Jump to content

"கனிந்த காதலி இறந்தாலும் நினைப்பில் வாழலாம்! முறிந்த காதலியை நினைக்கவும் முடியாது! மறக்கவும் முடியாது!"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
"கனிந்த காதலி இறந்தாலும் நினைப்பில் வாழலாம்! முறிந்த காதலியை நினைக்கவும் முடியாது! மறக்கவும் முடியாது!"
 
 
பழத்தின் சதைகளுக்குள்ளே விதைகள் இருப்பது போலே, கனிந்த இதயத்தின் உள்ளே காதல் தூங்குவதுண்டு, அதுவாய் கனிந்து மெதுவாய் நிமிர்ந்து, சதையை தாண்டி விதியை காண்பது காதல் ....
 
அப்படி காதல் கொண்ட கனிந்த காதலிக்காக ஷாஜகான் [Shah Jahan], மும்தாஜ் மஹால் [Mumtaz Mahal] இறந்த பின் .....
 
கண்களை கலந்து, இதயங்களை ஒன்றாக்கி, மௌனத்தை மொழியாக்கி, சிந்தனையை சீராக்கி, வாழ்வை வசந்தமாக்கி, இன்பத்தை இரட்டிப்பாக்கி
கொடுத்து வாழ்ந்த அவள் நினைவாக தாஜ்மகாலை கட்டி அவள் நினைப்பில் வாழ்ந்தான்!
 
வேறு பல மனைவிகள் இருந்தும்??, அவள் 14 பிள்ளைகள் பெற்றப் பின்பும், அவள் மீதான அன்பு தனியாமல் இருந்ததால், அது காதலின் சின்னம் என்று சொல்லப்படுகிறது!!
 
.........................
 
உன்னை ஒரு பார்வை கேட்டேன், கண்கள் பேசும் சில வார்த்தை கேட்டேன். கன்னத்தில் வந்த ஈரமும் இதயத்தில் நொந்த காயமும்தான் எனக்காக நீ கொடுத்தது!
 
இந்த முறிந்த காதலியை இனி நினைக்க முடியாது! என் என்றால் அவள் எங்கோ யாருடனோ இப்ப வாழ்கிறாள்!! அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே என மறக்கவும் முடியாது! என் என்றால், என் நெஞ்சுக்கு [வேறு] நினைவில்லை என் நிழலுக்கு [இப்ப] உறக்கமில்லை ...
 
தன் சிறு பருவத்திலிருந்தே லைலா [Laila] என்னும் தன் தோழியின்மீது ஆழமான அன்பு கொண்டு வளர்கிறான் 'கைஸ்' [Qays]. அன்பு முற்றிக் காதலாகிறது. காதலின் சக்திக்குத் தன்னை முழுவதுமாகக் கொடுத்து விட்ட கைஸ் அலங்கோலமாக ஒரு பக்கிரியைப் போல் ஆகிவிட்டான்.
மக்கள் அவனை "மஜ்னூன்" [Majnun] என்று அழைக்க ஆரம்பித்து அதுவே அவனுக்குப் பெயராகி விடுகிறது.
 
மஜ்னூன் என்றால் பித்தன் என்று பொருள். மஜ்னூனின் தந்தை தன் மகனுக்கு லைலாவை மனம் முடித்து வைக்க அவளின் தந்தையிடம் பெண் கேட்கிறார். ஒரு கிறுக்கனுக்கு என் மகளைக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி லைலாவின் தந்தை மறுத்து விடுகிறார். அவளை வேறு ஒருவனுக்குத் திருமணம் செய்து கொடுத்து விடுகிறார். இதனால் மனமுடைந்த மஜ்னூன் வனாந்தரங்களில் திரிகிறான்.
 
ஒரு முறை,லைலாவின் தெருவில் அலைந்து கொண்டிருந்த மஜ்னூன், அவள் வீட்டின் சுவர்களை முத்தமிட்டுக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்துப் பரிகாசம் செய்தவர்களின் காதுகளில் விழுமாறு ஒரு கவிதை பாடினான்!
 
 
"லைலாவின் தெருவில்
அவள் வீட்டின் சுவர்களை
முத்தமிடுகிறேன் நான்.
 
இந்தச் சுவற்றின் மீதோ
அல்லது அந்தச் சுவற்றின் மீதோ
காதல் கொண்டவனல்ல நான்.
 
என் மனதில் பொங்கி வழிவது
அந்த வீட்டுக்குள் இருப்பவளின் காதலே!"
 
 
"I pass by these walls, the walls of Layla
And I kiss this wall and that wall
It’s not Love of the walls that has enraptured my heart
But of the One who dwells within them"
 
 
அதே மஜ்னூன், முறிந்த காதலியை பற்றி ஒரு முறை இப்படி சொல்கிறான் :
 
 
"ரோஜா
காதலின் சின்னம்
என்பது சரிதான்.
 
காலையில் இருக்கிறது
அவளைப் போல்.
மாலையில் ஆகிறது
என்னைப் போல்."
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
329152065_1252486635617321_2641833114755884495_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Fa9ZA1uMM_wQ7kNvgGy8GcR&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYApnqg0ELDzNdgvcZwBuanFIrf-1ViI6c2NGEC8r9DtdA&oe=665554EB 328830626_758947801848590_948048043700222537_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=qTcyfI-bJnUQ7kNvgF0PbWg&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCL2loZePXtwP0RWHHB37kqkwB8LJWLdIihQiHldFeI7g&oe=66556779
 
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன் உங்க பெயரையும் சசோதரன் என்றே குறிப்பிட்டுள்ளார். ஆகவே அது எழுத்துப்பிழையே தவிர உள்குத்து அல்ல. என்றாலும் ஜம்பவான் என்பதும் பொருந்திப்போகுது!
    • எதுக்கடா படிமங்களுக்கு மேல் முத்திரை குத்துகிறீர்கள், பிணங்களை வைத்து வயிறு வளர்ப்பவர்களே!  
    • தமிழர் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் காயமடைந்த சீலன், குமரப்பா, புலேந்திரன் போன்றவர்களுக்கு சிகிச்சையளித்ததற்காக கைது செய்யப்பட்டு (1983) வெலிகடை சிறையில் குட்டிமணி, தங்கத்துரை, வண பிதா சிங்கராசா, மற்றும் விரிவுரையாளர் நித்தியானந்தன் போன்றவர்களுடன் இருந்து பின் மட்டக்களப்பு சிறையுடைப்பில் தப்பி இந்தியா சென்று விடுதலைப் புலிகளின் TRO அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகித்தவரும்,   தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், அடேல் பாலசிங்கம், யோகி போன்றவர்களுடன் உடனிருந்து பணியாற்றியவரும்,   விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவுக்கு ஆரம்ப காலங்களில் பயிற்சியளித்தவரும்,   முல்லைத்தீவு மாவட்ட வைத்திய பொறுப்பதிகாரியாக (RBHS) பணியாற்றியவரும், கணுக்கேணி முள்ளியவளையை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. T.W Jeyakularajah ( வைத்தியர் ஜெயகுலராஜா) அவர்கள் இன்று முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் காலமானார்.   அன்னாரின் நல்லடக்கம் நாளை 2024.06.17 திங்கட்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு புனித மத்தியா ஆலய சேமக்காலையில் நடைபெறும்.     https://vampan.net/56388/
    • 🤣......... இந்த ஒரு சொல்லுக்காக அமெரிக்காவில் அரைவாசியை உங்களுக்கு எழுதி வைக்கின்றேன்......அமெரிக்கா சந்திரனை பிடித்தால் அதிலும் அரைவாசி உங்களுக்கே........ ஒரு சின்ன சந்தேகம்........ ஜாம்பவான் என்பதை 'ஜம்பவான்' என்று எழுதியதில் ஏதும் உட்குத்து உள்ளதோ, பையன் புலவரே......🤣
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.