Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
28 APR, 2024 | 06:36 PM
image

நேர்கண்டவர் -  ரொபட் அன்டனி 

இலங்கையில் சுற்றுலாத்துறை மிகப் பெரிய ஒரு துறையாக காணப்படுகிறது.  இந்தியாவில் தமிழ்நாடு தான் மிகவும் உயர்ந்த அளவான சுற்றுலாத்துறை ஆற்றலை கொண்டிருக்கிறது.  எனவே இலங்கையும்  தமிழகமும் சுற்றுலாத்துறை விடயத்தில் ஒரு கூட்டு  பொறிமுறையை வகுத்து செயல்பட்டால் சிறந்த முன்னேற்றத்தை   எட்ட முடியும் என்று தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். 

கொழும்பில் நடைபெற்ற  ரோட்டரி கழகத்தின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீரகேசரி பத்திரிகைக்கு   வழங்கிய விசேட செவியிலேயே இதனை  சுட்டிக்காட்டினார். 

மிக முக்கியமாக இலங்கையில் ரோட்டரி கழகத்தின் மாநாட்டில் பங்கேற்ற தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கமையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

மேலும்   தமிழகத்தின் நிதித்துறை, வரிவருமான விடயம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சி,  பெண்களின் பொருளாதார பங்களிப்பு  குறித்து அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

‘’ ஒரு நாட்டில் பெண்கள் கல்வியில் வளர்ச்சிaடையும் போது அவர்களுக்கு சம உரிமை வழங்கப்படும் போதுதான் அந்த நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தி அடையும். எனவே பொருளாதாரத்தை அபிவிருத்தி அடைய செய்வதில் பெண்களின் பங்களிப்பு முக்கியமானது’’  என்று பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டார். 

மேலும் இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பாக கருத்து வெளியிட்ட பழனிவேல் தியாகராஜன் பொறியியல் ரீதியாக கட்டடவியல் ரீதியாக இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது சாத்தியமானதே  என்று தெரிவித்ததுடன் உலக நாடுகளில் இதனை விட நீளமான பாலங்கள் இருப்பதையும் சுட்டிக் காட்டினார். 

கச்சத்தீவு விவகாரம் தொடர்பிலும் அமைச்சர்  தியாகராஜன் கருத்து வெளியிட்டார். 

‘’ 50 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்குk; இந்தியாவுக்கும் இடையில் கடல்சார் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாகவே இந்த விடயம் காணப்படுகிறது.  எல்லைகள் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் அதிகாரம் உலகில் எந்த ஒரு இடத்திலும் மாநிலங்களுக்கு வழங்கப்படவில்லை‘’  என்றும் பழனிவேல் தியாகராஜன் எடுத்துக்காட்டினார். 

செவ்வியின் முழு விபரம் வருமாறு

கேள்வி  நாங்கள் 2022 ஆம் ஆண்டு இலங்கையில் நிதி நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருந்தபோது நீங்கள் தமிழகத்தில் மிகப்பெரிய நிதி ஸ்திரத்தன்மை ரீதியான சாதனையை நிகழ்த்தி கொண்டிருந்தீர்கள். அது தொடர்பாக விளக்க முடியுமா 

பதில் இந்த விடயத்தில் நான் உலகத்தில் பெற்ற அனுபவத்தையோ  கல்வியையோ தாண்டி இன்றைய முதலமைச்சர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர்  ஸ்டாலின் வழங்கிய ஆதரவும் பொறுப்பும் தான் இதற்கு காரணமாகும்.  2016 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டுவரை நான் எதிர்க்கட்சியில் இருந்தபோது அரசாங்க கணக்கு குழுவில் அங்கம் வகித்தேன்.  இதில்   பல விடயங்களை ஆராய்ந்தேன். ஆயிரக்கணக்கான விடயங்கள் தொடர்பாக வாசிக்க கிடைத்தது.  குறிப்பாக மீனவத்துறை வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில்   எங்கு பிரச்சனைகள் இருக்கின்றன என்பன தொடர்பாக ஆராய்ந்து அது தொடர்பான ஒரு தெளிவை பெற்றுக் கொள்ள என்னால் முடிந்தது.  இந்த குழுவின் ஊடாக பல இடங்களுக்கு சென்று ஆய்வு செய்ய முடிந்தது.  அதேபோன்று பல பல அதிகாரிகளை அழைத்து கேள்வி கேடகும் உரிமையும் இந்த குழுவுக்கு காணப்பட்டது.  இந்த ஐந்து வருட காலப்பகுதியில்     நான் சிறந்த புரிதலையும் தெளிவையும் பெற்றேன்.    எங்கே என்னென்ன பிரச்சனைகள் காணப்படுகின்றன?  அவற்றை எவ்வாறு திருத்துவது?  என்பதை இந்த ஐந்து ஆண்டுகளில் நான் மதிப்பீடு செய்துவிட்டு தான் பதவிக்கு வந்தேன்.  அந்த அனுபவம்,  அந்த புரிதல் நான் இந்த செயற்பாட்டை மேற்கொள்வதற்கு கை கொடுத்தது,  மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் அறிவோ தெளிவோ தொழில்நுட்ப திறமையோ முக்கியமாக இருக்காது.    மாறாக மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற ஒரு அரசியல் ரீதியான நோக்கம் இருக்க வேண்டும்.  அந்த அரசியல் நோக்கம் அல்லது எதிர்பார்ப்பு (Political will)    முதலமைச்சரிடம் மட்டும் இருந்தே வர வேண்டும்.  முதல்வரின் அந்த நோக்கம் தெளிவாக இருந்தது.  அதற்காக அவர் எனக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.  இந்த விடயத்தில் எனக்கு ஆலோசனை ஒத்துழைப்பு தந்தது மட்டுமன்றி முதல்வர் என்னை பாதுகாப்பாகவும் வைத்துக் கொண்டிருக்கிறார்.  இந்த சில வருடங்களில் ஒருமுறை கூட முதல்வர்  ஏன் இப்படி செய்தீர்கள்? ஏன் இப்படி செய்யவில்லை என்று கேட்டது கிடையாது. கடந்த காலங்களில் நான் கிட்டத்தட்ட 7 ஆயிரம் கோப்புகளை ஆய்வு செய்து கையொப்பம் இட வேண்டி ஏற்பட்டது.  அந்த 7000 கோப்புகளில் பத்து சதவீதமானவை மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டு திருத்தப்பட்டு கொண்டுவரப்பட்டன.  இதன் காரணமாகவே 20 ஆண்டுகளில் ஏற்படுத்த முடியாத ஒரு மாற்றத்தை என்னால் இரண்டு ஆண்டுகளில் மாற்றி அமைக்க முடிந்தது. 

ஒரு முறையை நீங்கள் தொடர்ந்து அவ்வாறே செய்து கொண்டிருந்தால் மாற்றம் வராது.  முறையை   மாற்றினால் கூட விளைவு வருமா என்பது தெரியாது. ஆனால்  மாற்றத்தை ஆரம்பிக்க வேண்டியது அவசியம். அதனையே நாங்கள் செய்தோம்.  

கேள்வி நீங்கள் சமூகநீதி, சமஷ்டி முறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேசுகின்றீர்கள். ஆனால் பெண்கள் கல்வி கற்றால் மட்டுமே ஒரு சமூகம் விரைவாக வளர்ச்சி அடைய முடியும் என்று கூறுகின்றீர்கள்.   இதனை எவ்வாறு நீங்கள் மேற்கொள்கின்றீர்கள்? 

 பதில் சகல சமூகங்களிலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பெண்கள் பின்தங்கி வைக்கப்பட்டனர்.  அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும்   சக்தியை கொண்டிருப்பதால் அவர்கள் வீடுகளில் இருந்து குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு எண்ணம் காணப்பட்டது.  நீங்கள் இந்த நூற்றாண்டை  எடுத்துப் பார்த்தால் ஒரு சமூகம் எந்த அளவுக்கு பெண்களுக்கு சமகல்வி சம உரிமை அளிக்கின்றதோ  அங்கு பாரியதொரு பொருளாதார அபிவிருத்தி முன்னேற்றத்தை காண்கிறோம். 

ஸ்கடேினேவிய நாடுகள்,  மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இந்த நிலைமையை பரவலாக காணமுடியும்,  மிக முக்கியமாக ஜப்பானில் இதை பார்க்கலாம். ஜப்பானில் பெண்களுக்கு சமஉரிமை சமத்துவம் வழங்கப்பட்டதன் பின்னர் அந்த நாட்டின் அபார வளர்ச்சியை புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.  பெண்கள் எத்தனை ஆண்டுகள் கல்வி கற்கின்றார்களோ, உயர் கல்வியை பெறுகின்றார்களோ அத்தனை ஆண்டுகள் அவர்கள் திருமணம் செய்வதும் குழந்தை பெற்றுக் கொள்வதும் தாமதமாகிறது.   பெண்கள் எந்த சூழலில் குழந்தையை பெற்றுக் கொள்கிறார்கள்,  அப்போது அவர்களது பொருளாதார நிலைமை எவ்வாறு இருக்கின்றது  என்பதில்தான் அந்த குழந்தையின் எதிர்காலம் தங்கி இருக்கிறது.  எனவே பெண்களுக்கு நீங்கள் சமகல்வி சமஉரிமை வழங்கினீர்கள் என்றால் சுகாதார ரீதியான ஒரு முன்னேற்றத்திலிருந்து   நாட்டின் அபிவிருத்தி ஆரம்பமாகிறது.  பெண்கள் தாமதித்து குழந்தை பெற்றுக் கொள்வார்களாயின் அந்த குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமானதாக வளரும்.  பிரசவ மரணம் குறைவடையும்.  அரசாங்கத்தின் மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்பான  சுமை குறைவடைகிறது.  அப்படிபார்க்கும்போது எந்தளவு தூரம் ஆண்களுக்கு சமமாக பெண்கள்     பலத்தை அடைகிறார்களோ அங்கு முன்னேற்றம் தானாக உருவாகிவிடும்.  ஆண்களுக்கு சிறந்த கல்வியை கொடுத்து அவர்களை முன்னேற்றிவிட்டு பெண்களுக்கு ஒன்றும் செய்யாமல் விட்டால் அங்கு என்ன நடக்கும் ? அங்கு அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான சராசரி எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  பெண்களுக்கும் அதேயளவு சமஉரிமையும் சம கல்வியும் வழங்கப்பட்டால் சமுதாயத்தின் உற்பத்தி திறன் அதிகரிக்கும்.  பொருளாதார வளர்ச்சி அபிவிருத்தி உயர்வடையும்.  இன்று தமிழ்நாடு இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பாரிய  வளர்ச்சியை அடைந்திருப்பதாக கூறுகிறார்கள்.  அதற்கு முக்கிய காரணம் அனைவருக்கும் கல்வி என்ற சட்ட திருத்தம் 1921 ஆம் ஆண்டு நீதி கட்சியினால் உருவாக்கப்பட்டது.  அன்றிலிருந்து இன்று வரை பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் எந்தக் கட்சியும் பின் வாங்கியதில்லை.  இன்று தமிழ்நாடு இலத்திரணியல் உற்பத்தி ஏற்றுமதியில் உயர்ந்த இடத்துக்கு வந்துவிட்டது. அதில் அதிகளமான பங்களிப்பை பெண்களே வழங்குகிறார்கள் என்பது இங்கு ஒரு முக்கியமான விடயம்.  இன்று இந்தியா முழுவதும் தொழிற்சாலைகளில் ஏனைய இடங்களில் தொழில் புரியும் பெண்களில் 43 சதவீதமானோர்  தமிழ்நாட்டில் இருக்கின்றனர்.    இதன் காரணமாகவே தமிழகத்தின் தலா வருமானம் அதிகரிக்கிறது.   

கேள்வி தற்போது நீங்கள் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகிக்கின்ற வகிக்கின்றீர்கள்.    தற்போது இந்தியாவில் ஹைதராபாத் பெங்களூர் பூனே ஆகிய நகரங்களே தகவல் தொழில்நுட்பத் துறையில் பாரிய வளர்ச்சி அடைந்திருக்கின்றன.   தமிழகம் எப்போது இந்த இடத்தை நோக்கி பயணிக்கும்? 

 பதில் தமிழகத்தின் மிகப்பெரிய இயற்கை பலம் என்னவென்றால் அது தமிழக மக்களின் மனித வளமாகும்.  இந்தத் துறையின் எதிர்காலத்தை கருதி   1991 ஆம் ஆண்டு முன்னால் முதல்வர் கலைஞர்     தகவல் தொழில்நுட்ப திணைக்களத்தை உருவாக்கினார்.  ஆனால் கடந்த 25 வருடங்களில் தமிழகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியானது இயற்கையான வளர்ச்சியாக அமைந்துவிட்டது. ஆனால் பெங்களூர் ஹைதராபாத் பூனே ஆகிய நகரங்கள் இந்த விடயத்தை தேடிச் சென்று கஷ்டப்பட்டு உருவாக்கின.  தற்போது பெங்களூரு நகரத்தை பார்த்தால் அங்கு தகவல் தொழில்நுட்பம் இல்லை என்றால் ஒன்றுமே இல்லை என்ற நிலைமை வந்துவிட்டது. 

ஆனால் தமிழகத்தில் அப்படி இல்லை.  பல துறைகளில் முன்னேற்றம் காணப்படுகிறது.   தகவல் தொழில்நுட்பம் என்ற  விடயம்  வெளிக்காட்டவில்லை.  அதாவது தமிழகத்தில் இந்த துறையை அதிகளவில் நாம் ஊக்குவிக்க வில்லை.    பொதுவாக இந்த துறையில் எந்தெந்த கம்பெனிகள் எங்கெங்கே   முதலீடு செய்து இருக்கின்றன  என்ற தகவல் மாநில அரசாங்கத்தில் இருக்கும்.  ஆனால் தமிழகத்தில் அந்தத் தரவு கட்டமைப்பு கூட இல்லை.  காரணம்   நாங்கள் ஊக்குவிப்பு வழங்காமல் இயற்கையாக இந்த துறை வளர்ந்திருக்கிறது.    அதனால் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் பின்தங்கி இல்லை என்பதை நான் உங்களுக்கு இப்போது கூற விளைகிறேன்.  எம்மிடம் தகவல் கட்டமைப்பு தான் இல்லை.  மாறாக அந்த துறை முன்னேறியிருக்கிறது.  இதனை நாம் நுணுக்கமாக தேட ஆரம்பித்தால் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை பாரியளவில் வளர்ச்சி அடைந்திருக்கின்றது என்ற உண்மையை கண்டுபிடிக்க முடியும்.  மேலும் தற்போது ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 10,000 தொழில் வாய்ப்புகள் இந்த துறையில் உருவாக்கப்படுகின்றன.    இதனை நான் சட்டமன்றத்திலும் கூறி இருக்கிறேன்.  ஆனால் இது மிகப் பெரிய ஒரு எண்ணிக்கை அல்ல.  இது இயற்கையாக நடந்து கொண்டிருக்கின்றது.  ஆனாலும் இது கவனிக்கத்தக்கது ஒன்றாக உள்ளது.  நாங்கள் அரசாங்கமாக இதனை இன்னும் ஊக்குவிக்கவில்லை.  எனவே முதலில் தகவல் கட்டமைப்பை திரட்ட வேண்டும்.   அது தொடர்பான விபரங்களை உண்மையை வெளியிட வேண்டும்.  அதைவைத்து ஒரு சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு இந்த துறையை மேலும் வலுவானதாக உருவாக்குவோம்.  

கேள்வி 2030ஆம் ஆண்டில் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டொலர் பெறுமதிக்கு கொண்டு வர முயற்சிக்கின்றீர்கள். இது சாத்தியமா?

பதில் இது முதலமைச்சர்  ஸ்டாலினின் இலக்காக காணப்படுகிறது அதற்கு ஏற்ப நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி  நீங்கள் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கின்றீர்கள். இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து தற்போது மீண்டும் வந்து கொண்டிருக்கின்றது.  உங்களின் பார்வையில் தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையில் பொருளாதார உறவை எவ்வாறு மேம்படுத்த முடியும்? 

பதில்   நான் மாநில அமைச்சராக இருப்பதால் மாநிலம் சம்பந்தமான விடயங்களிலேயே அவதானம் செலுத்த வேண்டும்.  காரணம் இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பை வலுப்படுத்த வேண்டும் என்றாலும் அல்லது தொடர்புகளை மேம்படுத்த வேண்டும் என்றாலும் அது இந்திய மத்திய அரசாங்கத்தின் ஒப்புதல் மற்றும் ஆசீர்வாதத்துடனேயே முன்னெடுக்கப்பட முடியும்.  அரசியலமைப்பில் இது தொடர்பில் பல தேவைகள் காணப்படுகின்றன.  தற்போதைய சூழலில் மாநில உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றன.  தற்போதைய டெல்லி அரசாங்கம் இருக்கும்வரை இந்த விடயங்களில் முற்போக்கான நிலைமை ஏற்படுமா என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.  அப்படியான ஒரு தடை இல்லாவிடில் தமிழகமும் இலங்கையும் மிக நெருக்கமாக செயல்படுவதற்கான இயற்கை ரீதியாக பல வழிகள் காணப்படுகின்றன.  சக்திவளத்துறையில் நாங்கள் நெருக்கடியை சந்திக்கிறோம்.  ஆனால் இலங்கையில் அளவுக்கு அதிகமாக இந்த புதுப்பிக்கத்தக்க வகையிலான வலு சக்தி துறையில் உற்பத்தியை செய்ய முடியும்.  அதில் இணைந்து செயற்பட  ஆற்றல் காணப்படுகிறது.  மனிதவள அபிவிருத்தி கல்வி அபிவிருத்தி போன்றவற்றில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்திருக்கின்றது.  இந்த விடயத்திலும் இலங்கை இளைஞர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி   தொழில் செய்யும்போது பயிற்சி வழங்குதல் போன்றவற்றில் நாம் இணைந்து செயல்படலாம். 

இலங்கையில் சுற்றுலாத்துறை மிகப் பெரிய ஒரு துறையாக காணப்படுகிறது.  இந்தியாவில் தமிழ்நாடு தான் மிகவும் உயர்ந்த அளவான சுற்றுலாத்துறை ஆற்றலை கொண்டிருக்கிறது.  எனவே இலங்கையும்  தமிழகமும் சுற்றுலாத்துறை விடயத்தில் ஒரு கூட்டு  பொறிமுறையை வகுத்து செயல்பட்டால் சிறந்த முன்னேற்றத்தை   எட்ட முடியும். அதாவது தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள கலாசார தொடர்புகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக்கொண்டு இதனை முன்னெடுக்கலாம்.  

கேள்வி தற்போது இந்த கச்சதீவு விவகாரம் மீண்டும் களத்துக்கு வந்திருக்கிறது.  இது மத்திய அரசாங்கத்தின் விடயம் ஆனாலும் மாநில அரசாங்கத்தின் மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.  எனவே இந்த கச்சதீவு விவகாரத்தை தமிழக அமைச்சர் என்ற ரீதியில் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில் என்னைப்பொறுத்த வரையில் இந்த விடயம் சட்டமன்றத்திலும் சரி தற்போது அரசியல் களத்திலும் சரி வெறுமனே பேசப்படுகிறது.  50 வருடங்களுக்கு முன்னரே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில்  12 கிலோமீட்டர் அடிப்படையிலான கடல் சார்ந்த ஒப்பந்தம்   கைச்சாத்திடப்பட்டிருக்கிறது.  அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே இந்த விடயம் (கச்சதீவு)  இடம் பெற்றுள்ளது.  அல்லது அந்த ஒப்பந்தத்தின் ஒரு பங்காக இந்த விடயம் காணப்படுகிறது.  50 வருடங்களுக்கு முதல் நடந்த ஒரு விடயம் குறித்து   கடந்த 10 வருடங்களாக டெல்லியில் ஆட்சியில் இருந்த    எதனையும் செய்யவில்லை.  ஆனால் தற்போது இதனை இங்கே அரசியலுக்காக பேசுகின்றார்கள்.  கவனச்சிதறல்  முயற்சியாகவே இது  தெரிகிறது. 

இது இந்த விடயத்தில் மாநிலத்துக்கு எவ்வளவு அக்கறை, எவ்வளவு தேவை, ஈடுபாடு இருந்தாலும் கூட இந்த எல்லை நிர்ணய விடயங்களை மத்திய அரசாங்கமே செய்யும். 

கேள்வி  தற்போது இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பாக பேசப்படுகிறது.  நீங்கள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்.  முன்னாள் நிதி அமைச்சர்.  பொருளாதார ரீதியாக இதன் சாத்தியத்தன்மை குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

 பதில் இதற்கு சாத்தியம் இல்லை என்று கூற முடியாது.  இதற்கான சாத்தியம் கேள்விக்கு உட்படுத்தப்பட முடியாதது.  உலகளவில் இதனை விட நீளமான பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  நானே பயணம் செய்திருக்கிறேன்.   ஆனால் இதில் பொருளாதார  விளைவுகள் என்ன ? செலவு என்ன என்பது முக்கியமாகும்.  தொடர்புகள்,  பாதுகாப்பு விடயங்கள் என்பன ஆராயப்பட வேண்டும்.   என்னுடைய துறையுடன் இது உடனடியாக தொடர்புபடவில்லை.  சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பாக ஆராய்வார்கள். ஆனால் இதனை  சாத்தியமில்லை என்று உறுதியாக கூற முடியாது.  உலக அளவில் இதனைவிட நீளமான எத்தனையோ பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.    பொறியியல் ரீதியாக கட்டிடவியல் ரீதியாக அது சாத்தியமானதாகும். 

கேள்வி உங்களின் இரண்டு கைகளிலும் இரண்டு கைக்கடிகாரங்கள் கட்டப்பட்டுள்ளனவே? 

பதில்  இதற்கான காரணம் உள்ளது. அதில் எனது இடது கையில் இருப்பது என்னுடைய தாத்தாவின் கைக்கடிகாரமாகும்.   அதனை 1990 ஆம் ஆண்டு எனது தந்தை எனக்கு வழங்கினார்.  நான் அதனை திருத்தி பழுதுபார்த்து தொடர்ச்சியாக எனது இடது கையில் கட்டிக் கொண்டிருக்கின்றேன்.  வலது கையில் இருப்பது  மிகவும் நவீனமான எனக்கு பல்வேறு தொழில்நுட்ப ரீதியான ஆலோசனைகளை வழங்குகின்ற கைக்கடிகாரமாகும்.  உங்களுக்கு தெரியும் எங்களது குடும்பம் அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பம்.    எனவே இந்த கைக்கடிகாரம் எனக்கு மிக முக்கியமானதாக   இருக்கிறது. 

https://www.virakesari.lk/article/182174

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.