Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – தென்மேற்கு மாநிலம், லன்டோவ்-எஸ்லிங்கன்.

K800_AZ4A0891-300x200.jpgயேர்மனியிலே 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்து நெறிப்படுத்திவரும் தமிழ்க் கல்விக் கழகம் தென்மேற்கு மாநிலத்தில் 34ஆவது அகவை நிறைவு விழாவை 20.04.2024 சனிக்கிழமையன்று எஸ்லிங்கன் நகரில் தமிழ்மொழி, கலை, பண்பாடு என்பவற்றை ஊட்டிவரும் செயற்பாட்டில் இணைந்து பயணிக்கும் அனைவரையும் அழைத்துச் சிறப்போடு கொண்டாடியது.

தமிழ்க் கல்விக் கழகத்தின் பல்வேறு செயற்பாட்டுக் களங்களில் பயணித்து 19.06.2023ஆம் நாளன்று காலமாகிவிட்ட “தமிழ்ப்பற்றாளர்”, “தமிழ் மாணி” உயர்திரு. சின்னத்துரை யோகலிங்கம் அவர்களின் அறப்பணியைப் போற்றிடும் வகையிலே “தமிழ்ப்பற்றாளர்”, “தமிழ் மாணி” உயர்திரு சின்னத்துரை யோகலிங்கம் நினைவு அரங்கமாகத் தென்மேற்கு மாநில அரங்கைத் தமிழ்க் கல்விக் கழகம் அணிசெய்திருக்க, காலை 09:30 மணிக்குத் தமிழ்மொழியையும் தாய்நிலத்தையும் காத்திட விதையானோரின் நினைவோடு பொதுச்சுடரேற்றி விழாத் தொடங்கியது.

ஈழதேசத்தைக் காத்திட அறவழிப்போர் புரிந்து வீரகாவியமாகிய “நாட்டுப்பற்றாளர்” அன்னை பூபதி அவர்களுக்கு சுடரேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது. “நாட்டுப்பற்றாளர்” வைத்திலிங்கம் பரமேஸ்வரன் அவர்களது திருவுருவப்படமும் வைக்கப்பட்டிருந்தது. அகவை நிறைவு விழா மங்கல விளக்கேற்றல், அகவணக்கம், தமிழாலயகீதம் எனத் தொடக்க நிகழ்வுகளின் நிரலில் தொடங்கியது.

சிறப்பு வருகையாளர்களாக வருகைதந்த றைன்லாண்ட் பால்ஸ் மாநிலத்தின் அரசவை உறுப்பினர் திரு.புளோறியன் மாயர், லண்டவ் வெளிநாட்டவர் ஒருங்கிணைப்பு அவை உறுப்பினர் திரு.திருட்டின் வோங், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் றைன்லாண்ட் பால்ஸ் மாநிலத்தின் பொறுப்பாளர் திரு. சபாபதி விமலநாதன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்லண்ட் மாநிலத்தின் பொறுப்பாளர் திரு. கனகசபை பரணிரூபசிங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் றைன்லாண்ட் பால்ஸ் மாநிலத்தின் துணைப் பொறுப்பாளர் திரு.கந்தையா பூபால், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் நீண்டகால உறுப்பினரும் வீஸ்பாடன் நகரச் செயற்பாட்டாளர் திருமதி சிறீமதி சிவலிங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கால்ஸ்றுகே நகரத்தின் கோட்டப் பொறுப்பாளர் திரு.நாராயணபிள்ளை தேவஞானம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மன்கைம் நகரத்தின் கோட்டப் பொறுப்பாளர் திரு. சுப்பிரமணியம் சுவேந்திரன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் புறுக்சால் நகரத்தின் கோட்டப் பொறுப்பாளர் திரு.திருநாவுக்கரசு ஜீவராசா ஆகியோர் மங்கலவிளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனர்.

தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு.செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, அனைத்துலகப் பொதுத்தேர்வு, தமிழ்த்திறன் ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் மற்றும் 5,10,15ஆண்டுகள் பணித்திறனாற்றிய ஆசான்கள், செயற்பாட்டாளர்களுக்கான மதிப்பளிப்புகளோடு, 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் வாரிதி” என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் மாணி” என்ற பட்டமும் வழங்கி மதிப்பளிப்புகளும் நடைபெற்றது.

கலைத்திறன் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களின் செயல்திறன்களை ஒன்றிணைத்ததன் விளைச்சலால் தமிழாலயங்கள் பெற்ற புள்ளிகளினடிப்படையில் சிறந்த தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்புகளும் இடம்பெற்றன. நாடுதழுவிய மட்டத்தில் கலைத்திறன் போட்டியில் பிராங்பேட் தமிழாலயம் 2ஆம் நிலையையும் கலைத்திறன் மாநிலப் போட்டியில் பிராங்பேட், கால்ஸ்றுகே, லண்டவ் ஆகிய தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும் பெற்றுக்கொண்டன.

தமிழாலயங்களில் மழலையராக இணைந்து ஆண்டு 12ஐ நிறைவுசெய்த 40 மாணவர்கள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலே அழைத்து வரப்பட்டு, தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்விப்பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ்த்திறனாளன்” திரு. இராஜ மனோகரன் அவர்களால் வாழ்த்தி மதிப்பளிக்கப்பட்டனர். மதிப்பளிப்புகளுக்கு மத்தியில் தமிழாலய மாணவர்களின் உரை, கவிதை, விடுதலைக் கானங்கள் மற்றும் எழுச்சி நடனங்கள் எனக் கலைநிகழ்வுகள் விழாவிற்குச் சிறப்புச் சேர்த்தன. தாயகத்தின் விடியலுக்கான பற்றுறுதியோடு 19:30 மணிக்கு அகவை நிறைவு விழாச் சிறப்புடன் நிறைவெய்தியது. தென்மாநிலத்துக்கான அகவை நிறைவு விழா 27.04.2024 சனிக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

K800_AZ4A0125.jpg
K800_AZ4A0122.jpg
K800_AZ4A0130.jpg
K800_AZ4A0120.jpg
K800_DSC_0608.jpg
K800_AZ4A0141.jpg
K800_AZ4A0138.jpg
K800_AZ4A0157.jpg
K800_AZ4A0158.jpg
K800_AZ4A0160.jpg
K800_AZ4A0161.jpg
K800_AZ4A0163.jpg
K800_AZ4A0165.jpg
K800_AZ4A0171.jpg
K800_AZ4A0173.jpg
K800_AZ4A0180.jpg
K800_AZ4A0182.jpg
K800_AZ4A0188.jpg
K800_AZ4A0190-rotated.jpg
K800_AZ4A0195.jpg
K800_AZ4A0205.jpg
K800_AZ4A0203.jpg
K800_AZ4A0200.jpg
K800_AZ4A0197.jpg
K800_AZ4A0196.jpg
K800_AZ4A0142.jpg
K800_AZ4A0134.jpg
K800_9E3A0397.jpg
K800_9E3A0788.jpg
K800_AZ4A0276.jpg
K800_AZ4A0149.jpg
K800_AZ4A0150.jpg
K800_AZ4A0249.jpg
K800_AZ4A0262.jpg
K800_9E3A0579.jpg
K800_9E3A0657.jpg
K800_9E3A0742.jpg
K800_9E3A0748-rotated.jpg
K800_9E3A0757.jpg
K800_9E3A0771-rotated.jpg
K800_9E3A0776.jpg
K800_9E3A0856.jpg
K800_9E3A0861.jpg
K800_9E3A0906.jpg
K800_9E3A0942.jpg
K800_9E3A0946.jpg
K800_9E3A0962-rotated.jpg
K800_9E3A0972-rotated.jpg
K800_9E3A0975.jpg
K800_9E3A1249.jpg
K800_AZ4A0136.jpg
K800_AZ4A0145.jpg
K800_AZ4A0185.jpg
K800_AZ4A0225.jpg
K800_AZ4A0235.jpg
K800_AZ4A0247.jpg
K800_AZ4A0290.jpg
K800_AZ4A0291.jpg
K800_AZ4A0297.jpg
K800_AZ4A0302.jpg
K800_AZ4A0311-rotated.jpg
K800_AZ4A0312.jpg
K800_AZ4A0320.jpg
K800_AZ4A0325.jpg
K800_AZ4A0335-rotated.jpg
K800_AZ4A0338.jpg
K800_AZ4A0346.jpg
K800_AZ4A0350.jpg
K800_AZ4A0356-rotated.jpg
K800_AZ4A0364.jpg
K800_AZ4A0398.jpg
K800_AZ4A0416.jpg
K800_AZ4A0419.jpg
K800_AZ4A0444.jpg
K800_AZ4A0459.jpg
K800_AZ4A0468.jpg
K800_AZ4A0473.jpg
K800_AZ4A0481.jpg
K800_AZ4A0504.jpg
K800_AZ4A0513.jpg
K800_AZ4A0520.jpg
K800_AZ4A0535.jpg
K800_AZ4A0544.jpg
K800_AZ4A0554.jpg
K800_AZ4A0581-rotated.jpg
K800_AZ4A0606.jpg
K800_AZ4A0615.jpg
K800_AZ4A0621.jpg
K800_AZ4A0628.jpg
K800_AZ4A0641.jpg
K800_AZ4A0649.jpg
K800_AZ4A0653.jpg
K800_AZ4A0660.jpg
K800_AZ4A0671.jpg
K800_AZ4A0676.jpg
K800_AZ4A0680.jpg
K800_AZ4A0686.jpg
K800_AZ4A0693.jpg
K800_AZ4A0718.jpg
K800_AZ4A0729.jpg
K800_AZ4A0732.jpg
K800_AZ4A0739.jpg
K800_AZ4A0741.jpg
K800_AZ4A0745.jpg
K800_AZ4A0753.jpg
K800_AZ4A0754.jpg
K800_AZ4A0757.jpg
K800_AZ4A0759.jpg
K800_AZ4A0762.jpg
K800_AZ4A0765.jpg
K800_AZ4A0772.jpg
K800_AZ4A0774.jpg
K800_AZ4A0777.jpg
K800_AZ4A0778.jpg
K800_AZ4A0780.jpg
K800_AZ4A0781.jpg
K800_AZ4A0784-rotated.jpg
K800_AZ4A0797.jpg
K800_AZ4A0800.jpg
K800_AZ4A0807.jpg
K800_AZ4A0810.jpg
K800_AZ4A0812.jpg
K800_AZ4A0813-rotated.jpg
K800_AZ4A0817.jpg
K800_AZ4A0819.jpg
K800_AZ4A0822.jpg
K800_AZ4A0826.jpg
K800_AZ4A0837.jpg
K800_AZ4A0840.jpg
K800_AZ4A0843.jpg
K800_AZ4A0844.jpg
K800_AZ4A0849.jpg
K800_AZ4A0853.jpg
K800_AZ4A0854.jpg
K800_AZ4A0855.jpg
K800_AZ4A0858.jpg
K800_AZ4A0862.jpg
K800_AZ4A0864.jpg
K800_AZ4A0870.jpg
K800_AZ4A0877.jpg
K800_AZ4A0878.jpg
K800_AZ4A0886.jpg
K800_AZ4A0891.jpg
K800_AZ4A0893.jpg
K800_AZ4A0896.jpg
K800_AZ4A0900.jpg
K800_AZ4A0924.jpg
K800_AZ4A0929.jpg
K800_AZ4A0935.jpg
K800_AZ4A0943.jpg
K800_AZ4A0951.jpg
K800_AZ4A0962.jpg
K800_AZ4A0967.jpg
K800_AZ4A0976.jpg
K800_AZ4A0984.jpg
K800_AZ4A0995.jpg
K800_AZ4A1001.jpg
K800_AZ4A1015.jpg
K800_AZ4A1031.jpg
K800_AZ4A1039.jpg
K800_AZ4A1047.jpg
K800_AZ4A1067.jpg
K800_AZ4A1074.jpg
K800_AZ4A1085.jpg
K800_AZ4A1092.jpg
K800_AZ4A1105.jpg
K800_AZ4A1116.jpg
K800_AZ4A1129.jpg
K800_AZ4A1132.jpg
K800_AZ4A1137.jpg
K800_AZ4A1148.jpg
K800_AZ4A1164.jpg
K800_AZ4A1173.jpg
K800_AZ4A1178.jpg
K800_AZ4A1182.jpg
K800_AZ4A1184.jpg
K800_AZ4A1189.jpg
K800_AZ4A1203.jpg
K800_AZ4A1210.jpg
K800_AZ4A1221.jpg

34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – தென்மேற்கு மாநிலம், லன்டோவ்-எஸ்லிங்கன். – குறியீடு (kuriyeedu.com)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.