கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 3
✈️ பாகம் 03 – விமான நிலைய சாகசம்
அன்று காலையிலே வீடு உற்சாகத்தில் மூழ்கி இருந்தது. நிலன், தன் சிறிய தோள் பையை இறுகப் பிடித்துக் கொண்டு, அங்கும் இங்கும் ஓடி துள்ளிக் கொண்டு இருந்தான். திரேன், பெரியவன் என்பதால், தன் பாஸ்போர்ட் [Passport] மற்றும் போர்டிங் பாஸ் (Boarding Pass) இரண்டையும் அடிக்கடி மீண்டும் மீண்டும் சரிபார்த்துக் கொண்டு இருந்தான். எதையும் புரியாத வயது கொண்ட ஒரு வயது ஆரின் — சுற்றியுள்ள உற்சாகத்தை உணர்ந்து மகிழ்ச்சியாக “கூ கூ” என ஒலித்தான்.
“நாம் உண்மையிலேயே இன்று விமானத்தில் போகிறோமா, தாத்தா?” என்று நிலன் கண்கள் அகலமாக, எதிர்பார்ப்புடன் மின்னின.
தாத்தா புன்னகையுடன்,
"ஆமாம், சின்ன பைலட் [விமானி]," தாத்தா புன்னகையுடன் கூறினார். "இன்று, நாம் மேகங்களுக்கு மேலே பறந்து உலகை உயரத்திலிருந்து பார்க்கப் போகிறோம்." என்றார்.
விமான நிலையத்திற்குச் செல்லும் பயணம் சிரிப்பாலும், அரட்டையடிப்பதாலும் நிறைந்திருந்தது. தாத்தா விமான நிலையம் போகிற வழியில், வெவ்வேறு வாகனங்களைச் சுட்டிக்காட்டினார் - ஒரு பெரிய சிவப்பு பேருந்து, ஒரு கருப்பு டாக்ஸி [taxi], மற்றும் ஒரு பளபளப்பான டெலிவரி வேன் [delivery van] . “ஒவ்வொரு வாகனத்துக்கும் அவை அவற்றுக்காக ஒரு பிரத்தியேக வேலையுண்டு?” என்று அவர் கூறினார். “ஒரு நாள், ஒருவேளை நீங்கள் உங்கள் சொந்த விமானத்தை ஓட்டுவீர்கள்!” என்றார்.
விமான நிலையத்தை அடைந்ததும், அதன் பிரம்மாண்டமான அளவு குழந்தைகளை மூச்சுத் திணறச் செய்தது. விமான நிலைய முனையம் [terminal] பளபளப்பான தரைகள் மற்றும் கண்ணாடிச் சுவர்களால் மின்னியது, அதனூடாக உள்ளே பாய்ந்த சூரிய ஒளி அங்கு பிரதிபலித்தது. மக்கள் சூட்கேஸ்களை [suitcases] இழுத்துக் கொண்டும், தொலைபேசிகளில் பேசிக் கொண்டும் அல்லது சிலர் குழந்தைகளுடன் நெரிசலில் ஸ்ட்ரோலர்களை [strollers] உருட்டிக் கொண்டும் வேகமாக கடந்து சென்று கொண்டு இருந்தனர்.
“அட! இது கட்டிடத்துக்குள்ளே ஒரு நகரம் மாதிரி இருக்கே!” என்று திரேன் அதிசயித்தான்.
தாத்தா அவர்களை பாதுகாப்புப் பாதை வழியாக அழைத்துச் சென்று, ஒவ்வொரு அடியையும் பொறுமையாக விளக்கினார். “காலணியை கழற்றுங்க, பெல்ட்டை [belt] கழற்றுங்க, உங்கள் ஒவ்வொருவரின் தோள் பையையும் [backpacks] அந்த மெஷினில் வையுங்கள் … பீப் சத்தம் [beep] வந்தாலும் கவலைப்படாதீங்க — இதெல்லாம் சாகசத்தின் ஒரு பாகம் தான்!” என்று சிரித்தபடி சொன்னார். கன்வேயர் பெல்ட்கள் [conveyor belts] ஸ்கேனர்கள் [scanners] வழியாக தங்கள் தங்கள் பொருட்களை எடுத்துச் செல்வதை நிலன் வியப்புடன் பார்த்து மூச்சே விட்டான்.
பாதுகாப்பைக் [security] கடந்ததும், சாகசம் உண்மையிலேயே தொடங்கியது. அவர்கள் புறப்படும் லவுஞ்சிற்குள் [departure lounge] நுழைந்தனர், அங்கு காணப்பட்ட பெரிய ஜன்னல்கள் வழியாக, ஓடு பாதையில் நிறுத்தப்பட்டுள்ள விமானங்களின் பரந்த காட்சியைப் பார்த்தனர். நிலன் தனது மூக்கை கண்ணாடியில் அழுத்தி - அங்கே ஒரு பெரிய விமானத்தின் இயந்திரங்கள் சத்தமாக ஒலித்துக் கொண்டு, ஓடுபாதையில் நகரத் தொடங்கி, புறப்படத் தயாராகிக் கொண்டிருப்பதைப் பார்த்தான் - இயந்திரங்களின் சத்தம், தரையின் அதிர்வு, ஒளிரும் விளக்குகள் நிலனுக்கு மேலும் ஆர்வத்தை தூண்டியது. "தாத்தா! நாம அதுக்குள்ள போகலாமா?" என்று ஆவலாகக் கேட்டான்.
தாத்தா சிரித்தார். “சீக்கிரம், என் சின்னஞ்சிறு சாகசக்காரர்களே. சீக்கிரம் நாம் போகிறோம்.” என்றார்
காத்திருக்கும் நேரத்தை வேடிக்கையாக்க, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சிறிய நோட்டுப் புத்தகத்தையும் வண்ண பென்சில்களையும் கொடுத்தார். “நீங்கள் காணும் விமானங்களை வரையுங்கள்,” என்று அவர் பரிந்துரைத்தார். வானவில் இறக்கைகள் கொண்ட ஒரு விமானத்தை நிலன் ஆவலுடன் வரைந்தான், அதே நேரத்தில் திரேன், இரவு வானில் பறக்கும் ஒரு விமானத்தை, அது வெளிவிடும் புகை அல்லது நீராவிக்குப் பதிலாக, மின்னும் நட்சத்திரங்களை வெளியே தள்ளி விட்டுக் கொண்டு போவது போல - ஒரு மாயாஜால விமானம் அல்லது ஒரு நட்சத்திரம் போல - கற்பனை செய்து வரைந்தான். குட்டி ஆரின் கூட கைகளைக் காற்றில் ஆட்டி ஆட்டி, விமானம் பறக்கிற மாதிரி நடித்தான்.
அவசர அறிவிப்பு ஒலித்தது — அவர்களின் விமானம் தயாராகி விட்டது என்று! எனவே அவர்கள் ஜெட் பாலத்தின் [Jet bridge or jetway or passenger boarding bridge (PBB)] ஊடாக விமானத்துக்குச் சென்றார்கள்.
நிலன் உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி அடைந்து அதனுள்ளாக ஓடிப் போனான். விமானத்தின் அறை [கேபின்] விசாலமாக இருந்தது, வரிசையாக இருக்கைகள் அழகாக இருந்தன. பொதிகள் வைக்க தலைக்கு மேல் மூடக்கூடிய பெட்டிகள் [மேல்நிலை பெட்டிகள் / overhead compartments] இருந்தன. மற்றும் குழந்தைகளைப் அன்பாகப் பார்த்து பழகும் நட்பு விமானப் பணிப்பெண்கள் ["Airhostess"] அங்கு இருந்தனர். தாத்தா அவர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் இருக்கைகளில் பாதுகாப்பாக இருக்கைப் பட்டை [seat belt] போட்டு அமர உதவினார்.
விமானம் நகரத் தொடங்கியதும், நிலன் தனது கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு, அவனின் கண்கள் வியப்புடன் விரிந்தன. தரை வேகமாகவும் வேகமாகவும் கடந்து செல்வது போல் அவனுக்குத் தோன்றியது, திடீரென்று, மெல்ல உயர்ந்து, அது காற்றில் பறந்தது. "நாங்கள் பறக்கிறோம்! நாங்கள் பறக்கிறோம்!" என்று அவன் சிரித்துக் கொண்டே, கீழே உள்ள சிறிய கார்களையும் கட்டிடங்களையும் சுட்டிக்காட்டினான். அவை மங்கியபடி, சிறிதாகத் தெரிந்தன.
விமானத்தில் பயணம் செய்த அனுபவம் மூன்று பேரனுக்கும் மாயாஜாலம் போல் இருந்தது. தாத்தா அவர்களுக்கு சீட் பெல்ட்களை எப்படி கட்டுவது, ஜன்னலுக்கு வெளியே எப்படி பாதுகாப்பாகப் பார்ப்பது போன்றவற்றைக் கூறி, ஆனால், சிறிய தட்டு மேசைகளை [மேசைத் தாம்பாளம் / little tray tables] அவர்களே சரிபார்த்து பொருத்த அனுமதித்தார். குழந்தைகள் சிற்றுண்டிகளால் மகிழ்ச்சியடைந்தனர் - ஒரு சிறிய பொட்டலம் பிஸ்கட் மற்றும் ஜூஸ் - மேகங்கள் சோம்பேறித்தனமாக ஜன்னலைக் கடந்து சென்றன, சில பஞ்சுபோன்ற யானைகள் மற்றும் பெரிய அரண்மனைகள் போல இருந்தன.
விமானப் பயணத்தின் நடுவில், தாத்தா தான் கொண்டுவந்த ஒரு சிறிய போட்டி விளையாட்டு ஒன்றை வெளியே எடுத்தார் - 'வானத்தில் புதையல் வேட்டை'. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சரிபார்ப்புப் பட்டியல் இருந்தது: ஒரு டிராகன் போன்ற வடிவிலான மேகத்தைக் கண்டுபிடி, தூரத்தில் ஒரு விமானத்தைக் கண்டுபிடி, அல்லது கீழே நிலத்தில் வளைந்து செல்லும் ஒரு சிறிய நதியைக் கண்டுபிடி என பல கேள்விகள் அங்கு இருந்தன. நிலன் ஒரு பொருளைத் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு முறையும் அவனது கண்கள் பெருமையில் பூரித்தன. திரேன், வழமைபோல் ஆர்வத்துடன், கவனத்துடன் போட்டியிட்டான். ஆரின் கூட எதோ ஒரு புரிதலுடன் எதையெதையோ "சுட்டிக் காட்டி, என்னென்னெவோ சத்தம் போட்டான்.
விமானம் துபாயை நோக்கி தரை இறங்கும் போது, குழந்தைகள் தங்கள் முகங்களை மீண்டும் ஜன்னல்களில் அழுத்திக் கொண்டனர். அவர்களுக்குக் கீழே நகரம் ஒரு மின்னும் புதையல் பெட்டியைப் போல விரிந்தது: மின்னும் வானளாவிய கட்டிடங்கள், வளைந்து செல்லும் நீர்வழிகள், மற்றும் அடிவானம் வரை நீண்டு கிடக்கும் சிறிய சிறிய மணல் மேடுகள். நிலன் மூச்சுத் திணறினான். "இது மாயாஜாலம் போன்றது!" என்று நிலன் பெரு மூச்சு விட்டான்.
விமானம் இறுதியாக தரையிறங்கியதும், விமான நிலையத்தின் பரபரப்போடு சாகசம் தொடர்ந்தது: நீண்ட தாழ்வாரங்கள் [long corridors] வழியாக நடந்து, சாமான்களை [luggage] சேகரித்து மற்றும் ஆங்கிலம் மற்றும் அரபியில் வேடிக்கையான பலகைகளையும் கண்டனர். தாத்தா அவர்களின் கைகளை இறுக்கமாகப் பிடித்து, கூட்டத்தின் வழியாக அவர்களை கவனமாக பாதுகாப்பாக வழிநடத்தினார். அப்பொழுது சுவாரஸ்யமான காட்சிகளைச் சுட்டிக்காட்டிட தவறவில்லை - நகரும் நடைபாதை [moving walkway, also known as a travelator], வண்ணமயமான நினைவுப் பொருட்களின் காட்சி, மற்றும் சிறிய மீன்கள் நீந்தும் நீரூற்று [fountain] போன்றவை.
அவர்கள் வெளியே வந்த நேரத்தில், சூடான துபாய் சூரியன் அவர்களை ஒரு பழைய நண்பரைப் போல வரவேற்றது. குழந்தைகள் புதிய நகரத்தை சுவாசித்தனர், வரவிருக்கும் ஆச்சரியங்களை எதிர்பார்த்து உற்சாகமாக இருந்தனர். அவர்களின் கண்கள் ஆச்சரியத்தால் பிரகாசிப்பதைக் கண்டு தாத்தா சிரித்தார். "துபாய்க்கு வருக, என் சிறிய ஆய்வாளர்களே," என்று அவர் செல்லமாக அவர்களின் முதுகில் தட்டிக் கொடுத்து கூறினார். "ஆனால் இது வெறும் ஆரம்பம் தான்." என்றார் 🌍✈️
நன்றி
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
பாகம்: 04 தொடரும்
துளி/DROP: 1991 [கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 3
https://www.facebook.com/groups/978753388866632/posts/33261397920175427/?
By
kandiah Thillaivinayagalingam ·