Jump to content

Sri Lanka-வின் 'கொள்ளைக்கார' யானைகள்; மனிதர்களின் 'ருசியான' உணவுக்கு Elephants அடிமையாவது ஏன்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில வருடங்களாக இலங்கையின் காட்டு யானைகள், மனிதர்களிடமிருந்து உணவைப் பெற சாலையில் திரிவது அதிகரித்துள்ளது. பயணிகள் பலர் மீதமான உணவை சாலையில் கொட்டுவதால், பசியுடன் இருக்கும் யானைகளுக்கு இவை எளிதான உணவாகிவிட்டது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வழியால் போய் வரும் மக்களால் தானே இந்த நிலை.பொதுவாக பழங்கள் கொடுத்து பழக்கிய படியால் தான் தமக்கான இரையை தேடிக் கொள்ளாது தெருவுக்கு வருகிறது..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலேயே இலங்கையில் தான் யானைகளின் அடர்த்தி அதிகம் என்று எங்கோ வாசித்திருக்கின்றேன். எங்களால் அழித்துக் கொண்டே போகப்படும் காடுகள் தொடர்ந்து சிறுக்கின்றன. யானைகளுக்கு போதிய சாப்பாடும் இல்லை, போக்கிடமும் இல்லை. ஊருக்குள்ளும், வீதிகளிலும் அவை வருகின்றன. 

இதுவே தான் தமிழ்நாட்டிலும். உதாரணம்: சத்குரு என்று அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ் அவர்கள் யானைகள் உலாவும் காட்டை அழித்தே அவரின் பெரும் ஆச்சிரமத்தை உருவாக்கினார். எங்கே போகும் அங்கே குடியிருந்த யானைகள்?  

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முந்தி ஒரு காலம் பெட்டைகள் போகும் போது பெடியள் பாடும் பாடல். ஒரு நமட்டுச் சிரிப்புடன் ஒரு வெட்டு வெட்டிக் கொண்டு போவார்கள். அந்த ஒரு தருணம் எத்தனையோ கதை சொல்லும்.
    • மேற்குலகின் உக்ரேனுக்கான எடுபிடிகளை பார்க்கும் போது உலகில் வேறெங்கும் எந்தவொரு  பிரச்சனைகளும்  இல்லை போல் தெரிகின்றது.😂 ரம்ப் மாத்தயா வாறதுக்கு முதல் எதாவது செய்து முடிச்சிடணும் எண்ட அவசரம் ஜேர்மனியின்ர முகத்திலை தெரியுது. 🤣
    • மிக்க மரியாதையோடு உங்களுடைய இந்த வியாக்கியானத்துடன் முரண்படுகிறேன். 1. முதல் பிரச்சினை: கிரேக்கத்தில் உருவாகி, ஆங்கிலத்தில் இருக்கிற matrimony தான் தமிழில் இருக்கிற "திருமணம்" என்ற முடிவுக்கு நீங்கள் வர என்ன காரணம்? பாரம்பரியமான திருமணம் பற்றிய உங்கள் பார்வை தான் காரணம். "திருமணம்" என்பது ஒரு புனிதத்தின் முன்னொட்டான "திரு" சேர்ந்து இருவரின் இணைவைக் குறிக்கிறது என்பது தான் என் புரிதல். எனவே, தமிழில் கிரேக்கத்தின் Matri சொற்பிறப்பு (etymology) இணைய வேண்டிய தேவை இல்லை என்பது என் கருத்து. 2. உங்கள் வாதம் "ஆதியில் உருவான சொற்பிறப்பையொட்டியே பிற்காலத்திலும் ஒரு சொல் பயன்படுத்தப் பட வேண்டுமென்பதாக" இருக்கிறது. "திருமணம்"  போன்ற சமூகக் கட்டமைப்பு (social construct) விடயங்களுக்கு இவ்வளவு இறுக்கமான கட்டுப் பாடு அவசியமில்லை, சாத்தியமும் இல்லை. ஒரு உதாரணம் மானிடவியலில்/வரலாற்றில் பார்ப்போம்: அடிமையைக் குறிக்கும் slave என்ற சொல்  கிழக்கு ஐரோப்பிய மக்களினமான Slav இல் இருந்து வந்தது. ஐரோப்பா முழுவதும் இந்த சிலாவ் மக்கள் அடிமைகளாக நோர்ஸ்க் கடலோடிகளாலும், முஸ்லிம்களாலும் விற்கப் பட்ட காலத்தில் சிலாவ் என்பதில் இருந்து சிலேவ் என்ற சொல் வந்திருக்கிறது. இது நடந்தது கி. பி 1000 இற்கு முன். தற்போது சகல இனத்தில் இருந்தும் வந்த அடிமைகளை slave என்று தான் அழைக்கிறோம். ஆபிரிக்காவில் இருந்து ஸ்பானியர்கள் அமெரிக்காவிற்கு கடத்தி வந்தவர்களை "நீ slave அல்ல, வேறு பெயரைப் பாவிக்க வேண்டும்" என்று யாரும் கட்டுப் பாடு விதிக்க முடியாது. slavery ஒரு social construct . திருமணம் ஒரு social construct . இது போன்ற சமூகக் கட்டமைப்பு சார் பதங்களை நாம் அவை உருவான காலத்து வேர்ச்சொல் சார்ந்தே பாவிக்க வேண்டுமென்பது மொழியியலாளர்கள் கூட ஏற்றுக் கொள்ளாத ஒரு நிலைப்பாடு.
    • இந்த மெம்பேஸ் இலங்கையில் போய் இறங்கும் போது நடக்கும் வரவேற்பைப் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.