Jump to content

முல்லைத்தீவில் 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கு தவணை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 7

02 MAY, 2024 | 05:14 PM
image
 

முல்லைத்தீவில் கரியல்வயல் , சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள மக்களில் 130 நபர்களுக்கு எதிராக  வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

1908ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் பயிர் செய்து வாழ்ந்துவரும் நிலையில் குறித்த இடத்தில் உள்ள மக்கள் தம் காணிகளை துப்பரவு செய்தமையை அடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அது தமக்குரிய காணி என முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

IMG_20240502_14465251.jpg

சுண்டிக்குளம் தேசியா பூங்காவிற்குள் உட்சென்றமை , தாவரங்களை வெட்டி வெளியாக்கியமை , காணிகளை வெளியாக்கியமை, பாதைகளை அமைத்தல் மற்றும் பாதைகளை பயன்படுத்தியமை போன்ற காரணங்களை முன்வைத்து குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கானது கடந்த வருடம் 7.12.2023 அன்றையதினம் இடம்பெற்று 02.05.2024 வழக்கு தவணையிடப்பட்டிருந்தது. இதற்கமைய இன்றையதினம் குறித்த வழக்கானது விசாரணைக்காக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

IMG_20240502_14473394.jpg

வழக்கு தொடுக்கப்பட்ட மக்கள் சார்பில் சட்டத்தரணி சி.தனஞ்சயன் முன்னிலையாகியிருந்தார். இது தொடர்பாக வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது ,

இன்றையதினம் புதுக்குடியிருப்பு பகுதியிலே இருக்கின்ற கரியல் வயல் பிரதேசத்திலே வாழும் 100 மேற்பட்ட மக்களின் காணிகள் வனஜீவவராசிகள் திணைக்களத்திற்கு கீழே வருகின்ற காணிகள் என வனஜீவராசிகள் திணைக்களத்தினால் தொடரப்பட்ட வழக்குகள் இரண்டாம் தவணையாக நீதிமன்றிலே எடுத்துக்கொள்ளப்பட்டன.

IMG_20240502_14481297.jpg

இந்த வழக்கிலே சம்பந்தபட்ட மக்கள் ஏற்கனவே தனியார் காணிகளுக்கான நூற்றாண்டு உறுதி வழங்கப்பட்ட மக்களும், தனியார் காணிகளுக்கு சொந்தமான மக்களும் அரச அனுமதிபத்திரம் பெற்றமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு எதிராகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் இருக்கும் குறைபாடுகளை ஏற்கனவே நாம் சுட்டிகாட்டி இருந்தோம். அதேபோல் இன்றைய தினமும் இந்த வழக்கில் சுட்டிகாட்டியிருந்தோம்.

இந்த வழக்கு தொடர்பாக மீள் பரிசீலனை செய்து இவ் வழக்குகள் தொடர்பாக குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்ய வேண்டி இருப்பின் தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றத்தினால் வழக்கு தொடுனர் தரப்புக்கு அறிவுறுத்தப்பட்டு குறித்த வழக்கானது மூன்றாக பிரித்து வருகின்ற ஜூலை மாதம் 19 ஆம் திகதி, 25 ஆம் திகதி, 26 ஆம் திகதிகளுக்கும் தவணையிடப்பட்டுள்ளது.

IMG_20240502_14472319.jpg

https://www.virakesari.lk/article/182505

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூற்றுக்கும் மேற்பட்ட வடக்கின் பரம்பரை நில உரிமையாளர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் துறை வழக்குத் தாக்கல்

Published By: DIGITAL DESK 3

04 MAY, 2024 | 08:53 AM
image
 

காணி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் காணப்படும் காணி உரிமையாளர்களுக்கு அரச காணிகளின் பூரண உரிமையை வழங்குவதற்காக பெரும் விளம்பரத்துடன், ஜனாதிபதி "உறுமய” வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னியின் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் பத்திரப்பதிவு செய்யப்பட்ட பரம்பரை காணிகளை அரசாங்க நிறுவனம் ஒன்று கையகப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தேசிய பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்து தாவரங்களை சேதப்படுத்தியதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பங்கேற்ற புதுக்குடியிருப்பு கரியல்வயல் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர், தாம் பரம்பரையாக பயிரிட்டு வந்த காணியை வனஜீவராசிகள் திணைக்களம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் கையகப்படுத்த முயற்சிப்பதோடு, தற்போது தமக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் தெரிவித்தார்.

“83 வரை நாங்கள் வயல் செய்தோம். அதன் பின்னர் அங்கு போக முடியாமல் போய்விட்டது. பின்னர் 2010 - 2012ற்கு இடையில் நாங்கள் மீள் குடியேறிய பின்னர் காணியை துப்பரவு செய்து விவசாயம் செய்து கொண்டு வருகின்றோம். 2015இல் வனஜீவராசிகள் திணைக்களம் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இந்த காணிகள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமானது என அறிவித்தது. அதன் பின்னர் வழக்குத் தாக்கல் செய்தது.” என்றார்.

சுண்டிக்குளம் தேசிய பூங்காவிற்குள் அனுமதியின்றி பிரவேசித்தமை, பூங்காவிலுள்ள மரம், செடி, கொடிகளை வெட்டி அழித்தமை, பாதை  உருவாக்கியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், புதுக்குடியிருப்பு, கரியல்வயல் பிரதேச மக்கள் 130 பேருக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களம் தாக்கல் செய்த வழக்கு, இரண்டாவது தடவையாக கடந்த மே 2ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் காரணமாக 80களின் முற்பகுதியில் தமது கிராம நிலங்களை விட்டு வெளியேறிய கரியல்வயல் கிராமத்தின் 130 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் தமது சொந்த கிராம நிலங்களுக்குத் திரும்பி, பரம்பரையாக பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்திய சுமார் 980 ஏக்கர் காணியில் சுமார் 610 ஏக்கர் நிலப்பரப்பை சுத்தப்படுத்தி விவசாய உற்பத்திகளை ஆரம்பித்ததாக தெரிவிக்கின்றனர்.

2015ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் குறித்த காணி வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமானது என அறிவித்து, அதனைத் தொடர்ந்து குறித்த கிராம மக்கள் மீது நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 07ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதோடு, வழக்கு 2024ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் திகதிக்கு  நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

வனஜீவராசிகள் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட 130 பேரில் 100க்கும் மேற்பட்டோர் தங்கள் நிலத்திற்கான உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை வைத்துள்ளதாக, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மே 2ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி வி. எஸ். தனஞ்சயன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

“இந்த வழக்குடன் தொடர்படைய மக்கள் ஏற்கனவே தனியார் காணிகளுக்கான, அதாவது பிரிடிஷ் உறுதி என அழைக்கப்படுகின்ற நூற்றாண்டுக்கு முற்பட்ட உறுதி வழங்கப்பட்ட மக்களும், தனியார் காணிகளுக்கு சொந்தமான மக்களும், அரச அனுமதிபத்திரம், எல்டிஓ அனுமதிப்பத்திரம் (LDO - Land Development Ordinance) பெற்ற மக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு எதிராகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இருக்கும் குறைபாடுகளை ஏற்கனவே நாம் சுட்டிகாட்டி இருந்தோம். அதேபோல் இன்றைய தினமும் இந்த வழக்கில் குறைகளை சுட்டிகாட்டியிருந்தோம்.

நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதவான், குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்ய வேண்டி இருப்பின் தாக்கல் செய்யுமாறு, வழக்கு தொடுனர் தரப்புக்கு அறிவித்ததாக சடடத்தரணி வி. எஸ். தனஞ்சயன் தெரிவிக்கின்றார்.

"குறித்த விடயங்கள் தொடர்பாக மீள் பரிசீலனை செய்து, இந்த வழக்குகள் தொடர்பாக,  குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்ய வேண்டி இருப்பின் தாக்கல் செய்யுமாறு, நீதிமன்றத்தினால் வழக்கு தொடுனர் தரப்புக்கு அறிவுறுத்தப்பட்டு குறித்த வழக்குகளில் ஒரு பகுதி வழக்குகள் எதிர்வரும் ஜுலை 25ஆம் திகதிக்கும், இதர திகதிகளுக்கும் தவணையிடப்பட்டுள்ளது."

மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, தொல்பொருள் திணைக்களம், வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்கள் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் காணிகளை பலவந்தமாக சுவீகரிப்பதாக தொடர்ந்தும் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை வலுக்கட்டாயமாக சுவீகரிப்பது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, 1985ல் வனத்துறை உருவாக்கிய வரைபடத்திற்கு அமைய செயற்பட  வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்ததாக, தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், 2023ஆம் ஆண்டு மே மாதம் தெரிவித்திருந்தார்.

https://www.virakesari.lk/article/182630

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மீண்டும் மோடி அறுதிப் பெரும்பான்மை யுடன் ஆட்சியமைக்க போகின்றார் போல் இருக்கிறது... தமிழகத்தின் exit poll முடிவுகள் எதிர்பார்த்த முடிவுகளைத் தான் கூறுகின்றன. வரும் செவ்வாய் எல்லாம் தெரிந்து விடும்.
    • இலங்கை அணியில் விசயகாந்த் போல இவரும் யாராவது காயப்பட்டால் அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்
    • ஒரு மூடன் கதை சொன்னால்; கோத்தாவின் ‘சதி’ - ஆதிரன்   மார்ச் மாதம் ஆறாம் திகதி புதன்கிழமை முன்னாள் இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சே தனது எக்ஸ் தளத்தில் பின்வருமாறு பதிவிட்டிருந்தார். ‘‘நாளை வியாழன் 07 மார்ச் 2024 முதல் ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி என்ற எனது புத்தகம் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் முன்னணிப் புத்தகக் கடைகளில் கிடைக்கும். இது சர்வதேச ரீதியில் அனுசரணை வழங்கப்பட்ட ஆட்சிமாற்ற நடவடிக்கையின் ஒரு நேரடி அனுபவம்’’ நூல் வெளியீட்டு விழாவென எந்தக் கொண்டாட்டமுமில்லை. ‘கோத்தா இப்போது ஜனாதிபதியாயிருந்தால் இந்தப் புத்தக வௌியீட்டு விழாவை வெகுவிமரிசையாகக் கோலாகலமாக ஒரு பெருந்திருவிழாவாகக் கொண்டாடிக் கழித்திருப்பார்’ என ஒரு நண்பர் எனக்குச் சொன்னார். ‘‘கோத்தா இப்போது ஜனாதிபதியாயிருந்தால் இந்தப் புத்தகத்தையே  எழுதியிருக்கமாட்டார்’’ என நான் சொன்னேன். கோத்தாவின் ‘சதி’ அவர் பதிவிட்டிருந்தபடியே மார்ச் 7 காலையிலிருந்து இலங்கையின் புத்தக விற்பனை நிலையங்களில் கொள்வனவு செய்யக்கூடியதாக இருந்தது. ஆங்கிலப் பதிவு 180 பக்கங்களில் 1800 ரூபாய்க்கு (இலங்கை விலை) விற்பனை செய்யப்பட்டது. ‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வௌியேற்றுவதற்கான ’சதி’ எனத் தலைப்பிடப்பட்டிருந்ததுடன் ‘சதி’  என்பது  (The Conspiracy) பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்டிருந்தது. கோத்தாவின் முகத்தரிசனத்துடன் ‘சர்வதேச ஆதரவுடன் ஆட்சி மாற்றம் எவ்விதம் ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கியது’ எனும் நீண்ட வாசகமும் அட்டையில் இடம்பெற்றிருந்தன. கோத்தாவின் சதியானது 15 அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது.   அறிமுகம், 2. வௌித்தரப்புகளின் தப்பெண்ணங்கள், 3. 2019 இல் பொருளாதாரம் 4. உலகளாவிய கொவிட் – 19 தொற்றுநோய் 5. பொருளாதார வீழ்ச்சியைச் சமாளித்தல் 6. முதலில் வாழ்வது – தடுப்பூசி இயக்கம் 7. அரசியல் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை 8. கைவிடப்பட்ட அந்நிய நேரடி முதலீடு மற்றும் இயற்கை விவசாய முயற்சிகள் 9. பற்றாக்குறை வரிசை மற்றும் கும்பல் வன்முறை 10. ஐந்தாவது கட்டுரையாளர்களால் ஸ்திரமின்மை 11. கடினமான பொருளாதாரக் கொள்கை 12. தவறான கட்டுமானங்கள் 13. அரசியல் ஆட்சி மாற்றம் 14. சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றம் சீர்குலைவு, 15. பின்குறிப்பு இலங்கையின் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஆறாவது ஜனாதிபதியாக 69 24 255 வாக்குகள் (52.25) பெற்று 16 நவம்பர் 2019 அன்று கோத்தாபய ராஜபக்ச தெரிவானார். முன்னாள் இராணுவ அதிகாரியும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தாபய ராஜபக்சே தனக்கு முன்னர்  பதவி வகித்திருந்த ஜனாதிபதிகளைப் போலன்றி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அநுராதபுரத்தின் ருவான்வெலிசாய விகாரையில் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்தார். சிங்கள மன்னனாகக் குறிப்பிடப்படும் துட்டகைமுனுவினால் தோற்கடிக்கப்பட்ட தமிழ் மன்னனாகக் குறிப்பிடப்படும் எல்லாளனின் சமாதியும் இங்கே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பதவியேற்பு நிகழ்ந்து இரண்டரை வருடங்களும் இரண்டு மாதங்களும் கடந்திருந்த நிலையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சே இலங்கையிலிருந்து தப்பித்து விமானப்படை விமானத்தில் ஏறி 13 ஜூலை 2022 அன்று மாலைதீவில் இறங்கினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சிங்கப்பூரில் இறங்கி 14 ஜூலை 2022 அன்று அங்கிருந்து தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துவிட்டதாக  இலங்கை நாடாளுமன்றச் சபாநாயகருக்கு மின்னஞ்சல் அனுப்பினார். இதுதான் கோத்தா ‘சதி’ யெனக் குறிப்பிடுவதன் முன்கதைச் சுருக்கமாகும். இந்தச் ‘சதி’ வௌியீடு குறித்த மிகக் குறிய கால அறிவிப்பு மற்றும் வௌியீட்டுக்கெனப் பிரத்தியேகமான விளம்பரப்படுத்தல் இல்லாதிருந்த நிலையிலும் அமோகமாக விற்பனையாகியுள்ளது. மிகப் பெரும்பாலான புத்தகக் கடைகளில் ‘சதி’ விற்றுத்தீர்ந்துவிட்டது. அடுத்த சதியின் பிரதிகள் வாரஇறுதிக்குள் விற்பனைக்கு வந்து புத்தக அலுமாரிகளை நிரப்பும் என்றெதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தச் சதியை ‘நெட்பிளிக்ஸ்’ ஒரு திரைப்படமாக எடுக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் திரைக்கதை தயாராகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மெய்யாகவே சிறுபிள்ளைத்தனமாகப் புனையப்பட்டிருக்கும் இந்த மிகச் சாதாரணமான புத்தகத்திலிருந்து ஒரு திரைப்படத்தை எடுத்து அதை ஒரு பிளாக்பூஸ்டர் ஆக்க வேண்டுமென்றால் லோகேஷ் கனகராஜாலும் முடியுமோ தெரியவில்லை. கோத்தாவாக அவரே நடிக்கலாம். அவர் நடிப்பதற்கு வெட்கப்பட்டு மறுத்தால் தமிழகக் கவர்னர் ஆர்.என்.ரவியைக் கேட்டுப் பார்க்கலாம். அவர் வாய்மொழியாலும் உடல் மொழியாலும் கோத்தாவுக்கு எல்லாவிதத்திலும் மிகப் பொருத்தமாகவேயிருப்பார். கோத்தாவின் சதியைப் பற்றிய சுருக்கம் என்னவென்றால் சதி மற்றும் கும்பல் வன்முறை மூலமாக ஆர்வங்கொண்டிருந்த வளித்தரப்புகளின் ஆதரவு, அனுசரணை மற்றும் இலங்கைச் சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினரின் பங்கேற்புடன் ஜனநாயக அடிப்படையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபயை வௌியேற்றிய கதையாகும். கோத்தாவின் முன்னாள்  தீவிரவிசுவாசியும் சகபாடியுமான விமல்வீரவன்ஸ‘ மறைக்கப்பட்ட ஒன்பதுகதைகள்’  எனும் தலைப்பில் இதற்கு முன்னோடியாக ஒரு புத்தகத்தை வெளியிட்டிருந்தார். 2022 காலப்பகுதியில் கோத்தாவின் ஆட்சியைக் கவிழ்த்த ‘அரகலயப் போராட்டம் வெளிநாட்டுச் சக்திகளின் ஆதரவோடு முன்னெடுக்கப்பட்டதாகவும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இந்த ஆட்சிமாற்றத்துக்குத் திட்டமிட்டவர் எனவும் விமல் வீரவன்ஸ மேற்படி தனது நூலில் குற்றஞ்சாட்டியிருந்தார். அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இந்தக் குற்றச்சாட்டை உடனடியாகவே மறுத்திருந்தார். இந்தநிலையில் விமல் வீரவன்ஸவின் புத்தகத்தில் சுமத்தப்பட்டிருந்த இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மேலும் விரிவாகத் தெளிவுபடுத்தி முன்வைக்குமொன்றாகக் கோத்தாவின் சதி இருக்குமென எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக கோத்தாவின் சதியானது ஒரு சாதாரண மறுபரிசீலனையாகவிருந்தது. சதியை வலுப்படுத்துவதற்கான வெளிப்படையானதும் உறுதியானதுமான ஆதாரமொன்றையும் முன்வைக்கவில்லை. அமெரிக்காவைவோ அல்லது வேறு எந்தவொரு நாட்டையுமோ நேரடியாகச் சுட்டிக்காட்டவில்லை. அமெரிக்கா முன்னெடுத்திருந்ததாகக் கருதப்படும் சர்வதேசச் சதித்திட்டம் பற்றிய பரபரப்பு புத்தகத்தின் எந்தவொரு பக்கத்திலும் துலங்கவில்லை. உண்மையில் இந்த விடயத்தில் கோத்தாவைக் காட்டிலும் விமல் வீரவனஸ சிறப்பாகவும் வௌிப்படையாகவும் சதியை வலுப்படுத்தியுள்ளார் எனக் குறிப்பிடலாம். எனினும் கோத்தாவின் சதி சுவாரசியமான சங்கதிகள் நிறைந்திருக்கும் ஒரு புத்தகம்தான். இலங்கை அரசியலின் முக்கியமான ஆய்வாளரெனக் கருதப்படும் டி.பி.டி.எஸ்.ஜெயராஜ் இந்தப் புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘பாம்புக்கு வலி ஏற்படாமலும் குச்சிமுறியாமலும் பாம்பை அடிப்பது என்று ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு. கோத்தாவின் புத்தகம் அத்தகையதொரு நடவடிக்கை’ எனக் கூறுகிறார்.   அநியாயமான ஆட்சி மாற்றத்தில் விளைந்ததாகக் கூறப்படும் சர்வதேச்ச் சதியைப் பற்றி ஒரு புத்தகத்தில் வழமையாக எதிர்பார்க்கப்படும் கனதியைக் கோத்தாவின் சதி கொண்டிருக்கவில்லை. பொதுவாகவே இத்தகையதொரு  சதியால் பாதிப்புக்குள்ளான ஒரு நிரபராதி அநீதியைக் கண்டு கொதிப்படைவார். கோத்தா அத்தகைய ஒருவரல்லர் அதனால் அவர் எழுதிய சதி வடிகட்டிய முட்டாள்தனத்தின் வெளிப்பாடாகவேயுள்ளது. கோத்தா சிறிலங்காவின் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட 2019 நவம்பர் தொடங்கி பதவியிலிருந்து விலகிய 2022 ஜூலை வரைக்குமான அவரது ஆளுகைக் காலத்தில் மோசமானதும் ஊழல் நிறைந்ததுமான நிர்வகிப்பினையே செய்திருந்தார். அவர் பெருந்திமிர்பிடித்தவராகவும் அரசியல் விவகாரங்களைக் கையாள்வதில் திறனற்றவராகவுமே இருந்திருக்கிறார். எனினும் தனது குறைபாடுகளையோ வடிகட்டிய முட்டாள்தனத்தையோ உணர்ந்து ஒப்புக்கொள்ளாமல் இந்தச் சதி என்ற கோட்பாட்டை முன்வைத்து அதன்பின்னால் மறைந்து நின்று சுயபச்சாதாபத்தில் மூழ்கிவிட எத்தனிக்கிறார். கோத்தா தனது பதவி விலகலுக்கு மற்றவர்களைக் குற்றஞ்சாட்டினாலும் ஒரு கத்தியை வெளிப்படையாகவே கத்தி என எடுத்துக் காட்ட விரும்பாதவராகவோ அல்லது இயலாதவராகவோ இருக்கிறார். அவர்  தன்னை வீழ்த்தியதாகத் தனக்கெதிராகப் பெரும் சதித்திட்டம் தீட்டியதாக எந்தவொரு மேற்கத்திய அல்லது கிழக்கத்திய நாட்டையோ வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. அவர் தனது குடும்ப உறுப்பினர்களையோ கட்சி சகாக்களையோ குறைகூறவில்லை. பாதுகாப்புத் துறை அல்லது ஆயுதப்படைகளின் முக்கியமான அதிகாரிகளை விமர்சிக்கவுமில்லை. ஆனால் அவர்கள் அனைவரைப் பற்றியும் டி.பி.எஸ்.ஜெயராஜ் சொன்னதைப்போல பாம்புக்கு வலிக்காமலும் குச்சி முறியாமலும் பாம்பை அடிக்க எத்தனிப்பதுபோல் குறிப்பிடவே செய்கிறார். புலம்பெயர்ந்த புலிகளுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்போதுதான் கோத்தா கடுஞ்சினமுற்றுக் கடுமையாகத் தாக்குதல் நிகழ்த்துகிறார். ஆனால் அதுவும்கூட ஓர் அர்த்தமற்ற தாக்குதல்தான். புலம்பெயர்ந்த தமிழர் என வரும்போது அவர்களிலும் ஒரு தீவிரமான தீவிரவாதப் பிரிவினர் இயங்கி வருகின்றனர். அவர்கள் நிச்சயமாக இலங்கை சீரழிந்து சிதறிச் சின்னாபின்னமாக வேண்டுமென்பதில் பெருவிருப்புடையவர்கள். அவர்கள் என்றைக்குமே கோத்தா சிறிலங்காவின் ஜனாதிபதியாகத் தொடர்ந்திருப்பதையே பெரிதும் விரும்புவார்கள். ஏனெனில் அவர் ஜனாதிபதியாக இருந்தால்தான் அவரது மோசமான திறனற்ற நிர்வாகத்தின் கீழ் இலங்கை வேகமாகப் பொருளாதார வீழ்ச்சி அடையும், ஊழல் பெருகும். சிறுபான்மையினங்கள் மேலும் பிரிக்கப்படும். மெய்யாகவே அப்புலம்பெயர் தீவிரவாத வகுப்பினர் இலங்கையின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையவிடாமல் இக்கட்டான நேரத்தில் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டு நாட்டை மீட்சிக்கான பாதையில் இட்டுச் செல்வதற்காக ரணில் விக்கிரமசிங்கே மீதுதான் கோபம் கொண்டிருக்கின்றனர். மனைவி அனோமாவுடன் அமெரிக்காவுக்குச் சென்று தனது மகன், மருமகள், பேரக்குழந்தை ஏனைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இருக்க வேண்டுமெனக் கோத்தா விரும்புகிறார். எனவே அவர் சதி என்ற இந்தப் புத்தகத்தில் குற்றச்சாட்டுகளை அடுக்கி வாஷிங்டனைப் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. இப்போது தீவிர அரசியலுக்கு வரவேண்டும் என்ற கனவில் மிதந்து கொண்டிருக்கும் கோத்தா இதற்காகத் தனது ராஜபக்சே வம்சத்தையும் கட்சியையும் பௌத்த மதகுருமார்களையும் ஆயுதப் படைகளையும் குற்றஞ்சுமத்தி அந்நியப்படுத்திவிட முடியாத சங்கடத்துடனேயே இந்தச் சதியை எழுதியிருக்கிறார். 2022 ஆரம்பித்தபோது இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்குள்ளானது. உணவு, எரிபொருள் இரண்டுக்குமே கடும் பற்றாக்குறை நிலவியது. எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மற்றும் எரிவாயுக் கொள்கலன்கள் விற்பனை நிலையங்களின் முன்பாக வரிசையில் நிற்கும் நிலை தன்னியல்பாகவே உருவானது. இந்த வரிசை பல கிலோ மீட்டருக்கு நீண்டிருந்ததென்பது மட்டுமல்லாமல் இரவு பகலாகத் தொடர்ந்தது. இதன் விளைவாக அரகலய என்ற பெயரில் ஜனாதிபதி கோத்தாவுக்கெதிராக மாபெரும் மக்கள் எதிர்ப்பு இயக்கம் ‘வீட்டுக்குச் செல் கோத்தா’ என்ற கோஷத்துடன் (Go home koththa) உருவெடுத்தது. இந்த அரகலய இயக்கம் ‘மிரிஹான’விலுள்ள கோத்தாவின் வீட்டைச் சுற்றிவளைத்து முற்றுகையிட்டபோது பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்னவும் முப்படைத் தளபதி சவேந்திரசில்வாவும் ஒரு திருமண வைபவத்தில் கலந்துகொண்டிருந்த நிலையில் அவர்களுக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டபோது அவர்களிருவருமே உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகவும் இதுவொரு திட்டமிட்ட செயல் எனவும் கோத்தா இந்தப் புத்தகத்தில் குறிப்பிட முனைகிறார். மேலும் இந்தத் தகவல் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சலேக்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் உடனடியாகக் கோத்தாவின் ‘மிரிஹான’ வீட்டுக்கு வந்து பார்த்தபோது அரகலய இயக்கத்தினர் சில நூறுபேர் வரை மட்டுமேயிருந்தனர். அதை உளவுப் பிரிவுத் தலைவர் திருமண வைபவத்தில் கலந்துகொண்டிருந்த அவ்விரு அதிகாரிகளுக்கும் வீடியோ கால் மூலம் காட்டியிருந்த நிலையிலும் அவர்கள் அதற்கும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என இந்தப் புத்தகத்தில் குற்றஞ்சுமத்த வந்த கோத்தா முடிவில் அவ்விரு அதிகாரிகளுக்குமிடையில் நல்லுறவில்லாமலிருந்ததும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததற்கு ஒரு காரணம் எனப் பூசிமெழுகி அவர்களையும் தனது குற்றச்சாட்டுகளிலிருந்து மென்மைப்படுத்திப் பாதுகாக்கவும் முயன்றிருக்கிறார். இப்புத்தகத்தில் தன்னை ஜனாதிபதி பதவியிலிருந்து விலக்குவதற்குச் சதி செய்தவர்களைப் பற்றிச் சொல்ல வந்த கோத்தா அந்த விடயத்தையே (கருவையே) பேசாமல் தவிர்த்து மாறாக அதற்கெல்லாம் நியாயங் கற்பிக்கவே முனைந்திருக்கிறார். கோத்தா இதுவரையில் தனக்கெதிராக முன்வைக்கப்பட்டு வரும் உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் (ஈஸ்டர் தாக்குதல்), சீனி மற்றும் எண்ணெய் மோசடி, அசேதன உரத்தின் இறக்குமதியைத் தடை செய்து விவசாயிகளை நெருக்கடிக்குள்ளாக்கியது போன்ற குற்றச்சாட்டுகளை இப்புத்தகத்தில் குறிப்பிடவேயில்லை. கொரோனா இலங்கையில் உச்சமடைந்திருந்த காலத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி மரணமுற்ற முஸ்லிம் மக்களின் உடல்களை எரித்த விடயம் நாடளாவிய ரீதியில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியிலும் கடுங்கண்டனத்துக்குள்ளாகியிருந்தது. அவ்விடயத்தைப் பற்றிக் கோத்தா இப்புத்தகத்தில் குறிப்பிடும்போது கொரோனா இறப்புகளின்போது முஸ்லிம் உடல்களை எரித்த விடயத்தில் எனக்கு எந்தப் பங்கும் கிடையாது. அதற்கு மருத்துவர்கள் வழங்கிய ஆலோசனைதான் காரணமாக இருந்தது. தனிப்பட்ட ரீதியில் நான் கொரோனாத் தொற்றால் மரணமான முஸ்லிம் உடல்களை எரிப்பதை விரும்பவில்லை. இந்த விடயத்தில் குறிப்பாகப் பேராசிரியர் மித்திகா விதானகே வழங்கியிருந்த ஆலோசனைப்படிதான் அவ்வுடல்கள் எரிக்கப்பட்டன’ எனக் கூறியிருக்கிறார். இவ்விடயத்திலும் கோத்தா தன்னை விடுவித்துக்கொள்ள முனைகிறார். (பேராசிரியர் மித்திகா இப்போது அவுஸ்திரேலியாவில் போய் குடியேறிவிட்டார்)கோத்தா தனது ஆட்சிக்காலத்தில் மிகச் சிறப்பாக நடந்ததொரு நிகழ்வாக கொவிட் தொற்று உச்சமடைந்திருந்தபோது அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயலாற்றியிருந்ததைப் பற்றி இப்புத்தகத்தில் முக்கியத்துவமளித்து தன்னை ஒரு கதாநாயகனாகக் காட்டிக்கொள்ளும் அதேவேளை கொவிட் தடுப்புத் தொடர்பில் ஜனாதிபதி செயற்பாட்டு மையத்தின் தலைவராக இருந்து அதற்காகக் கடுமையாக உழைத்துச் சிறப்பாகச் செயலாற்றியிருந்த படைத்தளபதி சவேந்திர சில்வாவைப் பற்றி ஒரு வார்த்தையேனும் குறிப்பிடவில்லை. கொவிட் தொற்று உச்சமடைந்திருந்த காலத்தில் சவேந்திர சில்வாவின் சிறப்பான செயலாற்றுகை குறித்து ஊடகங்கள் அப்போது முக்கியத்துவப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்தப் புத்தகத்தைக் கோத்தா எழுதி வௌியிட்டிருப்பதன் பிரதான நோக்கமே தனது ஆட்சிக்காலத்தில் நேர்ந்த அனைத்துத் தவறுகளுக்கும் தன்னால் பொறுப்புக் கூறமுடியாது. அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவனும் நானல்ல என்பதையும் அதற்குப் பல்வேறு நியாயங்களையும் முன்வைத்துத் தவறுகளை மற்றவர்கள் தலையில் சுமத்தித் தன்னையொரு புனிதராக முன்னிலைப்படுத்திக் கொள்வதேயாகும். ஒரு வகையில் தனக்குக்கீழ் பணியாற்றிய அதிகாரிகளை செயற்றிறனற்றவர்கள், அந்தந்தப் பணிகளுக்குப் பொருத்தமற்றவர்கள் எனச் சொல்ல வருகிறார். அந்த அதிகாரிகளைத் தெரிவு செய்து பணிக்கமர்த்தியவர் அவர்தானே. செயற்றிறனற்ற பொருத்தமற்ற அதிகாரிகளைத் தெரிவு செய்து பணிக்கமர்த்தியவர் என்ற அடிப்படையில் கோத்தாதானே அவ்விதம் நேர்ந்த தவறுகளுக்கு தார்மீக ரீதியாகப் பொறுப்புக்கூறியாக வேண்டும். இந்தத்  தப்பித்தலானது கோத்தாவின் ஆளுமை மற்றும் முகாமைத்துவ வழிநடத்தல் தவறானது என்பதையே மறைமுகமாக எடுத்துக்காட்டுகிறது. இதிலிருந்தே கோத்தா தன்னை நாட்டை வழிநடத்தப் பொருத்தமற்றவரென இப்புத்தகத்தில் அடையாளங்காட்டுகிறார். இலங்கையிலுள்ள ரஷ்யத் தூதுவர் ‘தனக்கெதிரான சர்வதேசச் சதி’ என்று புத்தகம் எழுதிய உங்கள் சகோதரன் கோத்தா அந்தச் சதிகாரர்கள் பற்றி ஏன் புத்தகத்தில் நேரடியாகச் சொல்லாது மறைத்திருக்கிறார். அது ஏன்?’ என கோத்தாவின் செய்தித் தொடர்பாளர் உதயங்க வீரதுங்கவிடம் கேட்டிருக்கிறார். ரஷ்யத் தூதுவரின் இந்தக் கேள்வியை உதயங்க வீரதுங்க கோத்தாவிடம் கேட்டபோது அவர் ‘நான் ஒரு முன்னாள் ஜனாதிபதி. இந்த நிலையில் நான் எப்படி அவர்களின் பெயர்களை புத்தகத்தில் குறிப்பிடமுடியும்’’ என உதயங்கவிடம் கேட்டிருக்கிறார். இதிலிருந்து கோத்தா அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் மீது இன்னும் அச்சத்துடன்தானிருக்கிறார் என்பது புலனாகிறது. இந்த நிலையில் ‘கோத்தா இந்தச் சதியை எழுதி வெளியிட்டிருக்க வேண்டியதில்லை. இதைத் தவிர்த்திருந்தால்  அவருக்கு அது ஆரோக்கியமாக இருந்திருக்கும்’ எனச் சொல்கின்ற அவரது உறவினர்களே இதற்காக அவரை இப்போது மறைமுகமாக விமர்சித்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த வாரம் டெய்லி மிரர் நாளிதழ் கோத்தாவின் சகோதரர் பஸில் ராஜபக்சவை நேர்காணல் செய்தபோது ‘உங்கள் மூத்த சகோதரரான முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய’ ராஜபக்சே எழுதிய புத்தகத்தை நீங்கள் படிக்கவில்லை என்று கூறினீர்கள். நீங்கள் அதிகம் படிக்கும் அரசியல்வாதி என்பது எமக்குத் தெரியும். இந்தப் புத்தகத்தை நீங்கள் ஏன் படிக்கவில்லை?’’ என்ற கேள்விக்கு பஸில் ராஜபக்சே, ‘‘புத்தகம் எனக்குக் கிடைக்கவில்லை. அதைப் படிக்கவில்லையென நான் கவலைப்படவுமில்லை. அவரது புத்தகத்தை இப்போது நான் படிக்க வேண்டிய அவசியமுமில்லை. ஏனெனில் உள்ளடக்கம் , பத்திரிகையாளர்கள் மூலம் எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது’’ எனப் பதிலளித்திருந்தார்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-may-2024-aathiran-article-07/
    • ஒரு வித்தியாசமான கோணத்தில் விடயங்களை அணுகுகிறீர்கள், இதுவும் ஒரு நல்ல கருத்துதான், ஆனால் நடைமுறையில் இலங்கை அரசு மிக தெளிவாக புலிகளை அழிப்பதில்தான் கடந்தகாலத்தில் அக்கறை காட்டி வந்துள்ளது. புலிகள் பிரேமதாசா பேச்சுவார்த்தை நடைபெற்ற பொது இந்திய இராணுவம் வெளியேறிய பின் நல்லூர் கோயிலுக்கு சென்ற புலிகளின் தலைவரது துணைவியாரை பின் தொடர்ந்து புலிகளின் தலைவரின் இடத்தினை அறிந்து அவரை கொல்லும் முயற்சி புலிகளால் முறியடிக்கப்பட்டிருந்தது. இரணில் விகிரமசிங்க அவ்வாறு செய்ய மாட்டாரா என தெரியாது, பிரேமதாச புலிகளுக்கு இந்திய இராணுவத்திற்கெதிராக போராடுவதற்காக அனுப்பிய பார ஊர்திகளில் ஒரு பார ஊர்தி முழுவதுமாக புலிகளின் தலைவரின் பிள்ளைகளுக்கான விளையாட்டு பொருள்களை பிரேமதாசா வழ்ங்கியிருந்தார் என கேள்விப்பட்டிருந்தேன். ஒரு பக்கம் நட்புறவு கொண்டாடிக்கொண்டே மறுபுறம் கொல்ல ஆள் அனுப்புவதில் அவர்கள் கில்லாடிகள்.
    • ஏ.ஆர்.ரஹ்மான் இப்படித்தான் தம் இசையை உருவாக்குகிறார்: இசையமைப்பாளர் தாஜ் நூர் மே 2024 - Uyirmmai Media · சமூகம் 2009ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ’ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் இசையமைத்திருந்தார். ஏஆர் ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது பெற்றுத்தந்த ‘ஜெய்ஹோ’ பாடலை அவர் கம்போஸ் செய்யவில்லை என்று இயக்குநர் ராம்கோபால் வர்மா சொல்வது, எதன் அடிப்படையில் சொல்கிறார் என்பது புரியவில்லை. பாடகர் சுக்விந்தர் சிங் அப்போது ஒரு பாடகர் மட்டும்தான். அந்தப் படத்தினுடைய கதையின் சூழல் என்ன என்பது எதுவுமே அவருக்குத் தெரியாது. படத்தினுடைய இயக்குநருக்கும் இசையமைப்பாளருக்கும்  உண்டான ஒரு கருத்துப் பரிமாற்றம் அது. அப்படி இருக்கும்போது அந்த மெட்டைப் பாடகர் சுக்விந்தர் சிங் போட வாய்ப்பே இல்லை. ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் இடம்பெற்ற ‘ஜெய்கோ’ பாடலுக்கு ஏ. ஆர். ரகுமான்தான் மெட்டு அமைத்தார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். பாடகர் சுக்விந்தர் சிங் ஏ.ஆர் ரஹ்மானின் இசை கூடத்திற்கு வாய்ப்புத் தேடி வந்தவர். அதன் பின்பு சென்னையில் அவர் தங்கியிருந்து ட்ராக் பாடுவதை வழக்கமாக்கிக்கொண்டார். அந்த நேரங்களில் நானும் அவரும் நல்ல நண்பர்கள். என் இருசக்கரவண்டியில் சென்னையில் சில இடங்களுக்குச் செல்வது வழக்கம். இச்சூழலில் ’சைய்யச் சைய்ய’ பாடலைப் பாட இவருடைய குரல் பொருத்தமாக இருக்கும் என்று ஏ.ஆர் ரஹ்மானும் இயக்குநர் மணிரத்னமும் முடிவெடுத்தார்கள். அவரே தமிழில் பாடினால் சிறப்பாக இருக்கும் என்று முடிவு செய்த பிறகு அவருக்குத் தமிழ் சரியாக உச்சரிக்க வரவில்லை. அந்த நேரத்தில் பாடகர் பாலக்காடு ராமுடன் இணைந்து இவரைப் பாட வைத்து, உச்சரிப்பில் ஏற்படக் கூடிய சில தவறுகளைச் சரி செய்து இவர்கள் இருவரையும் பாட வைத்து அந்தப் பாடல் வெளியானது. பாடகர் சுக்விந்தர் சிங் பஞ்சாபி என்பதால் கிட்டத்தட்ட அந்தப் பாடலை நாங்கள் முழுமையாகப் பதிவு செய்வதற்கு ஒரு மாத காலத்திற்கு மேல் ஆனது. கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி மெருகேற்றி அவரைப் பாட வைத்தோம். பாடகர் சுக்வித்தர் சிங் இங்கு ஏ. ஆர். ரகுமான் அவர்களுடைய இசைக் கூடத்தில்தான் தன்னை ஒரு இசைக்கலைஞனாக வளர்த்துக்கொண்டார். பாடகர் சுக்விந்தர் சிங் ஒரு மிகப்பெரிய பாடகராக வளர்ந்த விதம் இதுதான். இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் அவர்களோடு நான் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்துள்ளேன். அந்த அடிப்படையில் எனக்கும் அவருக்குமான உரையாடல்கள், நான் அவரிடம் பெற்ற இசை அனுபவங்கள், அவர் இசையமைக்கும் விதம், அவர் இயக்குநர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் பாடகர்களோடு அணுகும்முறைகள் இது சார்ந்து சில பதிவுகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இதுநாள்வரை இல்லாமல், சமீபகாலமாக ஏ.ஆர். ரஹ்மான் பற்றிச் சில உண்மையற்ற கருத்துகள் சமூகத்தளங்களிலும், மக்களிடத்திலும், ஊடகங்களிலும் பரவி வருவதைப் பாக்கும்போது வருத்தமாக இருக்கிறது. உண்மையற்ற விமர்சனங்களுக்கு அவர் பொருத்தமானவர் இல்லை. ஏனென்றால் அவர் இசைத்துறையில் பல புதுமைகளைச் செய்தவர். அதனை அவருடன் பணியாற்றும் பொழுது உணர்ந்துள்ளேன். அதுமட்டுமின்றி உலக அளவில் இருக்கக்கூடிய இசைக் கருவிகள், புதுவிதமான ஒலி அமைப்புகள் மற்றும் ஓசைகளைத் தமிழ்த் திரைப்படங்களிலும், இந்தியத் திரைப்படங்களிலும் அறிமுகப்படுத்தினார். இசைத் துறையில் இருக்கக்கூடிய தொழில் நுட்பங்களையும் இசை மென்பொருள்களையும் பயன்படுத்தி ஒரு நவீன இசை வடிவத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தி, மக்களுக்குப் புதிய இசையனுபவத்தைக் கொடுத்தார். இசைமென்பொருள் தயாரிக்கக் கூடிய நிறுவனமான Vienna instruments என்ற நிறுவனம் ஏ. ஆர். ரகுமான் அவர்களிடம் ஆலோசனைகள் கேட்டு ஒரு சில மென்பொருள்களை உருவாக்கினார்கள். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பாக Performance tool என்னும் மென்பொருள் இவருடைய கருத்திற்காகக் காத்திருந்தது. Performance tool மென்பொருள் என்னவென்றால், கணினி இசையை வரையறை செய்யப்பட்ட தொகுப்பு. இந்த மென்பொருளின் சிறப்பு என்னவென்றால் மனிதனுடைய மூளையில் எழக்கூடிய கற்பனையினை உணர்ந்து அந்தக் கற்பனையை இந்த இசை மென்பொருள் கணித்து அதற்கேற்ற மாதிரியாகத் தன்னை மாற்றி இசைக் கலைஞனின் மூளையில் ஏற்படும் கற்பனைக்கு ஈடு கொடுக்கக்கூடிய ஒரு மென்பொருள். ஓர் இசையமைப்பாளர் இசை குறியீடுகளை எப்படி இசை வடிவமாக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்பதினை இந்த இசை மென்பொருள் உள்வாங்கித் தரக்கூடிய அளவிற்கு மேன்மைப்படுத்தப்பட்ட மென்பொருள். இதில் ஏ.ஆர். ரகுமான் அவர்களுடைய ஆலோசனை மற்றும் கருத்து என்னவென்று கேட்க அந்த மென்பொருள் நிறுவனம் காத்திருந்தது. மிகக் குறிப்பாக அயல்நாடுகளில் இருக்கக்கூடிய இயக்குநர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் இவருடன் இணைந்து பணிபுரியக் காத்திருந்தார்கள். இதற்கெல்லாம் காரணம் அவருடைய வித்தியாசமான கற்பனை, அயராத உழைப்பு, அவர் இசையை அணுகுகியமுறை, அவர் இசையைப் புரிந்து வைத்திருக்கக்கூடிய தன்மை இவையெல்லாம்தான் காரணம் என்று எண்ணுகிறேன். கணினி இசை வளர்ச்சி அடைந்துகொண்டிருந்த காலகட்டத்தில்தான் நான் அவருடன் பணி செய்யத் தொடங்குகிறேன். என்னை மென்பொருள் ஒலிநுட்பத்தைக் கற்றுக்கொள்ளச் செய்தார். அவரே கற்பித்தது மட்டுமின்றி மற்ற இசையமைப்பாளர்களிடம் கணினி இசையையும் மென்பொருள் தொடர்பான தகவல்களையும், அவை சம்பந்தமான சந்தேகங்களைத் தீர்க்க, கற்றுத் தர என்னை அனுமதித்தார் (அவரிடம் நான் சம்பளம் வாங்குபவனாக இருந்தும்) அதன் வாயிலாக எனக்கு மற்ற இசையமைப்பாளர்களுடன் நல்ல நட்பு ஏற்பட்டது. இச்செயல் அவரின் பெருந்தன்மைக்கு ஒரு சான்று. ஏ.ஆர். ரகுமான் அவர்கள் அறம் சார்ந்த மனிதர் என்பது பொதுவாக அனைவரும் அறிந்ததே. மேடைகளில் அவர் உரையாற்றும் பொழுது மிக எளிமையாகவும் பண்புடனும் நடந்து கொள்வதை நாம் பார்த்திருக்கிறோம் குறிப்பாக மேடைகளிலும் “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று தன்னடக்கத்துடன் சொல்லக்கூடிய ஆகச் சிறந்த பண்பாளர். அவர் தேர்ந்தெடுத்த மார்கத்தில் 100 சதவிகிதம் அதன் வழிமுறைகளைச் சரியாக கடைப்பிடிக்கக் கூடிய மாண்பினைக் கொண்டவர். இவ்வாறான சிறந்த பண்புகளை உடைய ஒரு மனிதரைப் பற்றி, உண்மைக்கு புறம்பான தகவல்களுக்குக் காலம் பதில் கூறட்டும்   ஏ. ஆர். ரஹ்மான் சமகால சமூக நிகழ்வுகள், பிரச்சனைகள், இளைய தலைமுறைகள் எப்படி இந்த நவீன உலகத்திற்கு ஏற்ப தங்களது எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்பது போன்ற கருத்துகளை விழிப்பற்ற சிலர் விழிப்படையும் வகையில் இலை மறை காயாகப் பதிவிட்டு வந்தார். தற்பொழுது சற்று வெளிப்படையாகப் பல நேர்காணங்களில் பதிவு செய்வதுதான் இச்சர்ச்சைக்குக் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ‘ரங்கீலா’, ’Daud ‘ஆகிய இரண்டு படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரங்கீலா படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. அந்தப் படத்தின் வெற்றிக்கான மிக முக்கியமான காரணம் என்னவென்றால் ஏ.ஆர். ரஹ்மானின் பாடலும், பின்னணி இசையும். இதனை யாராலும் மறுக்க முடியாது. அந்தப் படத்தைத் திரும்பவும் ஒருமுறை பார்த்தீர்கள் என்றால் புரியும் ‘ரங்கீலா’ படத்தில் இடம்பெற்ற பின்னணி இசை, பாடல்கள் அவை வெளிவந்த காலத்திலேயே இந்தித் திரையுலகில் பெரும் பேசுபொருளாக இருந்தன. காரணம் அந்த இசையினுடைய தரம். அனைவரையும் வியப்புடனும் பிரம்மிப்புடனும் ஆச்சரியத்துடனும் இரசிக்க வைத்தது. இன்னும் சொல்லப்போனால் நான் ஒருமுறை மும்பையில் காரில் பயணிக்கும்பொழுது என்னிடம் கார் ஓட்டுநர் இயல்பாக ’’நீங்கள் யார் எங்கிருந்து வருகிறீர்கள்?’’ என்று என்னிடம் கேட்டார். “சென்னையில் இருந்து வருகிறேன். ஏ. ஆர். ரஹ்மானிடம் உதவியாளராகப் பணியாற்றுகிறேன்’’ என்றேன். உடனே ஆச்சரியத்துடன் என்னை ஒரு கணம் திரும்பிப் பார்த்து வியந்தார். அந்த வியப்புடனே என்னிடம் கேட்டார். “ஏ.ஆர். ரகுமான் சார் எப்படி இருப்பார், எங்கு இருக்கிறார், அவரைப் பார்க்க முடியுமா?” என்றெல்லாம் உற்சாகத்துடன் கேட்டார். “ரஹ்மான் சாரோடு இருக்கும் ஒருத்தர் என் வண்டியில் வர்றாருங்கிறது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு’’ என்றார் உணர்ச்சி மேலிட. ரங்கீலா படம் வந்த புதிதில் எல்லாரும் என்னிடம் சொன்ன தகவலை அந்த ஓட்டுநரும் என்னிடம் சொன்னார். “இவ்வளவு நாளா நாங்கள் சினிமா பார்த்தி ருக்கிறோம், பாடல்கள் கேட்டு ரசித்திருக்கிறோம், ஆனால் இந்தப் படத்தில் பாடல்கள், பின்னணி இசை, திடீரென்று ஓர் ஆச்சரியத்தை, ஒரு வியப்பை, புதுவித இசையை அனுபவிக்க வைத்தது. அது மட்டும் இல்லாமல் அந்தத் திரையரங்கில் இருக்கக்கூடிய எல்லா ஒலிபெருக்கிகளும் (ஸ்பீக்கரும்) வேலை செஞ்சது மாதிரி இருந்தது. இங்க இருந்து ஒலி வருது, அந்தப் பக்கம் இருந்து ஒரு சத்தம் வருது, அந்தச்சத்தம் அப்படியே இந்தப் பக்கம் மாறுது. தியேட்டரில் இதுநாள் வரையிலும் இப்படியான ஒரு இசையை நாங்கள் உணர்ந்ததே இல்லை. இந்த ரங்கீலா படத்துடைய இசைதான் புதுவித உணர்வை ஊட்டியது. நான் ஒரு நான்கு ஐந்து முறைக்கு மேல் அந்தப் படத்தைப் போய் பார்த்தேன். என் நண்பர்களை அழைத்துசென்று போய்ப் பார்த்தேன், என் குடும்பத்தில் உள்ளவர்களை அழைத்துச் சென்று போய்ப் பார்த்தேன். அதை ஒரு உணர்வுபூர்வமா அனுபவித்து நான் வியந்து பார்த்த ஒரு படம். ’’ என்று சொல்லி அந்த ஓட்டுநர் என்னை மெய் சிலிர்க்க வைத்தார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த முதல் படமே மாபெரும் வெற்றி பெற்ற படம். அதற்குக் காரணம் அவருடைய இசைதான். மக்கள் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டிருந்த இசை வடிவத்தில் இருந்து சில மாற்றங்கள் செய்து அவருக்கென்று ஒரு தனித்த பானியை உருவாக்கிப் புது இசை வடிவத்தை உருவாக்கிக் கொடுத்ததுதான் காரணம். அதைத்தொடர்ந்து தமிழ் திரையுலக இரசிகர்கள் மட்டும் இல்லாமல் இந்திய மற்றும் உலகளாவிய ரசிகர்களையும் கவர்ந்து, ஆஸ்கார் விருது பெறக்கூடிய அளவிற்கு தன்னை உயர்த்தி ஆஸ்கார் விருதும் பெற்றார். குறிப்பாக ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படம் மட்டும்தான் ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகி விருது பெற்றது என சிலர் நினைக்கக்கூடும். அவர் இசையமைத்த பல படங்கள் ஆஸ்கர் விருது பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது.‘கோல்டன் குளோபல் அவார்டு’ போன்ற விருதுகள் கிடைத்திருக்கின்றன. வெளி நாட்டில் இருக்கக்கூடிய திரைத்துறை சார்ந்தவர்களும், மக்களும் அவருடைய இசையின் தரத்தை புரிந்து இருந்தனர். அது மட்டுமின்றி இவர் இசையமைத்த படம் எப்போது வெளியாகும் என்ற ஆவலுடன் காத்திருந்திருக்கிறார்கள். உலக அளவில் இருக்கக்கூடிய இசைக் கலைஞர்களும் இவருடைய இசை பற்றி மிக உயர்வான மதிப்பீடுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் . பாம்பே ட்ரீம்ஸ் என்கின்ற மிகப்பெரிய நாடகம் ஒரு “லைவ் டிராமா” Andrew Lloyd Webber மூலமாக ஏ. ஆர். ரஹ்மானுக்கு சர்வதேச அளவிலான இசையமைக்கின்ற வாய்ப்பு கிடைத்தது. ஏ. ஆர். ரகுமான் அவர்கள் தான் இந்தியாவிலேயே முதல் முதல்லில் சர்வதேச அளவில் இசையமைக்க கூடிய வாய்ப்பைப் பெற்ற ஒருவர் என்று எண்ணுகிறேன். அந்தச் சமயத்தில்தான் ராம் கோபால் வர்மா அவர்கள் சொல்லக்கூடிய நிகழ்வுகள் நடந்தன. மும்பையில் ஏ.ஆர் ரகுமான் அவர்களுடைய இசைப் பதிவு மிகப் பரபரப்பாக நிகழ்ந்துகொண்டிருந்த காலம் அது. இயக்குநர் சுபாஷ் காய் மும்பையில் ஒரு மிகப்பெரிய இயக்குநர்,  சுபாஷ்காய், ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரோடு நானும் காரில் செல்லும்போது சுபாஷ்காயைப் பார்த்தவுடன் சாலைப் போக்குவரத்து காவலர்கள், சாலையின் போக்குவரத்து நெரிசலைச் சரி செய்து மரியாதை உடன் வழியனுப்பி வைப்பதினை நேரில் பார்த்து இருக்கிறேன். இயக்குநர் சுபாஷ் காய் சிறந்த பண்பாளர், நாங்கள் போய்த் தங்கும்போது எங்களைச் சிறப்பாகக் கவனிப்பார். நாங்கள் இரண்டு மூன்று நாள் தங்கி அங்கே பாடல்பதிவுகள் செய்வோம், அப்படிப்பட்ட ஒரு பிரம்மாண்ட இயக்குநர் சென்னைக்கு வந்து ஏ.ஆர். ரஹ்மானின் ஒலிப்பதிவுக்கூடத்திற்கு வந்து காத்திருந்திருக்கிறார். பெரும்பான்மையாக இசைப்பதிவு இரவில்தான் நடைபெறும். ஒருமுறை மேல் தளத்தில் இருக்கும் இசைச் கூடத்தில் இசைப் பணி நடந்துகொண்டு இருந்தது. அப்பொழுது மணி சுமார் அதிகாலை மூன்று மணி இருக்கும். அப்போது இயக்குநர் சுபாஷ் காய் ரொம்பசோர்வாகிக் கீழே இருக்கும் இசைச் கூடத்தில் திவான் ஒன்றில் படுத்துவிட்டார். இதை நாங்கள் கவனிக்கவில்லை,. மும்பையில் இருந்து வந்த ஒரு பத்திரிக்கையாளர் இவ்வளவு பெரிய இயக்குநரை ஏ.ஆர். ரஹ்மான் இசைச் கூடத்தில் படுக்கவைத்துவிட்டார்’ என இச்செய்தியை மும்பை பத்திரிக்கையில் பெரிதாக்கிவிட்டார். இயக்குநர் சுபாஷ் காய் இதனை பெரிதாகப் பொருட்படுத்தாமல் இயல்பாக எடுத்துக் கொண்டார். காரணம் வழக்கத்திற்கு மாறாக இரவில் பாடல் பதிவு நடைபெறுவதால் சில சமயங்களில் அசௌகரியம் ஏற்படும், இறுதியில் பாடல் நல்ல தரத்துடன் கையில் கிடைக்கும் என்கின்ற நம்பிக்கையில் இயக்குநர்கள் இதனைப் பெரிதாகப் பொருட்படுத்த மாட்டார்கள். ஒரே நாளில் சென்னையில் இருந்து மும்பைக்கு இரண்டு முறைக்கு மேல் பயணம் செய்ததை இன்று வரை மறக்க முடியாது அவ்வளவு பிஸியாக வேலையை நடந்து கொண்டிருந்ததை எண்ணிப் பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது ’முதல்வன்’ படத்தோட படப்பிடிப்பு தென்காசியில் நடந்தது, காலையில் தொழுகையை முடித்துவிட்டு, அங்கு “சைவ வெள்ளாளர்” குடிசை போட்ட சிறு ஹோட்டல் இருந்தது அந்தக் கடையில் நானும் ரஹ்மான் சாரும்,சாமித் துரையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பையன் தூக்குச் சட்டியில் தேநீர் வாங்குவதற்காக அங்கு வந்தான். ஏ.ஆர். ரஹ்மானை பார்த்துவிட்டான். உணவு முடித்து நாங்கள் எழுந்தோம். அந்தக் கடைக்காரருக்கு ஏ.ஆர். ரஹ்மானைத் தெரியவில்லை “தம்பி சாப்பிட்ட இலையை எடுத்து குப்பையில் போடுங்கள்’’ என்றார். எதார்த்தமாக வாடிக்கையாளர்களிடம் சொல்வதுபோல் சொன்னதும் நாங்கள் இலையை எடுத்துக் குப்பையில் போட்டுவிட்டு கை கழுவிட்டு கடைக்கு வெளியே வந்து பார்த்தால் அந்தப் பையன் ஊரையே கூட்டிக்கொண்டு வந்து கடை வாசலில் நிற்க வைத்திருந்தான். ரகுமான் சார் எந்த இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டவர் அல்ல. நாங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சென்னை சிட்டி சென்டர் எதிரில் உள்ள தஸ்தகீர்ஷாப் தர்காவிற்கு ஜும்மா தொழுகைக்காகப் போவது வழக்கமாக இருந்தது. சீக்கிரம் போய்விட்டால் அந்த மசூதிக்குள் இருந்து தொழுகைக்கான இடம் கிடைக்கும், ஒரு சில நேரம் தாமதமாக போனால் வெளிப்புறம் ஒரு ஓரமாக இடம் கிடைத்து தொழுகை செய்கின்ற நிலை ஏற்பட்டது அந்த நேரத்தில் இரண்டு சிறுவர்கள் எங்கள் இருவரையும் பார்த்து அவர்களுக்குள் பேசிச் சிரித்துக் கொண்டார்கள். அதில் ஒரு சிறுவன் என்னிடம் வந்து “அண்ணே இவரைப் போய் ஏ. ஆர்.ரஹ்மான்னு சொல்றாணே.” அப்படின்னு சொல்லிவிட்டு அந்தச் சிறுவன் சிரித்தான். இதனை ஏ.ஆர். ரஹ்மானும் கவனித்துக் கீழே குனிந்துகொண்டார். இப்படி மிக எளிமையான வாழ்க்கையைக் கொண்டவர்தான் ஏ.ஆர்.ரகுமான். திரைத்துறையில் முதலில் ஓர் இயக்குநர் ஓர் இசையமைப்பாளரிடம் வந்து கதை மற்றும் பாடலுக்கான சூழலைச் சொல்வார். அந்தச் சூழலுக்கு ஏற்ப பாடல் இந்த மாதிரியாக  வேண்டும் , அந்த மாதிரி இருக்க வேண்டும் என்று இருவரும் கலந்துரையாடிக் கொள்வார்கள். சில நேரங்களில் முன்பு வெளியான பாடல்களை எடுத்துக்காட்டி இந்த மாதிரியாக வேண்டுமென்று கூறுவது வழக்கம். அதனை இசையமைப்பாளர் உள்வாங்கித் தன்னுடைய கற்பனையை இசையின் வடிவத்தில் மெட்டாக வடிவமைத்து அதனை இயக்குநரிடம் வாசித்து அல்லது பாடிக் காண்பிப்பார். அந்த மெட்டு அந்த இயக்குநருக்குப் பிடிக்கும் பட்சத்தில் பாடல் ஆசிரியரிடம் கொடுத்து அந்த மெட்டுக்கு ஏற்பகதைச் சூழலுக்குத் தகுந்தவாறு பாடலை எழுதி வாங்கிப் பாடகர்களை வைத்துப் பாடி பாடல் பதிவு செய்வார்கள். இந்த முறை பொதுவாக எல்லா மொழிகளிலும் நடக்கக்கூடிய ஒன்றுதான். ஒரு மெட்டு நன்றாக இருக்கிறது என்று முடிவு செய்த பிறகுதான் அந்த இசையமைப்பாளர் தன் கற்பனைக் கருவில் இருந்து உருவான அந்த இசைக்கு ஒரு வடிவத்தை அளித்து அதிலிருந்து இசைக் கலைஞர்களிடம் அதைக் கொடுத்து இந்தப் பாடலுக்கு இந்த மாதிரியான இசைக்கருவிகளின் ஒலியைச் சேர்க்கலாம் என்றும், ஒரு பாடகரிடம் அளித்து  ’’இதை நீங்கள் இப்படிப் பாடுங்கள், இந்த இடத்தில் ஒரு கமகம் கொடுங்கள், இந்த இடத்தில் ஒரு ‘ப்ரிக்கா’ கொடுங்கள், இந்த இடத்தில் பாடல் ஹை பீச் போகவேண்டும், இங்க கொஞ்சம் ‘லோ பிச்’ வரவேண்டும்’ என்றெல்லாம் அந்த இசையமைப்பாளர்தான் சொல்வார். பாட வரும் பாடகர்களும் வாசிக்க வரும் இசைக் கலைஞர்களும் அவர்களுடைய சில சிந்தனைகளை இசையமைப்பாளரிடம் தெரிவிப்பார்கள் அப்பொழுது அந்தக் கற்பனை அந்தப் பாடலுக்கு மெருகேட்டக்கூடிய வகையில் இருந்தால் சில நேரத்தில் அதைப் பயன்படுத்துவார். இப்படி ஒரு பாடலுக்கான எல்லாச் சிந்தனைகளும் இசையமைப்பாளரின் எண்ணத்தில்தான் உருவாகும். ஒரு பாடலை உருவாக்கும்போது ஏ.ஆர். ரஹ்மான் ‘ரிதம் (Drums) சவுண்ட்’ எப்படி இருக்க வேண்டும் ‘இன்ஸ்ட்ருமென்ட் சவுண்ட்’ எப்படி இருக்க வேண்டும், ஒவ்வொரு கருவிகளின் ஒலி அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை மிகத் துல்லியமாகக் கணிப்பார். ஒரு பாடலை மிக வித்தியாசமாக காண்பிப்பது அதன் ‘ரிதம்’ பகுதிதான். இதை .ஏ ஆர். ரஹ்மானே ப்ரோக்ராம் செய்வார். அதற்குப் பிறகு ‘லைவ் சவுண்ட்’, ‘அடிஷனல் ப்ரோக்ராமிங்’ இது எல்லாம் கை தேர்ந்த இசை வல்லுநர்களால் மெருகேற்றப்படும், அதற்கான சம்பளமாகப் பெருந்தொகை அவர்களுக்கு அளிக்கப்படும். ஏ.ஆர். ரஹ்மான் ‘கோரஸ்’ எடுக்கிற விதமே ஒரு வித்தியாசமாக, புது அனுபவமாக இருக்கும். ‘கோரஸ் பார்ட்ஸ்’ செய்வதற்கு மிகவும் அனுபவம் வாய்ந்த இசை வல்லுநர்கள்மும்பையில் இருந்து வந்து ‘வாய்ஸ் லேயர்’ செய்வார்கள். ‘பைனல் அவுட்புட்’ கேட்கும் பொழுது மிகவும் வித்தியாசமாக புதுமையாக இருக்கும். ஒரு பாடலின் வெற்றிக்கு இன்னொரு முக்கியமான நபர் யார் என்றால் அதன் பாடல் ஆசிரியர், இசையமைப்பாளர் கொடுக்கின்ற மெட்டை உள்வாங்கி இயக்குநர் சொல்கின்ற சூழலை உள்வாங்கி அதற்கு ஏற்ப வார்த்தைகளை எழுதித் தருகிற ஆற்றல் பெற்றவர்கள் பாடல் ஆசிரியர்கள். ஒரு பாடலின் ராயல்டி என்பது ஐ. பி. ஆர். எஸ். நிறுவனம் மூலமாக இசையமைப்பாளருக்கும் பாடல்ஆசிரியருக்கும் அதன் ராயல்டி வழங்கப்பட்டு வருகிறது. பாடகர்களுக்கு கூட காப்புரிமைத் தொகை கிடையாது. காரணம் பாடலை உருவாக்கியவர்கள் இசையமைப்பாளரும் பாடலாசிரியர் மட்டுமே என்ற அடிப்படையில் பாடகர்களுக்கு இந்த ராயல்டி இல்லை என்பது வருத்தமான விஷயமே. ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுடைய பாடல் இசையமைப்பு (Composing) பற்றி முதல்முறையாகப் பகிர்கிறேன் அவர் இசையமைத்து வெற்றி பெற்ற ’சூப்பர் டூப்பர் ஹிட்ஸ்’ பாடல்கள் பல சென்னை ‘ஈ சி ஆர் நெமிலியில் உள்ள ஏ ஆர். ரஹ்மான் அவர் வீட்டில் கம்போஸ் செய்யப்பட்டவை.. முதலில் குமார் என்ற உதவியாளர் மகாபலிபுரம் சென்று மீன் மற்றும் கறி வாங்கி எங்கள் அனைவருக்கும் சமைத்து வைத்திருப்பார். சாமிதுரை அதன் பின்பு கிளம்புவார். அவர் இசையமைக்க தேவையான இசைக் கருவிகள் மற்றும் கணினி போன்றவற்றையெல்லாம் எடுத்துச் சென்று அங்கு ஒரு கம்போசிங்கிற்குத் தேவையான இசைக்கூடமாக எல்லாப் பொருட்களையும் ஆயத்தப்படுத்துவார். அதன் பிறகு ஏ. ஆர். ரகுமான் அவர்களும் சிவக்குமார், நோயல் ஜேம்ஸ் மற்றும் நானும் செல்வோம். இயக்குநர் சொன்ன சூழலுக்கு ஏற்ப நான்கு நிமிடப் பாடலுக்குக் கிட்டத்தட்ட 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை இருக்கும் ட்யூனைக் கம்போஸ் செய்து ஸ்டூடியோவிற்கு வந்தவுடன் அதை எடிட் செய்து, இந்த நீளமான டியூனில் எது பல்லவி, எது சரணம் என்று முடிவு எடுத்து, இயக்குநர்களிடம் காண்பிப்போம். இப்படிக் கம்போஸ் செய்யும் முறை நான் அவரிடம் இருந்த போது நடைபெற்றது. இதில் சில சுவாரசியமான நிகழ்வுகள் உண்டு.  அதாவது Track 1 மணிரத்னம் சாருக்கு, Track 3 சங்கர் சாருக்கு, Track 6 கதிர்சாருக்கு என்று ஏ.ஆர் ரஹ்மான் ஒரு துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்துவிடுவார். அதை நாங்கள் சரியாக அந்த இயக்குநரிடம் ஒரு ஹெட் போனில் Play செய்து காண்பிப்போம் உதாரணத்திற்கு இயக்குநர் பிரவீன் காந்திக்கு Track 5 போட்டுக் காட்டுவோம், அவர் அந்த மெட்டைக் கேட்டுக்கொண்டே இருப்பார். அப்படியே அவர்கள் அடுத்த மெட்டையும் சேர்த்துக் கேட்க ஆரம்பித்து விடுவார். எட்டாவது மெட்டைக் கேட்டுவிட்டு ‘இது யாருக்குப் போட்டு இருக்காங்க?’ என்று எங்களிடம் கேட்பார். அது வேறு ஒரு இயக்குநருக்குப் போட்ட மெட்டாக இருக்கும். ‘ரொம்ப நல்லா இருக்கு இதை எனக்குக் கொடுங்க ரகுமான் ’ என்ற மாதிரி கேட்கக்கூடிய அந்த அனுபவங்களும் உண்டு. அந்த மெட்டு முடிவானதும் பிறகு பாடலாசிரியரிடம் போகும். பாடலாசிரியர் பாடல் வரிகள் கொடுத்தவுடன் பாடகருடன் பாடல் பதிவாகும். இந்த மாதிரியான அனுபவங்களை எல்லாம் நான் ஏ,ஆர் ரஹ்மானிடமிருந்து பெற்றதின் அடிப்படையில்தான் ‘வம்சம்’ என்கின்ற படத்துக்கு இசையமைத்தேன். இயக்குநர் பாண்டியராஜ் அவர்கள் அந்த கிராமத்துக்கே என்ன அழைத்துச் சென்று அங்கு இருக்கக்கூடிய இசைக்கருவிகள், அங்கு உள்ள கலாச்சார முறைகள், அங்கு உள்ள மக்களின் வாழ்வியல் முறைகளை அறியும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார்.  நான் அங்கேயே தங்கி அந்த கிராமத்து மக்கள் பயன்படுத்தக்கூடிய இசைக் கருவிகளில் இருக்கக்கூடிய இசையைப் பதிவு செய்து எடுத்து வந்து இசையமைத்தேன். ‘வம்சம்’ படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் எனக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தித் தந்தன. அதற்குக் காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்கள்தான். அவையே இந்த அளவிற்கு ஒரு இசையமைப்பாளராக என்னைமாற்றி உங்கள் முன் கொண்டு வரச் செய்தன. ஆர்.பாலகிருஷ்ணன் IAS அவர்களின் “நாட்டுக்கு குரல்” என்ற Album கிராமிய பாணியில் “திருக்குறளுக்கு” இசையமைத்த அனுபவமும், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக கவிஞர் பழநி பாரதியின் வரிகளில் Official Song கிற்கு இசையமைத்ததும் சமூகம், இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளில் அதற்கான என் உணர்வை இசை வடிவமாக பதிவு செய்ததும், பெரிய நிறுவனங்களின் 200க்கும் மேற்பட்ட AD ஜிங்கிள்ஸ் இசை அமைத்தது, “தி ஹிந்து தமிழ்” பத்திரிக்கையில் “தரணி ஆளும் கணினி இசை” என்ற நெடுந்தொடரை எழுதி அதை நூல்ஆகவெளியிட்டதும் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் இசையமைத்து உள்ளேன் அதில் குறிப்பாக வம்சம், ஸ்ட்ராபெரி, கதம் கதம், இது கதை அல்ல நிஜம், எத்தன், வட்டகரா, ஞானக்கிறுக்கன் போன்ற படங்கள் இசையமைப்பாளராக நல்ல பெயரைக் கொடுத்தன. சில படங்கள் வெற்றி அடையவில்லை, வெளிவர இருக்கும் பயாஸ்கோப், TheBed,போன்ற படங்களை எதிர்பார்த்து இருக்கின்றேன் மேலும் புதிய வித்தியாசமான கதைக்களம் இருந்தால் இசையமைக்கக் காத்திருக்கின்றேன். எப்போதும் என் இசைக்கலையில் நிறைந்திருந்து வழிநடத்தும் ஆசிரியராக எனக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களே இருக்கிறார். அவர் மீது அவதூறு செய்பவர்கள் ஒரு மேதையின் ஒளியைக் காண இயலாத இருட்டில் நின்றுகொண்டிருக்கிறார்கள். துவேஷத்தால் மகத்தான கலைஞர்களை ஒருபோதும் அழிக்க இயலாது.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-may-2024-taj-noor-aticle-01/
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.