Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image00005.jpeg?resize=750,375&ssl=1

சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் : நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள்!

சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் இன்றாகும்.

ஆரோக்கியமான வாழ்வினை கட்டியெழுப்பும் வகையில் இந்த சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

“நண்பா, போதைக்கும், புகைத்தலுக்கு முற்றுப்புள்ளிவைப்போம், வலுவான தேசம் ஒன்றினை கட்டியெழுப்புவோம்” என்னும் தொனிப்பொருளில் 2024ஆம் ஆண்டுக்கான சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும், மண்முனை வடக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து நடாத்திய விழிப்புணர்வு மரதன் ஓட்ட நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் ராஜ்பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மரதன் ஓட்ட நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபரினால் கொடியசைத்து ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்த மரதன் ஓட்டப்போட்டியானது இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வூட்டும் நிகழ்வாக நடாத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1384934

  • கருத்துக்கள உறவுகள்

புகைத்தல், மதுசார பாவனையை எதிர்த்து மட்டக்களப்பில் விழிப்புணர்வு மரதன் ஓட்டம் 

31 MAY, 2024 | 11:30 AM
image
 

சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஆரோக்கியமான வாழ்வினை கட்டியெழுப்பும் நோக்கில் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை (31) காலை விழிப்புணர்வு மரதன் ஓட்ட நிகழ்வு நடைபெற்றது. 

image00006.jpeg

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம், மண்முனை வடக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் ஆகியவை இணைந்து இந்த மரதன் ஓட்டத்தை நடத்தியது. 

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் ராஜ்பாபு தலைமையில் நடைபெற்ற இந்த மரதன் ஓட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

image00007.jpeg

இதன்போது, இளைஞர்கள் மத்தியில் புகைத்தல் மற்றும் மது ஒழிப்பினை வலியுறுத்தி, விழிப்பூட்டும் வகையில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்குகொண்டவர்களின் மீது 'போதையிலிருந்து இளைஞர்களை பாதுகாப்போம்’ எனும் ஸ்டிக்கர்கள் மாவட்ட அரசாங்க அதிபரால் ஒட்டப்பட்டது.

அதை தொடர்ந்து, மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்பரனின் ஒழுங்கமைப்பில் மாவட்ட அரசாங்க அதிபரினால் கொடியசைத்து மரதன் ஓட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்த மரதன் ஓட்டப் போட்டியானது இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையை தடுக்கும் வகையில் விழிப்புணர்வூட்டும் நிகழ்வாக அமைந்தது. 

"நண்பா, போதைக்கு புகைத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம், வலுவான தேசம் ஒன்றினை கட்டியெழுப்புவோம்" எனும் தலைப்பில் இம்முறை சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் நாடெங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

https://www.virakesari.lk/article/184935

  • கருத்துக்கள உறவுகள்

இன்று 31 மே புகைத்தல் எதிர்ப்பு தினம் என்று நினைக்கிறேன் அதோடு சேர்த்து மது போதை எதிர்ப்பையும் இலங்கையில் கொண்டு வந்தது சிறப்பு👍

  • கருத்துக்கள உறவுகள்

சங்கானையில் புகைத்தல், போதைப்பொருள் பாவனையை எதிர்த்து போராட்டம் 

31 MAY, 2024 | 12:41 PM
image

சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான போராட்டம் இன்று (31) சங்கானை பேருந்து நிலையத்துக்கு முன்னால் இடம்பெற்றது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'அழகான இளைஞர்களின் உடல் அழகையும் முகத்தின் வசீகரத்தையும் சிதைக்கும் போதைப்பொருள் பாவனைக்கு ஏமாறமாட்டோம்', 'எமது பிள்ளைகளை புகையிலைக் கம்பனிகளிடமிருந்து பாதுகாக்க அனைவரும் அணிதிரள்வோம்', 'புகைப்பதால் உன் அழகு புன்னகை இழக்கும்', 'உடலை உருக்கும் சிகரெட் பாவனை எதற்கு?', 'சினிமாவில் புகைப்பதை பார்த்து உன் கல்வியை அழிக்காதே' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷம் எழுப்பினர். 

வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் நிர்வாகத்தினர், அங்கத்தவர்கள், சங்கானை பிரதேச செயலக பிரதேச செயலர் கவிதா உதயகுமார், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

20240531_093052.jpg

20240531_092850.jpg

20240531_092922.jpg

20240531_093449.jpg

20240531_093525.jpg

20240531_100734.jpg

https://www.virakesari.lk/article/184939

  • கருத்துக்கள உறவுகள்

புகைத்தல், மது பாவனைக்கு எதிராக நெடுந்தீவில் விழிப்புணர்வு நிகழ்வு

31 MAY, 2024 | 04:28 PM
image
 

"நண்பா போதைக்கும் புகைத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம், வலுவான தேசம் ஒன்றினை கட்டியெழுப்புவோம்" எனும் தொனிப்பொருளில் மே 31ஆம் திகதி முதல் ஜூன் 14ஆம் திகதி வரையில் புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஓர் அம்சமாக, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய நெடுந்தீவு பிரதேச செயலக சமுர்த்தி கிளையின் ஏற்பாட்டில் புகைத்தல் மற்றும் மது பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வொன்று பிரதேச செயலக முன்றலில் இன்று வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதேச செயலர் நிவேதிகா கேதீசன், சமுர்த்தி முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

FB_IMG_1717141439663.jpg

FB_IMG_1717141447516.jpg

FB_IMG_1717141436506.jpg

FB_IMG_1717141451157.jpg

FB_IMG_1717141453995.jpg

https://www.virakesari.lk/article/184958

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

bhothaipporul.jpg?resize=750,375&ssl=1

போதைக்கும் புகைத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம்!

”போதைக்கும் புகைத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம். வலுவான தேசம் ஒன்றினை நிதமும் கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப் பொருளில் போதைப் பொருளுக்கு எதிரான கவனயீர்ப்பு பேரணியொன்று யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நல்லூர் பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் இந்த பேரணி இன்று நடைபெற்றது.

நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு பின்பக்கமாக அமைந்துள்ள நல்லை ஆதீனத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட பேரணியானது அங்கிருந்து நல்லூர் பிரதேச செயலகம் வரை சென்று நிறைவடைந்தது.

பேரணியில் சமுர்த்தி அதிகாரிகள், நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்திப் பயனாளிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1385047

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.