Jump to content

வடக்கு, கிழக்கில் சிங்கள பாடசாலைகள் இல்லாமை கவலைக்குரியது - கெவிந்து குமாரதுங்க


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
20 JUN, 2024 | 07:48 PM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டில் 25 மாவட்டங்களிலும் தமிழ் மொழிமூல ஆரம்ப வகுப்பு பாடசாலைகள் காணப்படுகின்றன. இந்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கில் சிங்கள மொழி மூல பாடசாலைகள் இல்லாமல் இருப்பது கவலைக்குரியது.

இவ்வாறான நிலைமையில் எப்படி இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என  சுயாதீன எதிரணியின் உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) மகளிர் வலுப்படுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

யுனெஸ்கோ பிரகடனத்தில் பிள்ளைகளுக்கு தாய் மொழியில் கற்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். ஆனால், 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஏற்கனவே கேள்விகளை எழுப்பியுள்ளேன். 

கடந்த 5 வருடங்களை எடுத்துக்கொண்டால் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்படும்போது 25 மாவட்டங்களிலும் தமிழ் மொழிமூல வெட்டுப்புள்ளிகள் வெளியாகின்றன.

யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள்  நிறைவடைந்துள்ள பின்னரும் கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் சிங்கள வெட்டுப்புள்ளிகள் கிடையாது. வடக்கு மற்றும் கிழக்கில் சிங்கள மொழிமூலம் ஆரம்பக் கல்வி பாடசாலைகள் இல்லை என்பதனையே காட்டுகிறது.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களே உங்களின் மனசாட்சியிடம் கேட்டுப் பாருங்கள்... யுத்த காலத்திலும் கூட கொழும்பு ரோயல் கல்லூரியில் தமிழ்மொழி மூலம் வகுப்புகள் இடம்பெற்றன.

ஆனால், வடக்கு, கிழக்கில் சிங்கள மொழிமூலம் வகுப்புகள் ஏதும் இல்லை. மட்டக்களப்பில் எத்தனையோ சிங்கள கிராமங்கள் உள்ளன. எத்தனையோ சிங்கள பாடசாலைகள் பிரபுக்களால் அமைக்கப்பட்டன. ஆனால், அவை இல்லாது இருக்கின்றன. இப்படி இருக்கையில் இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை எவ்வாறு உருவாக்க முடியும் என்றார்.

https://www.virakesari.lk/article/186596

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்த புத்திஜிவிகளும் மத தலைவர்களும் வடகிழக்கில் இரத்த ஆறு ஓடவேண்டும் சம அந்தஸ்து தமிழருக்கு வழங்கக்கூடாது என்று கூப்பாடு போடும்போது, பாடசாலைகள் இருந்தென்ன விகாரைகள் இருந்தென்ன? இவையெல்லாம் உங்கள் அதிகாரத்தை காட்டவே பயன்படுத்தப்படுகின்றது. நல்லிணக்கம் என்பது உங்களைப்போல் மற்றவர்களையும் சமகாக மதித்து ஏற்று வாழ்வதே. சிங்களபாடசாலைகளும் பௌத்த விகாரைகளும் வரலாற்றை திரித்து, இன முரண்பாடுகளை போதித்து வளர்க்கிறது. இதில வடக்கு கிழக்கிலே பாடசாலை வந்தென்னை வராமலென்ன எந்த மாற்றமும் வராது உங்களை திருத்தாவிடில். பௌத்தர் இல்லாத இடத்தில விகாரை, மாணவர் இல்லாத இடத்தில் பாடசாலை என்று அடம்பிடிக்குதுகள். இதுக்குள்ள எங்களுக்கு  சிங்களத்தைப்பற்றி பாடம் வேற எடுக்கினம் சிலபேர். இலங்கையில் உள்ள வளங்கள் பெயராலும் துறைகள் பெயராலும் இன்னும் என்னென்ன இருக்குதோ அதுகள் பெயராலும் தமிழர் பூர்வீகங்களை கையகப்படுத்தி வேறு நாடுகளுக்கு தாரை வாருங்கோ.         

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.