Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 39
 
 
இன்று இலங்கையில் ஏறத்தாழ முழுமையாக சிங்களவர்கள் வாழும், தென்மாகாண காலியை கருத்தில் கொண்டால், அங்கே ரொசெட்டாக் கல் அல்லது கல்வெட்டின் ஒரே பக்கத்தில் இரு அல்லது மூன்று வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டு / கற்பலகை [Rosetta Stone] ஒன்றை எஸ். எச். தோம்லின் என்ற பொறியாளர் [An engineer, S. H. Thomlin] 1911 இல் கண்டு எடுத்து உள்ளார். இதை இன்று காலி மும்மொழி கல்வெட்டு (Galle Trilingual Inscription) என்று அழைப்பதுடன், இலங்கையின் கொழும்பு தேசிய நூதனசாலையில் காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளது.
 
இலங்கையின் காலியில் சீனக் கடற்படைத் தளபதியும், நாடுகாண் பயணியுமான 'செங் கே' [Chinese traveler Zheng He ,dated 15 February 1409] இத்தீவிற்கு இரண்டாம் முறை வந்ததின் நினைவாக 1409 ஆண்டில் சீன, தமிழ், பாரசீகம் [Chinese, Tamil and Persian] ஆகிய மூன்று மொழிகளில் எழுதப்பட்ட இந்த கற்றூண் [stone pillar] கல்வெட்டு நடப்பட்டது ஆகும்.
 
இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் பதின்மூன்றாம் / பதினான்காம் நூற்றாண்டில், இலங்கையின் தெற்குப்பகுதியான காலியில் கூட , சிங்களத்தை தவிர்த்து தமிழில் கல்வெட்டு எழுதப்பட்டு இருப்பது, அந்த நாட்களில், காலியில் கூட, தமிழ் எவ்வளவு நடைமுறையில் இருந்தது என்பதற்கான சான்றாக விளங்குகிறது.
 
மேலும் இது அவரும் [செங் கே] மற்றவர்களும் சிவனொளிபாதம் அல்லது பாவா ஆதம் மலைக்கு [Adam's Peak; சிங்களம்: சிறிபாத] வழங்கிய காணிக்கை பற்றி கூறுகிறது. புத்தருக்கு கொடுத்த காணிக்கை பற்றி சீன மொழியிலும், அல்லாஹ்விற்கு வழங்கியதை பாரசீக மொழியிலும், தென்னாவர நாயனார் [Tenavarai Nayanar] என அழைக்கப்படும் விஷ்ணுவிற்கு வழங்கியதை தமிழிலும் எழுதப் பட்டுள்ளது. [The Chinese inscription mentions offerings to Buddha, the Persian in Arabic script to Allah and the Tamil inscription mentions offering to Tenavarai Nayanar (Hindu god, Vishnu).].
 
தொண்டீசுவரம் (அல்லது தொண்டேசுவரம், தொண்டேச்சரம் / Tenavaram temple) என்பது இலங்கையின் தெற்கில் மாத்தறை மாவட்டத்தில் தெவிநுவர (தேவந்திரமுனை) எனும் பகுதியில் இருந்த ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சிவன் கோயிலாகும். பஞ்சஈஸ்வரங்களில் ஒன்று இது ஆகும். இது பின் இலங்கையை ஆக்கிரமித்த போத்துக்கீசியரால் சிதைவடைக்கப்பட்டது. இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது ஒரு பெரிய சிவலிங்கம் ஒன்று ஆய்வாளர்களால் அகழ்ந்து எடுக்கப்பட்டது. தற்போது தொண்டேச்சரம் கோயில் இருந்த இடத்தில் ஒரு விஷ்ணு கோயில் அங்கிருந்த சிங்களப் பௌத்தரால் எழுப்பப்பட்டுள்ளது. "தெவிநுவர கோயில்" என இது இன்று அழைக்கப்படுகிறது.
 
கல்லாடநாகன் (கிமு 50 – 44) (2) சோரநாகன் (கிமு 3 – 9) (3) இளநாகன் (கிபி 96 – 103) (4) மாகலக்க நாகன் (கிபி196 – 203) (5) குஜ்ஜநாகன் (கிபி 246 – 248) (6) குட்டநாகன் (கிபி 248 – 249) (7) ஸ்ரீநாகன் I (கிபி 249 – 269) (😎 அபயநாகன் (291 – 300) (9) ஸ்ரீநாகன் II (கிபி 300 – 302) (10) மகாநாகன் (கிபி 556 -568) எனப் பல அரசர்கள் நாக பின்னோட்டத்துடன் இலங்கையை 6 ஆம் நூற்றாண்டு வரை அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டுள்ளார்கள் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது ஆகும். அது மட்டும் அல்ல, தீசன் என்ற சொல்லும் நாக வம்சத்தவருக்கு உரிய சொல்லே ஆகும். எடுத்துக் காட்டாக ஸ்ரீநாகனின் தந்தை பெயர் வீர தீசன் ஆகும் (The Early History of Ceylon by G.C.Mendis -pages 83-85). இவர்கள் யாரும் தங்களை ஹெல, சிகல அல்லது சிங்கள என அழைக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
 
நாகர்கள் அதிகமாக மங்கோலியா இன மூலத்தை கொண்டவர்கள் [Mongolian origin] என்று C.ராஜநாயகம் [C.Rasanayagam] கூறுவதுடன், வருணோ மஹதி [Waruno Mahdi] என்பவர், நாகர்கள் ஒரு கடல் வாழ் மக்கள் என்கிறார் [a maritime people]. மேலும் தென் இந்திய மக்களில், கேரளத்தில் வாழும் திராவிட நாயர் [Nāyars] சமுதாயத்தை உதாரணமாக எடுக்கிறார்கள், பண்டைய கேரளா மக்கள் தமிழ் சேரர் என்பது குறிப்பிடத் தக்கது. வட இலங்கையில் ஆரியர் வருவதற்கு முன் குடி ஏறி வாழ்த்த நாகர்கள் இவர்களே என்று ஹென்றி பார்க்கர் கூறுகிறார். இதை K.M. பணிக்கர் சில காரணங்களை சுட்டிக்காட்டி ஆமோதிக்கிறார். நாகர் தான் நாயர் என மாற்றம் அடைந்ததாகவும், ஆணும் பெண்ணும் தமது தலை முடியை முடிச்சு போடும் விதம், ஒரு நாகப்பாம்பின் பேட்டை ஒத்திருப்பது, இதை உறுதி படுத்துவதாகவும் கூறுகிறார்.
 
[Perhaps the only South Indian community that could be reasonably identified with the Nāgas of yore are the Nāyars, a Dravidian –speaking military caste of Kerala amongst whom remnants of serpent worship have survived. Henry Parker suggested that “the Nāgas who occupied Northern Ceylon long before the arrival of the Gangetic settlers were actual Indian immigrants and were an offshoot of the Nāyars of Southern India”. This view is lent support by K.M. Panikkar who suggests that the Nāyar were a community with a serpent totem and derives the term Nāyar from Nāgar or serpent-men. The belief that the Nāyars have taken their name from the Nāgas also appears to be supported by the peculiar type of hair knot at the top of the head borne by Nayar men and the coiffure of Nayar women in the olden days which resembled the hood of a cobra]
 
மனோகரன். நாகர்கள் பண்டைய வட இலங்கையில் வசித்தவர்கள் என்றும், பண்டைய தமிழர் என்றும் இரண்டாம் நூற்றாண்டு டோலமியின் வரைபடத்தை வைத்து வாதாடுகிறார் [Manogaran (2000) believed the Nāgas of the MV to be ancient Tamils, drawing his conclusions on Ptolemy’s 2nd century A.C. map of Taprobane which he supposes indicates Nāgadīpa in the northern part of the island, the areal extent of which corresponds to the area settled by present-day Tamils] நாகர்கள் கி மு 3ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தென் இந்தியாவும் அதை ஒட்டிய பகுதிக்கும் வந்து, படிப்படியாக தமிழுடன் குறைந்தது கி மு 3 ஆம் நூற்றாண்டில் முழுமையாக இணைந்து விட்டார்கள் என்கிறார். நாகர், அதிகமாக திராவிட இனத்தவர்களும் மற்றும் பாம்பை வழிபடுபவர்கள் ஆகும் [Laura Smid (2003). South Asian folklore: an encyclopedia : Afghanistan, Bangladesh, India, Pakistan, Sri Lanka. Great Britain: Routledge. 429]. கி மு மூன்றாம் நூற்றாண்டு வரை நாகர்கள் தனித்துவமான இனமாக ஆரம்பகால இலங்கை வரலாற்று குறிப்பேடுகளிலும் [chronicle] மற்றும் ஆரம்பகால தமிழ் இலக்கிய படைப்புகளிலும் காணப்படுவதுடன், கி மு மூன்றாம் நூற்றாண்டு தொடக்கத்தில், நாகர்கள் தமிழ் மொழியுடனும், தமிழ் இனத்துடனும் ஒன்றிணைய தொடங்கி, தம் தனிப்பட்ட அடையாளத்தை இழந்தார்கள் [Holt, John (2011), The Sri Lanka Reader: History, Culture, Politics, Duke University Press] என்று கருதப் படுகிறது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 40 தொடரும்
339746804_134398132906663_5270223360169690897_n.jpg?stp=dst-jpg_p296x100&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=cUJy6pRG81wQ7kNvgGDrEZb&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYDiP7NTcheHr0WuLIVLh84wSOv-k-18FNTGDja4LDtlpA&oe=667BB442 339784787_764398605040638_8472379707771290728_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=II4sKcFEA44Q7kNvgFtVk70&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYDZkv-KwL5xlW7qiNZ30AGDVAvqbAgEQBOoyTfD6ossHg&oe=667B9B6F 339908101_227096003316839_6425396202048398399_n.jpg?stp=dst-jpg_p552x414&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=1nF1UtYN-1AQ7kNvgHFpMb3&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYAdl5u8G_XKn2GS3szxmkThHQqWJ2YBpL9wb1QCkOaE8Q&oe=667B9C48 
 
 
 
 
  • Replies 53
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 40
 
 
 
சிங்கள இனம், அவ்வப்போது தென் இந்தியாவில் இருந்து படை வீரர்களாகவோ அல்லது வேறு காரணங்களாலோ இலங்கையில் குடியேறிய தென் இந்தியா திராவிடர்களை உள்வாங்கி பல்கிப் பெருகின என்பதற்கு, அண்மைய உதாரணமாக, சென்ற நூற்றாண்டில் புத்தளம் நீர் கொழும்பு பகுதிகளில் வாழ்ந்த தமிழ் கத்தோலிக்க பரதவ மக்கள், சிலாப மறைமாவட்டத்தின் ஆயர் ஆக இருந்த எட்மன்ட் பீரிஸ் (1897 -1989 ) பள்ளிகளில் படிப்பிக்கிற கற்கை மொழியை தமிழில் இருந்து சிங்களத்துக்கு மாற்றினதால், அதன் விளைவாக அவர்கள் தமிழை மறந்து சிங்களவர்கள் ஆனார்கள் என்பது வரலாற்று உண்மை ஆகும் [ It is well known fact of Roman Catholic Church history that there was a process of Sinhalisation of these fishermen during the time of The Right Reverend Edmund Pieris (Sinhala: එඩ්මන්ඩ් පීරිස්), O.M.I. (27 December 1897 – 4 September 1989) was a Roman Catholic Bishop of Chilaw, Ceylon (now Sri Lanka).].
 
எது எப்படியாகினும், மகாவம்சம் ஒரு வரலாற்று நூலாக் கொள்ளப்படா விட்டாலும் வரலாற்றின் வெற்றிடங்களை நிரப்புகிற நூலாகக் கொள்ளலாம். அதாவது மகாவம்சம் என்ற நூல் உண்மைத் தரவுகள் பலவற்றை உள்ளடக்கிய ஒரு புனைவு நூல் என்று நாம் சுருக்கமாக கூறலாம்.
 
மகாவம்சம் மத சார்புள்ள வரலாறு என்பதால், பக்தி காரணமாக நம்ப முடியாத பல நிகழ்ச்சிகள் இடம் பெறுவது இயல்பேயாகும். அறிவுக்குப் பொருந்தாததை விலக்கி, பொருந்துவதும் பயன்படுவதுமான தரவுகளை ஏற்றுக்கொள்ளும் மரபின் வழி பார்த்தால், வரலாற்றுச் செய்திகளை அறிய மகாவம்சம் பெரிதும் துணை புரியும் என்பதில் எனக்கு ஐயப்பாடு இல்லை.
 
ஆனால் இன்று மகாவம்சத்தில் விதைக்கப்பட்ட. களைகளை அல்லது நஞ்சுகளை தூக்கிப் பிடித்துக் கொண்டு, பௌத்த தர்மத்தைக் காப்பாற்றிப் பேணுவதற்குரிய இடமாக இலங்கைத் தீவு புத்தரால் ஆசிர்வதிக்கப்பட்டது என்றும் சிங்கள அரசியல் மேலாண்மைக்கும் சிங்கள தேசத்தின் இருப்பிற்கும் தமிழரே பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்றும் நினைக்கும் இலங்கை பௌத்தர்களே அதிகம்.
 
மகாவம்ச ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்த பின்னரே பௌத்த சிங்கள தேசிய உணர்வு மெல்ல மெல்ல ஒங்கத் தொடங்கியது. அதற்கு முன் இலங்கை பாகுபாடு பெரிதாக தென்படும் ஒரு நாடாக இருக்கவில்லை.
 
மனிதன் எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை காட்ட வேண்டும் என்பது பௌத்த மதத்தின் அடிநாதமான கோட்பாடாகும். புத்தர் உயிர்கள் மூவகைப்பட்டதென்றும் அதாவது மனிதர், விலங்குகள், தாவரங்கள். இவற்றில் எதற்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்றும் போதிக்கிறார். ஆனால் இன்று அதற்கு மாறாக நடைபெறுவதை காண்கிறோம். அதிலும் பல சந்தர்ப்பங்களில் புத்த பிக்குமார்களே வழி நடத்துவதையும் காண்கிறோம்.
 
இதற்கு முக்கிய காரணம் மகாவம்சத்தில் காணப்படும் களைகளை அகற்றாமல், அதையே திருப்ப திருப்ப விதைப்பது ஆகும்.
 
1956-ல் “விஜயனின் வருகை” என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால் தலை அமைந்திருந்தது. இதைப் பார்த்த பல சிங்கள தலைவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனென்றால், விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப் பட்டு வரும் பொழுது, இலங்கையில் ஏற்கனவே குவேனி என்ற பெண், ஒரு மரத்தடியில், நாகரீகத்தின் அடையாளமாக, நூல் நூற்றுக்கொண்டு இருப்பது, தமக்கு அவமானம் என்று கருதினர். இதன் காரணமாக, இந்த தபால் தலையை இலங்கை அரசு வாபஸ் பெற்றுக் கொண்டது என்பது ஒரு அண்மைய வரலாற்று நிகழ்வாகும்.
 
தீபவம்சத்தில், கடைசி ஆறு பாடம், 17 இல் இருந்து 22 வரை தான் முழுதாக இலங்கையை பற்றி கூறுகிறது. இது ஆக 27 பக்கமே! எனவே மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகத் தான் மனித வரலாற்றை, இலங்கையில் நடைபெற்றதாக கூறுகிறது.
 
அசோகா புத்த மதம் பரப்ப சென்ற இடங்களை அசோகா கல்வெட்டு 13 கூறுகிறது. அதில் தெற்கில் சோழ, பாண்டிய மற்றும் தாமிரபரணி வரையும் என்றே கூறுகிறது. இங்கு தாமிரபரணி ஆற்றுடன் சேர்ந்த பிரதேசத்தையே குறிக்கிறது எனலாம். இலங்கையை அல்ல. [“likewise in the south among the Cholas, the Pandyas, and as far as Tamaraparni”].
 
தாமிரபரணி ஆறு, பாண்டிய நாட்டில், இன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில் உண்டாகி, மன்னார் கடல் மட்டும் போகிறது. அசோகன் எந்த சந்தர்ப்பத்திலும் லங்கா என்று குறிப்பிடவில்லை, ஆனால் மேலே கூறிய தமிழர் பிரதேசங்களை கூறி உள்ளார். தாமிரபரணி கரைக்கு அடுத்த பக்கத்தில் இருக்கும் நாட்டை குறிக்காது. இதை வரலாற்று அறிஞர் V. A. ஸ்மித் ஆமோதிக்கிறார். [V. A. Smith, was clearly of the view that Lanka is not meant by the name Tamaraparni.]
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 41 தொடரும்
340628002_215098064462578_9049019256907345670_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=83Yz5FK7cjIQ7kNvgF_oY-G&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYBitQkOkLyAOZqHtB07NU-DMuYUWatUMtuOd0RZBCi-aw&oe=667C7393 340924156_889548992102146_3837022776914767523_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=m6UUZV9Y1kcQ7kNvgFt9Jvf&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYAd2xtYiKAjkqC7658SvZEH0l85oune-je4Fs2wa3MZVg&oe=667C8B28 340492255_962614918091791_1517853731494555088_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=NwEBYYHOoxEQ7kNvgEOCvQv&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYDFN-f4J35XHtmPXYtw7e7S7SjrNoBLACisL-z39hnP4Q&oe=667C9177
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 41
 
 
இலங்கை வரலாற்றை ஓலையில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் [Ola manuscripts], நீண்ட காலத்துக்கு நின்றுபிடிக்காது. அத்துடன் புத்த பிக்குகள், பொது மக்கள் வழங்கும் அன்னதானத்தில் வாழ்வதால், அவர்கள் சமைப்பது இல்லை. ஆகவே அவர்களின் மடம் அல்லது தங்கும் இடம் சமையல் அற்ற, வெப்பம் புகைகள் அற்ற இடமாகும். இதனால் அவர்களே அதைப் பாது காத்தனர். என்றாலும் இவையும் ஒரு காலத்தின் பின் கெடலாம். ஆகவே திருப்பி திருப்பி புதுப்பிக்க வேண்டும் [Ola manuscripts need to be copied before they become friable and crumbling].
 
இந்த பொறுப்பும் அவர்களை சார்ந்ததாக மாறியது அல்லது அவர்களே எடுத்துக் கொண்டார்கள். இந்த நேரங்களில் தான் அவை மூலப்பிரதியில் இருந்து சிலவற்றை அழிக்கவும், தமக்கு விரும்பியதை செருகவும் மற்றும் சிதைக்கவும் அவர்களால் முடிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.
 
இதனால் தான் தமிழர் விரோத உணர்வு மெல்ல மெல்ல கட்டப்பட்டது எனலாம். இதை தீபவம்சம், மகாவம்சம் , சூளவம்சம், இராசாவலி ஊடாக அறியலாம். தமிழர் விரோத உணர்வு அற்ற தீபவம்சம், பிற்பாடு வந்த நூல்களில் கூடிக்கொண்டு போவதை எவரும் இலகுவாக அறியலாம்.
 
நான் இந்த நீண்ட கட்டுரையை முடிக்க முன்பு, பௌத்தத்தைப் பற்றி, புத்தரைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லலாம் என்று எண்ணுகிறேன்.
 
உண்மையான புத்த போதனையில் சாதி இல்லை; கடவுள் இல்லை. புத்தம் என்பதன் பொருளே அறிவு (புத்தி) என்பதுதான். புத்தர் அன்பினை வலியுறுத்தியவர். சாதிகளுக்கு எதிரானவர். அன்புதான் உலக ஜோதி, அன்பு தான் இன்ப ஊற்று, அன்புதான் உலக மகா சக்தி என்று மக்களுக்குப் போதித்து வந்தவர் சித்தார்த்தன் எனும் பெயர் கொண்ட இந்த புத்த பெருமான் என்பது குறிப்பிடத் தக்கது.
 
புத்தரை பற்றி கூறுவது என்றால், அவருக்கு முதலில் அரண்மனை வாழ்க்கை பிடிக்கவில்லை. அமைதியை இழந்தார். இவ்வுலக வாழ்க்கையில் கண்ணுற்ற துன்பங்களைப் பற்றி ஆராயத் தொடங்கினார். ஒரு நாள் இவர் வெளியே சென்றுக் கொண்டிருந்த போது கண்ட காட்சிகள் இவர் மனதை வெகுவாக புண்படுத்தின. வயது முதிர்ந்த ஒரு மனிதரையும், நோயாளி ஒருவரையும், பிணம் ஒன்றையும், துறவி ஒருவரையும் கண்டார். இதனால் மனம் கலங்கினார். இதற்கு முன்னால் இது போன்ற காட்சிகளையும் இவர் நேரில் கண்டதில்லை. ஆகையால் இத்தகைய காட்சிகள் இவரது சிந்தனைகளை வெகுவாகத் தாக்கியது. இதன் விளைவே அவரின் துறவறம் ஆகும்.
 
அதன் பின் ஞானோதயம் பெற்ற புத்தர், வாரனாசியின் அருகாமையிலுள்ள சாரநாத் என்னுமிடத்திலுள்ள "மான் பூங்கா" என்னுமிடத்தில் தன் கொள்கையை போதிக்கத் தொடங்கினார். 45 ஆண்டுகள் அயோத்தி, பீகார், அதையடுத்த பகுதிகளின் மக்களுக்கும், மன்னருக்கும் தாம் கண்ட பேருண்மையை ஊர் ஊராகச் சென்று பரப்பினார். இராஜகிரகத்தில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது போதனைகளை நடத்தி வெற்றிகண்டார். அப்படியே, கபிலவஸ்துவில் ராகுல், மகா பிரஜாபதி ஆகியோரை தன் சமயத்தில் சேர்த்துக் கொண்டார். மகத மன்னர்களான பிம்பிசாரர், அஜாதசத்துரு ஆகியோர்களை பௌத்த சமயத்தை தழுவும்படி செய்தார். கோசல நாட்டிற்கும் சென்று பலரை பௌத்தத்தை தழுவிட வழிகோலினார். இந்த இடங்களிலெல்லாம் அவரது நான்கு உண்மைகளையும், "நான்கு அதிசய சத்தியங்களையும்", "எண் வகை வழிகளையும்" கூறினார். பிறகு தனது 80-வது வயதில், குசி நகரத்தில் கி.மு. 486-ல் உயிர் நீத்தார்.
 
கி.மு. 3-ம் நூற்றாண்டு வட இந்தியா, கிழக்கிந்தியா, இலங்கை ஆகிய இடங்களில் புத்த மதம் பரவி இருந்தது. கி.பி. முதலாம் நூற்றாண்டில் புத்தமதம் கிழக்கு நாடுகளுக்கு பரவியது. கி.பி. 7-ம் நூற்றாண்டில் திபெத்திற்குச் சென்றது.
 
ஒரு சமயம் புத்தரைப் பல சித்திகள் தெரிந்த சித்தர் ஒருவர் சந்தித்தார். புத்தரிடம் உயிருள்ள சிப்பி ஒன்றைக் கொடுத்த அந்த சித்தர், "இந்த சிப்பிக்குள் விலை உயர்ந்த முத்து உள்ளது. சிப்பியை உடைத்து முத்தை எடுத்துக் கொள்ளுங்கள்" என்றார். அதற்கு புத்தர்,"முத்து எவ்வளவு விலை உயர்ந்ததாகவும் இருக்கட்டுமே! ஓர் உயிரைக் கொல்வது என்பது என்னால் முடியாது! சிப்பியை நீயே எடுத்துச் செல்" என்று சொல்லி விட்டார்.
 
இன்னும் ஒருமுறை, பெரியவர் ஒருவருக்கு புத்தரின் மீது கடுங்கோபம். தன் மகன் திருமணம் செய்து கொள்ளாமல் புத்தரின் சீடனாகி விட்டான் என்பதே அவரது கோபத்துக்கு காரணம். ஒருநாள் அந்த பெரியவரின் ஊர் வழியாக புத்தர் சொற்பொழிவுக்கு செல்ல வேண்டியிருந்தது. இதை அறிந்து அந்த பெரியவர் புத்தரை வழிமறித்து திட்டத் தொடங்கினார். வாய்க்கு வந்தபடி அசிங்கமான வார்த்தைகளை பிரயோகித்து திட்டினார். புத்தர் கொஞ்சமும் கோபப்படவில்லை. வெகுநேரம் வழிமறித்து திட்டிக் கொண்டே இருந்ததால் போதனைக்கு செல்ல நேரமாகியது. உடனே திட்டிய பெரியவரின் கையைப் பிடித்து, “பெரியவரே எனக்கு சொற்பொழிவாற்ற நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது என்னை போக விடுங்கள். இன்று மாலை இதே வழியில்தான் சொற்பொழிவு முடிந்து திரும்பி வருவேன். திட்டுவதற்கு இன்னமும் இருந்தால் அப்போது திட்டுங்கள்,” என்றார்.
 
இது தான் உண்மையான புத்தரின் செயல்பாடும் அவரின் போதனைகளும் ஆகும். ஆகவே நாம் இந்த நோக்கில் மகாவம்சத்தை படித்தால், அதில் உள்ள உண்மையும் பொய்யும் தானே வெளிப்படும்.
 
அதுமட்டும் அல்ல, இலங்கை புத்தரை போற்றும் வெறும் வழிபாட்டாளர்களாக மாறினார்கள் தவிர, அவரின் எந்த முதன்மை கொள்கையையும் பின்பற்றுபவர்களாக மாறவில்லை. [But Srilanka now have become mere worshipers of buddha but not true followers. That is the primary misleading conception is that Sri Lanka is a mere worshiping-nation but not a thinking-nation.]
 
இப்படியான சூழலில் இலங்கை புத்த சமய மக்கள் தங்களது அறியாமை, சமய அடிப்படைவாதம் மற்றும் தேசியவாதத்தால் [with their ignorance, religious fundamentalism, and nationalism] அவர்கள் உண்மையான புத்தர் போதனையை பிரதிபலிக்க அல்லது புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள் என்று நான் நம்பவில்லை.
 
அதனால் தான் இன்று தமிழர் வாழ்விடங்கள் எங்கும் புத்தர் சிலைகள், தொல்பொருள் திணைக்களம் மற்றும் அரசநிறுவனங்கள், புத்தகுருமார்கள், அரசு படைகள் துணையுடன் பல்பொருள் அங்காடிகள் போல் முளைக்கின்றன, இது புத்தரின் எடுத்துக்காட்டுக்கு முற்றிலும் வேறுபட்டது [Buddha led a life of self-emptying. It was His praxis of liberation.] .
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
இறுதி பகுதி: 42 தொடரும் 
342194772_938551470621037_1925938235642865113_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=8nVmEzzI_GMQ7kNvgEfTijZ&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYAC1KtkaEmoDWAhlHWJtHvBXAsnVYv43doNy-dygnhFig&oe=667DB48A 342190335_1726489814413799_8180808588864409244_n.jpg?stp=dst-jpg_p600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=-Pcjs94UymkQ7kNvgGR7UiD&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYCoAdD9uycMYHbdxtnJSl6R8PPsVrQ6PJUCVUlPgfSQYA&oe=667DB8D2 
 
342185623_761921798822229_5835410729361730558_n.jpg?stp=dst-jpg_p403x403&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=l-8hzQOCqd0Q7kNvgGx4Vyx&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYBhekoYp2zJTABDLE_FZFV86J6pPUJiBSF8H1I7fC6htA&oe=667DC3D1 341769154_1168939767115468_6561368340475573979_n.jpg?stp=dst-jpg_p403x403&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Pive6xByHvgQ7kNvgG3Mn03&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYDSrjvWGBb_ffu7eCk3Wmg95-2oqUapF0IIqESxg7SYzw&oe=667DB7B3
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 42
 
 
மூன்று வகையான போதனைத் திரட்டுகளை உள்ளடக்கிய திரிபிடகம் [Tripitaka] கௌதம புத்தரின் பல்வேறுபட்ட போதனைகள் கொண்ட பௌத்தர்களின் மூலமான புனித நூல். இதுவும் மகாவம்சமும் பாளி மொழியில் எழுதப் பட்டவை. எனவே பாளி மொழியியை நன்கு தெரியாத சாதாரண பொதுமக்கள் இந்த இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அறிய மாட்டார்கள்.
 
எனவே புத்த பிக்குகள் மகாவம்சத்தை போதிக்கும் பொழுது, பாமர மக்கள் எந்த கேள்வியும் எழுப்பாமல், அவை புத்தரின் உண்மை வாக்கியங்கள் என ஏற்றுக் கொள்கிறார்கள். உதாரணமாக, புத்தர் அல்ல, மகாநாம தேரர் தான் சொல்கிறார், புத்த மதம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலோங்கி இருக்கும், சிங்களவர்கள் மட்டுமே அதை "பாதுகாக்க" வேண்டும் [Mahanama said, (NOT the Buddha), that Buddhism will prevail, for five-thousand years, and the Sinhalese alone, must “protect” it.] என்று!
 
ஆயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே, இலங்கையின் புத்த தேரர்கள், புத்த தத்துவத்தை சிங்கள இனத்தின் மதமாக மாற்றி, அதன் வரலாற்றை, உதாரணமாக மகாவம்சப்படி பிரச்சாரம் செய்தது. எனவே இந்த காலப் பகுதியில், பௌத்தர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு, ஏமாற்றப்பட்டு, புத்த தேரர்களால் பொய் பரப்புரை செய்யப் பட்டுள்ளார்கள்.
 
இவர்கள், தத்துவத்தை மதமாக ஆக்கி, புத்தரையும் கடவுளாக மாற்றி, தம்மை அவரின் மதிப்பிற்கும் வழிபாட்டிற்கும் உரிய தூதர்களாக மாற்றி, புத்தரின் உண்மையான போதனைகளை புறக்கணித்துள்ளார்கள். [By converting the philosophy into a religion, Buddhist monks, also converted the Buddha, into a ‘God’, and themselves, as his ‘Messengers’, who must be revered and worshiped; totally disregarding the Buddha’s words].
 
எனவே மகாவம்ச பௌத்தத்தில், உண்மையில் புத்தரின் அறநெறியான சகிப்புத்தன்மை மற்றும் இரக்கம் என்பனவற்றிற்கு இடமே இல்லை. [In Mahavamsa Buddhism, there is no place, for the Buddha’s Dhamma, of tolerance and compassion!]. அதை இன்று இலங்கையில் தமிழர்களுக்கு, தமிழ் பிரதேசங்களில் நடைபெறும் அரச இயந்திரங்களின் அல்லது புத்த குருமார்களின் செயல்களில் இருந்து அறியலாம்,
 
உதாரணமாக, பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பாராளுமன்றத்தில் ஏப்ரல் மாதம், 25 ஆம் திகதி 2023, செய்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் தமிழ் பேசும் இனத்திற்கு பாதகமான அதன் கடுமையான விளைவுகளை கருத்தில் கொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும்,
தமிழ் பேசும் இனத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கும் பேரினவாத அரசின் திட்டமிட்ட, தமிழரின் சுயநிர்ணய உரிமையை நீர்த்துப் போக வைக்கும் வகையில் தமிழர் தாயக மண்ணில் முன்னெடுக்கப்பட்டு வரும் நில அபகரிப்பு, குடியேற்றங்களின் மூலம் குடிப்பரம்பலை சிதைத்தல், தமிழர் தொன்மையை வெளிப்படுத்தும் சான்றுககளை அழித்தொழித்தல், இதற்கு ஏதுவாக தமிழ் மக்களின் தொன்மையை வெளிப்படுத்தும் சான்றுகளான சைவ ஆலயங்களை இடித்தும், அழித்தும், பௌத்த சின்னங்களை நிறுவியும், இந்நாட்டின் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் வரலாற்றை சிதைக்கும் அரசின் அனைத்து கட்டமைப்புக்களின் செயற்பாட்டை எதிர்த்தும், அரசியல் கட்சிகள், மத அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், பொது கட்டமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மாணவர்கள் மற்றும் தமிழ் தேசியப் பற்றாளர்கள் என அனைத்து மக்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் 25.04.2023 அன்று தமிழர் தாயகப் பிரதேசத்தில் அனைத்து வர்த்தக நிர்வாக சேவைகளை முடக்கி வடக்கு – கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால் ஏற்பாடு செய்ததை கூறலாம்.
 
ஏறத்தாழ ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளை மட்டும் உள்ளடக்கிய மகாவம்சம் என்ற புராணக் கதைகளை [mythical narrations] அடிப்படையாக வரிந்து கட்டிக் கொண்டு, ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக மகிழ்வாக அனுபவித்த பன்மொழி நடைமுறை, பன்முக கலாச்சாரம் மற்றும் சர்வதேச வரலாறுகள் [multilingual, multicultural and even international history] எல்லாவற்றையும் மூடி மறைக்கப் பட்டுள்ளது.
 
எனவே நாம் சரியான வரலாற்றை விஞ்ஞான, தொல்பொருள், கல்வெட்டு மற்றும் பயண சான்றுகளுடன் எங்கள் வருங்கால சந்ததியினருக்கு, இளைஞர்களுக்கு வழங்க நேரம் வந்துவிட்டது. அப்படியானால் தான் தேசிய மட்டத்தில் விதைக்கப்படுள்ள வெறுப்புகளும் மற்றும் அடிமைப்படுத்தும் செயல்களும் [nationalistic hatred and enslavement] முடிவுக்கு கொண்டுவர முடியும்.
 
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்ப தறிவு" என்ற இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட குறள் 423 யை மனதில் கொண்டும் , "எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு" என்ற குறள் 424 வழியில், இந்த நூறாண்டு வங்காள பல்துறையறிஞர் இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore), எமக்கு இன்று தந்துள்ள தேவையான மெய்யறிவு இலங்கைக்கும் பொருந்தும்.
 
1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற அவர் உண்மையில் கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பை ஒரு சுதந்திர இந்தியா பற்றிய அவரது கனவுகளை கவிதைகளாக சாமர்ப்பித்தாலும், அது அனைத்துத் தரப்பிற்கும், ஏன் இன்று இலங்கைக்கும் கூட பொருந்தக் கூடியதாகவே உள்ளது.
 
எல்லா இனங்கள் மற்றும் மத மக்களும் தங்களை தேசிய அடிமை என்ற சங்கிலிகளிலிருந்து தங்களை விடுவிக்க [for people of all breeds and creeds, to free themselves from the chains of nationalistic enslavement] இப்ப தருணம் வந்து விட்டது என்று எண்ணுகிறேன்!!
 
 
"இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,
அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ,
குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால்
வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே
உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ,
வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின்
அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ,
விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி
பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ,
அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம்
எங்கே பாழடைந்த பழக்கம் என்னும்
பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ,
நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும்
இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,
அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில்
எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!
 
 
"Where The Mind Is Without Fear"
"Where the mind is without fear and the head is held high
Where knowledge is free
Where the world has not been broken up into fragments
By narrow domestic walls
Where words come out from the depth of truth
Where tireless striving stretches its arms towards perfection
Where the clear stream of reason has not lost its way
Into the dreary desert sand of dead habit
Where the mind is led forward by thee
Into ever-widening thought and action
Into that heaven of freedom, my Father, let my country awake"
 
 
[இந்தியக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் எழுதிய “Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;" கவிதைத் தொகுப்பு கீதாஞ்சலி (Gitanjali) / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா]
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
முடிவுற்றது
343159629_961142088657440_1439768982230729614_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=9nY4ckgOzusQ7kNvgHcEdMU&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYCmGmwSYxKi7xX1Mlgzn7oteTh9djslCSSRNm60YFGADg&oe=667D9DE5 342995326_960159401848126_6551757652352421999_n.jpg?stp=dst-jpg_p370x247&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=rshKPzbOjIUQ7kNvgG4KKmN&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYDjQ7EFaXFK4IwBbcWTv8iltck5alhiiEVTKh6nEXN4_g&oe=667DBD65 342976851_782932903261729_4252940158593694507_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=7KVzHmoT-04Q7kNvgE9-gs0&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYCT6aloOYd8YLhsyMkK0WH8o0k1WA8KakiqdO4yoRKL1g&oe=667DA025 343000557_950730049676700_6514669463212470706_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Z0Qe7gVJ_IoQ7kNvgEvHU1x&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYAleNaPTr13gLL06uTHUfHaGjnlDW3q3MEnnbPwaUC31w&oe=667DA330
 
 
 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் நிறைய சிரியர்களுடன் வேலை செய்துள்ளேன், இதில் பலர் சிரிய கிறிஸ்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் அசாதுக்கே அதரவு தெரிவிப்பர்கள். அவர் செய்வது சரி என விவாதிப்பர்கள். மற்ற இயக்கங்கள் ஆட்சிக்கு வந்தால் தாங்களும் ் முஸ்லீமாக மாற வேண்டும் என கூறுவார்கள்.
    • 14 DEC, 2024 | 09:18 AM (எம்.நியூட்டன்) “வடக்கு கிழக்கு மாகாணம் போரினால் பாதிக்கப் பட்ட மாகாணம். எனவே அதற்கு என்று விசேட  திட்டத்தை வகுத்து நிதிகளை ஒதுகிடு செய்தோ வெளிநாட்டு உதவிகள் பெற்றோ வடக்கு கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யுங்கள்” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.  யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13)  நடைபெற்றது. அங்கு கலந்து கொண்டு துறைசார்ந்த திட்டங்கள் தொடர்பில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், “போரால் பாதிக்கப்பட்ட மாகாணமாக வடக்கு கிழக்கு இருப்பதால் அதனை அபிவிருத்தி செய்வதற்கு விசேட நிதி ஓதுக்கிடு தேவை.  எனவே அரசாங்க நிதிநிலோ அல்லது வெளிநாடுகளின் நிதி உதவிகளைப்பெற்று விசேட திட்டங்களை அமைத்து அபிவிருத்திகளை செய்ய வேண்டும்.  எனைய மாகாணங்களைப் போன்று இங்கும் அவ்வாறு செய்வதால் முன்னேற முடியாது. மேலும் கடந்த காலத்தில் யாழ் நகரத்தில் பல திட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட போதும் யாழ்  மாவட்ட செயலகம் ,யாழ்ப்பாண பிரதேச செயலகம் யாழ் மாநகர சபைகளின் எந்தவிதமான அபிப்பிராயங்களையம் கேட்காது திட்டங்கள் முன்னேடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த கால அரசாங்கத்திற்கும் அதிலிருந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்படது. அதற்கான சகல திட்டங்களும் கொழும்பில் தான் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தால் மனிதனால் செய்யப்பட்ட. அனர்த்தம். இதனால்தான் இந்த வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது.  இவ்வாறான திட்டங்கள் மேற்கொள்ளாது மக்களின் தேவைகளுக்கு ஏற்ப விசேட திட்டங்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு  உருவாக்கி முன்னோக்கி செல்ல வேண்டும். கடற்றொழில் அமைச்சராக உள்ளமையால் அமைச்சரவையிலும் இந்த விடயத்தை பேசி அதற்கான திட்டத்தை உருவாக்கவேண்டும்”  என்றார். https://www.virakesari.lk/article/201229
    • 14 DEC, 2024 | 09:55 AM (எம்.நியூட்டன்) “என்னையோ உத்தியோகத்தர்களையோ அச்சறுத்தி அடாவடித்தனம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை” எனத் தெரிவித்த யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியா் தங்கமுத்து சத்தியமூர்த்தி. “ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்  கோபம் ஊட்டும் வகையில் கேள்வி கேட்பவர்களை குழப்புபவர்களை அடுத்த கூட்டங்களுக்கு அனுமதிக்க வேண்டாம்” என்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர், மற்றும் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இக் கோரிக்கையை முன்வைத்தார் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “யாழ் போதனா வைத்தியசாலை எத்தகைய நோய் என்றாலும் சிகிச்சை வழங்கக்கூடிய சகல வசதிகளும் இருக்கின்றன. தற்போதைய நோய் நிலைமை தொடர்பில் பொது மக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை.  அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உயர் பிரதிநிதிகள் யாராவது வந்தால் அது யாராக இருந்தாலும் மாலை போட்டு வரவேற்பதற்கு தயங்குவதில்லை. இருப்பினும் இந்த வைத்தியசாலை என்ற ரீதியில் நானும் எனக்குக் கீழ் உள்ளவர்களை ஊக்கப்படுத்தி இவ்வாறான சபையிலும் பயம் பதற்றம் இல்லாமல் நடத்துகின்ற இயல்பு என்னிடம் உள்ளது. போதனா வைத்தியசாலைக்கு 15 நுழைவாயில்கள் இருக்கின்றது. நோயாளிகளுக்கு மாத்திரமல்ல பல உயர் அதிகாரிகள் அன்போடும் பண்போடும் உத்தியோகத்தரிடம் அனுகினால் சேவைகளை பெறுவதும் நோயாளர்களை பார்வையிட வருவதற்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் தொடர்பாடல் ஏற்படுத்தப்படுகின்றது .  ஆனாலும் எம்மைப் பயப்படுத்தி உத்தியோகத்தர்களை பயப்படுத்தி உள்ளே வந்து விதண்டாவாதம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை.  இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்ற போது ஒரு சிலர் பல அரச உத்தியோகத்தர்களுக்கு கோபம் ஊட்டும் வகையில் நடந்து கொண்டால் அவர்களை எதிர்வரும் கூட்டங்களுக்கு அனுமதிக்கக்கூடாது.  இங்கு பல உயர் நிலை உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டால் அரசு இயந்திரத்தை எடுத்து நடத்துவது கடினம். மேலும் தற்காலிக பணியாளர்கள் தொடர்பில் கேள்வி எழுப்ப பட்டிருந்தது.  பிரதிப் பணிப்பாளர் ஐம்பது பேர் உள்வாங்கப்பட்டு மூன்று மாத பயிற்சி வழங்கப்பட்டது. அதற்குப் பின்னர் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசில் 200 உள்வாங்க பட்டார்கள்.  தொடர்ச்சியாக அவர்கள் வேதனம் இன்றி கடமையாற்றிமையினால் வேலை வாய்ப்பு வருகின்றபோது தங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தமக்கு நியமனம் தருமாறும் கேட்டிருந்தார்கள். இவர்களுக்கு வைத்தியர்கள் மூலம் சிறு தொகைப் பணத்தை வழங்கியிருந்தோம். அவர்கள் வேலைவாய்புக்கு செல்லும் போது அவர்கள் தொடர்து வேலை செய்தமைக்கான சிபாரிசுக் கடிதம் வழங்கமுடியும். வேலைவாப்பு வழங்குவது பணிப்பாளரின் கடமையல்ல. இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கும் பல தடவைகள் கடிதம் அனுப்பியுள்ளேன். தொண்டர்களுக்கான வேலை வாய்ப்பு ஆளணி நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார். https://www.virakesari.lk/article/201230
    • Published By: VISHNU 14 DEC, 2024 | 01:20 AM   அரச அதிகாரிகளின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பதிவு செய்தனர்.  யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது , அரச அதிகாரிகளால் திட்டங்கள் முன் மொழியப்பட்டு , அது தொடர்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.  அதன் போது இடையில் குறுக்கிட்டு , கேள்விகளை கேட்டதுடன், அவர்களின் கல்வி தகமைகளையும் கேள்விக்கு உட்படுத்தினார். அதானல் சில அதிகாரிகள் அவரின் கேள்விகளை செவிமடுக்காது தமது விளக்கங்களை கூறி சென்றனர்.  அதேவேளை யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது ,  அரச அதிகாரிகளை கேலி செய்வது போன்றும் , அவர்களின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்துவதும் அவர்களை அவமதிக்கும் செயலாகும் அவர்கள் தொடர்ந்து மக்கள் சேவையில் இருக்கும் அதிகாரிகள். இவ்வாறு செய்யும் சிலரினால் அவர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகுவதால் மக்கள் சேவைகள் பாதிக்கப்படும்.  அது மட்டுமின்றி கூட்டங்களில் அரச அதிகாரிகள் அவமதிக்கப்பட்டால் கூட்டங்களை விட்டு அதிகாரிகள் வெளியேறுவார்கள்  யாழ் . போதனா வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தரும் போது , அவர்களை நாங்கள் வரவேற்க தயாராகவே இருக்கிறோம். ஆனால் நடைமுறைகளை குழப்பி , அத்துமீறி நுழைய முற்பட்டால்  கடவுளாக இருந்தாலும் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.  https://www.virakesari.lk/article/201226
    • Published By: VISHNU 13 DEC, 2024 | 09:54 PM   இலங்கை தனது சர்வதேச பத்திரங்களின் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிசெம்பர் 12 ஆம் திகதி முடிவடையவிருந்த இலங்கையின் சர்வதேச இறையாண்மை பத்திர பரிவர்த்தனையின் ஆரம்ப தரவுகளின்படி, சந்தை பங்கேற்பாளர்களின் மிக அதிக பெரும்பான்மையான பங்கேற்பு இருந்தது. இது மிகவும் சிக்கலான மற்றும் சவாலான இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பு என்று அவர்கள் கருதுகின்றனர். இது தொடர்பான நடவடிக்கைகள் 16ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன், அதற்கான உடன்படிக்கைகள் 20ஆம் திகதிக்குள் நிறைவடையும். https://www.virakesari.lk/article/201223
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.