Jump to content

வழமைக்கு மாறாக பொது நிகழ்வில் கலந்துகொண்ட புட்டினின் புதல்விகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
09 JUN, 2024 | 12:50 PM
image
 

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் புதல்விகள் வழமைக்கு மாறாக நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ளனர்.

ரஸ்யாவின் சென்பீட்டர்ஸ்பேர்க்கில் இடம்பெற்ற சர்வதேச பொருளாதார மாநாட்டில் புட்டினின் புதல்விகள் கலந்துகொண்டுள்ளனர்.

மரியா வொரொன்ட்சோவாவும் கட்டரினாஎடிகோனோவாவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

இவர்கள் 30 வருட திருமண வாழ்க்கையின் பின்னர் 2013 இல் புட்டின் விவகாரத்து செய்த முதல் மனைவியின் பிள்ளைகள் என்பதுகுறிப்பிடத்தக்கது.

தனது பிள்ளைகள் விஞ்ஞான கல்வித்துறையில் பணிபுரிவதாகவும் தனக்கு பேரப்பிள்ளைகள் உள்ளதாகவும் புட்டின் தெரிவித்துள்ளார்- எனினும் அது ஒருபோதும் உறுதி செய்யப்படவில்லை.'

putin_daughter11.jpg

உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஸ்ய இராணுவத்திற்கு உதவியமைக்காக  2022 இல் கட்டரினாஎடிகோனோவாவிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரியா வொரொன்ட்சோவாவுக்கு எதிராகவும் அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

புட்டினின் சொத்துக்கள் அவரின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளில் மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2019 முதல் 2022ம் ஆண்டிற்குள் மருத்துவநிறுவனம் ஒன்றின் ஊழியராக பணிபுரிந்து மரியா வொரொன்ட்சோவா 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் சம்பாதித்தார் என ரஸ்யாவின் ஊழலிற்கு எதிரான அமைப்பு இந்த வருடம் குற்றம்சாட்டியிருந்தது.

புட்டின் தனது மகள் குறித்த விபரங்களை மிகவும் இரகசியமாக பேணிவருகின்றார்.

https://www.virakesari.lk/article/185657

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.