Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 "உறங்காத விழிகள்"
 
 
1881 ஆண்டு இலங்கை குடிசன மதிப்பின் படி, தமிழ் மக்கள் யாழ் மாவடடத்தில் [கிளிநொச்சி உட்பட] ஏறத்தாழ 100% மும் [98.3 & தமிழ் பேசும் முஸ்லீம் 1.0 ], மற்றும் வவுனியா [முல்லைத்தீவு உட்பட], திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம்  முறையே 81% [80.9 & தமிழ் பேசும் முஸ்லீம் 7.3 ], 64% [63.6 & தமிழ் பேசும் முஸ்லீம் 25.9 ], 62% [61.5 & தமிழ் பேசும் முஸ்லீம் 31.1 ], 58% [57.5 & தமிழ் பேசும் முஸ்லீம் 30.7 ], 30% [30.0 & தமிழ் பேசும் முஸ்லீம் 50.4], 10.0% [10.0 & தமிழ் பேசும் முஸ்லீம் 16.0] இருந்தனர் என புள்ளிவிபரம் காட்டுகிறது.
 
ஆனால் இன்று அப்படி இல்லை. எல்லாம் தலைகீழாக மாறுகிறது. உதாரணமாக நுறு ஆண்டுகளுக்கு பின், 1981 ஆண்டில், திருகோணமலையில் தமிழர் 33.8 & தமிழ் பேசும் முஸ்லீம் 29.0  வீதமாகவும்  அம்பாறையில் தமிழர் 20.1 & தமிழ் பேசும் முஸ்லீம் 41.5 வீதமாகவும் ஆகிவிட்டது.  “Ever heard of 'archaeology' being the first priority in a conquered territory? If you have not heard of such a practice, then you don't know the Sri Lanka state.” என்று ஒருமுறை யாரோ சொன்னது எனக்கு ஞாபகம் வருகிறது. 
 
இன்று முல்லைத்தீவில் உள்ள குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் பொது மக்களின் 632 ஏக்கர் நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் சுவீகரிக்கபட்டுள்ளது. உதாரணமாக ஏழு குடும்பங்களுக்கு சொந்தமான 36 ஏக்கர் வயல் காணியை, அவர்கள் பாவிக்க முடியாத நிலை வந்துள்ளது. இது அவர்களின் அடையாளத்தையும், வாழ்வாதாரத்தையும் வெகுவாக பாதித்துள்ளது.
 
அந்த குடும்பத்தில் ஒருவளாக அவள் தூர இருந்து தன் வயலை பார்த்துக்கொண்டு இருந்தாள். 'ஒரு முறையான பக்கச்சார்பு அற்ற தொல்லியல் ஆய்வு செய்து அங்கு உண்மையான தொல்லியல் சான்று பொருட்கள் இருக்கும் பட்சத்தில், தொல்லியல் இடமாக ஆக்கிக்கொள்வதில், எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, ஆனால் அதற்காக சுற்றி இருக்கும் பெரும் அளவு விவசாய காணிகளை எடுப்பது தான் எனக்கு புரியவில்லை' அவள் முணுமுணுத்துக்கொண்டு இருந்தாள். 
 
இன்று நாட்டில் எதற்கும் தட்டுப்பாடு, விலை அதிகம், ஆனால் தொல்பொருள் என்று முழுக்க முழுக்க சிங்களவர்களை கொண்ட ஆய்வுக்குழு தமிழ் பிரதேசத்தில், அடையாளம் போட்டு போட்டு நிலத்தை அபகரித்து, பௌத்த சிங்கள மயமாக்குவதுக்கு மட்டும் எந்த தட்டுப்படும் இல்லை, என்று அவளின் 'உறங்காத விழிகள்' வெறிச்சு தன் வயலை பார்த்துக்கொண்டு இருந்தது. 
 
ஒருவன் நெருப்பினுள் இருந்து உறங்குவதும் இயலக்கூடும். ஆனால், வறுமையில் உறக்கம் கொள்வது அரிது என 'நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது.' வள்ளுவர் கூறியது போல அவள் ஒழுங்காக உறங்கி சில நாட்கள் ஆகிவிட்டது. அவள் முன்பு வாழ்ந்த வாழ்வு எங்கே ?, இப்ப வாழும் வாழ்வு எங்கே?, எப்படி அவள் உறங்குவாள்? தன் கணவரை இன்னும் காணாமல் போனோர் பட்டியலில், தேடி அலைந்துகொண்டு, ஒருவாறு வயல் தரும் பலனில், பிள்ளைகளை சீரும் சிறப்புமாக வளர்த்தவளுக்கு, இப்ப என்ன செய்வது என்றே புரியவில்லை?
 
"பூவுறங்குது பொழுதும் உறங்குது
நீ உறங்கவில்லை நிலவே
கானுறங்குது காற்றும் உறங்குது
நான் உறங்கவில்லை...
மான் உறங்குது மயிலும் உறங்குது
மனம் உறங்கவில்லை என்
வழி உறங்குது மொழியும் உறங்குது
விழி உறங்கவில்லை."
 
ஆமாம், அவளால் எப்படி உறங்கமுடியும்? அவள் எண்ணம், செயல் எல்லாம் எப்படி இதில் இருந்து மீண்டு எழும்புவது. அவள் தன் உடல் துன்பத்தைப் பொருட்படுத்தவில்லை, அது இப்ப அவளுக்கு அவசியமும் இல்லை.  பசியை மறந்தேவிட்டாள், அவளின் உறங்காத விழிகள், எதாவது செய்து, பிள்ளைகளை மீண்டும் வாழவைக்க வேண்டும் என்று துடிதுடித்துக்கொண்டு இருந்தது. அவளுக்கு  குமரகுருபரர் எழுதிய நீதிநெறி விளக்க பாடல் ஒன்று துணையாக நின்று  ஊக்கம் கொடுத்தது, ஆறுதலாக அவளுக்கு இருந்தது 
 
"மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்"
 
அவளின் இடைவிடாத தேடுதலும், அயலவர்களின் உதவியும் தற்காலிகமாக சிறு ஆறுதலை கொடுத்தாலும், அவளால் இன்னும் ஒழுங்கா உறங்கமுடியவில்லை 
 
"என்னிரு கண்களும் மூடமறுத்து 
சுழன்று புரண்டு நித்திரையின்றி 
நினைவுகளின் நிழல்களில் 
கடத்திய நாட்களின் தவிப்பை
என் தலையணை சொல்லும்"
 
என்பது போல, முதலில் காணாமல் போன கணவனின் தவிப்பு, இப்ப இருந்த வயல் நிலத்தையும், வலோற்காரமாக தொல்லியல் திணைக்களம் பறித்த தவிப்பு, அவளின் கண்கள் சொல்லிக்கொண்டு இருந்தன.
 
அவள் உயர் வகுப்பு மட்டும் படித்து, அதில் சித்தியும் அடைந்து, ஆனால், அந்த நேரம் நிலவிய போர்சூழலால், மேல் படிப்பு படிக்காவிட்டாலும், அந்த சான்றிதழ்கள் இன்னும் அவளின் பெட்டி ஒன்றில் பத்திரமாக வைத்திருந்தது இப்ப அவளுக்கு ஞாபகம் வந்தது. அவளின் தூங்காத விழிகள் ரெண்டும், அந்த சாமத்திலும், உடனடியாக அதை தேடி எடுத்து, தன் வீட்டுக்கு அருகில் இருந்த ஆரம்ப பள்ளிக்கு, அன்று விடியவே விண்ணப்பம் செய்தது.  
 
'ஊக்கமது கைவிடேல்' என்று ஆத்திசூடி  கூறியது போல, அவளின் உற்சாகம்/ தன்னம்பிக்கை/ விடாமுயற்சி அவளை ஆசிரியர் ஆக்கியது. என்றாலும் அவள் இன்னும் தன் வயலை உற்றுப்பார்ப்பதையும், அதை திருப்பி பெரும் முயற்சிகளையும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட கணவனை தேடுதலையும் கைவிடவில்லை. அதுவரை அவள் உறங்காத விழிகளே!
 
நன்றி 
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
339476988_959067905089110_5617046599975723653_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=0Jl2Cca5-AwQ7kNvgGtp-7d&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYB-dqu6aTrdZybnbZ5JDe5Szvhh0cPEUYDlPtbOrLlgwQ&oe=664E8BCB 339271224_1651591528628862_7100819423343039602_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=GTBS42vGai4Q7kNvgGBL4F9&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCWJ-BM02Vlmn8gwIKleDN7OCj3BbNASkRMsemZMSU5aA&oe=664E83E1  No photo description available. 
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.