Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது .இத்தினத்தை உலகின் ஒவ்வொரு நாடும் அணிவகுப்புகள், பேரணிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்து கொண்டாடுகிறது!

இந்த ஆண்டு தொழிலாளர் தினத்தை கொண்டாடும் வகையில், இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இன்று மே தின அணிவகுப்பு கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன. அதன்படி நாடளாவிய ரீதியில் 40 பேரணிகள் நடைபெறவுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினப் பேரணி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

இன்று இரண்டு மே தினக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி, இன்று காலை கொட்டகலை பொது விளையாட்டரங்கில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி கொழும்பு, யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் அனுராதபுரத்தில் நான்கு பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பிலும் தலவாக்கலையிலும் இரண்டு மே தினக் கூட்டங்களை நடத்துகிறது .

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கொழும்பு கெம்பல் மைதானத்தில் மேதினக் கூட்டத்தை நடத்துகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தை கம்பஹாவில் நடத்துகிறது.

https://thinakkural.lk/article/300621

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மே தினத்தில் குப்பைகளை அள்ள 1000 தொழிலாளர்கள் பணியில்!

தொழிலாளர் தினமான இன்று (மே 1) கொழும்பு நகரை துப்பரவு செய்யும் பணியில் 1000 பேர் கொண்ட பணியாளர்கள் ஈடுபடவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் ஷாஹினா மைஷான் தெரிவித்துள்ளார்.
ஏனைய நாட்களில் கொழும்பு நகரை துப்பரவு செய்யும் 700 தொழிலாளர்களுக்கு மேலதிகமாக மேலும் 300 பேர் இவ்வாறு பணியமர்த்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நடத்தும் மே பேரணிகள் மற்றும் அணிவகுப்புகள் மூலம் கொழும்பில் இன்று குவியும் கழிவுகளை விரைவாக அகற்றுவதே இந்த குழுவின் முதன்மை நோக்கமாகும் என்றும் 1000க்கும் மேற்பட்ட இந்த தொழிலாளர் படை 24 மணி நேரமும் இரவும் பகலும் வேலை செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி மே 2ஆம் திகதி தொழிலாளர் தினத்தின் பின்னர் கொழும்புக்கான சேவைகளை வழங்குவது உட்பட கடமைக்கு வரும் பொது மக்களை தூய்மையான நகரமாக காண கொழும்பு மாநகர சபை தன்னால் இயன்றளவு செயற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/300640

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

இந்த ஆண்டு தொழிலாளர் தினத்தை கொண்டாடும் வகையில், இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இன்று மே தின அணிவகுப்பு கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன. அதன்படி நாடளாவிய ரீதியில் 40 பேரணிகள் நடைபெறவுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினப் பேரணி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

இன்று இரண்டு மே தினக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி, இன்று காலை கொட்டகலை பொது விளையாட்டரங்கில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

இன்றைய நாள் கஷ்டப்பட்டு வேலை செய்பவங்களுக்கானது இவங்கள் ஏன் குத்தி முறிகிறாரர்கள் ?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்துடன் உடன்படிக்கை செய்து கொள்ள முன்வருமாறு ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

Published By: VISHNU   01 MAY, 2024 | 09:23 PM

image
 

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை வெற்றியடையச் செய்து நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாக்க அரசாங்கத்துடன் உடன்படிக்கை செய்து கொள்ள முன்வருமாறு ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி உள்ளிட்ட அரசியல் கட்சிகளிடம்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார்.

வழமையான அரசியலில் செயற்பட்டு சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை எதிர்த்து, அதனை சீர்குலைக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, நாடு 2022ல் இருந்த நிலைமைக்குத் திரும்ப இடமளிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.

கொழும்பு மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை (01) பிற்பகல் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

"மீண்டும் வீழாத பெருமைமிகு நாடு என்றென்றும்" என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மே தினக் கூட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புள்ள அமைப்புக்களின் உறுப்பினர்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருந்தொகையான கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி கயாஷான் நவனந்தனவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டமை  விசேட அம்சமாகும்.

மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சி முடிவடைந்து விட்டதாகத் தெரிவித்து கட்சியை சிலர் புதைக்கத் தயாராக இருந்தாலும், புதையுண்டுள்ள பொருளாதாரத்தை ஐக்கிய தேசியக் கட்சியே மீட்டெடுத்தது.

 நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஜனநாயக மற்றும் பொருளாதார மறுமலர்ச்சியையே இன்று நாடு பூராகவும் நடைபெறும் மே தின பேரணிகள் எடுத்துக் காட்டுவதாக தெரிவித்த ஜனாதிபதி, காலி முகத்திடலில் இருந்து துரத்தப்பட்ட எதிர்கட்சி தலைவருக்கு  தமது கட்சியின் மேதினக் கூட்டத்தை செத்தம் வீதியில்  நடத்தக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.  

நாட்டில் வலுவான ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்கி இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்கும் திட்டமொன்றை முன்வைப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

முதலில் இந்த மே தின பேரணிக்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஐக்கிய தேசியக் கட்சி முடிந்துவிட்டதாக சிலர் நினைத்தனர். கட்சியை குழிதோண்டி புதைக்க வேண்டும் என்றார்கள். ஆனால் புதையுண்டிருந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு நாம் புத்துயிர் கொடுக்க வேண்டியிருந்தது.

 ஐக்கிய தேசியக் கட்சியின் சவப்பெட்டிக்கு கடைசி ஆணி அடிக்கப்பட்டதாக 1956ஆம் ஆண்டு கூறப்பட்டது. ஆனால் ஐ.தே.க மீண்டும் வலுப்பெற்றது. 1970ல்  ஐக்கிய தேசியக் கட்சி முடிந்து விட்டது என்று கூறப்பட்டது. ஆனால் நாங்கள் 17 வருடங்கள் ஆட்சி செய்தோம்.   முடிந்து விட்டது என்று கூறிய ஐக்கிய தேசியக் கட்சி  தான் இன்று நாட்டைக் காப்பாற்ற முன் வந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்குவதற்கு பிரதமர் டி.எஸ். சோனாநாயக்க சுபநேரம் பார்த்தார். அந்தக்  கூட்டம் காலையில் நடைபெறாமல் மாலையில் நடைபெற்றது. மேலும் இலங்கைக்கு சுதந்திரம் வழங்குவதற்கும் சுபமுகூர்த்தம் பார்க்கப்பட்டது. எனவே நாட்டுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தான் சுபமுகூர்த்தம் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனால்தான் வீழ்ந்த நாட்டைஎம்மால் உயர்த்த முடிந்தது.

இன்று  கொழும்பைச் சுற்றி  பல மே தினப் பேரணிகள் நடைபெறுகின்றன. கெம்பல் மைதானத்தில் பொதுஜன பெரமுனவும் ,  செத்தம் வீதியில் ஐக்கிய மக்கள் சக்தியும் தலவாக்கலையில் திகம்பரமும், கொட்டகலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரசும், யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பியும்   இன்று மே தினக் கூட்டங்களை நடத்துகின்றன. இதுதான் ஜனநாயகம். நான் சர்வாதிகாரி என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் இன்று நடுவீதியில்  கூட்டங்களை   நடத்தலாம். என்னை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். இந்த நிலைமை இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் இருக்கவில்லை.

அன்று எதிர்க்கட்சித் தலைவர் தாக்கப்பட்டு காலிமுகத்திடலில் இருந்து துரத்தப்பட்டார். ஆனால் இன்று அவரது மே தின பேரணியை செத்தம் வீதியில் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுதான் ஜனநாயகம். இந்த நாட்டின் அரசியல் முறைமை சீர்குலைந்ததால் நான் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் ஆனேன்.

பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் பிரதமர் பதவி விலகும்போது எதிர்க்கட்சித் தலைவர் பிரதமராக நியமிக்கப்படுவார். ஆனால் நம் நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமல்ல ஏனைய  அனைத்துக் கட்சிகளும் பின்வாங்கி ஓடிவிட்டன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  ஏற்றுக்கொள்ளும் எவருக்கும் ஆதரவளிப்பதாக பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் இருந்த பொதுஜன பெரமுன அறிவித்திருந்தது.

முதலில் எதிர்க்கட்சித் தலைவரிடம் வினவப்பட்டது. ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் ஜேவிபி முன்வரவில்லை. இறுதியாக, தனியொரு எம்.பி.யை கொண்ட கட்சியின் தலைவர் என்ற முறையில், நான் நாட்டின் பொறுப்பை ஏற்க வேண்டியதாயிற்று. ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் சவால்களில் இருந்து ஓடியதில்லை. இதை ஏற்க வேண்டாம் என்று சிலர் கூறினர். ஆனால் நாங்கள் அனைவரும் ஒன்றாக முன்னேற்றம் கண்டோம்.

அன்று ஜனாதிபதி பதவி விலகிய  பின்னர் பாராளுமன்றத்தை கைப்பற்ற முயன்றார்கள். இதையடுத்து பாராளுமன்றத்தில் இருந்த அனைவரும் ஓடிவிட்டனர். நான் என்ன செய்யலாம் என்று  இராணுவத் தளபதி என்னிடம் கேட்டார். கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு என்ன நடந்தது என்று கேட்டேன்.  அனைவரும் சென்றுவிட்டதாக சொன்னார்.  அப்படியானால் பாராளுமன்றத்தைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு என்று அவரிடம் சொன்னேன். அன்று தப்பி ஓடியவர்கள் இன்று பாராளுமன்ற ஜனநாயகம் பற்றி எப்படி பேசுகிறார்கள்? அந்தக் குழு பதவியில்  இருந்திருந்தால், இன்றைய நாட்டின் நிலைமையை உங்களால் கற்பனை செய்ய முடியுமா?

இன்று  சகல இடங்களிலும் மே தினக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மக்கள் பஸ்களில் வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன், பஸ்களை இயக்குவதற்கு எரிபொருள் இருக்கவில்லை.   சிங்களம் மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்றும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றன. புத்தாண்டை மிகச்  சிறப்பாக கொண்டாடினார்கள். இப்போது மே தினத்தை கொண்டாடுகிறோம். இன்னும் மூன்று வாரங்களில் வெசாக் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகும். அப்பொழுது கொழும்பு மீண்டும் மக்களால் நிரம்பியிருக்கும்.

அரசாங்கத்தை நாம் துணிச்சலுடன் முன்னோக்கிக் கொண்டு வந்ததாலேயே கண்டி பெரஹெராவை கண்டுகளிக்கவும்  நல்லூர் திருவிழா மற்றும் தெவிநுவர பெரஹரா போன்றவற்றை பார்வையிடச் செல்வதற்கும் உகந்த சூழல்  உருவானது. இதற்காக உதவிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மொட்டுக் கட்சியின் ஒரு பகுதியினர் ஒத்துழைப்பு வழங்கினர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் ஒரு தரப்பினரும் உதவ முன்வந்தனர்.

டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட பல தரப்பினர் எங்களுடன் இணைந்துச் செயற்படுகின்றனர். கட்சி சின்னமொன்று இல்லை. மொட்டுக் கட்சியின் ஒரு குழு எம்மோடு இணைந்தது. மற்றுமொரு குழு ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்டது. மிகவும் சிரமப்பட்டு இந்த நிலைக்கு வந்துள்ளோம். எமது தீர்மானங்கள் வெற்றியளிக்கும் என்று எவரும் நினைக்கவில்லை. மேலும், குற்றச் செயல்களுக்கு எதிராக கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. சிரமத்துடனாவது அந்த தீர்மானங்களை எடுத்தோம்.

சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டத்தின் போது புதிதாக பணத்தை அச்சிட முடியாது என்று அறிவிக்கப்பட்டது. மேலும் அரச வங்கிகளில் கடன் வாங்கவும் முடியாதென அறிவிக்கப்பட்டது. அரசு வருமானம் ஈட்ட வேண்டும் என்றும் தெரிவித்தனர். ரூபாயை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கஷ்டமாக இருந்தாலும் அதற்கான முடிவுகளை எடுத்தோம். மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தியும் அப்போது என்ன சொன்னார்கள்? ஆனால் இன்று நாட்டின் நிலைமை என்ன? இன்று ரூபாயின் பெறுமதி பலப்படுத்தப்பட்டுள்ளது. டொலருடன் ஒப்பிடுகையில், ரூபாவின் பெறுமதி 280 ஆக உள்ளது. ரூபாய் பெறுமதி வலுவடைந்திருப்பதால் மக்கள் கையிலிருக்கும் பணத்தின் மதிப்பு அதிகரிக்கிறது.

தற்போது, பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகின்றனர். மேலும், கடந்த பெரும்போகத்தில் நல்ல விளைச்சல் கிடைத்தது. மேலும் தொழில்கள் மீண்டும் உயிர்பெறுகின்றன. சிறு மற்றும் நடுத்தர தொழில்களை பாதுகாக்கும் வகையில்  பராட்டே சட்டத்தை ஒரு வருடத்திற்கு அமுல்படுத்தாதிருக்க நடவடிக்கை எடுத்தோம். மேற்படித் துறைகளை பாதுகாப்பதற்காக தனிப் பிரிவொன்றும் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

அதனால் மிகவும் சிரமப்பட்டே இன்றைய நிலைக்கு வந்துள்ளோம். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தினால் அந்த பாதுகாப்பு கிடைத்துள்ளது. இந்த நிலைமையை பாதுகாத்து முன்னேறிச் செல்வதா? அல்லது நாட்டை 2022 இல் இருந்த நிலைக்கு கொண்டுச் செல்வதா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகளும் இத்திட்டத்திற்கு எதிராக செயற்படக்கூடாதென கேட்டுக்கொள்கிறேன்.  

வேலைத்திட்டத்திற்கு இடையூறு செய்யவும் வேண்டாம். இந்த நிலையைப் பாதுகாக்க மக்களைப் பற்றிச் சிந்தித்து அரசாங்கத்துடன் இணைந்துச் செயற்பட முன்வருமாறு கேட்டுக் கொள்கிறேன். நாம் அனைவரும் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும். 2003 ஆம் ஆண்டு டோக்கியோ மாநாட்டிற்குச் சென்று 03 பில்லியன் டொலர்களை இலங்கைக்குக் கொண்டு வந்தேன். அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஒரு பில்லியன் டொலர்களை வழங்கினார்.

அதனால் 04 பில்லியன் டொலர்கள் கிடைத்தன. ஆனால் 2004 ஆம் ஆண்டில் அனைத்தும் மாறியது. அதனால் அவர்கள் திரும்பிச் சென்றனர். அந்த 04 பில்லியன் டொலர்கள் எம்மிடம் இருந்தால் இன்று அதன் பெறுமதி 10 பில்லியன் டொலர்களாக இருக்கும். 2018-2019 க்குள் வரவு செலவுத் திட்டத்தில் உபரி ஏற்பட்டது. அந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் சென்றிருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது.

தற்போது முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை மாற்றினால் நெருக்கடி ஏற்படலாம். சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனைகள் மற்றும் நாட்டின் துரித அபிவிருத்திக்கு தேவையான நிபந்தனைகள் அடங்கிய சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளேன். அதற்கு  ஆதரவு தருமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். ஐக்கிய மக்கள் சக்தியும், மக்கள் விடுதலை முன்னணியும் அதற்கு ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதோடு, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாகவும் மாற வேண்டும். இந்த நாட்டின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. நாட்டு மக்கள் இன்னமும் கஷ்டத்தில் வாழ்கின்றனர். பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். 03 வருடங்களாக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. 2019 ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் நாட்டின் பொருளாதாரம் ஓரளவு சரிவடைந்தது. எனவே இளைஞர்களுக்கான எதிர்காலத்தை நாம் உருவாக்க வேண்டும். பழைய பொருளாதார முறைமையினால் இதனைச் செய்ய முடியாது. இதற்கு பொருளாதாரம் திறக்கப்பட்டு புதிய முதலீடுகள் கொண்டுவரப்பட வேண்டும்.

கடந்த இரண்டு, மூன்று வருடங்களில் நிறுவனங்களின் வருமானம் குறைவடைந்திருந்தது.  நாட்டின் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்காக 04,05 பில்லியன் டொலர்களை தேடிக்கொள்ள வேண்டியிருந்தது. அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும். வறுமையை ஒழிக்க கிராமப் பொருளாதாரத்தை நவீனமயப்படுத்த வேண்டும். அதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

மக்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளோம். நலன்புரித் நிவாரணத் தொகை மூன்று மடங்காக மேம்படுத்தப்பட்டுள்ளன. பயனாளிகளின் எண்ணிக்கை 24 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளன. அரச ஊழியர்களின் சம்பளம் பத்தாயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தனியார் துறையினருக்கும் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.  

மேலும், நாட்டில் வலுவான ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்கி இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குதற்கான திட்டத்தை முன்வைக்கிறேன்.எனவே, பாரம்பரிய அரசியலை கைவிட்டு எம்மோடு இணையுமாறு மக்கள் விடுதலை முன்னணிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் அழைப்பு விடுக்கிறேன். அதேபோல், நாட்டிலிருக்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாத்து புதிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ஆதரவளிக்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/182439

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற மே தின கூட்டங்கள்

01 MAY, 2024 | 09:37 PM
image
 

சர்வதேச தொழிலாளர்கள் தினம் இன்று (மே 01) உலகளாவிய ரீதியில் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், நாட்டில் பல இடங்களில் இன்றைய தினம் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய தரப்பினரின் ஏற்பாட்டில் மே தின கூட்டங்களும் ஊர்வலங்களும் இடம்பெற்று வருகின்றன. 

கொட்டகலை 

கொட்டகலை பொது விளையாட்டரங்கில் இன்று (01) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார். 

இந்த கூட்டத்தில் இ.தொ.கா. கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், கட்சியின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, நிதிச்செயலாளரும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கண்காணிப்புக் குழு பாராளுமன்ற உறுப்பினருமான மருதுபாண்டி ராமேஸ்வரன் போன்றோரும் கலந்துகொண்டனர். 

இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில், தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்படும் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

WhatsApp_Image_2024-05-01_at_3.47.06_PM.

WhatsApp_Image_2024-05-01_at_3.47.04_PM.

WhatsApp_Image_2024-05-01_at_3.47.05_PM.

WhatsApp_Image_2024-05-01_at_3.47.07_PM.

WhatsApp_Image_2024-05-01_at_3.47.07_PM_

WhatsApp_Image_2024-05-01_at_3.47.08_PM.

WhatsApp_Image_2024-05-01_at_3.47.15_PM.

WhatsApp_Image_2024-05-01_at_3.47.16_PM_

WhatsApp_Image_2024-05-01_at_3.47.16_PM.

கொழும்பு - புறக்கோட்டை

கொழும்பு புறக்கோட்டையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டார்.

IMG-20240501-WA0044.jpg

IMG-20240501-WA0046.jpg

IMG-20240501-WA0047.jpg

IMG-20240501-WA0057.jpg

IMG-20240501-WA0054.jpg

IMG-20240501-WA0069.jpg

IMG-20240501-WA0105.jpg

IMG-20240501-WA0098.jpg

IMG-20240501-WA0106.jpg

IMG-20240501-WA0109.jpg

IMG-20240501-WA0100.jpg

IMG-20240501-WA0110.jpg

IMG-20240501-WA0112.jpg

மாத்தறை

மாத்தறையில் இன்று தேசிய மக்கள் சக்தியின் மே தின பேரணியும் கூட்டமும் இடம்பெற்றது.

இதில் கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உட்பட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். 

IMG-20240501-WA0120.jpg

IMG-20240501-WA0121.jpg

IMG-20240501-WA0115.jpg

IMG-20240501-WA0117.jpg

IMG-20240501-WA0121.jpg

IMG-20240501-WA0114.jpg

IMG-20240501-WA0116.jpg

வவுனியா 

'உழைக்கும் மக்கள் ஒன்றிணைவோம்; நாட்டின் வளங்களை பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மே தின ஊர்வலமும் பொதுக்கூட்டமும் இன்று (01) காலை வவுனியாவில் இடம்பெற்றது.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்துக்கு முன்பாக ஆரம்பமான இந்த ஊர்வலம் பஜார் வீதி ஊடாக வவுனியா நகர மண்டபத்தை அடைந்தது. அதன் பின்னர் அங்கு பிரதான மே தினக் கூட்டம் இடம்பெற்றது.

இம்முறை மே தினப் பேரணியில் 'உணவுப் பொருட்கள் எரிபொருட்களின் விலைகளைக் குறை', 'IMF ஆலோசனைகள், நிபந்தனைகளால் நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை நாசமாக்காதே', 'வற் (VAT) வரி, மின்சாரம் உள்ளிட்ட கட்டணங்களின் அதிகரிப்பை உடன்குறை', 'அந்நியக் கம்பனிகளுக்கும், பெரு முதலாளிகளுக்கும் வழங்கும் வரிச்சலுகையை உடன் நிறுத்து', 'தேசிய இனங்கள் மீதான பேரினவாத ஒடுக்குமுறைகளை உடன் நிறுத்து', 'தமிழ், முஸ்லிம், மலையகத் தேசிய இனங்களின் சுயாட்சி உரிமைகளை வழங்கு' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மே தின ஊர்வலமும் பொதுக்கூட்டமும் இடம்பெற்றது. 

இப்பேரணியில் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்ததுடன் அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பியிருந்தனர்.

IMG-20240501-WA0050.jpg

IMG-20240501-WA0044.jpg

IMG-20240501-WA0043.jpg

IMG-20240501-WA0038.jpg

IMG-20240501-WA0034.jpg

IMG-20240501-WA0030.jpg

IMG-20240501-WA0028.jpg

IMG-20240501-WA0029.jpg

IMG-20240501-WA0025.jpg

IMG-20240501-WA0023.jpg

IMG-20240501-WA0022.jpg

IMG-20240501-WA0020.jpg

வவுனியா, குருமன்காடு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதான மே தின ஊர்வலமும் பொதுக்கூட்டமும் வவுனியாவில் இன்று எழுச்சியுடன் இடம்பெற்றது.

முன்னதாக வவுனியா பண்டாரவன்னியன் சிலை முன்பாக ஆரம்பமான மே தின ஊர்வலம் அங்கிருந்து குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானம் வரை சென்றது. அங்கு மே தின கூட்டம் இடம்பெற்றது.

முண்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர் தவபாலன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கயேந்திரன், முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், சட்டத்தரணி க.சுகாஸ் மற்றும் தொண்டர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.

பேரணியில் கலந்துகொண்டவர்கள் 'எங்கள் நிலம் எமக்கு வேண்டும்', 'இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும்', 'வெடுக்குநாறி எங்கள் சொத்து' போன்ற கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

a9ba1841-fb24-459d-8536-32114dbf04a4.JPG

cac45557-66e2-44c2-90af-32eccec286f3.JPG

e052f3b3-bf05-4a24-bae0-992a3e7b19a7.JPG

caa680fe-77c7-4749-8507-d6eca8978ce9.JPG

IMG_20240501_154147.jpg

56bfad64-9ded-4c13-9193-e2a5ff191690.JPG

IMG_20240501_154402.jpg

IMG_20240501_153746.jpg

IMG_20240501_153707.jpg

IMG_20240501_153638_1.jpg

மானிப்பாய் 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வு இன்றைய தினம் (01) மானிப்பாய் பிரதேச சபையின் பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. 

“அரசின் அடக்குமுறைகளை உடைத்தெறிவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த தொழிலாளர் தின நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வு காலை 9.45 மணியளவில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து தலைமை உரை, விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன.

மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான செல்வி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான சபா குகதாஸ், திரு.கஜதீபன், ரெலோவின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினர்கள், கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

01__4_.jpg

01__3_.jpg

01__2_.jpg

01__1_.jpg

யாழ்ப்பாணம் 

தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் "நாட்டைக் கட்டியெழுப்பும்; தீர்வுக்கு ஓரணியில் இனம், மதம், சாதி, பேதம் இல்லாத புதிய சுதந்திர போராட்டத்துக்காகப் போராடுவோம்" என்னும் கருப்பொருளிலான மே தின கூட்டம் இன்று (01) யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் கலந்துகொண்டு இனம், மதம், சாதி, பேதம் இல்லாத புதிய சுதந்திர போராட்டத்துக்காக குரல் கொடுப்போம் எனும் கருப்பொருளில் உரையாற்றினர்.

இதில் தேசிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட பிரதான அமைப்பாளர் இ.சந்திரசேகரம், மதத்தலைவர்கள், மகளிர் அமைப்பின் செயற்பாட்டாளர்கள், மாவட்ட, பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள், இணைப்பாளர், தோட்ட தொழிலாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

VideoCapture_20240501-104906.jpg

VideoCapture_20240501-104903.jpg

VideoCapture_20240501-104946.jpg

VideoCapture_20240501-104913.jpg

VideoCapture_20240501-104926.jpg

VideoCapture_20240501-104935.jpg

VideoCapture_20240501-104938.jpg

கட்டுநாயக்க  

சுரண்டலுக்கு, அடக்கு முறைக்கு மற்றும் பல்வகை அழுத்தங்களுக்கு எதிரான பெண் தொழிலாளர்களின் ஒன்றிணைந்த மே தின ஊர்வலம் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று (01) முற்பகல் 10 மணியளவில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் பிரதான நுழைவாயில் அருகில் இருந்து ஆரம்பமானது.

இந்த ஊர்வலத்தை பெண்கள் மத்தியஸ்தானம் ஏற்பாடு செய்திருந்தது.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த பெண்கள் மத்திய ஸ்தானத்தின் கிளை உறுப்பினர்கள், பல்வேறு சிவில் அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இதில் பங்குபற்றினர்.

காலை 10.30 மணியளவில் கட்டுநாயக்க பேஸ்லைன் வீதியூடாக ஊர்வலம் இடம்பெற்றது. 

பின்னர், ஊர்வலம் மீண்டும் அதே வீதி வழியாக திரும்பி வந்து, கட்டுநாயக்க மரக்கறி சந்தை முன்பாக அமைக்கப்பட்டிருந்த மே தின ஊர்வல மேடையருகில் வந்து நின்றது.

அதன் பின்னர், அங்கு கூட்டம் இடம்பெற்றது. அதில் தொழிலாளர்கள் பலரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

20240501_102541.jpg

20240501_110045.jpg

20240501_110059.jpg

20240501_130729.jpg

VideoCapture_20240501-130357.jpg

VideoCapture_20240501-130414.jpg

VideoCapture_20240501-130427.jpg

யாழ்ப்பாணம் - நல்லூர் 

(எம்.நியூட்டன்)

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தின கூட்டம் யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் இன்று புதன்கிழமை (01) நடைபெற்ரது.

சங்கத்தினர் பங்கேற்ற பேரணியானது நல்லூர் ஆலயத்துக்கு அருகில் இருந்து ஆரம்பித்து நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நிறைவடைந்ததை தொடர்ந்து, அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், ஆசிரியர்கள் என பலரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

IMG-20240501-WA0034.jpg

IMG-20240501-WA0044.jpg

IMG-20240501-WA0048.jpg

சாய்ந்தமருது

சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்த 'உழைப்பாளிகளை உழைப்பால் உயர்ந்தவர்களை கௌரவிக்கும் மே தின நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக முன்றலில் இன்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.  

வர்த்தக சங்க தலைவர் கலாநிதி எம்.எஸ்.எம். முபாறக் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. 

இதன் ஆரம்ப நிகழ்வு கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்.எம். சம்சுதீன், சிரேஷ்ட வர்த்தகர் ஆதம்பாவா மீராசாஹிப், சிரேஷ்ட கல்விமான் ஏ.எல்.எம்.பஷீர், சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தக சங்க நிர்வாகிகள், வர்த்தகர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.

கல்முனை மாநகர சுகாதார பிரிவின் ஊழியர்கள், திண்மக்கழிவகற்றல் பிரிவின் ஊழியர்கள் சகலருக்கும், அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையை பாராட்டி இதன்போது பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பொத்துவில் பிரதேசத்தில் இன்று முழுநாளும் தொழிலாளிகளை கௌரவிக்கும் வகையில் சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தக சங்கம் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

A01.jpg

A1.jpg

A13.jpg

A1254.jpg

A54.jpg

திருகோணமலை

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே தின ஊர்வலமொன்று திருகோணமலையில் இன்று (01) இடம்பெற்றது. 

இந்த ஊர்வலத்தை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கட்சி முக்கியஸ்தர்கள் இணைந்து ஏற்பாடு செய்தனர். 'உழைப்பே உயர்வு' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த ஊர்வலமானது உவர்மலை சந்தியில் இருந்து லிங்க நகர் வரை பேரணியாக சென்றது. 

அதன் பின்னர், மே தினம் தொடர்பான கூட்டம் இடம்பெற்றது. இதன்போது பொது மக்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

20240501_161000.jpg

20240501_162558.jpg

கிளிநொச்சி

இலங்கை தமிழரசு கட்சியின் மே தின பேரணி சற்று முன்னர் பேரெழுச்சியுடன் நிறைவடைந்து.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் முன்றலில் இருந்து ஆரம்பமானது. 

இப்பேரணி தொழிலாளர்களின் அடக்குமுறைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை காட்சிப்படுத்தியதாக அமைந்தது. 

இதில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழர் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், சாந்தினி, மாகாண சபை அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம், முன்னாள் தவிசாளர்கள், தமிழரசு கட்சியின் மாதர் முன்னணியினர், இளைஞர் அணி, தொழிற்சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

IMG-20240501-WA0079.jpg

IMG-20240501-WA0081.jpg

IMG-20240501-WA0080.jpg

IMG-20240501-WA0078.jpg

IMG-20240501-WA0076.jpg

IMG-20240501-WA0077.jpg

IMG-20240501-WA0075.jpg

பருத்தித்துறை 

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்றைய தினம் (01) மே தின நிகழ்வுகளை பருத்தித்துறையில் ஏற்பாடு செய்திருந்தது.

அதன் அடிப்படையில் ஈ.பி.டி.பியின் தொழிலாளர் தின கூட்டம் பருத்தித்துறை நகரில் பருத்தித்துறை பல நோக்கு கூட்டுறவு சங்க கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் கட்சியின் ஊடக பேச்சாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தலைமையேற்றார்.

முன்பதாக மே தின நிகழ்வுகளில் ஓர் அங்கமாக யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலக முன்றலிலிருந்து அழைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களின் பிரசன்னத்துடன் வாகனப் பேரணியொன்று இடம்பெற்றது. 

இப்பேரணி யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதி வழியாக பருத்தித்துறை நகரை சென்றடைந்தது.

அதேவேளை மற்றொரு வாகன பேரணி கட்சியின் சாவகச்சேரியிலுள்ள பிரதேச அலுவலக முன்றலிலிருந்து பேரெழுச்சியுடன் ஆரம்பமாகி பருத்தித்துறையை நோக்கி சென்றமையும் குறிப்பிடத்தக்கது. 

அதன் பின்னர் பலநோக்கு கூட்டறவு சங்க கேட்போர் கூடத்தில் கூட்டம் நடைபெற்றன.

இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் உழைப்பாளர் தின செய்தி வாசிக்கப்பட்டதுடன் உறுதியும் எடுத்துக்கொள்ளப்பட்டது. 

மேலும் தொழிற்சங்ககங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

01__1_.jpg

IMG-20240501-WA0083.jpg

IMG-20240501-WA0089.jpg

IMG-20240501-WA0088.jpg

IMG-20240501-WA0086.jpg

மட்டக்களப்பு - பெரியகல்லாறு 

இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட தொழிலாளர் தின நிகழ்வு மட்டக்களப்பு பெரியகல்லாறு பிள்ளையார் ஆலய முன்றலில் இன்று புதன்கிழமை (01) நடைபெற்றது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டிருந்தனர்.

20240501_165048.jpg

20240501_165119.jpg

20240501_165116.jpg

20240501_165137.jpg

20240501_165140.jpg

IMG-20240501-WA0059.jpg

20240501_165129.jpg

கம்பஹாவில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதின கூட்டம்

 

WhatsApp_Image_2024-05-01_at_18.50.32_12

WhatsApp_Image_2024-05-01_at_18.50.31_70

WhatsApp_Image_2024-05-01_at_18.50.31_6a

WhatsApp_Image_2024-05-01_at_18.50.30_56

WhatsApp_Image_2024-05-01_at_18.50.29_ab

 

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மேதின பேரணி...

WhatsApp_Image_2024-05-01_at_18.51.59_1b

WhatsApp_Image_2024-05-01_at_18.51.59_19

WhatsApp_Image_2024-05-01_at_18.52.00_d0

WhatsApp_Image_2024-05-01_at_18.51.57_15

WhatsApp_Image_2024-05-01_at_18.51.58_09

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினப் பேரணி

WhatsApp_Image_2024-05-01_at_18.55.55_dc

WhatsApp_Image_2024-05-01_at_18.55.53_b0

WhatsApp_Image_2024-05-01_at_18.55.52_28

WhatsApp_Image_2024-05-01_at_18.55.50_ff

WhatsApp_Image_2024-05-01_at_18.55.48_96

WhatsApp_Image_2024-05-01_at_18.55.45_ba

WhatsApp_Image_2024-05-01_at_18.55.42_1f

WhatsApp_Image_2024-05-01_at_18.55.40_43

கொழும்பு கெம்பல் பார்க்கில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேதின பேரணி

WhatsApp_Image_2024-05-01_at_16.58.38.jp

SAVE_20240501_171359.jpg

WhatsApp_Image_2024-05-01_at_16.03.49.jp

WhatsApp_Image_2024-05-01_at_16.03.49__1

WhatsApp_Image_2024-05-01_at_16.03.48.jp

WhatsApp_Image_2024-05-01_at_16.03.48__1

WhatsApp_Image_2024-05-01_at_16.03.47__1

https://www.virakesari.lk/article/182408

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எமது ஆட்சியின் கீழேயே அடுத்த மே தினக்கூட்டம் - கொழும்பில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் அநுரகுமார சூளுரை

Published By: VISHNU   02 MAY, 2024 | 03:19 AM

image

(நா.தனுஜா)

முதலாளித்துவ வர்க்கத்தின் கீழ் இடம்பெறும் இறுதி மே தினக்கூட்டம் இதுவாகவே இருக்கும். அடுத்த மே தினக்கூட்டம்  தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழேயே நடைபெறும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க சூளுரைத்துள்ளார்.

அத்தோடு நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட எவருக்கும் தமது ஆட்சியின்கீழ் பொதுமன்னிப்பு வழங்கப்படமாட்டாது எனவும் அவர் நெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தலைமையில் கொழும்பில் புதன்கிழமை (மே.01) இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் பிரதான உரை நிகழ்த்தியபோதே அவர் அவர் இவ்வாறு சூளுரைத்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,

நாம் காலிமுகத்திடலை எமது மே தினக் கூட்டத்துக்காக கேட்டோம். ஆனால் அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்கவில்லை. அதேபோல் இதற்கு முன்னர் நாம் மே தினக்கூட்டங்களை நடத்திய இடங்களையாவது தாருங்கள் என கேட்டோம். ஆனால் எல்லாவற்றுக்கும் அரசாங்கம் ஒவ்வொரு காரணம் கூறி நிராகரித்தது. எனினும் இன்று நாம் நடத்திய சகல மே தினக்கூட்டங்களும் இலட்சக்கணக்கான மக்களால் நிரம்பியுள்ளது. இலங்கையில் முதல் தடவையாக ஊழலுக்கு எதிராகவும், பிரபு வர்க்கத்துக்கு எதிராகவும் பொதுமக்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி நாடளாவிய ரீதியில் துறைசார் கட்டமைப்புக்களைப் பலப்படுத்தி வருகின்றது. எதிர்காலத்தில் சட்டத்தரணிகள், பொறியியலாளர்கள், பெண் பிரதிநிதிகள், மதத்தலைவர்களுக்கான  மாநாடுகளை நடத்த நாம் ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். அதுமட்டுமல்ல, புலம்பெயர் இலங்கையர்களுடன் பல சந்திப்புகளை நாம் முன்னெடுத்துள்ளோம். வேறு எவரும் முன்னெடுக்காத வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம்.

இவை அனைத்தையும் தாண்டி சகல மக்களையும் எம்முடன் இணைத்துக்கொள்ள வேண்டும். ஏனைய கட்சிகளை இவ்வளவு காலம் நம்பியிருந்த அனைவரையும் நாம் ஒன்றிணைக்க வேண்டும். ஆனால் தற்போது சகல மக்களுக்கும் எம்மீதான நம்பிக்கை உருவாக ஆரம்பித்துவிட்டது. அதற்கு இன்றைய கூட்டம் நல்லதொரு உதாரணமாகும். நாம் எந்தவொரு நபருக்கும் எதிராக எம்மை உருவாக்கவில்லை, இது சகல மக்களையும் ஒன்றிணைத்து புதிய ஆட்சியை, புதிய யுகத்தை நோக்கிய பயணமேயாகும். அதனையே நாம் உருவாக்கப்போகின்றோம். உலகை வெற்றிக்கொள்ளும் பலமான நாடாக நாம் உருவாக வேண்டும். அதற்காக சகல மக்களும் கட்சி பேதங்களை கைவிட்டு எம்முடன் கைகோர்க்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்.

இன்று யாரைக்கேட்டாலும் திசைக்காட்டி பற்றியே பேசுகின்றனர். கருத்துக்கணிப்புகளில் மட்டுமல்ல மக்களின் கணிப்பிலும் திசைகாட்டி மீதே நம்பிக்கை அதிகரித்துள்ளது. 76 ஆண்டுகால பயணத்தை மாற்றும் நோக்கத்தில் நாம் இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளோம். இதுவரை காலம் பழைய அரசியலுக்கு பழக்கப்பட்ட சமூகமே இன்று நாட்டில் உள்ளது. இதற்கு ஒரு மாற்றம் வேண்டாமா? ஆகவே  இந்த சமூகத்தை மாற்றியமைக்கவே நாம் இந்த பயணத்தை ஆரம்பித்துள்ளோம். இதில் எமக்கு கிடைக்கும் வெற்றி சாதாரண வெற்றியாக அல்ல மிகப்பெரிய வெற்றியாக அமைய வேண்டும்.

இன்றளவிலே நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சி கண்டுள்ளது. நாட்டில் வளங்கள் விற்கப்படுகின்றன. யானைகள் உள்ளிட்ட மிருகங்கள் உயிரிழக்கின்றன. முழு இயற்கை கட்டமைப்பையும் சீர்குலைந்துள்ளது. இந்த நிலைமையிலேயே நாட்டை வைத்திருக்க வேண்டுமா? இல்லை. மாறாக நாம் எதிர்நீச்சல் அடித்து நாட்டை மீட்டெடுக்க நினைக்கிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/182446

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.