Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"வறுமையிலும் நேர்மை...!"
 
 
இலங்கையில் இருக்கும் பொருளாதார நெருக்கடியில், வறுமை வீதம் 2021 ஆண்டில் இருந்த 13.1% இல் இருந்து 2022 ஆண்டு, 25.6% அடையும் என்று உலக வங்கி கூறியது. இப்படியான ஒரு சூழலில் தான் நானும் மனைவியும், விடுதலையின் பின் யாழ்ப்பாணம் இருந்து கொழும்புக்கு சொகுசு பேரூந்தில் போய்க் கொண்டு இருந்தோம். எமது பேரூந்து வவுனியாவில் சிறு ஓய்விற்காக தரித்து நிற்கும் பொழுது, ஒரு சின்ன பெண், ஒரு கூடையில் மாம்பழத்துடன் ஏறி, அதை விற்கத் தொடங்கினார். அவள் எம் அருகில் வரும் பொழுது இன்னும் அறைக்கூடைக்கு மேல் மாம்பழம் இருந்தது, அதை எடுத்து மணந்து பார்த்த என் மனைவி, அது நல்ல பழம் என்றும், விலையும் மலிவாக இருக்குது என்று என் காதில் மெல்ல சொன்னார். என்னிடம் சில்லரைத் தாள்கள் அப்பொழுது இருக்கவில்லை. என்றாலும் மனைவியின் ஆசையை நிராகரிக்கவும் விருப்பம் இல்லை. அங்கு பேரூந்தில் இருப்பவர்கள் சிலரிடம் நான் சில்லறை பெறலாமா என்று விசாரிக்கும் தருவாயில், மனைவி அந்த சின்ன பெண்ணுடன் அவரைப் பற்றி விசாரிக்கத் தொடங்கிவிட்டார்.
 
அவள் தான் தினம் தன் தங்கையுடன் சேர்ந்து இருவரும் இரு கூடையில் பழங்கள் பேரூந்து நிற்கும் தருவாயில் விற்பதாகவும், தம் பெறோர்கள், கடந்த கால போர் சூழலில் காயப்பட்டு இறந்து விட்டார்கள் என்றும், இப்பொழுது, தாயின் தங்கையுடன் வாழ்வதாகவும், இந்த பழங்கள் விற்பனையால் வரும் கூலியில் தான் தாங்கள் மூவர் வாழ்வதாகவும், தன் சித்தியும் ஒரு கால் இழந்ததால், தம் குடிசை வீட்டில் இருந்து பராமரிப்பதாகவும் கூறினாள். அவளின் கதை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா பகுதிகளில் இன்று பொதுவாக இருந்தாலும், அவள் வளைந்து நெளிந்து சொல்லும் அந்த விதம் உண்மையில் எவரையும் உருகவைக்கும்.
 
இது மாரி காலம். மழைத்தூறல் வெளியே கேட்டுக் கொண்டு இருந்தது. என்னால் பேருந்துக்குள் தேவையான சில்லறை பெறமுடியவில்லை. அந்த சின்ன பெண்ணின் முகத்தை பார்க்க பரிதாபமாகவும் இருந்தது. எனவே கூடையில் உள்ள முழு பழமும் எவ்வளவு என்று கேட்டேன். அது ஆயிரம் ரூபாய் என்றாள். என்னிடம் ஐயாயிரம் ரூபாய் தாள்கள் தான் இருந்தன. நீங்க இந்த கூடையுடன் பழங்களை வைத்திருங்கள் , நான் கீழே இருக்கும் கடைகளில் ஒன்றில் மாற்றிக் கொண்டு சீக்கிரம் வருவேன் என்று சொன்னார். நான் கொஞ்சம் தயங்கினாலும், மனைவி காசை கொடுங்க ' அவள் ஏழைதான், ஆனால் அவளிடமே நேர்மை இருக்கும்' என்று தான் ஆரம்ப பாடசாலையில் படித்த 'தேவதை ஏழைச் சிறுவனுக்கு அவனின் நேர்மையை மெச்சி வெகுமதி அளித்ததை ஆதாரமாக என்னிடம் சொல்லி, கொடுக்க தூண்டினாள். எனக்கு அவளின் ஆதாரம் சிரிப்புத்தான் வந்தது, என்றாலும் அவளின் அப்பாவித்தனத்தை சீண்ட விருப்பம் இல்லை. எனவே ஐயாயிரம் ரூபாய் தாள் ஒன்றை மனவியினூடாகவே அந்த சின்ன பெண்ணிடம் கொடுத்தேன்.
 
என்றாலும் என் மனம் அலைமோதிக் கொண்டு இருந்தது, நாம் அடிக்கடி ஒருநாளும் 'அவர் பணக்காரர், ஆனால் அவர் நேர்மையானவர்' என்று சொல்லுவதில்லை. ஆதரவற்ற மக்கள், பணத்தின் தேவையால் ஒழுக்கமற்ற முறையில் நடக்கலாம் என்று உளவியல் நம்பிக்கை எமக்கு சொன்னாலும், உண்மையில் ஏழை மக்கள் ஒட்டுமொத்தமாக தங்கள் சமூகத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதால், அவர்கள் ஏமாற்றும் வாய்ப்பு மிக குறைவு, ஆனால் பணக்கார மக்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள சுதந்திரத்தாலும் சமூகத்தில் இருந்து அதிக தனிமையிலும் இருப்பதாலும் ஒழுக்கக்கேடான நடத்தைகளில் ஈடுபட வாய்ப்புக்கள் அதிகம் என்ற என் எண்ணம் என்னை ஆறுதல் படுத்தியது.
 
ஒரு ஐந்து ஆறு நிமிடத்தில் பேரூந்து வெளிக்கிட ஆயுத்தமானது. இன்னும் அந்த சின்ன பெண் மிச்ச காசுடன் திரும்பி வரவில்லை, அவளின் கூடை இன்னும் என் மடியிலேயே, பேரூந்தில் இருந்த சிலர் , ஓட்டினரிடம் பகிடியாக , அங்கே ஒரு அன்பான மனிதர், மடியில் கூடையுடன் காத்திருக்கிறார் என நினைவூட்டினர். ஓட்டினரும் சிரித்த படி மேலும் இரண்டு மூன்று நிமிடம் இருந்துவிட்டு புறப்பட ஆயத்தமானார், மழை பெய்வதால் கீழே போய் பார்க்கவும் முடியவில்லை. நான் மனைவியின் முகத்தை பார்த்தேன். அவர் ஒன்றும் பேசவில்லை . என் தோளில் சாய்ந்துவிட்டார்.
 
எல்லோரும் இனி இந்த காசு கிடையாது என்று தாக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும், தாம் எதோ ஏமாறாதவர்கள் என்றும் பேசிக் கொண்டும் இருந்தார்கள். எனக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது காசு போனது அல்ல, அவர்களின் பேச்சுத்தான்!. நானும் கொஞ்ச நேரத்தால் அயர்ந்து தூங்கிவிட்டேன். மனைவி, அன்பே, கொழும்பு வந்துவிட்டது என்று தட்டி எழுப்பத் தான், கண் முழித்துப் பார்த்தேன்.
 
அடுத்தநாள் மாலை , நான் பயணம் செய்த பேரூந்து நிறுவனத்தில் இருந்து ஒரு தொலைப்பேசி எனக்கு வந்தது. நாம் பற்றுச்சீட்டு பதியும் பொழுது, பெயர் , தொடர்பு இலக்கம் கொடுப்பது வழமை. நான் என்ன எதோ என்று கொஞ்சம் பதறி, பதில் அளிக்க சென்ற பொழுது, அவர்கள் உங்கள் மிச்ச காசு, அந்த பெண் காவல் நிலையத்தில், பேரூந்து தரித்த நேரம், போகும் இடம் கூறி, தன் கதையையும் கூறி கொடுத்து உள்ளார். உங்கள் வங்கி இலக்கத்தை, காவல் நிலையத்துக்கு அறிவித்து அதை பெறலாம் என்றனர்.
 
அதற்கிடையில், இதைக்கேட்டுக்கொண்டு இருந்த என் மனைவி ஓடி வந்து, என் அபிப்பிராயம் என்றும் பிழைத்ததில்லை என்று நெஞ்சு நிமிர்ந்து பெருமையுடன் சொல்லி என்னைக் கட்டிப் பிடித்தார். அவளின் சந்தோசம் எனக்கு மகிழ்வு கொடுத்தாலும், அந்த சின்ன பெண்ணுக்கு என்ன நடந்தது என்று அறியவே ஆவல் கூட இருந்தது. எனவே அந்த குறிப்பிட்ட காவல் நிலையத்துக்கு அழைப்பு ஏற்படுத்தினேன்.
 
அப்ப தான் அவளின் மிகுதி கதை தெரியவந்தது. அவள் முதலில் அங்கே இருந்த ஒரு பெரிய கடைக்கு போனார், ஆனால் அங்கு மக்கள் கூட்டம் கூடுதலாக இருந்ததால், பின் பக்கத்தில் இருந்து விடுதி ஒன்றுக்கு போக முயன்றார், ஆனால் அங்கு காவலுக்கு நின்ற உத்தியோகத்தர் அவளின் உடையையும் கோலத்தையும் பார்த்து உள்ளே விடவில்லை, மழையும் ஒரு பக்கம். அதன் பின் , ஒரு வயோதிப மனிதன் கொஞ்சம் தள்ளி பாண் மற்றும் தின்பண்டங்கள் விற்பது அவளுக்கு ஞாபகம் வர, அங்கு, மழையில் நனைந்துகொண்டு போய், காசை மாற்றி , திரும்பி ஓடி வந்துள்ளார், ஆனால் அதற்குள் பேரூந்து போய்விட்டது.
 
அங்கு மற்ற பேருந்துகளில் பழங்கள் விற்றுக்கொண்டு இருந்த தங்கையிடம் இதை சொல்லி உள்ளார். தங்கை சின்ன பிள்ளைதானே, ஏன் அக்கா, அவர் தான் போய்விட்டாரே, நாம் இதை எடுத்து, ஒரு சில நாளாவது, கொஞ்சம் நிம்மதியாக சாப்பிடலாமே என்று தன் விருப்பத்தை கூறி உள்ளார். ஆனால், இந்த சின்ன பெண் அவளை வீட்டுக்கு போகும் படி கூறிவிட்டு, பக்கத்தில் இருந்த காவல் நிலையத்தில், தன் கதையையும் மற்றும் விபரங்களைக் கூறி மிச்ச காசை கொடுத்து, இதை அந்த ஐயாவிடம் கொடுக்கும் படி அழுது கொண்டு கொடுத்துள்ளார் என்று அறிந்தேன் .
 
"பணம் தான் ஏழையின் பிரச்சனையென்றால்,
அவனது நேர்மையின் மீதும் கலங்கம் கற்பித்து
ஏழையின் நிம்மதியைக் கெடுக்கும் கூட்டம்
என்று தான் அழியுமோ பராபரமே!."
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
318210157_10222133600831791_416062323953867051_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=jIEOb3xDHw4Q7kNvgG-k4us&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYBNSGrsINVh_jtTJy5qgM1-4B8F8I40PK2EUYUPrXNRFA&oe=666BBF03 318215680_10222133600951794_1653934944088937523_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=NpQaGaujcBcQ7kNvgFOvrEr&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYD0OJ5vOXqYi0xszYgiDyv7OCu3q5_otSdDpj8WbeP-NQ&oe=666BBEAA 318168931_10222133601631811_8580146391469987331_n.jpg?stp=dst-jpg_p403x403&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=B-fkWuh70XIQ7kNvgENF5Qs&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYDGuy2OVne5YhTQZl3UKHFIcg6IxbLZeGzCEQdA85Tg_Q&oe=666BA66A
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி எல்லோருக்கும் 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.