்கு பலியிட்டு வழி படும் காட்சியாக இருந்தால் பயபக்தியுடன் தான் இச்சிற்பம் வடிக்கப்பட்டிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறுந்தொகை 362 இல்,


 "பல் வேறு உருவின் சில் அவிழ் மடையொடு,
சிறு மறி கொன்று, இவள் நறு நுதல் நீவி,"


என்ற வரி வருகிறது. பல வர்ணங்களில் அமைந்த சோற்றுப் பலியொடு, நீ ஆட்டுக்குட்டியை வெட்டிப் படையல் வணக்கம் செய்து அதன் இரத்தத்தை இவள் நெற்றியில் பூசுகிறாய் என்கிறது. இங்கு நெற்றியை ஒரு புனித இடமாக கருதுவதை காண்க. அதே போல நம் முன்னோர்கள் வலதுக்கு மிக அதிகம் முக்கியத்துவம் அளித்துள்ளனர். உதாரணமாக கடிகாரம் வலமாகச் சுற்றுகிறது? பக்தர்கள் கோவிலை வலமாகச் சுற்று கிறார்கள்? மணமகளே,மண மகளே வா, வா! உன் வலது காலை எடுத்துவைத்து வா வா!! என்கிறது. மேலும் இளங்கோ அடிகள் சிலப்பதிகாரம், புகார்க் காண்டம் / அரங்கேற்று காதையில், சிலப்பதிகார வரிகள்: 129-132 இல்,


"இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்
குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப
வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து
வலத்தூண் சேர்தல் வழக்கெனப் பொருந்தி"

என்கிறார். அங்கு அரசன் முதலான அனைவரும் அமர்ந்திருந்தனர். இசைக்கருவிகளை இசைப்பவர்தாமும் நின்றனர் . நாட்டிய விழாவின் நாயகியான மாதவி முதல் முதலாக அரங்கேறும் நடனக் கணிகை வலது புறத் தூணின் பக்கமாக நிற்கவேண்டும் என்ற மரபுப்படி, தன் வலது காலை எடுத்து முன் வைத்து நடன அரங்கில் ஏறி, வலப்பக்கத்தூண் அருகே நின்றாள் என்கிறார். அத்துடன் கிரேக்க கவிஞர் ஹோமர் கி.மு 800 ல் எழுதிய ஆடிஸியில் [Odyssey] பல இடங்களில் வலது பக்கப் பெருமையை எழுதி இருக்கிறார். ஒரு கருடன் வலப் பக்கமாகப் பறந்தவுடன் கடவுளே நல்ல சகுனம் காட்டிவிட்டார் என்று பாடுகிறார். புறநானூறு 190 இல், 


"கடுங்கண் கேழல் இடம் பட வீழ்ந்தென
அன்று அவண் உண்ணாதாகி வழி நாள்
பெரு மலை விடரகம் புலம்ப வேட்டெழுந்து
இருங்களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும்
புலி பசித்தன்ன" 


என்ற ஒரு வரி வருகிறது. கொடிய பார்வையையுடைய பன்றி, தன்னால் தாக்கப்பட்டவுடன் இடது பக்கமாக விழுந்தது என்பதால் அதை உண்ணாது, பெரிய குகையில் தனித்திருந்து, பின்னர் வேட்டையாட விரும்பி, எழுந்து, பெரிய யானையைத் தாக்கி வலப்பக்கம் வீழ்த்தி அதை உண்ணும் பசியுடைய புலிபோல் என்கிறது . ஆகவே ஒரு பொது விழாவின் போது தங்கள் இறைவன் முன் காளையை அடக்கும் ஒரு வீர நிகழ்வாக இது இருக்கலாம் என நாம் இலகுவாக கருதலாம். 

எருதுமாட்டு சண்டையை விரும்பும் மக்கள் இடையே காளை பெரும்பாலும் ஒரு புராண செல் வாக்கை [அந்தஸ்த்தை] பொதுவாக பெற்றுள்ளது. அத்துடன் மேலும் காளை நீண்டகாலமாக  தெய்வீகத் தன்மையுடன் தொடர்புடையதாகவும் உள்ளது. சிந்து சம வெளி நாகரிகம் வர்த்தகத்தை தவிர விவசாயத்தை முதன்மையாக கொண்டது. சிந்து சம வெளி விவசாயிகள் பொதுவாக கோதுமை, தானியங்கள், கால்நடைகள் வளர்த்தார்கள்.மேலும் பசு, ஆடு, செம்மறி யாடு போன்றவை பாலும் இறைச்சியும் கொடுத்தன. மேலும் எருது ஏர் அல்லது கலப்பை இழுக்க அங்கு பயன்படுத்தப்பட்டது. அதனால் மாடு அங்கு அவர்களால் பெருமைப்படுத்தப் பட்டது. அது மட்டும் அல்ல சிவாவை பெரும்பாலும் நினவூட்டத்தக்க பசுபதி என்ற ஆண்டவனும் அங்கு இருந்தார். அவரைச் சுற்றி பசுக்கள் மற்றும் விலங்குகள் நிற்பது போன்ற முத்திரைகள் கண்டு எடுக்கப் பட்டுள்ளன. அவரை விலங்குகளின் தலைவன் என்கின்றனர். சிந்து வெளி முத்திரையில் பெரும்பாலும் காளை மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. பல பல முத்திரைகளில் இது காணப்படுகிறது. இது மீண்டும் எமது கருத்தை வலுவாக்கிறது. பண்டைய காலத்தில் இது ஒரு வீரமிக்க விளை யாட்டாக, சமாதான காலத்தில் கூட போர்வீரர்களுக்கு பயிற்சி கொடுத்து தயார் நிலையில் வைத்திருக்க பாவித்திருக்கிறார்கள். அத்துடன் இதை மண மகனை தேர்ந்து எடுக்கும் ஒரு சோதனை களமாகவும் பாவித்தார்கள். ஆனால் இன்று கடந்த 400 ஆண்டுகளாக காசு அல்லது நகை பரிசுகளை அடிப்படையாக கொண்டதாக உள்ளது. இப்படி இந்த காளை சண்டை தமிழர் பண் பாட்டில்  பல வேறுபட்ட கூறுகளை [அம்சங்களை] கொண் டுள்ளது. இது ஸ்பெயின் காளை சண்டையுடன் ஒத்தும் அதே நேரம் பழமை வாய்ந்ததாகவும் இருந்தாலும் அதில் வேறு பாடுகளும் காணப்படுகின்றன. இங்கு காளை சண்டையில் அகப்பட்டு சாவதற்கு பதிலாக அதனுடன் போட்டி போடும் மக்களே காயப்படுகிறார்கள் அல்லது இறக்கிறார்கள். சங்கம் பாடல்களில் வர்ணித்தவாறும், சிந்து சமவெளி முத்திரையில் பதித்தவாறும் , கொம்புகளை பற்றி அதை மடக்கி பிடித்து தழுவுவது பொதுவாக மிகவும் கடினமான ஒன்று. என்றாலும், இப்படி வென்றதும் வீரர்களும்,இளைஞர்களும் பெருமைப்படுகிறார்கள். ஆகவே பொதுவான ஆங்கில சொற்றொடரான 'Take the bull by the horns' என்பதன் அர்த்தம் புரியக்கூடியதாகவும் உள்ளது.


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


"Bull fighting in Indus valley"


A seal made of stone, found at Mohenjo-Daro, depicting “Bull fighting”, A painting of bull chasing on a massive rock surface at Karikkiyur in the Nilgiris, 2,000 B.C. to  1,500 B.C, &  A Bull taming inscription in Salem district museum, Tamil Nadu  - All these indicating Jallikattu in ancient days. 

Jallikattu, which is bull-baiting or bull fighting, in its present form, where gifts in the form of cash and jewellery are tied to the bull and the one who tames it gets them, which is believed to have been introduced during the rule of Thirumalai Nayak in Madurai, Tamil Nadu  (1623-1659), was a 400-year-old tradition. However, the bull-centred sport itself has a much longer history in Tamil Nadu. There is literary evidence to establish its existence in Tamil Nadu during the much-celebrated Sangam Age (700 B.C. to A.D. 300). Also a well-preserved seal,made of stone, now found at Mohenjodaro in the 1930s, and is on display at the National Museum in New Delhi, have traced the ancient origins of jallikattu-type bullfight to 2000 B.C, and it clearly shows that the sport was an important feature of the Indus Valley Civilisation, according to Iravatham Mahadevan, a specialist in Indus and Brahmi scripts. In addition, rock paintings discovered recently at Karikkiyur in the Nilgiris district of Tamil Nadu and dated to 2000 B.C.-1500 B.C. confirm that sports involving bulls is an ancient Dravidian tradition that was practised about 4,000 years ago, connect culturally between Indus valley and Tamils.


In ancient Tamil country, during the harvest festival, decorated bulls would be let loose on the “peru vazhi”(highway) and the village youth would take pride in chasing them and outrunning them. Women, elders and children would watch the fun from the sidelines of the “peru vazhi” or streets. Nobody was injured in this. Or the village youth would take delight in lassoing the sprinting bulls with “vadam” (rope). Here instead of fight with bull, It show men chasing bull or bulls, which seem to be a sturdy lot, with big humps and long and straight horns. May be early form of sport involving bull or bull fight in Tamil Nadu as mentioned.


However, the particular seal of Mohenjo-Daro portrays a ferocious bull in action, several men or a single man (according to two different interpretations), thrown in the air by it as they try to control it. This seal, made of stone, found at Mohenjo-Daro, now in Pakistan, shows a single bull with curved horns in the “action” of goring a single man or several men. One school is of the opinion that the seal shows several men, who tried to control the bull, thrown up in the air by the animal. A couple of men are shown flying in the air with their legs and hands spread out, a third man is seen jumping to grab the bull, another is somersaulting and yet another has pathetically come to rest on his haunch. Mr. Mahadevan, however, is of the opinion that the seal shows only one man, who is flung into the air by the bull, his flying, his plunging, his somersaulting and finally sitting on his haunch. Clearly, the bull is the victor. Also Several other scholars had commented upon this seal as portraying bull-baiting during the Indus civilisation, Remnant of this sport is still surviving in Tamil Nadu. But such traditions are also known, for example, in Spain and in Portugal and the Iberian peninsula. There may well be a pre-historic connection between these very similar cults. 

In another Indus Valley seal, we find a warrior, holding a spear in his right hand and attack bull in its nape, while with his left hand grab the bull by its horn, he kick its forehead by his left leg, and take control of the bull. Also we find the Indus vally god Pasupathi there. However, according to some scholars, it is a ritual killing of a buffalo to satisfy a god or a goddess. But it is very doubtful, Because, If it is a ritual killing or offering to god as a sacrifice, the man legs definitely not on the forehead of the bull and Similarly he would not hold horn by his left hand. Not only that the picture will not demonstrate Violence, rather it will show devotion with godly fear. In Sangam love poem ,Kurunthogai 362, It says:


"You offer boiled rice and many other things along with a killed, small goat, and rub blessings on my friend’s fragrant forehead. You pray and offer all this to powerful Murukan".

This clearly shows the importance of the forhead in an ancient & present culture and further In another Sangam poem, Purananuru 190,It says:


"like a hungry tiger that will not eat a harsh-eyed bow since it fell to its left, but on the next day wakes up hungry in his mountain cave, rises up to bring down to his right side, a large bull elephant!".


In Sundara Kanda in Ramayana when Hanuman enters Lanka for the first time. He says An enemy or a person wishing the downfall of the family will not enter through main door, but through a back door or, jump over the compound wall and place left foot first. Also, In Homer's Odyssey, the birds appearing on the right side is considered as the positive omens, for example in 15.34, It mentioned that "not without a god's will did this bird fly past you on the right". Even now when a Tamil / indian bride enters the new home, she puts her RIGHT foot first in the house. Therefore we can easily conclude that it is a festival or function or sports, conducted front of god, where muscular, aggressive and Raging bull is tamed or bring under control by competitors as in jallikattu. 


The bull has an almost mythical status among those who love the sport of bullfighting. The bull has had a long history of being associated with divinity. Farming was one of the most important occupation during Indus valley civilization other than trade. The Indus valley farmers grew wheat, grains, and animals on land. Cows, goats, and sheep gave milk and alternatives. Also they plough the land with wooden ploughshares drawn by men and oxen, and so, the bull was given much respect at that time. There was also a deity, much like Shiva, who was then worshipped as the Pasupathi (the caretaker of herds). 


we also find that the bull is the most popular animal motif on the Indus Valley glyptic art, which again confirm our assumption. This bull sport represent a different facet of the Tamil culture. This was a martial sport in olden days to keep the warriors prepared for the war even during the peace time. Also prove their manhood / bravery to win the hearts of brides during the Sangam period & thereafter. but recently, for about 400 years for the gifts of cash & jewellery. 

Though it look similar to and older than the Spanish running of the bulls, it is different. Instead of bulls getting killed, it’s the people who gets injured / killed. Though It's usually hard to take the bull by the horns as described in Sangam poems & seals, most warriors/young youth feel great, once they take the bull by the horns, It may also give the answer to the question "Where does that strange but common expression 'Take the bull by the horns' come from.


[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலிகள் குடும்பங்களை பிடித்து வைத்திருந்தார்கள் என்பதனை  நானும் கேள்விப்பட்டதில்லை, ஆனால் 1995 இறுதிக்காலப்பகுதியில் புலிகளின் 3 போராளிகள் இயக்கத்திலிருந்து விலகியிருந்தார்கள், அவர்களுக்கு 3 மாத தண்டனைக்காலத்தில் தண்டனையாக சமையலறை வேலை இருந்தது, அந்த காலப்பகுதி முடிவடைவதற்கு வெகு சில நாள்கள் மட்டும் இருந்த நிலையில் அவர்கள் இருந்த சமையலறை மேல் புக்கார வீசிய குண்டில் 3 போராளிகளும் உடல் சிதறி பலியாகியிருந்தனர். அதில் ஒரு போராளி சாகவச்சேரியினை சேர்ந்தவர், அந்த குண்டு வீச்சு யாழ் மாவட்டத்திற்குள் நிகழ்ந்தது, இருந்தும் அந்த போராளிகளின் உடல்களை புலிகள் தாமே தகனம் செய்துவிட்டனர், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவில்லை, இறந்தவர்களுக்கு போராளிகள் எனும் அந்தஸ்தும் வழங்கப்படவில்லை, 5 பேருக்கும் குறைவானவர்களே அவர்களது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
    • இவருக்கும் எனக்கும் கல்வியில் ஒரு கள்ளத் தொடர்புண்டு . ......!  😂
    • முதலில் செய்து விட்டு சொல்லுங்கடா வாயளையும்  வெடித்தது காணும் .
    • சரியாகச் சொன்னீர்கள் தேர்தல் வெற்றிக்காக மற்றய கட்சிகளும் செய்த ஏமாற்று வேலையை தான் இவர்களும் செய்கின்றனர் ஆனால்  இந்த ஏமாற்று வேலையால் சிங்கள மக்கள் அதிருப்தி அடைகின்றார்கள் ஆனால் முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறியோர் சங்கம்  பொறுமை பொறுமை காக்க வேண்டும் உடனே எல்லாம் செய்ய முடியாது அரசிடம் இப்படி செய்வதற்கு பணம் இல்லை முன்னைய ஆட்சிகளில் அதிக மின்கட்டணம் மக்கள் செலுத்தியவர்கள் தானே என்று பிரசாரம் செய்கின்றனர் இலங்கையில் இப்போது வந்த தேங்காய் தட்டுபாட்டுக்கு நாங்கள் வெளிநாட்டில் தேங்காய் இல்லாமல் சமைக்கின்றோம் இலங்கை மக்களும் தேங்காய் இல்லாமல் சமைக்க பழகட்டும் என்றார்களாம்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.