Jump to content

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் உதவித் தலைவரானார் ஷாருஜன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

22 JUN, 2024 | 12:37 AM
image
 

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்யவுள்ள 19 வயதுக்குபட்பட்ட இலங்கை அணியின் உதவித் தலைவராக சண்முகநாதன் ஷாருஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி அணியின் தலைவரும் விக்கெட்காப்பாளருமாவார்.

தென் ஆபிரிக்காவில் இந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 5 போட்டிகளில் 118 ஓட்டங்களைப் பெற்றதுடன் 7 ஆட்டமிழப்புகளில் (5 பிடிகள், 2 ஸ்டம்ப்கள்) பங்களிப்பு செய்திருந்தார்.

இதேவேளை, 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக காலி, மஹிந்த கல்லூரி வீரர் தினுர களுபஹன நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்திருந்தார். 3 அரைச் சதங்களுடன் 196 ஓட்டங்களைப் பெற்ற அவர், 5 விக்கெட்களையம் கைப்பற்றியிருந்தார்.

அணியில் இடம்பெறுவோரில் புலிந்து பெரேரா, விஹாஸ் தெவ்மிக்க ஆகியோரும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடிய மற்றைய இரண்டு வீரர்களாவர்.

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கு முன்னாள் தேசிய வீரரும் கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரி கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான ருவன் கல்பகே நியமிக்கப்பட்டுள்ளார்.

துடுப்பாட்டப் பயிற்றுநராக தம்மிக்க சுதர்ஷனவும் வேகப்பந்துவீச்சுப் பயிற்றுநராக ஒமேஷ் விஜேசிறிவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுப் பயண தெரிவாளராக டில்ருவன் பெரேரா இங்கிலாந்து செல்லவுள்ளார்.

போட்டி விபரங்கள்

இங்கிலாந்துக்கு சனிக்கிழமை (22) காலை புறப்பட்டுச் செல்லவுள்ள 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி அங்கு முதலாவதாக 50 ஓவர் பயிற்சிப் போட்டி ஒன்றில் விளையாடும்.

பயிற்சிப் போட்டி  லோபரோ பல்கலைக்கழக மைதானத்தில்  ஜூன் 25ஆம் திகதி நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து செல்ஸ்போர்ட், க்ளவ்ட் கவுன்டி மைதானத்தில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நடைபெறும்.

தொடர்ந்து ஹோவ் செஞ்சரி கவுன்டி மைதானத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் ஜூலை 1ஆம், 3ஆம் திகதிகளில் நடைபெறும்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது நான்கு நாள் இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வோர்ம்ஸ்லியில் ஜூலை 8ஆம் திகதியிலிருந்து 11ஆம் திகதி வரையும் இரண்டாவது போட்டி செல்டன்ஹாமில் ஜூலை 16ஆம் திகதியிலிருந்து 19ஆம் திகதிவரையும் நடைபெறும்.  

19 வயதுக்குட்பட்ட இலங்கை குழாம்

தினுர களுபஹன (தலைவர் - காலி மஹிந்த), சண்முகநாதன் ஷாருஜன் (உதவித் தலைவர் - கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர்), சதேவ் சமரசிங்க (நாலந்த), புலிந்து பெரேரா ஷேஷான் மாரசிங்க (இருவரும் கண்டி தர்மராஜ), ஹிரான் ஜயசுந்தர (மருதானை புனித சூசையப்பர்), தினிரு அபேவிக்ரமசிங்க (மாத்தறை புனித சர்வேஷஸ்), மஹித் பெரேரா, நேதன் கல்தேரா (இருவரும் கல்கிஸ்ஸை பரி. தோமா), கயன வீரசிங்க (குருநாகல் மலியதேவ), திசர ஏக்கநாயக்க (கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார்), யூரி கொத்திகொட (காலி றிச்மண்ட்), மஞ்சுள சன்துக்க (மொறட்டுவை புனித செபஸ்தியார்), விஹாஸ் தெவ்மிக்க (கொழும்பு தேர்ஸ்டன்), துமிந்து செவ்மின, ப்ரவீன் மனீஷ (இருவரும் கொழும்பு லும்பிணி), ஹிவின் கெனுல (களுத்துறை திருச்சிலுவை), கீத்திக்க டி சில்வா (குருநாகல் புனித ஆனாள்)

https://www.virakesari.lk/article/186671

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • TNA யின் கீழேதான் எல்லோரும் ஒன்றாகப் பயணிக்க வேண்டும். அதுதான் தமிழ்த் தரப்பை பலப்படுத்த உள்ள ஒரே வழி.  உதிரிகளாக, சுயேட்சைகளாக, தனித் தனி அரசியற் கட்சிகளாக அல்லது TNA தவிர்ந்த வேறு எந்த விதமான கூட்டாக இருந்தாலும் அது தமிழர் தரப்பைப் பலவீனப்படித்துவதாகவே அமையும். 
    • விக்கினேஸ்வரன் ஏற்கெனவே அறிவித்து விட்டார், இளையோருக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக தான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என. எனவே தானும் அவருக்கு சளைத்தவரில்லை என்பதும், தான் வெற்றி பெறுவது இனிமேல் கடினம் என்பதும், தனது குலுமாசுகள் எடுபடாது, தன்னை தரகராக அனுர ஏற்படுத்த மாட்டார் என்பதும் அவருக்கு தெரியாததல்ல. ஆகவே பெற்றதே லாபம் பாதுகாப்போம் என நினைத்து சொல்கிறார், இன்னும் ஏதோ தனது கட்டுபாட்டில் கட்சி இருப்பது போலவும் தானாகவே விலகுவது போலவும் கதையளக்கிறார், ஆனால் இலகுவில் விலக மாட்டார்.     
    • அதெப்படி ?? அப்படியானால் அவர் இங்கே சொல்வது ஊருக்கு உபதேசமா??? மாற்றம் எதுவாயினும் நம்மிடம் இருந்தே ஆரம்பிக்கவேண்டும். 
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • Reincarnation ( மறுபிறப்புக் கொள்கை ), ஆத்துமா சாகாது, துன்பம், சாவு ஆகியவற்றுக்கு காரணம், மரணத்துக்கு பின்னான வாழ்வு என்று பல theological விவாதங்களுக்கு பதில் தேடிப் புறப்பட்டால் சைவ சித்தாந்தம் மிக மிக அழுத்தமாக தெளிவாக விடை கூறியுள்ளது  உதாரணமாக   புறநானூறு 192,இல் கணியன் பூங்குன்றன், "சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே;" என்று கூறுகிறான். அதாவது சாதலும் புதி தன்று, கரு விற்றோன்றிய நாளே தொடங்கியுள்ளது என்கிறான்.  அத்துடன்,பதிணென் சித்தர்களில் ஒருவரான சிவவாக்கி யார் அடித்துச் சொல்கிறார்.மறுபிறப்பு என்று ஒன்று இல்லை இல்லைவே என்று.  "கறந்தபால் முலைப்புகா,  கடைந்தவெண்ணெய் மோர் புகா, உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உட்புகா, விரிந்தபூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா,  இறந்தவர் பின் பிறப்பதில்லை, இல்லை, இல்லை இல்லையே!"  அதே போல,கம்பராமாயணத்தில், "நீர்கோல வாழ்வை நச்சேன், தார்கோல மேனி மைந்தா"  என கூறப்படுகிறது. அதாவது நறுமண பூக்களை மாலையாக அனிந்த அண்ணா, நீரின் மீதிட்ட கோலத்தை போன்றது வாழ்கை, இவ்வுயிர்ரை காக்க முனையேன்.ராமனுடன் போர் புரிந்து உயிர் விடவே என் விருப்பம் என்பான் கும்பகருணன். அப்படி என்றால், அதுமட்டும் அல்ல எம்  சிந்தனை, அனுபவம், வரலாறு [புராண மற்றும் அவைபோன்ற சமய கருத்துக்களை தவிர] போன்றவற்றையும் சேர்த்து அலசி உண்மையை பாருங்கள்  சைவ சித்தாந்தம் அதற்கு துணை போகும்  மேலும் சில உதாரணம் கீழே  இனி சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பான,  பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த, பிந்தைய சங்க காலத்து, கி பி 100 - 500 சேர்ந்த நாலடியாரில் சில பாடல்களை பார்ப்போம். உற்ற நண்பர்களின் தொடர்பு அற்றுபோகும், மகிழ்ச்சி யூட்டினாரும் குறைந்து போவர், ஆய்ந்து பார்த்தால் வாழ்வின் அர்த்தம் இருக்காது, அமைதியான ஆழ் கடலில் மூழ்கும் கலம் ஏற்படுத்தும் முனகல் போன்றது மரணத்தின் அழு குரல் என "நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார் அற்புத் தளையும் அவிழ்ந்தன;-உட்காணாய்; வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே ஆழ்கலத் தன்ன கலி" என்று நாலடியார் 12 சொல்கிறது. மேலும் நாலடியார் 4 இல், வாழ்க்கையில் எதை நிலையானது என்று நினைத்து மனம் அலை பாய்கின்றதோ அது நிலையற்றது. செய்ய வேண்டியது ஒரே காரியம் என்றாலும், அதை விரைந்து செம்மையாக முடியுங்கள், மரணம் எப்போது வேண்டு மானாலும் வரலாம், வாழ் நாள் அறுதியில் முடிந்து விடும். ஏனெனில், வாழ்நாட்கள் விரைந்து போய்க்கொண்டே யிருக்கின்றன. மரணம் எதன் பொருட்டும், யார் பொருட்டும் நில்லாது என்று வாழ்வு எவ்வளவு நிலை இல்லாதது என்பதை கூறுகிறது  "நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க; சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன் வந்தது வந்தது கூற்று."     அப்படி என்றால், அதை அனுபவரீதியாக விளங்கிக்கொள்ள முடியும் என்றால் எதற்கு வேண்டும்  ஆரிய இந்து மதத்தின் பிறப்பிடமான  வேத மதம் ??? பொய்களை இன்னும் வாழவைக்கவா ????
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.