Jump to content

க.பொ.த சாதரண தரப் பரீட்சைச் செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

O/L பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு!

ol-exam-300x200.jpg

2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டை விநியோகம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர்களினூடாக பரீட்சை அனுமதி அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தபாலினூாடக பரீட்சை அனுமதி அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை பரீட்சைக்கு 452,979 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

https://thinakkural.lk/article/299352

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்

25 APR, 2024 | 10:22 AM
image
 

நடைபெறவுள்ள கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்துவதற்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் போன்றவை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (30) நள்ளிரவு 12 மணி முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இப்பரீட்சை தொடர்பான விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், இவ்வாண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், கடந்த 2023ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள்மதிப்பீடு செய்வதில் கால தாமதம் ஏற்படுவதாகவும், இதனால் உயர்தர வகுப்புகளுக்கு பிரவேசிப்பதிலும் உயர்தரத்துக்கான பாடங்களை தெரிவு செய்வதிலும் மாணவர்களை பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொல கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு கடிதம் ஒன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://www.virakesari.lk/article/181904

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

O/L பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

SUSIL-1-300x200.jpg

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

பாரா ளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த பெறுபேறுகளும் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/300298

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்!

ol-exam-300x200.jpg

நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், செயலமர்வு என்பவற்றை நடத்துவதற்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளது.

குறித்த பரீட்சை நிறைவடையும் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

அதேநேரம், பரீட்சை தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை காட்சிப்படுத்துவது, துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பது உள்ளிட்ட செயற்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு செயற்படும் நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, 3,527 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளது.

https://thinakkural.lk/article/300582

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண தரப் பரீட்சைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி: பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடாத்துவதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சீரற்ற வானிலை மற்றும் மழையுடன் கூடிய அவசர நிலைமைகள் ஏற்பட்டால், தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
மழை காரணமாக மாணவர்கள் பரீட்சை நிலையத்திற்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டால், ‘117’ என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்க முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வருடம் 459,979 பரீட்சார்த்திகள் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதோடு 3527 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

https://thinakkural.lk/article/300629

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சை அனுமதி அட்டையில் பிரச்சினை!

ol-exam-300x200.jpg

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இரண்டாவது தடவையாக தோற்றவுள்ள சுமார் 11,000 பரீட்சார்த்திகளுக்கு அவர்கள் விண்ணப்பிக்காத விஞ்ஞானப் பாடத்தை மேலதிக பாடமாக அறிவித்து பரீட்சை அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

எனினும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் இந்த செயற்பாடு பரீட்சை பெறுபேறுகளில் தாக்கம் செலுத்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை அனுமதி அட்டைகளை கணினி மயமாக்கும் செயற்பாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சை அனுமதி அட்டையில் மேலதிக பாடங்களின் பெயர்கள் அச்சிடப்பட்டுள்ள போதிலும் அந்த பரீட்சைக்கு தோற்ற வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/300848

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

க.பொ.த. சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகியது

Published By: DIGITAL DESK 3   06 MAY, 2024 | 10:41 AM

image
 

நாடளாவிய ரீதியில்  2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை இன்று திங்கட்கிழமை  ஆரம்பமாகியது.

இந்த பரீட்சை 3,527 நிலையங்களில் ஆரம்பமாகியுள்ளதுடன், 452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.

கிளிநொச்சி

கிளிநொச்சி தெற்கு மற்றும் வடக்கு கல்வி வலயங்களில் இவ்வாண்டு  33 பரீட்சை நிலையங்களில்  4026 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

பரீட்சை நிலையங்கள் இணைப்பு செய்யும் வகையில் 10 இணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன

பாடசாலை ரீதியாக 3,519 பரீட்சார்த்திகளும்  507 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக 4,026 மாணவர்கள் பரீட்சை தோற்றியுள்ளனர்.

OL_Exam_News__6_.png

OL_Exam_News__5_.png

OL_Exam_News__8_.png

யாழ்ப்பாணம்

20240506_080348.jpg

20240506_080327.jpg

20240506_080542.jpg

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 111 பரீட்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் 13,902 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

pho_OL_Exam__9_.jpeg

pho_OL_Exam__1_.jpeg

pho_OL_Exam__5_.jpeg

4F5179EE-4ED0-4A09-B519-B88E3E4CF8A1.jpe

0D1F3385-914B-4F8F-A72A-4066D455F35F.jpe

வவுனியா

வவுனியாவில் 4,309 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதுடன் அவர்களுக்காக 40 பரீட்சைநிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.   

20240506_075055.jpg

IMG_20240506_080026.jpg

https://www.virakesari.lk/article/182773

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

க.பொ.த (சா/த) விஞ்ஞான தாள் : பரிட்சார்த்திகள் அனைவருக்கும் இரண்டு இலவச புள்ளிகள்!

க.பொ.த (சா/த) விஞ்ஞான தாள் 1 இன் கேள்விகள் 09 மற்றும் 39 தொடர்பான முறைப்பாடுகளுக்கு பதிலளிக்கும் வகையில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் இரண்டு இலவச புள்ளிகளை வழங்க தீர்மானித்துள்ளார்.

இந்த குறிப்பிட்ட கேள்விகளின் தெளிவு மற்றும் நியாயத்தன்மை குறித்து மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் எழுப்பிய முறைப்பாடுகளை கவனமாக பரிசீலித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/301699

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.