Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

18 MAY, 2024 | 03:26 PM
image
 

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் ஆன்மிக குரு, அமைதித் தூதுவர், வாழும் கலை பயிற்சி நிலையத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இன்று சனிக்கிழமை (18) நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.

அவரை கிழக்கு மாகாண ஆளுநர்  செந்தில் தொண்டமான் விமான நிலையத்தில் வரவேற்றுள்ளார்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நாளை ஞாயிற்றுக்கிழமை (19) காலை 9.00 மணிக்கு நுவரெலியா சீதாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ள மஹா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்துகொள்ளவுள்ளார். 

அதனை தொடர்ந்து, நாளை மாலை 5.15 மணிக்கு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெறும் சத்சங்கத்தில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.

அந்நிகழ்வில், நாடளாவிய ரீதியில் வாழும் கலையின் 12 திறன் மேம்பாட்டு மையங்களை திறந்து வைக்கவுள்ளார். இந்த மையங்கள் 5,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு திறன்களை வளர்த்து அவர்களை வேலைக்குத் தயார்ப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. 

தொடர்ந்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் அழைப்புக்கிணங்க, திங்கட்கிழமை (20) காலை 10.00 மணிக்கு திருகோணமலை உட்துறைமுக வீதியிலுள்ள இந்து கலாசார மண்டபத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். அங்கு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை கௌரவிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

440943188_7860142860675980_7246833050463

444501789_7860141840676082_2747726788110

https://www.virakesari.lk/article/183875

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு வருகை தந்த ஸ்ரீ.ஸ்ரீ.ரவிசங்கர் குருஜி!

01-11-300x300.jpg

மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள படித்த யுவதிகளுக்கான சுயத்தொழிலை ஊக்கிவிப்பதற்கான செயற்பாடுகளை எமது அமைப்பின் ஊடாக எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்பட உள்ளதாக அண்மிக குரு அமைதி தூதுவர் வாழும் கலை பயிற்சி நிலையத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ.ஸ்ரீ.ரவிசங்கர் குருஜி தெரிவித்தார்.

இன்று (19) இலங்கை தொழிலாளர் காங்ரஸின் காங்ரஸின் பொதுச்செயலாளரும் நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமுக அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் நுவரெலியா கிரேன்ட் உணவகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது இந்த கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தவிசாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதுபாண்டி உறுப்பினருமான மருதுபாண்டி ராமேஸ்வரன் பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைவர் பாரத் அருள்சாமி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் இனைப்புச்செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ் கொட்டகலை பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் ராஜமணிபிரசாத் நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் தலைவர் யோகராஜ் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் காங்ரஸின் பிரதி தவிசாளர் ராஜதுரை என பலரும் கலந்து கொண்டனர்.

இதேவளை இலங்கை நாட்டில் தற்போது 12 அறநெறி பாடசாலைகள் இயக்கி வருகிறது அதில் நுவரெலியா மாவட்டத்தில் இது போன்ற அறநெறி பாடசாலைகளை உருவாக்க அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் இணைந்து காணி வசதிகளை பெற்று தரவேண்டும். தமது அமைப்பினை விரிவுபடுத்த எதிர்காலத்தில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கபட வேண்டுமென குறிப்பிட்டார்.

https://thinakkural.lk/article/302002

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலையகத்திலும் வாழும் கலை அமைப்பின் செயற்பாட்டை ஆரம்பிக்க உதவுவேன் - நுவரெலியாவில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் 

19 MAY, 2024 | 04:03 PM
image
 

லங்கையில் மலையகத்திலும் வாழும் கலை அறக்கட்டளை நிறுவக செயற்பாடுகளை ஆரம்பிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்த வேண்டுகோளுக்கு உதவுவேன் என ஆன்மிக குருவும் அமைதி தலைவரும், வாழும் கலை பயிற்சி அறக்கட்டளை நிலையத்தின் தாபகருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நுவரெலியாவில் இன்று (19) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்தார்.

IMG-20240519-WA0020-1068x633.jpg

இலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க நுவரெலியா - சீத்தாஎலிய பிரதேசத்தில் அமைந்துள்ள சீதையம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா இன்று (19) ஞாயிற்றுக்கிழமை காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த மஹா கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இந்தியாவில் இருந்து ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு நேற்று சனிக்கிழமை (18) வருகைதந்தார்.

அவர் இன்று நுவரெலியாவுக்கு விஜயம் செய்து, நுவரெலியா சீதையம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக சாந்தியில் கலந்து சிறப்பித்து ஆசியும் வழங்கினார்.

IMG-20240519-WA0009-1068x633.jpg

அதன் பின் நுவரெலியா “கிறேன்ட் ஹோட்டல்" சுற்றுலா விடுதிக்கு விஜயம் செய்த ரவிசங்கர், அங்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி நீர் வளங்கள் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட சந்திப்பிலும் கலந்துகொண்டார்.

இந்த சந்திப்பில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸின் தவிசாளருமான மருதபாண்டி ராமேஷ்வரன், பி.இராஜதுரை பாரத் அருள்சாமி உள்ளிட்ட இ.தொ.கா உயர்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரிடம் இலங்கையில் மலையக மக்களின் நலத்திட்டத்துக்காக பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

இவ்வாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ரவிசங்கர், வாழும் கலை அறக்கட்டளை அமைப்பின் செயற்பாட்டை மலையகத்திலும் பலப்படுத்த ஒத்துழைப்பு வழங்குவதாகவும், பயிற்சி நிலையங்களை ஆரம்பிக்க இடங்கள் உள்ளிட்ட வசதிகளை எதிர்பார்ப்பதாகவும் இதற்கான உதவிகளை தனது அறக்கட்டளை நிறுவகம் ஊடாக வழங்குவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், ஆன்மிக கற்கை நெறி பாடசாலைகளை ஆரம்பித்தல், வாழும் கலை பயிற்சிகள், பெண்களுக்கான சுய தொழில் ஊக்குவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை தனது அறக்கட்டளை ஊடாக செய்து தருவதாகவும் உறுதியளித்தார். 

https://www.virakesari.lk/article/183963

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.