Jump to content

உச்ச நீதிமன்றில் சட்டத்தரணிகளாக பதவி ஏற்றுக்கொண்ட 2 தமிழர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உச்ச நீதிமன்றில் சட்டத்தரணிகளாக பதவி ஏற்றுக்கொண்ட 2 தமிழர்கள்

Vhg மே 03, 2024

இலங்கை உச்ச நீதிமன்றில் சட்டத்தரணிகளாக இரண்டு தமிழ்த்தேசிய பற்றாளர்கள் இன்றையதினம் பதவி ஏற்றுக்கொண்டுள்ளனர். 

யாழ்.மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் மாமனிதர் இரவிராஜ் அவர்களின் புதல்வி திருமதி பிரவீனா கலையமுதன் உயர்நீதிமன்றில் சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

அதேபோல யாழ்ப்பாண தமிழ்த் தேசிய உணர்வாளன் உமாகரன் ராசையா அவரும் உச்ச நீதிமன்றில் சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.


spacer.png



spacer.png

 

https://www.battinatham.com/2024/05/2.html

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • அன்புக்கு இலக்கணம் ஆகிய அழகிய வதனம் கொண்ட சங்கவியை தெரிந்தவர்கள் யாராலும் மறக்கவே முடியாது…… அமைதியான சுபாபம் கொண்டவள். கூட இருப்பவர்களுக்கு உதவிடும் நல்ல உள்ளம் படைத்தவள். இரக்க குணம் அவளோடு கூட பிறந்தது. பழகியவர்களால் அவளை மறப்பது மிகவும் கடினம். 1998ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் பயணத்தில் தன்னை இணைத்துக் கொண்டவள் சிறுத்தைப் படையணியில் நித்திலா 1 பயிற்சிப் பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்துக் கொண்டு மூன்றுமுறிப்பு களமுனையில் அவளது தோழிகளுடன் தடம் பதிக்கிறாள். முன்னணிக் காவலரண்களை பலமாக்கி பாதுகாப்பது, எதிரியின் ஊடறுப்பு தாக்குதல்களை முறியடித்து சமர் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டவள். தொடர்ந்து வந்த காலங்களில் அம்பகாமம், ஒட்டு ஒட்டுசுட்டான் போன்ற பகுதிகளிலும் அவளுடைய களப்பயணம் தொடர்கிறது. இன்றுவரை உலகவல்லரசுகளால் வியந்து பார்க்கப்படும் தீச்சுவாலைச் சமரில் பங்கு பற்றி தன்னுடைய திறமையை அங்கும் நிரூபிக்கிறாள். மிகப்பெரிய வெற்றியை ஈட்டித் தந்த அச் சமரில் தலையிலும் ,காலிலும் படு காயமடைந்தவள் ஆறுமாதங்கள் மருத்துவமனையில் ஓய்வுக்காக அனுமதிக்கப்படுகின்றாள். இயங்க முடியாத நிலையிலும் அமைதியான புன்னகையுடன் அடுத்த கட்டப் பணிக்காக தயாராகிறாள். தலையில் பலமான காயம் ஏற்பட்டதால் அடிக்கடி மயக்கம் வருவதும், தொடர் தலைவலியாலும் களமுனைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படவே படையப் புலனாய்வுப் பிரிவின் பின்தள பணிக்காக அனுப்பப்படுகிறாள். ஆர்ப்பரிப்புக்கள் ஏதுமின்றி அமைதியாக சாதித்துவிட்டு எதுவும் நடவாதது போல் இருக்கும் அவள் தன்னுடைய மன வேதனைகளை எப்பவுமே யாருடனும் பகிர்ந்து கொள்வதில்லை. களமுனைக்கு செல்லமுடியாமல் போகுமளவுக்கு காயம் அடைந்ததால் மனரீதியாக பலமாக பாதிக்கப்பட்டிருந்தாள். அவளுடைய எண்ணக் கிடக்கைகளை புரிந்துகொண்டு ஆறுதலாகப் பேசினால் கூட ஓர் சிறிய புன்சிரிப்போடு அமைதியாக இருப்பாள். தன்னுடைய இயலாமையை கூட வெளிக்காட்டாமல் தினமும் தலைவலியால் அவஸ்தை பட்டுக்கொண்டும் கொடுக்கப்படும் பணியை நேர்த்தியாகச் செய்து முடிக்கும் பண்பு அவளிடம் நிறையவே இருந்தது. சின்னச் சின்ன விடயங்களில் எல்லாம் மிகவும் அக்கறை எடுத்து அவற்றை அழகாக்கும் அழகே அவளுடைய பேரழகு. சிறு வயதிலேயே வறுமையின் வலியை அனுபவித்தவள். தனது குடும்பத்தின் மீது அளவுகடந்த பற்று இருந்த போதும், தனது குடும்பத்தின் சுமையை சுமக்க வேண்டிய மூத்த பிள்ளையாக இருந்தும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு தாய்மண்ணை காக்க ஓடி வந்தவள். அவளுக்கு அடுத்து பிறந்த அவளது தம்பி மீது அளப்பெரும் அன்பு கொண்டவள். அவன் நன்றாகப் படித்து நல்ல நிலைக்கு வந்து குடும்பத்தை நன்றாகப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டாள் . கிடைக்கும் நேரங்களில் எல்லாம் அவள் தனது தம்பிக்கு வாழ்க்கையை புரியவைக்கும் முகமாக கல்வியின் முக்கியத்துவம் பற்றியும், குடும்பத்தை பொறுப்போடு பார்க்க வேண்டும் என்றும் கடிதம் மூலம் எழுதி அனுப்புவாள். அவளின் விருப்பம் போலவே அவளுடைய தம்பியும் படிப்பில் மிகவும் சுட்டி. இறுதி யுத்தத்தின்போது அனைவரும் களமுனைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டபோது சங்கவியும் மிக்க மகிழ்ச்சியுடன் களமுனைக்குச் சென்றாள். 10.02.2009 அன்று தொலைத்தொடர்பு சாதனம் எடுப்பதற்காக எமது இடத்துக்கு வந்திருந்தாள் .என்னுடன் கதைக்க வேண்டும் என்று என்னிடம் வந்தாள் என்றுமே இல்லாதவாறு அவளுடைய முகம் மிகவும் வாடி இருந்தது. ஸ்ரீலங்கா இராணுவம் நடத்தும் கொடூரமான யுத்தத்தால் தன்னுடைய தம்பியின் கல்வி தொடர முடியாமல் போனதையும், தனது குடும்பச் சூழலையும் நீண்ட நேரமாக கண்ணீருடன் பகிர்ந்து கொண்டாள். எந்த ஒரு விடயத்தையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதவள் நீண்ட நேரமாக என்னிடம் தன்னுடைய ஆதங்கங்களை சொல்லிக் கொண்டிருந்தபோது எனக்குள் ஒருவித ஆச்சரியம் ஆனாலும் அவளுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தேன். செல்லும் போதும் திரும்பத் திரும்ப “அக்கா என்னை மறந்துடாதையுங்க” என்றாள் . அவளுடைய பேச்சிலும்,செயலிலும் கண்டுகொண்ட மாறுதல்களால் கலவரம் அடைந்தாலும் “ஒரு தாயால் எப்படி தன் குழந்தைகளை மறக்க முடியும்” என சிரித்தபடி சொன்னேன். அவளைப் பார்க்கும் இறுதிக் கணங்களும் அவளுடன் நான் பேசும் இறுதி வார்த்தைகளும் இவைதான் என்பது தெரியாமல்…..????? அவள் என்னிடம் பேசிச் சென்ற அடுத்த நாள் 11.02.2009 அன்று தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த வல்லிபுனம் என்ற ஊரில் எதிரியுடன் ஏற்பட்ட நேரடி மோதலில்…… தன்னை ஆகுதி ஆக்கிக் கொண்டாள். சிறந்ததோர் அணித் தலைவியாக கொடுக்கப்பட்ட பணியினை சிறப்புடன் ஆற்றி இறுதி மூச்சு உள்ளவரை எதிரியுடன் சமராடி , அவள் உயிரிலும் மேலாக நேசித்த அன்னை மண்ணை முத்தமிட்டாள் .   மறக்கவே முடியாத உறவுகளில் இவளும் ஒருத்தி .அடிக்கடி இவளின் நினைவுகள் எனக்குள் சுழன்றடிக்கும். தேநீரை தானே தயாரித்துத் தந்துவிட்டு குடித்த பாதி தேனீருக்காக காத்திருப்பாள் .சிலவேளைகளில் காத்திருப்பதை மறந்துபோய் பருகி விட்டால் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அன்று முழுவதும் அமைதியாகி விடுவாள். எனது மகள் பிறந்திருந்த போது என்னிடம் வந்தாள். போகும்போது என்னிடம் ஒரு கவரை தந்து “அக்கா பிள்ளைக்கு ஒரு சட்டை வேண்டிவந்திருக்கிறேன். என்னிடமிருந்த காசுக்கு வேண்டினான் நீங்க பிள்ளைக்கு போடூறீங்களோ தெரியாது ,நான் போன பின்பு பிரித்துப் பாருங்கள் “என்றாள். அவள் போன பின்பு பிரித்துப் பார்த்தேன் மிகக் குறைந்த விலையில் மிக மிக அழகான ஒரு சட்டை இருந்தது . அவளுடைய குடும்ப சூழலுக்கு அந்தப் பணம் எவ்வளவு பெறுமதியானது என்பது எனக்கு தெரியும். .அந்த சட்டையை ஒரு பொக்கிஷம் மாதிரி பாதுகாக்க வேண்டும் என்று எண்ணி னேன். இடப்பெயர்வின் போது மிகவும் முக்கியமான பொருட்களை கூட நான் மறந்து விட்டுச் சென்றிருந்தேன். ஆனால் அவளுடைய அந்த நினைவுப்பரிசை பத்திரப்படுத்தி எடுத்துச் சென்றேன்….. இவ்வாறு பல நினைவுகளை என்னிடம் விட்டுச்சென்ற என் தங்கையே உன் நினைவுகளில் மூழ்கும் போதெல்லாம் என் இதயத்தில் ஏற்படும் வலியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது…. நீங்கள் இல்லாத இந்த உலகத்தில் உயிர் இருந்தும் வெறும் வெற்று கூடுகளாக வாழ்வது எத்தனை நரக வாழ்க்கை என்பதை தினமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் உங்கள் நினைவுகளுடன்…….🙏💐 கலைவிழி   https://eelamhouse.com/?p=2375
    • அன்றைய நாள் மிகவும் சோகமாக விடிந்தது போலத் தோன்றியது. மனதில் ஏதேதோ நெருடல்கள். நெஞ்சம் கனத்தது. ஏனென்றே தெரியவில்லை, எதையோ இழந்துவிட்டதுபோல் தவிப்பு உண்டானது. சக போராளிகள் இருவர் வந்தனர். இவர்கள் முகங்களிலும் சோகம். காரணத்தை அறிய மனம் துடித்தது. “உங்கட றெயினிங் மாஸ்ரர் சிறீ மதியல்லோ வீரச்சாவு” “ஆ………..?  சிறீமதியக்காவோ ? எங்க ” “மணலாத்தில…………” நான் அழவும் முடியாமல், கதைக்கவும் முடியாமல், வாயடைத்துப் போனேன். சிறீமதி,  உறுதியும், துணிச்சலும், தனக்கு கொடுக்கப்பட்டவேலையைப் புரிந்து கொண்டு செயற்படக்கூடிய திடகாத்திரமான உள்ளமும் படைத்தவள் அவள். அல்லிப்பளையில், ஒருநாள் மண்வெட்டி வாங்குவதற்காக வீடொன்றுக்குச் சென்றோம். எம்முடன் சிறீமதியும் வந்தாள். அங்கே எம்மை வரவேற்றவர் ஒரு வயோதிபத் தாய் சுகவீனமுடையவர். இருந்தாலும், தன்னால் இயன்றளவுக்கு எம்மை உபசரித்து, தேநீர் தயாரித்துத் தந்தார். நாங்கள் தேநீரை ஆவலோடு பார்த்தவண்ணம் இருக்க, சிறீமதியோ ஓடிச்சென்று, அம்மாவிடம் இருந்து தேநீரை வாங்கி எல்லோருக்கும் பரிமாறத் தொடங்கினாள். தாயோடு பிள்ளையாக, மக்களோடு மக்களாக ஒன்றுபடுகின்ற அந்தப் பண்பு அவளோடு கூடவே பிறந்தது. இன்னொரு நாள், நாம் பதுங்குகுழி வெட்டிக் கொண்டிருந்தோம். எமக்கு உதவியாக மக்களும் சேர்ந்து வெட்டிக் கொண்டிருந்தார்கள். மதியமாகி வெகு நேரத்திற்குப் பின்னரும் உணவு வரவில்லை . எமக்கு உதவியாகப் பதுங்குகுழி வெட்டிக் கொண்டிருந்த மக்கள் பசியுடன் இருக்கின்றார்களே என்ற எண்ணம் மனதை உறுத்த, உணவு வரும் வழியைப் பார்த்துப் பார்த்துக் கண் பூத்துப் போன சிறீமதி, பக்கத்தில் ஒரு சைக்கிளை வாங்கிக் கொண்டு நாம் தங்கியிருந்த இடத்திற்குப் போனாள். அங்கே நின்ற ஏனைய போராளிகள் ஏதோ வேலையாக இருந்ததால் அவர்கள் உணவை எடுத்து வருவதற்குத் தாமதமாகி விட்டது. வேகமாக வந்திறங்கிய சிறீமதியைக் கண்டதும், அவள் கோபமாக இருப்பது எல்லோருக்கும் விளங்கிவிட்டது. எல்லோரும் பதட்டத்துடன் இருந்தார்கள். “ஏன் இவ்வளவு நேரமும் சாப்பாடு கொண்டு வரேல்லை? வேலை செய்யிறசனங்கள் பாவமல்லோ ?” என்று பொரிந்து தள்ளிவிட்டு, உணவை எடுத்துக் கொண்டு, போனவேகத்திலேயே திரும்பி வந்துவிட்டாள். இவளுக்கு இரண்டு ஆண் சகோதரர்களும், இரு சகோதரிகளும் இருக்கிறார்கள். அவளது சகோதரன் ஒருவர் எமது முழுநேர உறுப்பினராகக் கடமையாற்றுகிறார். இவள் தனது பாடசாலை நாட்களில் சக மாணவர்களினதும் ஆசிரியர்களினதும், மதிப்பைப் பெற்றிருந்தாள். படிப்பிலும், விளையாட்டிலும் கலை நிகழ்ச்சிகளிலும் முன்னணியில் திகழ்ந்தாள். தான் படித்த ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தின் பாடசாலை மாணவர் ஒன்றியத் தலைவியாகவும்,  அதே பாடசாலையைச் சேர்ந்த மாணவர் அமைப்பு உறுப்பினர்களுக்குப் பொறுப்பாகவும் நியமிக்கப்பட்டாள். இவள் சமகால நிகழ்வுகளையும், அரச படைகளால் மக்கள்படுகின்ற அவலங்களையும் கலைப் படைப்புக்களினூடாக மக்களுக்குத் தெளிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தாள். அத்தோடு பெண்களை விடுதலைப்புலிகள் மகளிர் படையணிக்காக அணிதிரட்டுவதிலும் ஈடுபட்டாள்.  இப்படியிருக்கும் போது, ஒரு நாள் தன் தாயிடம், “அம்மா, இன்னும் எவ்வளவு காலத்துக்கு இயக்கத்துக்கு ஆட்களை எடுக்கிற வேலையையே செய்து கொண்டிருக்கிறது? இயக்கத்திலே சேரப்போறன்” என்று கேட்டாள். அந்த வீரத்தாயும் மறுப்பேதும் சொல்லாமல், மகளைக் கூட்டிச்சென்று எம்மவரோடு இணைத்துவிட்டாள். எவராலும் அடக்கமுடியாத மதங் கொண்ட யானையைப் பிடித்துக் கட்டிய ‘அரியாத்தை ‘ பிறந்த முல்லைத்தீவு மண்ணிலேதான் சிறீமதியின் தாயும் பிறந்தவள் அல்லவா? அரியாத்தையின் வீரமும் உறுதியும் அவளிடமும் இருக்கத்தானே செய்யும்? பயிற்சியை முடித்த சிறீமதி அரசியல் வேலைக்கென நியமிக்கப்பட்டு, மணலாற்றில் தனது வேலையைத் தொடங்கினாள். அப்போதுதான், ஆயிரக்கணக்கான போராளிகளை உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் அவளிடம் உண்டானது. அவளது எண்ணத்துக்கு ஏற்ப, அவளின் திறமையால் பயிற்சியாசிரியராக நியமிக்கப்பட்டாள். பதின்மூன்றாம் பயிற்சி முகாமுக்குத் துணையாசிரியராக இருந்த சிறீமதி, சிறீலங்கா இராணுவத்துக்கெதிரான எமது முதலாவது மரபுவழிப் போரான ஆகாயக்கடல் வெளித்தாக்குதலுக்கு உதவிக் குழுவாகச் சென்றாள். தனது பணியில் கண்ணும் கருத்துமாக இருந்தாள். இவள் மீது பொறாமை கொண்ட தடியொன்று இவளின் காலைப் பதம் பார்த்துவிட்டது. அந்தப் புண் நாளடைவில் பெரிதாகிவிட்டது. நடப்பதற்குக்கூடச் சிரமப்பட்டாள். இழுத்து இழுத்துத்தான் நடக்க முடிந்தது. ஆனாலும் தளரவில்லை . போர் ஒரு முடிவுக்கு வரும்வரை தனது பணியைத் தொடர்ந்து செய்தாள். அங்கிருந்து திரும்பியதும் மீண்டும், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பெண்களைப் புதிய போராளிகளாக மாற்றியமைத்தாள். ஒருமுறை, எமக்குப் பயிற்சி நடந்துகொண்டிருந்தது. களைப்பு மிகுதியால் காவற்கடமையில் இருப்பவர்கள் தவிர, மற்றவர்கள் நித்திரைக்குச் சென்றுவிடுவார்கள். இரவில் சாப்பிடுவது பெரும்பாலும் குறைவு. உடல் அலுப்பால் உறங்கிவிடுவார்கள். எஞ்சுகின்ற உணவு கொட்டப்படும். இதைக்கண்ட பயிற்சி முகாம் பொறுப்பாளர் சிறீமதியைக் கூப்பிட்டார். “சிறீமதி, ஒருக்காப் போய் உன்ர பிள்ளையள் இருக்கற அறையளுக்குப் பின்னாலை பார், எவ்வளவு சாப்பாடு கொட்டிக்கிடக்குது எண்டு. நாளைக்கு முழுக்க அவையளுக்குச் சாப்பாடு குடுக்கக்கூடாது. அப்பத்தான் தெரியும் சாப்பாட்டின்ரை அருமை” என்று சொல்லிவிட்டார். மறுநாள் காலை பயிற்சியை முடித்துக்கொண்டு எல்லோரும் வரிசையில் இருக்கிறோம். எங்களிடம் வந்த சிறீமதி கண்டிப்பான தொனியில், “ஏன் பிள்ளையள் இவ்வளவு சாப்பாட்டையும் கொட்டியிருக்கிறியள்? இரவிலை ஏன் ஒருதரும் சாப்பிடுறதில்லை ? இப்படி இரவில சாப்பிடாமவிட்டா விடிய என்னெண்டு றெயினிங் எடுக்கிறது?” என்று, தொடர்ந்து ஒரு குட்டிப் பிரசங்கம் செய்துவிட்டு, “இண்டைக்கு முழுக்க நீங்க ஒருதரும் சாப்பிடக்கூடாது. அப்பத்தான் உங்களுக்குச் சாப்பாட்டின்ர அருமை தெரியும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அன்று முழுவதும் எவருமே சாப்பிடவில்லை . இவளும் சாப்பிடவில்லைத்தான். நாங்கள் எவ்வளவோ கெஞ்சியும் இவள் சாப்பிடவில்லை. வழமைபோல் நாளாந்தப் பயிற்சியை முடித்தபின் இரவு சாப்பிடாமல் படுத்த ஒவ்வொருவரையும் எழுப்பி, சாப்பிடவைத்து நாங்கள் சாப்பிட்டபின் தான் அவள் சாப்பிட்டாள். அந்த நேரத்தில் அவளது உணர்வு, எங்களின் உணர்வுகள் எப்படி இருந்தனவென்று வார்த்தைகளால் சொல்வது கடினம். அன்னையின் அரவணைப்பில் உள்ளது போல், அதற்கும் மேலே மேலே… உணர்ந்தோம். பிள்ளைகளைத் தண்டிக்க விரும்பாத சிறீமதி அடிக்கடி கூறுவது இதுதான்.”பிள்ளையள், சும்மா சும்மா குழப்படி செய்து அநியாயமாப் பனிஸ்மென்ற் வாங்காதேங்கோ”. பயிற்சியை முடித்த பின்னர் எமது குழுக்களில் ஒரு பகுதி தொண்டைமானாறுக்குச் சென்றது. அதற்குத் தலைமை தாங்கியவள் சிறீமதிதான். அங்கிருந்து வளலாய் இராணுவ முகாமுக்குக் காவற்கடமையைச் செய்வதற்காகச் சென்றுவருவோம். எந்த நேரமும் இராணுவம் முன்னேறலாம், சண்டை தொடங்கலாம் என்பதால் எதிரியை எதிர்பார்த்தே நின்றோம். அப்போது எங்களுக்குப் போர் அனுபவம் எதுவுமில்லை . “பிள்ளையள், பயப்பிடக்கூடாது, நல்லா அடிபடோணும். அதுக்காக மோட்டுத்தனமாய்ப் போய்மாட்டுப்படக்கூடாது. கவனமா, நிதானமா அடிபடோணும், என்ன ?” என்ற இவளுடைய வார்த்தைகள் எம்மை உறுதியாக்கும். போருக்குத் தயார்படுத்தும். இவளுடன் நாம் இல்லாவிட்டாலும், எம்மை எங்காவது காணும் பொழுதுகூட எம்மில் கவனம்தான். “என்ன பிள்ளையள் இந்த உடுப்பின்ர நிறம்? ஒழுங்காத் துப்பரவா இருக்கிறதுக்கென்ன, ஆ?” என்று செல்லமாகக் கண்டிப்பாள். அப்போது, எமது இதயபூமியை ஆக்கிரமிக்கும் நோக்குடன் சிறீலங்கா இராணுவத்தினர் மீண்டும் காட்டுக்குள் முன்னேறமுயன்றனர். எதிரியுடன் மோத எமது படையணிகள் தயாராகிக் கொண்டிருந்தன. சிறீமதிக்கோ புதிய போராளிகளுக்குப் பயிற்சி கொடுக்குமாறு உத்தரவிடப்பட்டது. விடுவாளோ அவள்? மகளிர் படையணியின் தளபதியிடம் போய்ச் சண்டைபிடித்தாள். “என்னைச்சண்டைக்குப் போகவிடுங்கோ. போயிட்டு வந்து றெயினிங் குடுக்கிறன்” இறுதியில் சிறீமதியின் பிடிவா தந்தான் வென்றது. சண்டைக் குச் சென்றாள். போர்முனைக்குப் போகும் போது, மீண்டும் ஒரு புறநானூறு எழுந்தது. மகளிர் படையணியினர் பயணம் செய்த வாகனம், போகும் வழியில் சிறீமதியின் வீட்டு வாசலின் முன்னால் பழுதடைந்து நின்றுவிட்டது. வாகனத்தைத் திருத்துவதற்கு இவளது குடும்பத்தினர் உதவி செய்தனர். தமிழீழத்தின் வீரத் தாய்மாருள் ஒருத்தியும் சிறீமதியின் அன்னையுமான அந்த மாதர்குல மாணிக்கம்,”நல்லாச்சண்டை பிடிச்சு, அவங்களை அடிச்சுத்திரத்திப் போட்டு வெற்றியோட வாங்கோ” என்று தன் மகள்களை ஆசிர்வதித்து, விடைகொடுத்தாள். தன்பெண் குழந்தைகளை ஒரு தாய் போருக்கு அனுப்பும் புதிய புறநானூறு ஒன்று அங்கே எழுதப்பட்டது. இதுதான் இந்த மண்ணுக்கேயுரிய இயல்பு. வாகனம் மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தது. சிறீமதி திடீரென்று தன் மனதில் ஏதோ நினைத்தவளாய்… கண் கலங்க தனக்கருகில் இருந்த தோழியிடம் கூறுகிறாள். “நான் இயக்கத்துக்கு வந்ததற்கு ஒரு நாள் கூடக் கவலைப்படேல்ல. இப்ப அம்மா, அப்பா, சகோதரங்களையும் கண்டிட்டன். ஆனா உயிரையும் விடப் பெரிசெண்டு தான் நினைக்கிற இந்த மண்ணையும், மக்களையும் காக்கவெண்டு வெளிக்கிட்டவரைத்தான் காணேல்ல. அதுதான் எனக்கு இப்ப கவலையா இருக்கு”. அவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது. போர் முனையைப் படையணிகள் அடைந்துவிட்டன. சிறீமதி ஒரு குழுவுக்கு தலைமை தாங்கினாள். எதிரியிடமிருந்து எண்ணற்ற ரவைகளும் குண்டுகளும் எம்மை நோக்கிவந்து கொண்டிருந்தன. “செல் குத்துறான். எல்லாரும் கவரில நிண்டு அடிபடுங்கோ ” “கவனமா ஒருதரையும் விடாம தூக்கிக்கொண்டு போங்கோ” சிறீமதியின் குரல் முன்னணியில் நின்று வழி நடத்திக் கொண்டிருந்தது. எதிரியிடம் இருந்து வந்த எறிகணை ஒன்று தன்னிடம் இருந்து இவள் எல்லோரையும் தப்பவைக்கிறாளே என்ற கோபத்தினாலோ என்னவோ, இவளது தலையைச் சீவிச்சென்றது. ரீ81 துப்பாக்கியையும், வோக்கியையும் தனது இருகைகளாலும் அணைத்துப் பிடித்தபடி, விழுந்த சிறீமதியின் வாயிலிருந்து . “பிள்ளையள்” என்ற ஒரு சொல் மாத்திரமே வந்தது என்று, அவளோடுகளத்தில் நின்ற தோழிகள் விம்மலுடன் கூறினார்கள். முல்லைமண்பெற்றெடுத்த புதல்வியின் குருதியால், எமது இதயபூமி தன் வளத்துக்கு மேலும் உரம் சேர்த்துக்கொண்டது. அவள் காவல் செய்த தொண்டைமானாற்றுக் கடலோ தனது அலைகளை உயர்த்தி, “சிறீமதி எங்கே? எங்கே?” என்று தேடுகிறது. இவளின் அக்கா மகன் தீபன், “அன்ரி அன்ரி” என்று, வீட்டுக்கு வரும் பெண் போராளிகளில் சிறீமதியைத் தேடுகிறான். அவள் வளர்த்தெடுத்த புதிய தலைமுறைகளோ அவளின் இலட்சியக் கனவுகளையும், ஆசைகளையும் சுமந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். – உலகமங்கை – –களத்தில் இதழ்    https://eelamhouse.com/?p=2361
    • தமிழீழத்தின் வளம்மிக்க கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுர கிராமத்தில் இராசு ரட்ணசிங்கமாக 09/01/1980 ஆண்டு மூன்று சகோதரிகளுக்கு தம்பியாக பிறந்தான் மிகவும் செல்லமாக வளர்ந்து வந்தான் அவனது சிறுவயதில் தந்தை இறந்துவிட தாயார் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் பிள்ளைகளை படிக்கவைத்து வளர்த்து வந்தார் இவனை எல்லோரும் சுதா என்றே அழைத்துவந்தனர் பாடசாலை கல்வி கற்றுவந்த வேலையில் யாழ்ப்பாணத்தை சிறிலங்கா படைகள் ஆக்கிரமித்ததன் விளைவாக பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்து வன்னியில் குடியேறியிருந்தனர் அதன்படி தர்மபுர கிராமத்திலும் மக்கள் குடியேறியிருந்தனர் அவனுக்கு போரின் தாக்கம் அவனை பாதிக்க தொடங்கிய வேலை கிளிநொச்சி யை இராணுவம் ஆக்கிரமித்தவுடன் விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்து கொள்கிறான் அதன்படி 1996 ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து லெப்.கேணல் இம்ரான் பாண்டியன் படையணியில் மேஜர் மாறன் -01 பயிற்சி முகாமில் சுகுமார் என்கிற இயக்கபெயருடன் ஆரம்ப பயிற்சியை பெற்றான். பயிற்சியில் நல்ல திறமையாக செயற்பட்டான் அதேவேளை அவனுக்கு திடகாத்திரமான உடலமைப்பும் குறிபார்த்து சுடுவதிலும் வல்லவனாக இருந்தபடியால் ஆரம்ப பயிற்சி நிறைவுற்கு பின் தாக்குதல் அணியாக பிரிக்கும்போது LMG இலகுரக கனரக ஆயுத சூட்டாளனாக தேர்வு செய்யப்படுகிறான். LMG பயிற்சி மனலாறு முகாமில் நடைபெற்றுக்கொண்டுயிருக்கும் போது சிங்களப்படைகளின் ஜெயசிக்கிறு படைநடவடிக்கை ஆரம்பமாக போவதை அறிந்த புலிகள் அதனை தடுப்பதற்கு பல தாக்குதல் அணிகளை களமுனைற்கு அனுப்பினார்கள் அதில் சுகுமாரின் அணியும் கலந்து கொண்டு பலமுன்னேற்ற முயற்சிகளை முறியடிப்பதில் வீரத்துடன் ஈடுபட்டான். இராணுவத்தின் தொடர்ச்சியான முன்னேற்றத்தை தடுக்கும் நோக்கில் முன்னரங்கில் நின்றவேளை தவறுதலான சூட்டில் சுகுமார் கையில் காயப்பட்டு சிகிச்சைற்காக பின்நகர்த்தப்பட்டான். காயம் மாறியபின் தான் சண்டைக்களத்திற்கு போகவேணும் என்கிற எண்ணத்தை தனது படையணி சிறப்புத்தளபதிற்கு தெரியப்படுத்தினார் ஆனால் அவர் அவனை தொலைத்தொடர்பு கற்கைநெறிக்கு அனுப்பிவைத்தார் விருப்பமில்லாமல் சென்றாலும் தொலைத்தொடர்பு கல்வியை சிறப்பாக கற்றுதேர்ந்தான். இந்த காலத்தில் சண்டைற்கு செல்லும் எண்ணம் நிறைவேறாத காரணத்தாலும் சிங்களப்படைகளுக்கு எதிரினான தனது ஓர்மத்தை வெளிப்படுத்தும் நோக்கில் தன்னை கரும்புலிகள் அணிற்கு தேர்வு செய்யும்படி சிறப்புத்தளபதி கடாபியண்ணாவுற்கும் தமிழீழ தேசியத்தலைவருக்கும் தொடர்ச்சியாக பல கடிதங்களை அனுப்பியும் அவனது முயற்சி பயன் அளிக்கவில்லை ஆனால் கடாபியண்ணாவின் நன்மதிப்பை பெற்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மிகவும் இரகசியம் வாய்ந்த தேசியத்தலைவரின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் படைக்கல பாதுகாப்பு அணிற்கு தொலைத்தொடர்பாளனாக 1998 ஆரம்ப காலத்தில் அனுப்பபட்டான். படைக்கல பாதுகாப்பு பணி அந்த காலத்தில் மிகவும் ஆட்பற்றாக்குறை கடுமையான வேலைப்பலுவுடன் இயங்கி வந்த நேரம் சுகுமார் தனிஒருவனாக 24 மணிநேரமும் தொலைத்தொடர்பு கடமையை செய்யவேண்டிய நிர்ப்பந்தம் அதேநேரம் தாக்குதலுக்கான வெடிபொருட்களை பார ஊர்திகளில் ஏற்றி அனுப்ப வேணும் அத்தோடு விடுதலைப்புலிகளால் கொள்வனவு செய்து வரும் வெடிபொருட்களை முகாங்களில் களஞ்சியப்படுத்த வேணும் என பல வேலைகளை குறிப்பிட்ட போராளிகளே செய்யவேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததால் தனது தொலைத்தொடர்பு கடமையோடு இரவுபகல் பாராமல் எல்லாவேலையிலும் சோர்வு இன்றி ஈடுபடுவான். 2000 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் போரியல் வெற்றியின் உச்சத்தில் இருந்த நேரத்தில் வெடிபொருட்களின் கணக்காளராக இருந்த திருமாலுக்கு உதவியாக சுகுமாரை பொறுப்பாளர் சுயாகியண்ணா நியமித்தார். சுகுமார் தனக்கு தந்த பணியின் இரகசியத்தையும் முக்கியத்தையும் உணர்ந்து மிகவும் ஈடுபாட்டுடன் வேலைசெய்து வந்தான்.2002 சமாதான காலப்பகுதியில் இம்ரான் பாண்டியன் படையணி இரண்டாக பிரிக்கப்பட்டு லெப். கேணல் ராதா வான்காப்புப் படையணி என்கிற புதிய படையணியின் பெயருடன் இருந்த படையணிற்குள் படைக்கல பாதுகாப்பு அணி இயங்கிவந்தது. புதிய படையணியின் நிதிப்பொறுப்பாளராக திருமால் 2003 செல்ல சுகுமார் படைக்கல பாதுகாப்பு அணியின் கணக்காளராக நியமிக்கப்பட்டான். சுகுமார் கணக்காளராக வந்த பின் வெடிபொருட்களின் மாதாந்த இருப்பு வரவுசெலவுகளின் கணக்கறிக்கை தேசியத்தலைவருக்கு அனுப்பிய விதம் வடிவமைப்பு தேசியத்தலைவருக்கு பிடித்து தலைவரின் பாராட்டுகளை பெற்றான். சுகுமாருக்கு எந்த ஆயுதம் எந்த வெடிபொருள் எந்த மாவட்டத்தில் எந்த களஞ்சியத்தில் பாதுகாப்பாக இருப்பில் உள்ளது என்கிற மனதிலே பதியவைத்துவிடுவான் அவனது திறமையான செயல்பாட்டை பார்த்து பொறுப்பாளரால் பீல்ட்பைக் மோட்டர்சைக்கிள் கொடுக்கப்பட்டுயிருந்தது தேசியத்தலைமையிடமிருந்து ஆயுத வெடிபொருட்களை குறிப்பிட்ட படையணி அல்லது தளபதியிடம் கொடுக்க சொல்லி கட்டளை வந்தால் சுகுமாரின் பீல்ட்பைக் உறுமிக்கொண்டு போகும். 2006 நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பமான பின் சுகுமாரின் பணி கடுமையானது முக்கியமான வெடிபொருட்கள் குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்கவேணும் என்றால் தனி ஒருவனாகவே பார ஊர்திகளில் வெடிபொருட்களை ஏற்றி கொண்டுபோய் குறிப்பிட்ட நேரத்திற்குள் கொடுப்பான் அவனது கன்டர் வாகனம் எப்போதும் வெடிபொருட்களை ஏற்றிய வண்ணமே இருக்கும். இந்த காலப்பகுதியில் சுகுமார் முன்னர் கொடுத்த கரும்புலிகள் அணிற்கான கடிதத்திற்கான பதிலாக அவனை கரும்புலிகள் அணிற்கு வரும்படி அழைப்பு வந்தது சுகுமாரும் உற்சாகமாக கரும்புலிகள் அணிற்கு செல்ல தயார் ஆனான் ஆனால் பொறுப்பாளர் சுயாகியண்ணை சுகுமாரின் வேலையின் முக்கியத்தையும் தற்போதைய நிலையில் அவனை அனுப்பமுடியாமல் உள்ள காரணத்தையும் தேசியத்தலைவருக்கு தெரியப்படுத்தி அவனை தனது கடமையை தொடர்ச்சியாக செய்ய அனுமதி வேண்டினார் இதனால் சுகுமார் மீண்டும் மனமுடைந்தான் இருந்தபோதிலும் தனது வேலையின் முக்கியத்துவத்தையும் தன்மீது பொறுப்பாளர் மற்றும் தேசியத்தலைவர் வைத்திருக்கும் நம்பிக்கைற்கு ஏற்றார்போல் சிறப்பாக செயல்படவேண்டும் உத்வேகத்துடன் செயல்பட்டான். 2008 ஆண்டு சிங்களப்படைகள் வன்னியை ஆக்கிரமிக்க தொடங்க படைக்கல இருப்புமுகாங்களும் பாதுகாப்பான இடங்களுக்கு நாளாந்த மாறிக்கொண்டுயிருந்தது 2009 ஆண்டு ஐனவரி மாதம் விசுவமடுவை ஆக்கிரமிக்க சிங்களப்படைகள் முன்னேறிவர படைக்கல பாதுகாப்பு அணியின் பிரதான தளமும் கைவிடப்பட்டு வெடிபொருட்கள் பின்நகரந்தப்பட்டன. தேசியத்தலைவருக்கும் மட்டுமே தெரிந்த விடுதலைப்புலிகளின் ஆயுதப்பலம் சுகுமாருக்கும் தெரியும் ஏனெனில் கடந்த 9 வருடங்களாக எவ்வளவு ஆயுத வெடிபொருட்கள் எமது அமைப்புற்கு வந்தது அது எந்தெந்த படையணிற்கு எவ்வளவு கொடுத்தது என்பதை அறிந்தவன் முள்ளிவாய்க்கால் மண்ணில் மே 15 திகதிவரை தேசியத்தலைவரின் கட்டளைற்கு அமைய ஆயுத வெடிபொருட்கள் வினியோகத்தை செய்தவன் அன்றிறவு தேசியத்தலைமையுடன் முள்ளிவாய்க்கால் முற்றுகையை உடைத்து வெளியேறும் அணியில் படைக்கல பாதுகாப்பு அணியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு பேரில் ஒருவனாக புறப்பட்டான் ஆனால் பிரிகேடியர் சொர்ணம் வீரச்சாவுடன் அந்த நாள் திட்டம் கைவிடப்பட அடுத்த நாள் பகல் வட்டுவாகல் பாலத்திற்கு அருகாமையில் வீதியோரமாக சுகுமாரின் அணிகளை பாதுகாப்பாக இருக்கும்படி கட்டளை கொடுக்கப்பட்டுயிருந்தது ஆனால் மக்களும் பெருமளவில் வெளியேற மக்களை கேடயமாக வைத்து இராணுவம் முன்னரங்க பாதுகாப்பை உடைத்துகொண்டு சுகுமாரின் அணிகள் நின்ற இடத்தை நெருங்கிவந்துவிட்டது உடனடியாக இராணுவத்தின் முன்னேற்றத்தை தடுக்கும் நோக்கில் சுகுமாரின் அணி முன்னேற்றத்தை முறியடிக்கும் கடும எதிர்தாக்குதலை மேற்கொண்டு முன்னேற்ற முயற்சியை தடுத்தனர் ஆனால் 16/05/2009 அன்று மாலைப்பொழுதில் சிங்களப்படையின் தாக்குதலில் வீரச்சாவடைந்தான். விடுதலைப்புலிகளின் படைக்கல பலத்தை முழுமையாக அறிந்த இரகசியகாப்பாளன் முள்ளிவாய்க்கால் மண்ணில் தன் மூச்சை நிறுத்தினான்.   https://eelamhouse.com/?p=2286
    • நான் நடுராத்தியில் பல தடவை நித்திரையில் இருந்து எழுப்பியிருக்கின்றன். எந்தவித சலிப்பின்றி அவரே வந்து வேலை செய்து தருவார். பிரின்ரர் சிலவேளைகளில் வேலைசெய்யாமல் இருக்கும், சிலவேளைகளில் ரோணர் பிரச்சினையாக இருக்கும், உடனயாடியாக அன்புமணி அண்ணையிடம் ஓடிபோனா காணும், வேலை முடிஞ்சதிற்கு சமன். தன்னுடைய இடத்திலே வேலை செய்ய சொல்லிவிடுவார். யாருடைய வெளியீடு என்றாலும் உதவி என்று கேட்டால், எந்த மறுப்பின்றி உரிய நேரத்திற்குள் செய்து கொடுக்கும் அன்புமணி அண்ணையை இழந்து 12 ஆண்டுகளை கடக்கின்றோம். விடுதலைப்புலிகளின் உத்தியோக பூர்வ ஏடான “விடுதலைப்புலிகள்” பத்திரிகையின் இதழ் -01 தொடக்கம் 138 வரையான பதிப்புக்களை இணையத்தில் அனைவரும் பார்வையிடலாம். அந்த பணிகளுக்கு உரித்தானவர் இவரே. ஆவணப்படுத்தல்களை மிகவும் அக்கறையாக செய்து முடித்தவர். அவரையும் இந்நாளில் நினைவு கூருகின்றேன். “அன்புமணி அண்ணை எப்பொழுதும் எங்களோடயே இருப்பார்.”
    • யாழ்மாவட்டத்தில் வடமராட்சிக் கிழக்கு உடுத்துறையை பிறப்பிடமாகக் கொண்ட கப்டன் கலைஞன் தனது பள்ளிப் படிப்பபை உடுத்துறை மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தார். 2004-ம் ஆண்டு பிற்பகுதியில் தன்னை தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைத்துக் கொண்ட கலைஞன் தனது அடிப்படை படையப் பயிற்சிகளை முடித்துக்கொண்ட பின்னர் கடற்புலிகள் உறுப்பினராகச் செயற்படலானார். 2005-ம் ஆண்டு காலப்பகுதியில் சிறிது காலம் திருமலை மாவட்டத்தில் போராட்டச் செயற்பாடுகளை முன்னெடுத்த கலைஞன் மீண்டும் வன்னிக்கு வந்தார். வன்னிக்கு வந்த கலைஞன் அடிப்படை படையப் பயிற்சிகளை வழங்குவதற்கான ஆசிரியப் பயிற்சிகளை (மாஸ்ரர்ப்பயிற்சி) பெற்றுக் கொள்வதற்காக படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளர் பிரிகேடியர் ஆதவன் (கடாபி) அவர்களிடம் சென்று மாஸ்ரர்ப் பயிற்சிகளைப் பெற்று தகுதிபெற்ற ஒரு பயிற்சி ஆசிரியராக தன்னை வளர்த்துக் கொண்டு மீண்டும் கடற்புலிப்போராளியாக தனது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார். 2006-ம்ஆண்டுகாலப்பகுதியில் கடற்புலிகளுக்கென மட்டுப்படுத்தப்பட்டளவில் அடிப்படை படையப்பயிற்சிக்கல்லூரி ஒன்று முள்ளியவளை- கேப்பாப்பிலவுப்பகுதியில் செயற்பட்டுக்கொண்டிருந்தது. இந்தக்கல்லூரியின் பொறுப்பாளராக பாண்டியன் மாஸ்ரர் செயற்பட்டார். இந்தப் பயிற்சிக் கல்லூரியில் கலைஞன் ஒரு பயிற்சி ஆசிரியராகச் செயற்பட்டிருந்தார். 2006-ம்ஆண்டின் நடுப் பகுதியில் பெருமளவான புதியபோராளிகள் விடுதலைப்போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் கடற்புலிகளின் படைக் கட்டுமானங்களை விரிவாக்கும் நோக்குடன் குறிப்பிட்டதொகைப் புதியபோராளிகள் கடற்புலிகளுக்கு உள்வாங்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கான அடிப்படைப் பயிற்சிகளை வழங்குவதற்கென சகலவளங்களையும் உள்ளடக்கியதான பயிற்சிமுகாம் ஒன்று விசுவமடுப்பகுதியில் நிறுவப்பட்டது. இவ்வாறு விசுவமடுப் பகுதியில் நிறுவப்பட்ட அடிப்படை படையப் பயிற்சிக் கல்லூரிக்கு பொறுப்பாளராக பாண்டியன் மாஸ்ரரும் அவரது ஆளுகையின் கீழ் பயிற்சிகளை வழங்குவதற்கென தேர்ச்சி பெற்ற பயிற்சி ஆசிரியர்களும் உரியபொறுப்புக்களில் அமர்த்தப்பட்டனர். நிலையுடன் பெயர்: கப்டன் கலைஞன். முழுப்பெயர்: திருபாலசிங்கம் அரன். நிலையான முகவரி: உடுத்துறை- வடக்கு, வடமராட்சிக்கிழக்கு, யாழ்மாவட்டம். வீரப்பிறப்பு: 16-04-1986. வீரச்சாவு: 20-12-2008. வீரச்சாவுச்சம்பவம்: முல்லைக்கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடிமோதலின்போது. தேசியத் தலைவரின் அறிவுறுத்தல்களுக்கமைவாக புதிய போராளிகள் (ஆண்கள்) நான்கு கட்டங்களாக கடற்புலிகளுக்குள் உள்வாங்கப்பட்டனர். முதலாவதாக உள்வாங்கப்பட்ட அணிக்கு கப்டன் பண்டிதர் பயிற்சிக்கல்லூரி எனப் பெயரிட்டு புதிய போராளிகளுக்கான அடிப்படைப் பயிற்சிக்கல்லூரி 2006-ம்ஆண்டு நவம்பர்மாதம் முதலாம் திகதி உத்தியோகபூர்வமாக தொடங்கப்பட்டது. இந்தப்பயிற்சி அணிக்கு பயிற்சி வழங்குகின்ற பிரதான பயிற்சிஆசிரியராக கலைஞன் செயற்பட்டார். கப்டன் பண்டிதர் பயிற்சிக்கல்லுரி நிறைவுபெற்றதும் அதனைத்தொடர்ந்து கப்டன் றஞ்சன்லாலா பயிற்சிக்கல்லுரி அடுத்து லெப் கேணல் அப்பையா பயிற்சிக்கல்லுரி அதையடுத்து கப்டன் லிங்கம் பயிற்சிக்கல்லுரி என பிரதானமாக நடைபெற்ற நான்கு பயிற்சி அணிகளுக்கும் பயிற்சி வழங்குகின்ற பிரதான பயிற்சி ஆசிரியராக கலைஞன் செயற்பட்டதோடு பல நூற்றுக்கணக்கான புதிய போராளிகளை புடம்போட்டு போர்த்திறன்மிக்க போராளிகளாக வளர்த்துவிட்ட பெருமையும் இவருக்கு உண்டு. கலைஞன் அமைதியான சுபாவம்கொண்டவர். அதிகமாக யாருடனும் பேசமாட்டார். ஆனாலும் தனக்கு வழங்கப்பட்ட பணிகளை செவ்வனே செய்துமுடிக்கும் திறன்கொண்டவர். இவரால் புடம்போட்டு வளர்க்கப்பட்ட போராளிகள் பலபேர் குறிப்பாக 2007 2008 மற்றும் 2009-ம்ஆண்டின் முற்பகுதி வரையிலும் கடலிலும் தரையிலும் சிறிலங்காப்படைகளுடன் சமர்க்களங்கள் புரிந்து வீரவரலாறுகளை எழுதியமையும் இங்கு குறிப்பிடவேண்டியது முக்கியமாகும். 2007-ம் ஆண்டு யூலை மாதம் 15-ம்நாளன்று கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அண்ணாஅவர்கள் படகுப் பரீட்சார்த்த நடவடிக்கை ஒன்றை நெறிப்படுத்திக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட படகு விபத்தில் சிறப்புத்தளபதி சூசையண்ணா அவர்கள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருந்தார். முல்லை- புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டதையடுத்து அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டியிருந்தார். சுமார் மூன்று வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சைகளைப் பெற்று வந்தநிலையில் அவரது உடல்நிலை முறையாகத் தேறாத நிலையிலும் அவரது பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் வேறுசில காரணங்களுக்காகவும் சூசையண்ணா மருத்துவமனையிலிருந்து வெளியேறவேண்டிய தேவையேற்பட்டது. 2007-ம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறி புதுக்குடியிருப்பில் பிரத்தியேகமாக ஒழுங்குசெய்யப்பட்ட இடத்தில் அவருக்கான மருத்துவ சிகிச்சைகளும் மருத்துவப் பராமரிப்புக்களும் தொடர்ந்து வழங்கப்பட்டுவந்தது. இக்காலப் பகுதியில் கடற்புலிகளின் கட்டமைப்புக்களில் சிலமாற்றங்கள் நடைமுறைக்குவந்தன. அந்தவகையில் அதுவரையில் அடிப்படைப் பயிற்சிக் கல்லுரிப் பொறுப்பாளராகவிருந்த பாண்டியன் மாஸ்ரருக்கு மேலதிகமாக இரண்டு பொறுப்புக்கள் வழங்கப்பட்டது. அதாவது கடற்புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராகவும் சிறப்புத்தளபதி சூசையண்ணாவிற்கான மெய்ப்பாதுகாப்பு அணிப்பொறுப்பாளராகவும் பாண்டியன் மாஸ்ரர் அமர்த்தப்பட்டார். இந்நிலையில் பாண்டியன்மாஸ்ரர் அவர்களால் சூசையண்ணா மருத்துவப் பராமரிப்பு பெற்றுக்கொண்டிருந்த முகாமிற்கான பிரதான மெய்ப்பாதுகாவலராக கலைஞன் அவர்கள் அமர்த்தப்பட்டார். மிகவும் பொறுப்புவாய்ந்த இந்தக் கடமையை ஏற்றுக்கொண்ட கலைஞன் சூசையண்ணைக்கு அருகிலிருந்து அவருக்கான மெய்ப்பாதுகாப்புப்பணியை மிகவும் நேர்த்தியாகவும் விசுவாசமாகவும் ஆற்றியிருந்தார். முழுநேரக்காவற் கடமைகளை ஒழுங்கு செய்துவிடுவதிலிருந்து சூசையண்ணையின் அவ்வவ்ப்போதைய பணிப்புரைகளுக்கு அமைவாக சூசையண்ணையின் சந்திப்பிற்கான பொறுப்பாளர்களை உரியநேரங்களிற்கு அறிவித்து அழைத்து ஒழுங்குசெய்வது வரையுமான கடமைகளை மிகவும் விசுவாசமாகவும் நேர்த்தியாகவும் ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட காலம் இக்கடமைகளை முன்னெடுத்த கலைஞன் பின்னர் பாண்டியன் மாஸ்ரரால் வேறு சில செயற்பாடுகளிலும் ஈடுபடுத்தப்பட்டார். இக்காலப்பகுதியில் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசையண்ணாவிற்கு அடுத்தநிலையான தளபதியாக நரேன் அவர்கள் தேசியத்தலைவர் அவர்களால் அமர்த்தப்பட்டார். 2007-ம்ஆண்டின் இறுதிப்பகுதியில் தேசியத்தலைவரின் ஆலோசனைகளுக்கு அமைவாக நரேன் அண்ணையின் மேற்பார்வையில் கப்பல் கல்லூரி தொடங்கப்பட்டது. அதாவது விடுதலைப்புலிகளின் சர்வதேசக் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற கப்பல்களில் கடமையாற்றுவதற்கான கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதுவே கப்பல்க் கல்லூரியின் பிரதான செயற்பாடாகும். குறித்த இந்தக் கப்பற் கல்லூரிக்கு தகுதி வாய்ந்த போராளிகளை தேர்வுசெய்தபோது கலைஞனும் அந்த அணிக்குள் உள்வாங்கப்பட்டிருந்தார். கிளிநொச்சி- திருவையாற்றிலும் பின்னர் முல்லைத்தீவிலுமாக இந்தக்கப்பற்கல்லூரி பலமாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. 2008-ம்ஆண்டு டிசெம்பர் மாதம் விடுதலைப் புலிகளின் பெரிய படகு ஒன்று சண்டைப் படகுகளுக்கான இயந்திரங்கள் மற்றும் அமைப்பிற்குத் தேவையான இன்னும் சில பொருட்களையும் சுமந்துகொண்டு சிலபோராளிகளுடன் இந்தோனிசியாவிலிருந்து முல்லைத்தீவு நோக்கி வந்துகொண்டிருந்தது. குறித்த இந்தப் படகிற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக கடற்புலிப்படகுகளும் கடற்கரும்புலிப்படகுகளும் களத்தில் இறங்கியது. இந்நநடவடிக்கையின்போது கப்பற் கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போராளிகள் சிலரும் சண்டைப் படகுகளில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர். எதிர்பார்த்தபடி 20-12-2008 அன்று இலங்கை கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் பெரும்கடற்சமர் முல்லைக்கடலில் மூண்டது. இந்தோனிசியாவிலிருந்து வந்துகொண்டிருந்த படகிற்கு பாதுகாப்பு வழங்கியபடியே கடற்புலிகளின் படகுகள் இலங்கைக் கடற்படைப்படககளுடன் தீரமுடன் போரிட்டுக்கொண்டிருந்தன. இந்தோனிசியாவிலிருந்து வந்துகொண்டிருந்த விடுதலைப்புலிகளின் படகும் போராளிகளும் மிகவும் பாதுகாப்பாக முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால்க்கரையை வந்து சேர்ந்தனர். இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைக்கான கடற்சமரின்போது சில கடற்புலிகளும் கடற்கரும்புலிகளும் தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கிக்கொண்டார்கள். 20-12-2008 அன்று இந்தப்பாதுகாப்பு கடல்நடவடிக்கையின் வெற்றிக்கு விதையாகிய மாவீரர்களின் வரிசையில் கலைஞனும் தேசவிடுதலைக்காக விழிமூடிய ஆயிரமாயிரம் மாவீரர்களுடன் கப்டன் கலைஞனாக தானும் சேர்ந்துகொண்டான். தமிழீழத்தாயக விடுதலைவேள்வியில் ஆகுதியாகிய ஆயிரமாயிரம் மாவீரர்களின் நினைவுகளோடு கப்டன் கலைஞனின் நினைவுகளையும்விடுதலைத்தாகத்தையும் இதயத்தில் சுமந்துகொண்டு கனத்தமனதுடன் எமது விடுதலைப்பயணத்தை தொடர்வோமாக…. “தமிழரின்தாகம் தமிழீழத்தாயகம்.” நினைவுப்பகிர்வு: கொற்றவன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.