Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'புகைப்படக்கருவி’ வரலாறு..

கேமரா‘ என்ற வார்த்தை லத்தீன் மொழியாகும் …’கேமரா’ என்றால் ‘அடைக்கப்பட்ட அறை’ என்று பொருளாகும்..

புகைப்படகலைக்கான தேடல் ஆறாம் நூற்றாண்டு முதலே தொடங்கிவிட்டது !…. பல தேடல், பல ஆராய்ச்சிகள் ….

Photography‘ என்ற வார்த்தையை முதலில் உச்சரித்தவர்
John .F.W.Herschel ” என்ற கிரேக்கர் ..
கிரேக்க மொழியில் ‘Photo‘ என்ற வார்த்தைக்கு ‘ light ‘ என்று பொருளாகும் ! மற்றும் Graphein என்றல் ‘draw’ என்று பொருளாகும் !
ஆக Photography (Photographien) என்றால் ஒளி ஓவியம் ( Light & Draw ) என்றாகும்..

சரி விஷயத்திற்கு வருவோம் !

புகைப்பட கருவியை கண்டுபிடித்தவர் யார் ?...

Ibn Hal – Haytham” இவரை ‘Alhazen‘ என்று அழைப்பார்கள் .. இவர் 965’ல் ஈராக் ‘ல் ,பஸ்ரா ( Basra ) என்ற இடத்தில் பிறந்தார் ..

ஒஹ் இவர்தான் புகைப்பட கருவியை கண்டுபிடித்தாரா ?
என்று நீங்கள் கேட்பது கேட்கிறது ..
ஆனால் அதுதான் இல்லை !!…

இவரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம் …

Ibn al-Haytham ( Alhazen)  Father of optics

Ibn al-Haytham ( Alhazen)
Father of optics

Ibn al – Haytham
Born: July 1, 965 AD, Basra, Iraq
Died: March 6, 1040, Cairo, Egypt

இவர் ஒரு இஸ்லாமியர்,விஞ்ஞானி,கணிதமேதை,மருத்துவர்.

இவரின் அதீத ஆராய்ச்சியால் மனநலம் பாதிக்கப்பட்டார் !
இவரை சில காலம் வெளியில் விடமால் ஒரு அறையில் அடைத்துவிட்டனர் !!
அப்பொழுதுதான் இவர் ‘சூரிய வெளிச்சம் எந்த தடங்கலுமின்றி நேர் கோட்டில் பயணிக்கிறது’ என்றும் ‘சூரிய வெளிச்சம் ஒரு பொருளின் மீது படுவதால்தான் நம் கண்கள் அதை பார்க்க முடிகிறது’ என்றும் கண்டுபிடித்தார் !! அதை வைத்து பல ஆராய்சிகள் செய்து ஒரு நூலை எழுதினார் ..
அந்நூலின் பெயர் ” Book Of Optics “…

A drawing from  ' The Book Of Optics'

A drawing from
‘ The Book Of Optics’

முதன் முதலில் ‘Camera Obscura’ எவ்வாறு என்பதை தெளிவாக விளக்கி கூறியவர் இவரே ! ஆம் … இவரது இருண்ட அறையில் இருக்கும் சிறிய ஓட்டையில் பாயும் சூரிய வெளிச்சம் சுவரில் ஏதோ மங்கலாக தெரிய , ஒரு குவியை அந்த ஓட்டையில் பொருத்தினார்.. ஆஹா ! என்ன அதிசயம் அவர் வீட்டின் எதிரே உள்ள வீட்டின் உருவம் தலைகீழாக இவர் அறையின் சுவரில் தெரிந்தது !! இதை விளக்கி நாலு பேரிடம் சொன்னார்.
இது உலகத்தின் முதல் ‘Pinhole Camera’ method ஆகும்..
அதை நூலாகவும் எழுதினார் !!

Ibn Hal – Haytham is the father of optics, first scientist & he only describe clearly about camera obscura

இவர் மறைவுக்கு பின்னர் (Book Of Optics )அந்நூலை கொண்டு Portuguese , French விஞ்ஞானிகள் குவி ,கண்ணாடி சம்பந்தமான ( Concave & Convex ) பல ஆராய்ச்சி செய்துவந்தனர் !! பயன் அடைத்தனர் !! இவர் புகைப்பட கருவி கண்டு பிடிக்கவில்லை என்றாலும் இவரது நூல் இல்லை என்றால் இன்று lens மற்றும் glass கிடையாது !! Lens இல்லாத காமெராவும் கிடையாது .. ஆக புகைப்பட கருவி கண்டுபிடிக்க வித்திட்டவரும் இவரே !!!

Camera Obscura Method

Camera Obscura Method

இவரது மறைவுக்கு பின்னர் பல மொழிகளில் இவரது ‘Book Of Optics‘ என்ற நூல் மொழிபெயர்க்கபட்டது.. அதை வைத்து பல ஆராய்சிகள் , பல வருடங்கள் உருண்டோடின !! இவர் விளக்கிய ‘Camera Obscura’ வை பலரும் சோதனை செய்தனர் !! அதை வைத்து சுவரில் தெரியும் உருவத்தை கொண்டு ஓவியம் தீட்டினர் !!

1800 ஆம் ஆண்டு வாக்கில் தான் இதன் கண்டுபிடிப்பு வேகம் அதிகரித்தது என்று சொல்லலாம் …பலரும் இந்த Camera Obscura’வை கொண்டு ஆராய்ச்சி செய்ய ….
குழப்பமும், கேள்வியும்தான் மிஞ்சியது !!
ஆம்.. பதிவு செய்யும் முறை மற்றும் எதில் பதிவு செய்வது என்று பலரும் குழம்பிபோயிருன்தனர் !!
சில விஞ்ஞானிகள் சோதனை கைவிட்டனர் …
ஆம் 8 மணி நேரம் ஒரு புகைப்படத்தை பதிவு செய்தால் !!!! பதிவு செய்த பிறகு ஒரு சில நிமிடமே இருக்கும் , பிறகு மறைந்துவிடும் !!!

Joseph  Nicephore Niepce

Joseph Nicephore Niepce

Joseph Nicephore Niepce ” என்ற ‘பிரெஞ்சு’ விஞ்ஞானி ஓவியம் வரைவதற்காக மட்டும் ‘Camera Obscura’ வை பயன்படுத்தி வந்தார்… மாறாக ஒருநாள், ஒரு ரசயானம் பூசிய உலோக தகடை கொண்டு அதில் வெளிச்சம் பாய வைத்தார்…

அது 1826 ஆம் வருடம்..உலகத்தின் முதல் நிலையான ,மறையாத புகைப்படம் உருவானது !

Worlds First Photograph by Joseph Nicephore Niepce (1926)

Worlds First Photograph
by Joseph Nicephore Niepce (1926)

Mr.Louis Dagurre

Mr.Louis Dagurre

மேலும் ஒரு பிரெஞ்சு விஞ்ஞானி ‘Louis Dagurre’ என்பவர் தனியாக சில சோதனைகள் செய்து சில சிறிய வெற்றிகளை கண்டார் …
1829 ஆம் வருடம் Joseph Nicephore Niepce மற்றும் Louis Dagurre இருவரும் கைகோர்த்து ஆராய்ச்சியில் இறங்கினர் !!

வெற்றி கிட்டும் நேரத்தில் Joseph Nicephore Niepce அவர்கள் உடல்நலம் சரியில்லாமல் இறந்துபோக ….. Louis Dagurre தனியே போராடி தங்கள் கண்டுபிடிப்பை உலகத்திற்கு காண்பிக்க பெரிதும் சிரமப்பட்டார் ..
1840 ‘தற்கு பிறகு Louis Dagurre வும் Joseph Nicephore Niepce யின் மகனும் பிரெஞ்சு அரசாங்கத்திடம் பல சோதனைகள் செய்து காண்பித்து உரிமம் பெற்றார்கள் !! அதற்க்கு ‘Dagurre Process’ என்று பெயரும் இட்டனர் ..

இது வரை Camera Obscura வாக இருந்த கருவி Daguree Camera என்றழைக்கப்பட்டது !! பிரெஞ்சு அரசாங்கம் 1850 ‘ல் மக்கள் பயன்பாட்டிற்காக அனைவரும் பயன்படுத்தலாம் என்று அறிவித்தது !!

1850 வாக்கில் நியூயார்க் ‘ல் மட்டும் 70 Daguree Photo Studio !!!

1841’ல் Negative to Positive process ‘ஐ Henry Fox Talbot என்ற ஆங்கிலேயரும் , 1889 ‘ல் ‘Cellulose Nitrate’ ரசாயனம் பூசப்பட்ட’ film Roll ‘ ஐ George Eastman ‘ம் கண்டுபிடித்தனர் !!

Mr.Steve Sasson with Worlds First Digital Camera ( 1975 )

Mr.Steve Sasson with
Worlds First Digital Camera ( 1975 )

இவர்தான் Mr .Steve Sasson. இவர் Eastman Kodak நிறுவனத்தில் Engineer ஆக பணிபுரிந்துகொண்டிருந்தார் . இவர் கடின உழைப்பாலும், புதிய முயற்சியாலும் உலகுக்கு டிஜிட்டல் கேமரா’வை முதன் முதலில் அறிமுகம் செய்தார் .
அவர் கையில் வைத்திருப்பதுதான் உலகின் முதல் டிஜிட்டல் கேமரா
1975 ஆண்டு வாக்கில் வெற்றிகரமாக கண்டுபிடித்து உலகிற்கு டிஜிட்டல் கேமரா ‘வை அறிமுகம் செய்து வைத்தார் .

ஆக புகைப்பட கருவியை கண்டுபிடித்தவர் இவர் , அவர் என்று தனி தனியே யாரையும் குறிப்பிட முடியாது …

பல நூற்றாண்டுகளாக தவமாக இருந்து தங்களது அறிய கண்டுபிடிப்பை நமக்கு தந்துள்ளனர் … இவ்வாறு வரலாறு கொண்ட காமெராவை நாம் எப்படி போற்றவேண்டும் …..

நம் நிகழ்வுகளை நினைவுகளாகும் இந்த கருவி கடந்து வந்த பாதையை நாம் ஒவ்வொருமுறை உபயோகிக்கும்போதும் நினைக்க வேண்டும் ….

https://shanmugarajaphotography.wordpress.com/2013/07/30/புகைப்படக்கருவி-வரலாறு/

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2024 at 11:10, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Ibn al-Haytham ( Alhazen)  Father of optics

Ibn al-Haytham ( Alhazen)
Father of optics

Ibn al – Haytham
Born: July 1, 965 AD, Basra, Iraq
Died: March 6, 1040, Cairo, Egypt

இவர் ஒரு இஸ்லாமியர்,விஞ்ஞானி,கணிதமேதை,மருத்துவர்.

இவரின் அதீத ஆராய்ச்சியால் மனநலம் பாதிக்கப்பட்டார் !
இவரை சில காலம் வெளியில் விடமால் ஒரு அறையில் அடைத்துவிட்டனர் !!
அப்பொழுதுதான் இவர் ‘சூரிய வெளிச்சம் எந்த தடங்கலுமின்றி நேர் கோட்டில் பயணிக்கிறது’ என்றும் ‘சூரிய வெளிச்சம் ஒரு பொருளின் மீது படுவதால்தான் நம் கண்கள் அதை பார்க்க முடிகிறது’ என்றும் கண்டுபிடித்தார் !! அதை வைத்து பல ஆராய்சிகள் செய்து ஒரு நூலை எழுதினார் ..
அந்நூலின் பெயர் ” Book Of Optics “…

A drawing from  ' The Book Of Optics'

A drawing from
‘ The Book Of Optics’

முதன் முதலில் ‘Camera Obscura’ எவ்வாறு என்பதை தெளிவாக விளக்கி கூறியவர் இவரே ! ஆம் … இவரது இருண்ட அறையில் இருக்கும் சிறிய ஓட்டையில் பாயும் சூரிய வெளிச்சம் சுவரில் ஏதோ மங்கலாக தெரிய , ஒரு குவியை அந்த ஓட்டையில் பொருத்தினார்.. ஆஹா ! என்ன அதிசயம் அவர் வீட்டின் எதிரே உள்ள வீட்டின் உருவம் தலைகீழாக இவர் அறையின் சுவரில் தெரிந்தது !! இதை விளக்கி நாலு பேரிடம் சொன்னார்.
இது உலகத்தின் முதல் ‘Pinhole Camera’ method ஆகும்..
அதை நூலாகவும் எழுதினார் !!

Ibn Hal – Haytham is the father of optics, first scientist & he only describe clearly about camera obscura

இவர் மறைவுக்கு பின்னர் (Book Of Optics )அந்நூலை கொண்டு Portuguese , French விஞ்ஞானிகள் குவி ,கண்ணாடி சம்பந்தமான ( Concave & Convex ) பல ஆராய்ச்சி செய்துவந்தனர் !! பயன் அடைத்தனர் !! இவர் புகைப்பட கருவி கண்டு பிடிக்கவில்லை என்றாலும் இவரது நூல் இல்லை என்றால் இன்று lens மற்றும் glass கிடையாது !! Lens இல்லாத காமெராவும் கிடையாது .. ஆக புகைப்பட கருவி கண்டுபிடிக்க வித்திட்டவரும் இவரே !!!

நல்ல தகவல்கள் சுவாரசியமாக வாசிக்க கூடியவாறு எழுதப்பட்டிருக்கின்றது. பகிர்விற்கு நன்றிகள்.

Ibn al-Haytham ( Alhazen) அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கின்றார் என்று இருட்டறையில் அடைக்கப்பட்ட பின் தான் இன்னமும் அதிகமாக ஆராய்ச்சிகள் செய்திருக்கின்றார் போல......இந்த உலகத்தை பரிதாபமாகவே பார்த்திருப்பார்.

Edited by ரசோதரன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.