Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நார்மண்டி படையெடுப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

4 மணி நேரங்களுக்கு முன்னர்

இங்கிலாந்து அரசர் சார்லஸ் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் நார்மண்டி தரையிறக்கத்தின் 80-வது ஆண்டு நிறைவை 'டி-டே' வீரர்களுடன் கொண்டாடினர்.

இங்கிலாந்து அரசர், அரசி மற்றும் வேல்ஸ் இளவரசர் ஆகியோர் ஆண்டு நிறைவைக்குறிக்க புதன்கிழமை போர்ட்ஸ்மவுத்தில் நேற்று (ஜூன் 6-ஆம் தேதி) நடந்த விழாவில் கலந்துகொண்டனர்.

டி-டே (D Day) என்றால் என்ன? இது ஏன் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய  இங்கே கிளிக் செய்யவும்.

டி-டே என்றால் என்ன?

டி-டே, நார்மண்டி படையெடுப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் துருப்புக்கள் 1944-ஆம் ஆண்டு 4 ஜூன் 6-ஆம் தேதி, வடக்கு பிரான்ஸின் கடற்கரையில் ஜெர்மன் படைகளைத் தாக்கின.

டி-டே என்பது இதுவரையில் நடந்திராத மிகப்பெரிய கடல்வழி ராணுவ நடவடிக்கையாகும். நாஜி ஆக்கிரமிப்பின் கிழ் இருந்த வடமேற்கு ஐரோப்பாவை விடுவிப்பதற்கான படையெடுப்பின் துவக்கத்தை அது குறிக்கிறது.

இதன்போது பிரான்சின் நார்மண்டியில் உள்ள ஐந்து வெவ்வேறு கடற்கரைகளில் பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள் ஒரே நேரத்தில் தரையிறங்கின.

ஒரு வருடத்திற்கும் மேலாகத் தீட்டப்பட்ட இதற்கான திட்டத்தில், டி-டேயாக ஜூன் 5-ஆம் தேதி முடிவுசெய்யப்பட்டிருந்தது. அமைதியான கடல், முழு நிலவு மற்றும் பொழுது விடியும்போது குறைந்த நீர் ஆகிய மூன்று சாதகமான நிலைமைகள் அந்தத் தேதியில் இருக்கும் என்று கணிக்கப்பட்டது. இருப்பினும் திடீர் புயல் காரணமாக 24 மணிநேரம் தாமதமாக டி- டே நடவடிக்கைகள் துவங்கின.

"D" என்பது "Day" என்பதைக் குறிக்கிறது. டி-டே என்பது ஒரு நடவடிக்கையின் முதல் நாளைக் குறிக்கும் ராணுவச் சொல்.

டி-டே, நார்மண்டி படையெடுப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஒமாஹா கடற்கரை, நார்மண்டி

'டி-டே' அன்று என்ன நடந்தது?

வான்வழித் துருப்புக்கள் அதிகாலையில் எதிரிகளின் எல்லையில் தரையிறங்கின. அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான கப்பல்கள் முக்கிய கடல்வழித் தாக்குதலுக்காக நார்மண்டி கடற்கரையில் கூடின.

படையெடுப்பை எதிர்பார்த்திருந்தாலும் கூட நாஜி ஜெர்மனியின் ராணுவத் தலைவர்கள் இந்த ஆரம்ப தாக்குதல்களை 'ஒரு திசை திருப்பும் தந்திரம்’ என்றே கருதினர்.

தாக்குதலுக்கு முந்தைய வாரங்களில் அரங்கேறிய ஏமாற்று திட்டம், தொலைவில் உள்ள கடற்கரைப்பகுதியில் முக்கியப் படையெடுப்பு இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்க வழிவகுத்தது.

'கோல்ட்’ என்ற குறியீட்டுப் பெயரில் அறியப்பட்ட இந்தக் கடற்கரையில் பிரிட்டிஷ் துருப்புக்கள் எதிர்ப்பின்றி காலூன்ற இது உதவியது.

கனேடியப் படைகள் மற்றொரு கடற்கரையான 'ஜூனோ’-வில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டன. மற்றொரு ஆங்கிலேயப்படை 'ஸ்வோர்ட்’ கடற்கரையில் இறங்கியது.

டி-டே, நார்மண்டி படையெடுப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நார்மண்டி கடற்கரை

அமெரிக்கப் படையால், மேற்குக் கடற்கரையான 'உட்டாவில்’, பெரிய உயிரிழப்புகள் இல்லாமல் தரையிறங்க முடிந்தது.

ஆனால் அருகிலுள்ள ஒமாஹா கடற்கரையில் அமெரிக்கப் படை கடுமையான இழப்புகளைச் சந்தித்தது. ஜெர்மன் பாதுகாப்பு படை மீது கடற்படை நடத்திய சரமாரியான குண்டுவீச்சுத் தாக்குதல்கள் பலனளிக்கவில்லை. அமெரிக்கர்கள் ஜெர்மன் துருப்புகளின் ஒரு சிறப்புப் பிரிவை எதிர்த்துச் சண்டையிட வேண்டி வந்தது.

நள்ளிரவுக்குப் பிறகு, மூன்று அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் வான்வழிப் பிரிவுகள், 23,000-க்கும் அதிகமான வீரர்கள், கடற்கரைப் பகுதிகளை கைபற்றப் புறப்பட்டனர். எண்ணற்ற கடற்படைக் கப்பல்கள் மற்றும் தரையிறங்க உதவும் படகுகள், 'பிக்காடில்லி சர்க்கஸ்' என்று பெயரிடப்பட்ட இடத்தில் கூடின.

காலை 6:30 மணி முதல் கடற்படை குண்டுவீச்சின் மறைவின் கீழ் ஐந்து தாக்குதல் பிரிவுகள் கடற்கரைகளில் தரையிறங்கின.

நாள் முழுவதும் துருப்புக்கள் கடற்கரைகளில் இறங்கிய வண்ணம் இருந்தன. நள்ளிரவுக்குள் நேச நாடுகளின் படைகள் அந்தக் கடற்கரைப் பகுதிகளை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தன. பின்னர் கோல்ட், ஜூனோ, ஸ்வோர்ட் மற்றும் உட்டா ஆகிய கடற்கரைகளில் இருந்து உள்பகுதி நோக்கிச் செல்லத் தொடங்கின.

டி-டேயில் எத்தனை துருப்புக்கள் பங்கேற்றன, எத்தனை பேர் இறந்தனர்?

டி-டே, நார்மண்டி படையெடுப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டி-டே நாளில் மட்டும் ஒருங்கிணைந்த கூட்டணிப் படையின் 4,400 துருப்புக்கள் இறந்தனர். சுமார் 9,000 பேர் காயமடைந்தனர் அல்லது காணாமல் போயினர்

7,000 கப்பல்கள் மற்றும் தரையிறங்க உதவும் படகுகள் இதில் ஈடுபடுத்தப்பட்டன. மொத்தம் 1,56,000 வீரர்கள் மற்றும் 10,000 வாகனங்கள், நார்மண்டியில் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கடற்கரைகளைச் சென்றடைந்தன.

ஜெர்மனியர்களிடம் இருந்ததைக் காட்டிலும் வலிமையான விமானப்படையும், கடற்படையும் நேச நாட்டுப் படைகளிடம் இருந்தன. இவற்றின் ஆதரவு இல்லாமல் இந்தத் தரையிறக்கம் சாத்தியமாகியிருக்காது.

ஆனால் டி-டே நாளில் மட்டும் ஒருங்கிணைந்த கூட்டணிப் படையின் 4,400 துருப்புக்கள் இறந்தனர். சுமார் 9,000 பேர் காயமடைந்தனர் அல்லது காணாமல் போயினர்.

அன்றைய நாளில் மொத்த ஜெர்மன் உயிரிழப்புகள் எவ்வளவு என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் 4,000 முதல் 9,000 வீரர்கள் இறந்திருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நேச நாட்டுப் படைகளால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதல்களின் விளைவாக ஆயிரக்கணக்கான பிரெஞ்சு குடிமக்களும் கொல்லப்பட்டனர்.

நார்மண்டி படையெடுப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மொத்தம் 1,56,000 வீரர்கள் மற்றும் 10,000 வாகனங்கள், நார்மண்டியில் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கடற்கரைகளைச் சென்றடைந்தன

'டி-டே'க்குப் பிறகு என்ன நடந்தது?

டி-டேயின் முடிவில் நேச நாட்டுப் படைகள் பிரான்ஸில் காலூன்றினாலும் கூட அவர்கள் மீண்டும் கடலை நோக்கித் தள்ளப்படும் அபாயம் இருந்தது.

ஜெர்மனியர்கள் தங்கள் படைகளை வலுப்படுத்துவதை விட வேகமாக அவர்கள் தங்கள் படைகளை கட்டியெழுப்ப வேண்டியிருந்தது.

நார்மண்டியின் குறுகிய பாதைகள் மற்றும் உறுதியாக பாதுகாக்கப்பட்ட நகரங்கள் வழியாக அவர்களது முன்னேற்றம் மெதுவாக இருந்தது.

தங்கள் எதிரியை விட அதிக எண்ணிக்கையில் இருந்த நேச நாட்டுப்படைகள், வலுவான விமானப்படையின் ஆதரவுடன் எதிர்ப்பைச் சமாளிக்க முடிந்தது. ஆயினும் இந்தப் படைகள் பெரிய அளவிலான இழப்புகளையும் சந்தித்தன.

1944-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் பிற்பகுதியில் அவர்கள் பாரிஸை விடுவித்தனர். ஆயினும் பிரான்ஸை சென்றடைந்த 20 லட்சம் நேச நாட்டு துருப்புக்களில் சுமார் 10% பேர் இறந்தனர், காயமடைந்தனர் அல்லது காணாமல் போயினர்.

டி-டே, நார்மண்டி படையெடுப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நார்மண்டியில் உள்ள அமெரிக்கன் கல்லறை
டி-டே வீரர்கள், நார்மண்டி படையெடுப்பு

பட மூலாதாரம்,PA MEDIA

படக்குறிப்பு,100 வயதான டி-டே வீரர்கள் பெர்னார்ட் மோர்கன் (இடது), மற்றும் ஜாக் மோர்டிமர், 2024ஆம் ஆண்டின் நினைவு விழாவில் கலந்துகொள்ள நார்மண்டிக்கு சென்றுள்ளனர்.

எத்தனை டி-டே வீரர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள்?

எத்தனை டி-டே வீரர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர்கள் அனைவருமே இப்போது தங்கள் 90 வயது முதல் 100 வயதுகளில் இருப்பார்கள்.

100-க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் டி-டே வீரர்கள் உயிருடன் இருப்பதாகக் கருதப்படுகிறது.

23 பேர் நார்மண்டியில் நடக்கும் நினைவேந்தல்களில் பங்கேற்றனர். மேலும் 21 பேர் ஸ்டாஃபோர்ட்ஷையரில் உள்ள நேஷனல் மெமோரியல் ஆர்போரேட்டத்தில் நடந்த நினைவு நிகழ்வில் கலந்து கொண்டனர் என்று பிபிசியின் அரச மாளிகை செய்தியாளர் சீன் கோக்லேன் கூறுகிறார்.

இரண்டு டஜன் அமெரிக்க வீரர்கள் பிரான்ஸுக்கு பயணம் மேற்கொண்டனர் என்று எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டில் உள்ள அமெரிக்க கல்லறைகள் மற்றும் நினைவுச்சின்னங்களை மேற்பார்வையிடும் அமெரிக்க போர் நினைவுச்சின்னங்கள் ஆணையம் தெரிவிக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/ce440jgjd29o

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

'Saving Private Ryan' இந் நிகழ்வை அடிப்படையாக வைத்து 1998 இல் அந்த அருமையான ஒரு படம். இது 1999 இல் நிறைய ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, சில விருதுகளையும் வென்றது. 

என்னுடன் வேலை செய்யும் ஒருவர் அவரின் தாத்தா, அவர் ஒரு முன்னாள் படை வீரர் மற்றும் நார்மண்டி தரையிறக்கத்தில் பங்குபற்றியவர், இந்த வாரம் அங்கு போயிருப்பதாகச் சொன்னார்.   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நோமண்டி தரையிறக்கத்தின் 80 வருட நிகழ்வு - ரஸ்ய உக்ரைன் யுத்தத்தை இரண்டாம் உலக யுத்தத்துடன் தொடர்புபடுத்தி பைடன் கருத்து

Published By: RAJEEBAN   07 JUN, 2024 | 04:07 PM

image
 
அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் இரண்டாம் உலக யுத்தத்தையும் உக்ரைன் மீதான ரஸ்யாவின்  படையெடுப்பையும் தொடர்புபடுத்தி கருத்து வெளியிட்டுள்ளார்.

பிரான்சின் நோமண்டி தரையிறக்கத்தின் 80 வருடநிகழ்வில் உரையாற்றியுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்புடன் இரண்டாம் உலக யுத்தத்தை ஒப்பிட்டு கருத்து வெளியிட்டுள்ளார்

biden_nor3.jpg

நோமண்டி தரையிறக்கத்தின் போது உயிரிழந்த 9388 அமெரிக்க படையினரின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள பகுதியிலிருந்து உரையாற்றிய பைடன் உலகில் ஜனநாயகம் மீண்டும் அச்சுறுத்தலிற்குள்ளாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் விவகாரத்தில் மேற்குலகின் நடவடிக்கையை சர்வாதிகாரிகள் உன்னிப்பாக அவதானிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

biden_nor2.jpg

உக்ரைனில் என்ன நடக்கின்றது என உலகின் சர்வாதிகாரிகள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டுள்ளனர். நாங்கள் ரஸ்ய உக்ரைன் மோதலில் இருந்து விலகி ஓடமாட்டோம் அவ்வாறு செய்தால் உக்ரைன் அடிமைப்படுத்தப்படும் என பைடன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாத்திரம் அது முடியாது உக்ரைனின் அயல்நாடுகள் அச்சுறுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பா முழுவதும் அச்சுறுத்தலிற்குள்ளாகும் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.

biden_nor1.jpg

ரஸ்ய ஜனாதிபதி மீது நேரடி தாக்குதலை தொடுத்துள்ள பைடன் அவரை கொடுங்கோலன் என குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/185543

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.