Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
"பூச்சிய உடல் அளவு பண்பாடு"
 
 
இன்று உலக அழகி போட்டி [beauty queen competition], உடை அலங்கார காட்சி [fashion show] மற்றும் நடிகைகளின் தேர்வில், உலகளாவிய ரீதியில் 'உடல் அளவு' முதலிடம் வகுப்பதை காணுகிறோம். அது மட்டும் அல்ல, வரலாற்றில் ரோமில் [Ancient Rome] இருந்து பண்டைய தமிழ் நாடுவரை அது ஆதிக்கம் செலுத்தியும் உள்ளது.
 
உடல் அளவைப் பற்றி நாம் சிந்திக்கும் பொழுது, ஆண் மற்றும் பெண்களின் உடல் அமைப்பில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பதையும் மற்றும் பொதுவாக, பெண்ணின் உடலமைப்பைக் காட்டிலும், ஆணின் உடல் அமைப்பு பெரிதாக இருப்பதையும் காண முடியும். அது மட்டும் அல்ல, உதாரணமாக, பெண்ணுக்கு 36", 24", 36" [bust vs waist vs hip / மார்பளவு vs இடை vs இடுப்பு] போன்ற ஒரு நாழிகை அளக்கும் கருவி வடிவில் [hourglass shape] இருப்பதையே சிறந்ததாகவும், அதேபோல, ஆணுக்கு ஆங்கில எழுத்தான 'வி' (V) வடிவம் சிறந்ததாகவும் கருதப் படுகிறது. இதில் பூச்சிய உடல் அளவு என்பது 30 22 32 அங்குலத்துக்கும் 36 28 36 அங்குலத்துக்கும் இடையில் எங்கேயாவது இருக்கலாம்.
 
உதாரணமாக "புடைகொண்டு எழு கொங்கையும் அல்குலும் புல்கி நிற்கும் இடை கண்டிலம்; அல்லதுஎல்லா உருவும் தெரிந்தாம்" [பக்கங்களில் பொங்கி எழுகின்ற மார்பகங்களையும்; அல்குலையும், இணைக்கின்ற இடை என் கண்களுக்குப் புலனாகவில்லை; அது தவிரப் பிற உறுப்பெல்லாம் தெரிகின்றது] - என்ற கம்பராமாயணம் பாடலும் மற்றும் "மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம் இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய்" [உன் வலிமையான மார்புகளின் பாரத்தில் உன் சின்ன இடை துன்பப் படுவதை பார்] - என்ற சிலப்பதிகாரம் பாடலும் இதை சாட்சி பகிர்கின்றன. அது மட்டும் அல்ல, திருக்குறளும் தனது குறள் 1115 இல், "அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை" என்று கூறுகிறது. அதாவது, அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலரின் காம்பினைக் கிள்ளியெறியாமல் சூடினாள்; அதனால் வருந்தும் அவளுடைய நுண்ணிய இடை முறிந்து அவள் விழுந்து இறந்து விடுவாள். எனவே மங்கலமாக பறைகள் இனி ஒலியா என்கிறது. பெண்ணின் இடையை அத்தனை மெலிதாக வள்ளுவர் காட்டுவதை காண்கிறோம். அதே போல , இன்றைய காலத்திலும், கவிஞர் வாலி 1963 இல் எழுதிய ஒரு பாடல் ஒன்று " ஒடிவது போல் இடை இருக்கும் இருக்கட்டுமே ஹோய் - அது ஒய்யார நடை நடக்கும் நடக்கட்டுமே ஹோய்" என்று பாடுகிறது.
 
தமிழ் இலக்கிய நுால்களில், இடையை கவர்ச்சியான உறுப்பாக வர்ணித்துள்ளதுடன், அதை மெல்லிடை [மெல்லிடை வருந்துமென மேகலை இரங்க (கந்த புராணம்)], கொடியிடையெனவும் [கொடியிடையாள்’ என்று சங்க காலத்தில் இருந்து `குறுக்கு சிறுத்தவளே’ என சமகால திரைப்பட பாடல்கள் வரை] கவிகளில் பாடுகிறது. மேலும் பண்டைய தமிழரும் பெண்ணின் அழகை சிறிய இடை, பெரிய மார்பளவு மற்றும் பெரிய புட்டப் பாகம் / இடுப்பு (small waist and large bust and hips) கொண்டு அளந்தனர், இதை அன்றைய அல்லது பண்டைய பெண் அல்லது இறைவி உருவ சிலைகளில் இருந்து அறியலாம். அன்று "உண்பது நாழி; உடுப்பவை இரண்டே"; என உடை இரண்டு துண்டுகளையே [கீழாடை, மேலாடை] கொண்டிருந்தது. அது படிப்படியாக ஆண்களுக்கு வேட்டி, சால்வையாகவும், பெண்களுக்கு சேலையாகவும் பரிணமித்தன. இது ஒரு பெண்ணின் இடையை கச்சிதமாக, நேர்த்தியாக, பார்ப்பவர் கண்களுக்கு அம்பலப் படுத்துவதுடன் (it exposes the waist of a woman), இடை மற்றும் மார்பை, புடவை மடிப்பால் மேலும் வலியுறுத்தி (emphasizes the waist and bust with the pleated fabric), ஒரு பெண்ணின் அழகை துல்லியமாக காட்டக் கூடியதாக இருந்தது, 'இடை'யின் செல்வாக்கை எடுத்து காட்டுகிறது.
 
அதேபோல ரோமானிய குடியரசில் வட ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த பிரபல நாடக ஆசிரியர் பப்லியஸ் டெரென்ஷியஸ் அஃபர் அல்லது டெரன்ஸ் [Publius Terentius Afer or Terence (c. 190–159 BC)], தனது புகழ்மிக்க ஒரு நாடகத்தில், She is a girl who doesn’t look like the girls of our day whose mothers strive to make them have sloping shoulders, a squeezed chest so that they look slim. If one is a little plumper, they say she is a boxer and they reduce her diet. Though she is well endowed by nature, this treatment makes her as thin as a bulrush. And men love them for that! என்கிறார். அதாவது தாய், தன் மகளுக்கு சாய்வான தோள்களையும் அழுத்தமான மார்பையும் கொண்டு மெலிதாக காட்சி அளிக்க முயற்சிசெய்வதுடன், மகள் கொஞ்சம் குண்டாக இருந்தால், அவர்கள் அவளுடைய உணவைக் குறைக்கிறார்கள் என்று கூறுகிறார். மேலும் தாய்மார்களின் சிகிச்சையானது அவளை ஒரு நீரில் வாழும் நாணல் போல மெல்லியதாக ஆக்குகிறது. அந்த மெல்லிய தோற்றத்தில் ஆண்கள் அவர்களை நேசிக்கிறார்கள் என்று சாட்சி பகிர்கிறார்.
 
மேலும் மெலிந்த உடல் நிறை அல்லது சதைப்பற்றற்ற உடல்திரள் [lean body mass] பல நன்மைகளை வழங்குகிறது. உதாரணமாக, இது நீரிழிவு நோய் [Diabetes] மற்றும் இன்சுலின் எதிர்ப்பு [Insulin Resistance] போன்றவற்றுக்கு எதிராக பாதுகாப்பு கொடுப்பதுடன், நோயிலிருந்து மீளவும் [Illness or Disease], மற்றும் எலும்புகள் வலிமையானவையாகவும் ஆரோக்கியமானவையாகவும் [Bones Strong and Healthy] வைத்திருக்க உதவுகிறது.
 
இனி நாம் கோவலன் தன் காதலி மாதவியை பார்த்து பாடும் சிலப்பதிகார பாடலை கொஞ்சம் விரிவாக பார்ப்போமாயின்,
 
"கடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வர்நின் ஐயர்
உடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வைமன் நீயும்
மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம்
இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய்.
கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தை
நெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும்
வடம்கொள் முலையால் மழைமின்னுப் போல
நுடங்கி உகுமென் நுசுப்புஇழவல் காண்டாய்.
ஓடும் திமில்கொண்டு உயிர்க்கொள்வர் நின்ஐயர்
கோடும் புருவத்து உயிர்க்கொல்வை மன்நீயும்
பீடும் பிறர்எவ்வம் பாராய் முலைசுமந்து
வாடும் சிறுமென் மருங்குஇழவல் கண்டாய்."
 
இதன் பொருள்:
 
"உன் தமையன்மார் கடலில் அங்குள்ள உயிரினங்களைக் கொன்று தமது வாழ்க்கையை நடத்துகின்றனர். நீயோ அவரினும் காட்டிற் கொடுந் தொழில் செய்கின்றாய்!
 
நீ என் கண் வழியே புகுந்து அங்கு வாழும் என்னுயிரைக் கொன்று வாழ்கின்றாய் .
 
உன்னுடைய வெவ்விய முலைகலின் சுமை பொறாது உன்னிடையானது இப்பொழுதே மெலிகின்றது. நீ இயங்கின் அது முறியும். இனி இயங்கி அவ்விடையை இழந்துவிடாதே
 
உன் தந்தையோ வலையினாலே உயிர்களைக் கொல்லும் கொடுந்தொழிலுடையான்;
 
நீ அவனினும் காட்டில் உன்னுடைய நெடிய கண் வலையாலே உயிர் கொல்கின்றாய்
 
நீ இனி இயங்காதே இயங்கின், தாமே பெருஞ்சுமையாகவும் அச்சுமையின் மேற் சுமையாய் முத்துவடத்தையும் ஏற்றியிருக்கின்ற கொடிய முலையால் உன் இடை வளைந்து முறியும் அவ்விடையை நீ இழந்துவிடாதே
 
உன்தமையன்மார் கடலிற் சென்று அங்கு வாழும் உயிர்களைக் கொல்வார்
 
நீ அத்தொழிலில் அவர்களினுங் காட்டில் திறன் மிகவுடையாய் பிறருடைய பெருமையையும் துன்பத்தையும் பாராமல்; நீயும் உன் புருவத்தால் கொல்வாய்
 
இப்பொழுதே உனது பெரிய முலைகளைச் சுமத்தலாலே உன்னுடைய சிறிய மெல்லிய இடை வருந்தி வாட்டமுடையதாகின்றது . அதனையும் இழந்துவிடாதே"
 
என்று எவ்வளவு கற்பனை நயத்துடன் பாடியிருக்கிறார் பாருங்கள். அது மட்டும் அல்ல, பல முறை மீண்டும் மீண்டும் , மாதவியின் இடையின் மெல்லிய தன்மையை வலியுறுத்துவதையும் காண்கிறோம். மேலும் இடை முறிந்து [ஒடிந்து] விடும் என்பதில் இருந்து எவ்வளவு சிறிய மெல்லிய இடை என்பதை அறியலாம். பருமன் பூச்சியத்தை அடைந்தத பின் தானே முறியலாம் ?
 
இவைகளில் இருந்து பண்டைய தமிழர், மற்றும் ரோமர் போன்றோர்கள் மெல்லிய இடையை பெண்ணுக்கு விரும்பியதை காண்கிறோம். மேலும் இவ்வாறான அழகு பற்றிய கருத்து [perception of beauty], அப்படியே தொடர்வதை, கி பி 900 ஆண்டு சோழ நாட்டு வெண்கல சிலைகளிலும் [Bronze idols of the Cholas], மற்றும் இன்றைய பூச்சிய உடல் அளவு பண்பாட்டிலும் காணக்கூடியதாக உள்ளது. எனவே இது ஒரு புதிய கருத்து அல்ல. பண்டைய அழகு பற்றிய கருத்துக்கு கொடுக்கப்பட்ட புது விளக்கம் ஆகும்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
224939030_10219648897235754_135253743803906041_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=gPR5sYyPIFIAb6iiKcy&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBA9ynihDkskAtH7gRkE2NlLgBVCh8Yxr0aTyn2uwN7cg&oe=66221467 227386457_10219648898315781_6798247404948532664_n.jpg?stp=dst-jpg_p600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=6QwPG_LM_iMAb7_Z9vd&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfADGs1_vfOctlwRul1LwW-PRU7tpmaSgJomND9gCrDGLg&oe=66220CA1
 
 
 


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் அந்த தாதியர், அவர் உங்களின் உறவினராகவும் உண்மையை பேசியதாலும் சத்திய மூர்த்தியின் உளவுத்துறையால் பின்தொடரப்பட்டு பழிவாங்கப்படும் சாத்தியமுண்டு.  
    • முன்னர் திண்ணையில் பாய் விரித்து படுத்த ஒருவர் என்றால் அது நீங்களாய்த்தான் இருக்கும்....அடுத்தது நாதமுனி..😂திண்ணை இல்லாததின் பின் அவரும் இல்லை. நாதமுனி   நல்ல மனிதர். அவரை பல தடவைகள் சந்தித்திருக்கின்றேன். கருத்துக்களம் இருக்க திண்ணையில்  பிரயோசனமான உரையாடல்களை ஏன் நிர்வாகம் விரும்புகின்றது என தெரியவில்லை. பல தடவைகள் என்னையும் திண்ணையில் தடை செய்திருந்தார்கள். அது போல் மட்டுறுத்தப்பட்ட உறவுகளை திண்ணை தடையுடன் திண்ணையை ஏனைய உறவுகளுக்கு திறந்து விடலாம் என்பது என் கருத்து. இது நாதமுனிக்காக.....😂🙂  
    • பேச்சு நன்றாக இருந்தது ஐயா
    • உக்ரைனின் மீதான ரஷ்ய பூட்டினின் ஆக்கிரமிப்பு போர் தாக்குதல்களால் மூன்றாவது கடும் குளிர்காலத்தை மின் தடைகள் வெப்பமூட்டும் பாதிப்புகளுடன் உக்ரேனிய மக்கள் அனுபவித்து வருகின்றனர். ஆனால் இங்கே செய்யபடும் ரஷ்ய பிரசாரம் மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கு
    • அந்த கூட்டம் தொடர்பான காணொலி  ============ வடக்கில் நீங்கள் பெரிய வசந்தம் கொண்டு வராவிட்டாலும் பரவாயில்லை,  நீர் வடிகாலமைப்பு, கிராமிய அளவில் வேலை வாய்ப்பு, எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் பற்றி கரிசனை,விவசாயிகளின் தன்னிறைவு உற்பத்திக்கான ஊக்குவிப்பு போன்ற விடயங்களில் அக்கறை  எடுத்தாலே போதும் அங்குள்ள மக்கள் தமது வசந்தத்தை தாமே ஏற்படுத்திக்கொள்வார்கள். ஏனென்றால் எந்த அரசாங்கமும் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட வடக்கிலோ கிழக்கிலோ பாலாறும் தேனாறும் ஓட வைக்கும் என்பதில் எப்போதுமே நம்பிக்கை கொண்டதில்லை. எந்த ஒரு நாட்டிலும் போர் முடிவுக்கு வந்தால் நிவாரணம், மீள் கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கத்தான் முண்டியடித்து வருவார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் முற்றுமுழுதான சிங்கள ஆக்கிரமிப்பின் பின்னரும், யுத்த முடிவின் பின்னரும் முதலில் ஓடி வந்தது சிங்கள வங்கிகளும், நிதி நிறுவனங்களும், தனியார் வியாபார நிறுவனங்களுமே.. நடைபாதையில் மயங்கி வீழ்ந்து கிடப்பவனின் பொக்கற்றுக்குள் கையைவிட்டு இருப்பதையும் புடுங்கும் அரசுகளை கடந்து வந்த எமக்கு இனி நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நீங்கள் நல்லது செய்துவிட்டால் ஆச்சரியம், நல்லது செய்யாவிட்டால் அதிர்ச்சியில்லை, வழமையானதுதான்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.