Jump to content

நினைவேந்தல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்குக் கையளிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 JUN, 2024 | 05:06 PM
image
 

இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல்  அமைதியின்மை அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூறுவது  குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

சிரேஷ்ட பேராசிரியர் ஜகத் வீரசிங்க, கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழக பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர, யாழ்  பல்கலைக்கழகப் பேராசிரியர் டி. சனாதனன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்  பர்ஸானா ஹனீபா, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் துஷாரி சூரியாராச்சி, நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மஹிந்த விதானராச்சி ஆகியோர்  உள்ளடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.

22-05-2023 ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் ஜனாதிபதி ரணில்  விக்ரமசிங்கவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

1983-2009 காலகட்டத்தில்  இலங்கையில் நடந்த ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டுக் கலவரங்கள் என்பவற்றினால் உயிரிழந்த  பொதுமக்கள், ஆயுதப்படை உறுப்பினர்கள், பொலிஸார், முன்னாள் போராளிகள் உட்பட அனைவரையும் நினைவுகூரும் வகையில் ஒருமைப்பாடு மற்றும்  நல்லிணக்கத்தின் அடையாளமாக  நினைவிடமொன்றை அமைப்பது குறித்து இந்தக் குழு ஆய்வு செய்தது. 

இதற்காக, நிபுணர் குழு கடந்த நாட்களில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில்  பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் அமர்வுகளை நடத்தியதுடன், ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான நிபுணர்களுடன் ஆலோசனைகளையும் நடத்தியது.

இந்த பொதுமக்கள்  அமர்வுகள் அந்தந்த பகுதிகளில் பணியாற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தேசிய ஒருங்கிணைப்பு  அதிகாரிகளினால் ஒருங்கிணைக்கப்பட்டன. பங்குபற்றிய மக்களுக்குத் தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்கத்திற்கான தமது அபிலாஷைகள், யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. 

நினைவேந்தல் செய்வதற்கான மக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று குழு வலியுறுத்தியதோடு  பல்வேறு குழுக்களும் தனிநபர்களும் நினைவேந்தல் மற்றும் நல்லிணக்க நிகழ்வுகளை வெவ்வேறு வழிகளில் முன்னெடுப்பதையும் இந்த அறிக்கை  சுட்டிக்காட்டியுள்ளது. வளமான அறிவுக் கட்டமைப்பையே இது வெளிப்படுத்துவதாகச் சுட்டிக்காட்டியுள்ள நிபுணர் குழு, நாட்டின் மோதல்கள் தொடர்பான கடந்த காலத்தைப் பற்றி அறிக்கையிடவோ, கருத்துத் தெரிவிக்கவோ அல்லது வேறுவிதமாகக் கையாளும் முயற்சியின் போது  இந்தப் பங்களிப்புகளைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும்   அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த சந்திப்புகளின் போது முன்வைக்கப்பட்ட பரந்த அளவிலான யோசனைகளைப் பரிசீலித்த பின்னர் இந்தக் குழு பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இலங்கையின் மோதல்கள் மற்றும் நல்லிணக்க முயற்சிகளுடன் உருவான  கலை மற்றும் கலாச்சார வெளிப்பாடுகளைப்  பாதுகாத்து வைக்கும்   குறியீட்டு ரீதியிலான  கட்டடமொன்றை அமைக்கவும்  குழு பரிந்துரைத்துள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காகக் கூட்டு அர்ப்பணிப்பை உறுதி செய்வதும் அனைத்து இலங்கையர்களிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும்.

குழுவின் அறிக்கையைக் கையளித்த போது ஜனாதிபதியின் செயலாளர்  சமன் ஏக்கநாயக்கவும் உடன் இருந்தார்.

WhatsApp_Image_2024-06-12_at_04.00.31.jp

WhatsApp_Image_2024-06-12_at_04.00.30.jp

 

நினைவேந்தல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்குக் கையளிப்பு | Virakesari.lk

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஒரு சமிக்கை காட்டினால் மட்டுமே ஜனாதிபதி உண்மையான மாற்றத்தை கொண்டுவந்ததாக கூற முடியும் - வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் 28 SEP, 2024 | 03:37 PM ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஒரு சமிக்கையை காட்டினால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டுவந்தார் என எங்களால் கூற முடியும் என்று வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி சி.ஜெனிற்றா தெரிவித்தார். இன்று (28) தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,  யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ளது. இறுதி யுத்தத்தின்போது சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் செல்வீச்சுக்களினாலும் விமான குண்டு தாக்குதலாலும் உடல் சிதறி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.  மேலும், இறுதி யுத்தம் முடிவடைந்த  நிலையில் குடும்பம் குடும்பமாக இடம்பெயரும்போது  தங்களது பிள்ளைகளை கையிலே ஒப்படைத்தனர். இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பள்ளி மாணவர்களும் பச்சிளங்குழந்தைகளும் ஆயுதம் ஏந்தி போராடியவர்களா? இவர்களுக்கு என்ன நடந்தது? கடந்த எட்டு தசாப்த காலமாக பதவி வகித்த எட்டு ஜனாதிபதிகளுக்கே யுத்தத்தை நடாத்திய பொறுப்பு இருக்கிறது. இந்நிலையிலே கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நிகழ்ந்தது என்று தெரியாமல் வீதியிலே போராடிக் கொண்டிருக்கிறோம். ஆட்சியாளர்கள் மாறுகின்றார்கள், ஆட்சியும் மாறுகின்றது. தற்போது மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது என்றாலும் கூட அது எந்த வகையில் எமக்கான மாற்றத்தை தரும் என்பது தெரியாது. சர்வதேச நீதி நெறிமுறைமையை மட்டுமே நாம் இன்று வரை நம்பியிருக்கின்றோம். குறிப்பாக உள்ளக முறையில் எந்தவித நம்பிக்கையும் இல்லாத காரணத்தினால் நாங்கள் சர்வதேச நீதிப் நெறிமுறைக்காகவே இதுவரை போராடிக்கொண்டிருக்கின்றோம்.  300க்கு மேற்பட்ட தங்களது பிள்ளைகள் எங்கே என்று தெரியாமல் போராடிக்கொண்டிருந்த தாய், தந்தையரை இழந்த நிலையிலும் அவர்களின் ஏக்கத்துக்காகவும் நாம் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கின்றோம். இலங்கையில் சர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடுபவர்களுக்கு ஒரு வேண்டுகோளினை விடுக்கின்றோம். எமது உறவுகள் எத்தனை பச்சிளம் குழந்தைகளையும், பாடசாலை மாணவர்களையும் இழந்து அவர்கள் மீண்டும் வருவார்களா என்ற ஏக்கத்துடனும் தவிப்புடனும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை  உங்கள் பிள்ளைகளாக நேசியுங்கள். எனவே, சர்வதேச சிறுவர் தினமான ஒக்டோபர் முதலாம் திகதியன்று வடக்கு, கிழக்கு தழுவிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க உள்ளோம்.  அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக காலை 10 மணிக்கு இந்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம். எனவே இப்போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இலங்கை அரசானது 75 வருடகாலமாக தமிழ் மக்களை ஏமாற்றி இருந்தது. பரம்பரை பரம்பரையாக 08 ஜனாதிபதிகள் மாறி மாறி ஆட்சி செய்திருந்த நிலையிலே எங்களுக்கு எந்தவித மாற்றங்களும் நிகழவில்லை. எனவே, எந்த நிலையிலும் எந்த ஒரு அரசையும் நம்பவில்லை.  காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக  ஜனாதிபதியாக பதவியேற்க முன்னர் குறிப்பிட்டிருந்தார்.  குறிப்பாக, சர்வதேச பொறிமுறையின் ஊடாக உண்மைகளை கண்டறிந்து, குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுக்கொடுத்து மீள் நிகழாமையை உறுதிப்படுத்தும் நிலையில் புதிய ஜனாதிபதியை பற்றி யோசிக்க முடியும். எந்த ஜனாதிபதி வந்தாலும் எமக்கான தீர்வு கிடைக்கப் பெற வேண்டும் என்பதையே சர்வதேசத்திடம் கேட்டுக்கொள்கிறோம். எனவே, புதிய ஜனாதிபதி ஏதாவது ஒரு சமிக்கையை காட்டினால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டுவந்தார் என எங்களால் கூற முடியும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/194991
    • நஸ்ரல்லாவை சாய்த்த இஸ்ரேல்: நிலை தடுமாறி அமைதியாய் நிற்கும் ஈரான் ஈரான் (Iran) ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா (Nasrallah)படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் (Israel) அறிவித்தும், ஈரான் அமைதி காத்து வருவது அந்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலின் அறிவிப்பிற்கு ஹிஸ்புல்லா, லெபனான் தரப்பிலிருந்தும் எவ்வித உறுதிபடுத்தப்பட்ட தகவல்களும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், இதற்கு எதிராக ஈரான் மற்றும் ஏமன் நாடுகளில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஈரானின் செயற்பாடு எவ்வாறானெதொரு பின்னணியில், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராக ஈரான் அமைதியாக இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, இத்தகைய சூழலில் ஈரான் கடுமையான பதிலடிகளை வழங்கும், ஆனால் இப்போது மிதவாதம் காட்டுவதாக உள்ளதாக ஈரானின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இது ஈரானில் உள்ள பழமைவாதிகள் மத்தியில் பாரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்காலத்தில் இது அரசியல் மாற்றங்களுக்கு காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இறுதி இலக்கு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்றிரவு நடத்தப்பட்ட தொடர் வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் மொத்தம் 18 பேர் முக்கிய தளபதிகள் இருந்த நிலையில்,17 பேரை இஸ்ரேல் ஏற்கனவே படுகொலை செய்தது. இறுதியாக நஸ்ரல்லா மட்டுமே உயிருடன் இருந்த நிலையில் தற்போது அவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.  https://ibctamil.com/article/death-of-hassan-nasrallah-pressure-on-iran-1727524484#google_vignette
    • இஸ்ரேலின் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா பலி- உறுதி செய்தது ஹெஸ்புல்லா அமைப்பு 28 SEP, 2024 | 07:08 PM ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் வான்தாக்குதலில் தனது தலைவர் கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளது. லெபனான் தலைநகரின் தென்புறநகர் பகுதியில் சியோனிஸ்ட்கள் மேற்கொண்ட துரோகத்தனமான நடவடிக்கையில் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார் என ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிற்கு எதிராக தொடர்ந்தும் போராடப்போவதாக உறுதியளித்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பு காசாவிற்கும் பாலஸ்தீனத்திற்கும் தொடர்ந்தும் ஆதரவளிக்கப்போவதாக தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/195018
    • அனுரவின்... தேசிய மக்கள் சக்தி கட்சி, நாளை 29.09.2024 அன்று புலம் பெயர் தமிழர்களுடன் இணையவழி (Zoom meeting)  சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அறிய முடிகின்றது.  கேள்வி பதில் அரங்கு. பங்கு கொள்வோர்... # இராமலிங்கம் சந்திர சேகர். (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) # சிவா சிவப்பிரகாசம். (மலையக தேசியக்குழு உறுப்பினர்) # எம்.ஜே.எம். பைசல்.  (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) # ஜனகா செல்வராஜ்.  (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) வழிப்படுத்தல்: எம். பெளசர். காலை 10:00 மணி - கனடா. மதியம் 2:00 மணி ஐரோப்பா. மதியம் 3:00 இங்கிலாந்து. மாலை 7:30 இலங்கை நேரப்படி இந்த சந்திப்பு நிகழும். Meeting ID : 831 9644 1969 Pass Code: 660804 Contact - Fauzer 0776613739 (Mob.) 0044 7817262980 (WhatsApp)
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.