Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"ஒவ்வொரு நாளும் அநேகமாக இந்தியாவில் இருந்து வெளிவரும் எதாவது ஒன்று அல்லது பல நாளிதழ்களில் பாலியல் வல்லுறவு பற்றிய செய்திகள் அல்லது வழக்குகளைக் காண்கிறோம் அது ஏன் ?"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"ஒவ்வொரு நாளும் அநேகமாக இந்தியாவில் இருந்து வெளிவரும் எதாவது ஒன்று அல்லது பல நாளிதழ்களில் பாலியல் வல்லுறவு பற்றிய செய்திகள் அல்லது வழக்குகளைக் காண்கிறோம் அது ஏன் ?"

 


பாரத பூமி புண்ணிய பூமி. அறநெறியும் பண்பாடும் மிக்க பூமி. இங்கேதான் ஞானச் செல்வம் அள்ள அள்ளக் குறையாமல் உள்ளது என நாம் போற்றுகிறோம் ஆனால் அதே நேரத்தில் சமஸ்கிரத புராணங்களையும் நம்புகிறோம் போற்றுகிறோம். இந்த புராணங்கள் கடவுள்களின் கற்பழிப்பை நியாயப்படுத்தும் போது, பெண்கள் எப்படி இந்தியாவில் கற்புரிமையை பாதுகாக்கமுடியும்? இதை நாம் சற்று சிந்திக்க வேண்டும். அது மட்டும் அல்ல 'அர்த்த சாஸ்திரம்' (3,8) இல், ''சூத்திரப் பெண் உயர்சாதி ஆண்கள் இன்பம் அனுபவிப்பதற்கு உரியவள்" என்கிறது.


விஷ்ணுவிற்கு துளசி பூஜை செய்கிற ஒவ்வொருத்தரும், ஒரு கற்பழிப்பை கொண்டாடுகிறார்கள்? அதுவும், அந்த பெண்ணின் தவறு என்னவென்றால், அவள் விஷ்ணுவின் பக்தையாம், மேலும் மிகுந்த பக்தியுடன் இருந்தாளாம். இதோ அந்த கதை.

 


ஒரு ஊரில் ஜலந்தர் - பிருந்தா [துளசி] என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். பிருந்தா விஷ்ணு பக்தை. ஜலந்தர் சிவன் பக்தன். இந்த விசித்திரமான விஷயத்தை கேள்விப்பட்ட நாரதர், அந்த குடும்பத்தில் சிறிது விளையாடிப் பார்க்க நினைத்தார். 


என்ன ஜலந்தர்?. நீ பின்பற்றும் சிவபக்தியால் சிவனுடைய மனைவி பார்வதி தேவியையே நீ அடையலாமே... எதற்கு இந்த பிருந்தாவுடன் போராடிக் கொண்டிருக்கிறாய். இந்த பிருந்தாவை விட அந்த பார்வதி எவ்வளவு அழகு தெரியுமோ? ... என ஜலந்தரின் மனதில் பற்றவைத்து விடுகிறார் நாரதர்.

“சிவனுக்கு சாமவேதம் என்றால் உயிர். எங்கே சாமவேதம் ஒலித்தாலும் மயங்கி அந்தப் பக்கம் போய்விடுவார். நீ என்ன பண்ணு... சாமவேதம் பாராயணம் செய்பவர்களை பிடித்து நல்ல சத்தமாக சாமவேதம் ஒலிக்கச் செய்... அதனைக் கேட்டு சிவபெருமான் மயங்கியிருக்கும் வேளையில் கைலாயத்துக்கு சென்று காரியத்தை முடித்துவிடு ” 


இதைக் கேட்டு சிவன் லயித்திருக்க... நாரதர் கொடுத்த யோசனைப்படி பார்வதியை போய் கட்டிப்பிடித்து விட்டான் ஜலந்தர், ‘ஸ்வாமீ’ என ஏழுகடல் கொந்தளிக்க கத்துகிறாள். 

 


கைலாயத்தில் இப்படி நடக்க ...


ஜலந்தரின் வீட்டுத்தோட்டத்தில்?...


கணவனைக் காணாது மனைவி பிருந்தா தனித்துத் தவித்திருக்கிறாள். தனது பரம தெய்வமான விஷ்ணுவிடம் தன் கணவன் எங்கே என வேண்டுகிறாள். இதைப் பார்த்த விஷ்ணு... 


நமது பக்தைக்கு நாம் ஏன் சந்தோஷம் தரக்கூடாது? தன் கணவனை காணோமே என பாவம் தேடிக்கொண்டிருக்கிறாள். நாமே ஜலந்தராக உருவெடுத்து அவளை மகிழ்ச்சிப்படுத்துவோம் என முடிவெடுத்து... 


கணவன் ஜலந்தர் போலவே உருவம் எடுத்து பிருந்தாவை நெருங்கினார் விஷ்ணு.....


தன் கணவர் ரூபத்தில் வந்திருந்த விஷ்ணுவை கட்டிப் பிடித்துக் கொண்டாடினாள். இருவரும் தோட்டத்தில் ரொம்ப இஷ்டமாக இழைந்து கொண்டிருக்கும் நேரத்தில்...


நெருக்கமாக இருக்கும் அவர்களுக்கு நெருக்கமாக வந்து பொத்’ தென வந்து விழுந்தது ஒரு தலை. ரத்தம் கொட்ட கழுத்திலிருந்து வெட்டியெடுக்கப் பட்ட அந்தத்தலை, ஜலந்தரின் தலை....


வேதத்தின் மயக்கத்தை... பார்வதியின் கூக்குரல் கலைக்க, ஓடிப்போய் பார்த்தார் சிவன். தன் மனைவியை இன்னொருவன் பலாத்காரப்படுத்துவதா?... என ஜலந்தரின் தலையை சீவியெறிந்தார். அந்த தலையே இந்த தலை!


பார்த்தாள் பிருந்தா... தன் உடலோடு [ஒன்று இணைந்தவன்] விழுந்தவன் கணவனா? இல்லை தலைமட்டும் விழுந்தவன் கணவனா? சந்தேகம் அதிகரிக்க...
அப்போது திடீர் என உடலோடு கூடிய ஜலந்தர் மறைந்து விஷ்ணுவாகிறார். ‘நான்தான் பக்தையே...’ என அறிமுகம் கொடுக்கிறார்.


இதைக்கேட்டு பொங்கியெழுந்த பிருந்தா...’ அடப்பாவி... பக்தையை இப்படி பண்ணிவிட்டாயே? என் கணவன் ரூபத்தில் வர நீ யார்? என்கிறாள் ?

 


From "Tulsi Vivah - Wikipedia, the free encyclopedia"


[According to Hindu scripture, the Tulsi plant was a woman named Vrinda (Brinda), a synonym of Tulsi. She was married to the demon-king Jalandhar. Due to her piety and devotion to Vishnu, her husband became invincible. Even god Shiva, the destroyer in the Hindu Trinity could not defeat Jalandhar. So Shiva requested Vishnu - the preserver in the Trinity - to find a solution. Vishnu disguised himself as Jalandhar and violated Vrinda. Her chastity destroyed, Jalandhar was killed by Shiva]


இந்த கற்பழிப்பை எவரும் கண்டிக்கவும் இல்லை? விஷ்ணுவை தூக்கி எறியவும் இல்லை ?


இப்படி பல பல. இவையை, இந்த புராணங்களை இன்னும் போற்றி வாழும் இந்த சமுதாயத்தில் எப்படி மாற்றம் ஏற்படும் ? இதை புராணமாக கூற, நாம் கேட்டு மௌனம் சாதித்து இன்னும் அங்கீகரிக்கின்றோம்?  இப்படி அங்கு நடக்கிற கேவலங்களை கேட்டு கேட்டு காது பழகிவிட்டது. இப்படி பெண்களை இழிவு படுத்தும் காட்சிகள் ஏராளம் .


"இந்த முள்ளுச் செடி விதைகளை காலம் காலமாக விதைத்துக் கொண்டு அவை வளர்ந்து குத்துகிறது என இடும் முழக்கம் நியாயமானதா?


இவற்றை எல்லாம் ஊக்குவித்து வளர்த்துக் கொண்டு அதன் பலன்களை கண்டு பொங்கி எழுவதில் என்ன பயன்?” 


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

12573155_10205759686614169_1037314456103619568_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=qc2pL6jI3QgAb4R_A7X&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAX4yUHKLfp0LfOalpLpLbB7lqnSGfKeOFrmBAWt3ix4Q&oe=6647842B No photo description available.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.