Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"துரோகம்...!"
 
 
துரோகம் என்றால் என்ன ? கூடவே இருந்து குழி பறித்தல் அல்லது நம்பிக்கை கொடுத்து ஏமாற்றுதல். அதே நேரம் வாழ்க்கை, காதல் இரண்டும் ரோசாக்களின் படுக்கை அல்ல! இது அவளுக்கு எனோ புரியவில்லை. அவள் தன் காதலனை அந்த ஆற்றங்கரை ஓரத்தில் இன்னும் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக காணுவாள் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டாள். அவள் ஒன்றாக கூடி வாழ்ந்து இரண்டு மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. என்றுமே அவள் ஐயப்படும் மாதிரி அவன் நடந்ததும் இல்லை! என்றாலும் அவன், அவளுடன் கணவன் மனைவி உறவுடனே, காதல், காமம் இரண்டிலும் நெருக்கமாக அனுபவித்தே வாழ்ந்தான். அவளும் அவன் மேல் உள்ள நம்பிக்கையில், அவனின் விருப்பங்களுக்கு விட்டுக் கொடுத்தே தினம் தினம் வாழ்ந்தாள்.
 
ஒரு கட்டத்தில் பாடசாலையை கூட விட்டு விட்டு முழுநேர காதலியாகவே, திருமணம் செய்யா மனைவியாகவே, வாழத் தொடங்கினாள். ஒரு இரு சந்தர்ப்பங்களில், அவர்களின் பாதுகாப்பை மீறி கருவுற்றாலும், அவனின் வேண்டுதலின் படி அதை அவள் விருப்பம் இல்லாமலே கவலையுடன் கலைத்து விட்டாள். என்றாலும் அவனோ அவளின் தொடர் வேண்டுகோளான திருமணத்தை, அன்று இருந்த போர் சூழலில், தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தான். தான் பெரிய ஆடம்பரமாக செய்யவேண்டும், மற்றும் தன் பெற்றோரிடம் நேரம் பார்த்து சொல்ல வேண்டும் இப்படி அப்படி அவளுக்கும், அவளின் பெற்றோருக்கும் காரணங்கள் சொல்லிக் கடத்திக் கொண்டும், அதே நேரம் அவர்களுக்கு நல்ல நம்பிக்கை வரக்கூடியதாக பழகிக் கொண்டும் இருந்தான். அது தான் அவளால் இன்னும் நம்பமுடியாமல் திகைத்து நின்றாள்!
 
அவள் பதினோராம் வகுப்பில் படிக்கும் பொழுது தான் தன் காதலனை முதல் முதல் சந்தித்தாள். அவன் பட்டம் பெற்று தனது முதல் உத்தியோகமாக அந்த பாடசாலைக்கு ஆசிரியராக வந்திருந்தான். அவனின் முதல் பாடம் அவளுடன் தான் ஆரம்பித்தது. அவள் முதல் வரிசையில் அமர்ந்து இருந்தாள். அதனாலோ என்னவோ அவளே முதல் முதல் 'காலை வணக்கம் சார்' சொன்னது இன்னும் அவளுக்கு ஞாபகம் இருக்கிறது. அவனின் கண்கள் ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டது! அவள் அப்படி ஒரு அழகு! பெயர் கூட ரோசா தான்!!
 
பாடசாலை விட்டவுடன் தன் வீட்டிற்கு அவள் பொதுவாக நடந்தே போவாள். அவளின் அப்பா, அம்மா ஒரு சாதாரண நாள் கூலி வேலையே பார்த்து வந்தனர். அன்றும் அப்படியே நடந்து போனாள். அவள் பாடசாலையில் இருந்து கொஞ்ச தூரம் போய், ஒரு ஒழுங்கையில் திரும்பி நடக்கும் பொழுது ஒரு மோட்டார் சைக்கிளின் சத்தம் பின்னால் கேட்பதை உணர்ந்து கொஞ்சம் தள்ளி ஒழுங்கையின் கரைக்கு போனாள். ஆனால் அது அவளை கடந்து போகாமல், மெதுவாகி அவளுக்கு அருகில் நின்றது.
 
'ஹாய் ரோசா, உன் வீடு இந்தப் பக்கமா?' கதையை ஆரம்பித்தான் அவன். 'நானும் இந்தப்பக்கம் தான் போகிறேன், வீட்டை காட்டினால், உன்னை இறக்கிவிட்டு போகிறேன்' அவன் மீண்டும் கதையை ஆரம்பித்தான். ஆசிரியர் என்ற மதிப்பும், அதேவேளை கொஞ்சம் பயமும் அவளிடம் இருந்தது. 'வேண்டாம் சார், நான் தினம் நடப்பது போலவே நடந்து போய் விடுவேன்' அவள் அவனிடம் கூறி விட்டு கொஞ்சம் கெதியாக நடக்கத் தொடங்கினாள்.
 
பொல்லாத காலத்துக்கு மழையும் திடீரென தூவ தொடங்கி விட்டது.'எவ்வளவு தூரம் உன் வீடு?' அவன் மீண்டும் கேட்டான்.' ம்ம் இரண்டு மைல் சார்' அவள் கொஞ்சம் நனைந்தபடி கூறினாள். அவன் தன்னிடம் இருந்த கூடுதல் ஹெல்மெட்டை அவளிடம் கொடுத்து 'இதை போடு ரோசா, மழை பெருத்தாலும் பெருக்கும், பின்னால் ஏறு. இல்லா விட்டால் முழுக்க நனைந்துதான் வீடுபோவாய்' கொஞ்சம் உருக்கமாக சொன்னான். அவளும் மழை கூடத் தொடங்குவதை கண்டு, மோட்டார் சைக்கிளில் ஏறினாள்.
 
இது ஒரு கிராமப்புற ஒழுங்கை வீதி என்பதால் பள்ளங்கள் அங்கொன்று இங்கொன்றாக இருந்தன. எனவே மோட்டார் சைக்கிளும் அதில் ஏறி இறங்கி குலுங்கித் தான் சென்றது. இன்னும் ஒரு பக்கம் மின்னலும் இடிமுழக்கமும். ரோசாவின் கை தன்னை அறியாமலே, தன் பாதுகாப்புக்கு அவனின் இடையை இறுக்கிப் பிடித்துக் கொண்டது. அவளின் மார்பும் அவனின் முதுகோடு முட்டி மோதிக் கொண்டு இருந்தன. இருவரின் மனமும் பல காதல் உணர்வுகளை தங்களுக்குள் தேடிக்கொண்டும் ஆனால் மௌனமாக இருந்தன. அவளின் வீடு வந்ததும், அவளை அவன் இறக்கி விட்டான். இருவரும் அதற்கிடையில் ஓரளவு நனைத்து விட்டார்கள். ஆகவே, ரோசா அவனை பார்த்து ' சார், நீங்க உள்ளே வந்து ஈரத்தை துடைத்துவிட்டு போங்க, நல்ல நனைந்து விட்டீர்கள்' என்று கூப்பிட்டாள். அவனும் அப்படியே உள்ளே போனான்.
 
அன்று ஆரம்பித்த இருவருக்கும் இடையிலான நெருக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வளரத் தொடங்கி, அது அவர்களின் வாழ்க்கையையும் தீர்மானிக்கும் அளவுக்கு போய்விட்டது. அவளுக்கு அவனிடம் நல்ல நம்பிக்கை மேலோங்க, மற்றும், தாயும் தந்தையும் நாள் கூலிக்கு வேலை செய்வதால், அவர்கள் வீடு பொதுவாக பிந்திவருவதால், அவன் அவளை இறக்கிவிடுவதுடன், அவளுடன் அவள் வீட்டில் தனிய கொஞ்ச நேரம் பேசி பொழுது போக்கவும் தொடங்கிவிட்டான். அதுமட்டும் அல்ல, அவன் அவளுக்கு நிறைய நம்பிக்கை வரக்கூடியதாக பேசிப் பழகவும் தொடங்கினான். எனவே அவள் எந்த வித பயமோ அல்லது ஐயப்பாடோ இல்லாமல், அவன் நெருங்கி பழக அனுமதித்தாள். ஏன் அவளும் உண்மையில் அவனை இதயபூர்வமாக காதலிக்க தொடங்கினாள். அவளின் குடிசை ஒரு ஒதுக்குப் புறத்தில் இருந்ததால், அது அவளின் பெற்றோருக்கும் ஆரம்பத்தில் தெரியவும் இல்லை.
 
ஆனால், ஒரு ஆண்டு போக அவள் ஒரு குழந்தைக்கு கருவுற்றாள். அவள் மிகவும் மகிழ்வாக அந்த செய்தியை அவனிடம் கூறியதுடன், இனி பெற்றோரிடமும் சொல்லவேண்டும் என்றும், அவன் ஊர் அறிய தாலி கட்ட வேண்டும் என்றும் கெஞ்சி கொஞ்சி ஆலோசனையும் வழங்கினாள். ஆனால் அவனோ அதைக் கலைக்க அவளை தனியார் டாக்டர் இடம் கூட்டிப்போக முடிவு எடுத்தான். என்றாலும் அவன் அவளின் பெற்றோரை சந்தித்து, தான் கட்டாயம் அவளைத்தான் திருமணம் செய்வேன் என் உறுதி அளித்ததுடன், அவளை பாடசாலையில் இருந்து உடனடியாக விலக அறிவுறுத்தினான். அவளும் பெற்றோரும் அவனின் வார்த்தையை முற்றாக நம்பினர். அவன் அப்படித்தான் நன்றாக, பண்பாக அவர்களுடனும் அவளுடனும் பழகினான். அது மட்டும் அல்ல, அவளின் பெற்றோர் பெரிய படிப்பு படித்தவர்களும் அல்ல, ஒரு சாதாரண ஏழைக் கூலி வேலை செய்யும் குடும்பமே. அது அவனுக்கு வசதியாகவும் இருந்தது!
 
அவளுக்கும் பெற்றோருக்கும் விருப்பம் இல்லாவிட்டாலும், அவனின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவள் கருவை கலைத்தாள். அவன் இப்ப வெளிப்படையாகவே பெற்றோர் அறிய வந்து போவான். சிலவேளை அங்கேயே தங்குவான். அவர்களும் அவனை கணவனாக, மருமகனாகவே பழக தொடங்கினர், அவனும் மனைவியாக, மாமா மாமியாக பழகினான். அவன் இன்னும் தாலி கட்டவில்லை என்றாலும், தனிக்குடித்தனம் போகவில்லை என்றாலும், அவன் அவளை தன்னுடையவள் என்பது போலவே அன்பாக நடத்தினான்.
 
இருவரும் நெருக்கமாக கணவன் மனைவியாகவே தினம் அனுபவித்து வாழ்ந்ததுடன், அவள் அவன் மேல் உள்ள நேர்மையான அன்பு, பாசம், நம்பிக்கையால், தன் குடிசையில் பெரிய வசதி இல்லாவிட்டாலும், அவனுடன் சமாளித்து அங்கு வாழ்ந்தாள். அவனுடன் ஒரு தனி வீட்டில் வாழ, அவள் விரும்பினாலும், அதற்கு பெற்றோரின் முன் தாலி கட்டிய பின்பே செய்யலாம், இல்லாவிட்டால் பெற்றோரின் சம்மதம் கஷ்டம் என்று ஏதேதோ கூறி சமாளித்துவிடுவான். அப்படி என்றால் ஏன் கணவன் மனைவி போல் உறவு வைக்கிறாய், பெற்றோரின் அனுமதி இன்றி எனக் கேட்க அவளுக்கு துணிவு வரவில்லை. அது தான் அவளின் காதலின், நம்பிக்கையின் பலவீனமாக இருந்தது!
 
அவள் என்றுமே அவன் தன்னை விட, இன்னும் ஒரு பெண்ணை காதலிப்பன் என்றோ அல்லது தனக்கு புறம்பான வேறு ஒரு உறவு வைத்திருப்பான் என்றோ கனவிலும் நம்பவில்லை. அவன் மிக தந்திரமாக, மற்ற பெண்கள் எல்லாம் தனக்கு சகோதரிகள் மாதிரி என்று சந்தர்ப்பங்கள் வரும் பொழுது கூறிவிடுவான். அது மட்டும் அல்ல, வேறு ஆண்களுடன் அல்லது மற்ற பெண்களின் கணவருடன் உறவு கொள்ளும் பெண்களை கண்டாலே தனக்கு அருவருப்பு என்று கதைகூட விடுவான். பாவம் அவள் எல்லாம் நம்பிவிடுவாள்! 'எனக்கு என் மனைவியே முக்கியம் , அவளின் வாழ்வே என் வாழ்வு, மற்றவர்கள் எனக்கு முக்கியம் அல்ல, நீயே என் மகாராணி!' அவன் அடிக்கடி கூறும் வசனம் இது!
 
அவள் திகைத்தபடி அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டே அந்த ஆற்றங் கரை ஓரத்தில் நின்றாள். அவனின் புதிய நண்பி மிக நேர்த்தியான உடையுடன், வசதியான குடும்பத்தில் வாழ்பவள் போல் தெரிந்தது. அவள் ரோசாவை ஒரு நையாண்டியாக பார்த்தாள். 'நீங்க இவளை சட்டப்படி கல்யாணம் செய்யவில்லை தானே ? உங்களின் அறிவையும் வசதியையும் பார்த்து, தன் பெற்றோருடன் சேர்ந்து உங்களை ஏமாற்றி இருப்பாள் ?' அவனைப் பார்த்து கேட்டாள்.
 
அவன் தன் புது நண்பியின் கூந்தலை வருடியபடி, 'ம்ம் ஆமாம், நானும் கொஞ்சம் ஏமாந்து விட்டேன். அவள் அந்த முதல் நாள் ஈரம் துடைக்க குடிசைக்குள் கூப்பிடும் பொழுது, அவளை நல்ல ஒரு மாணவியாக நினைத்தே, அவளின் வேண்டுகோளை ஆமோதித்து உள்ளே போனேன்!' என்று கூறி புது நண்பியிடம் 'சொரியடா' என்றான்.
 
அவன் ரோசாவை பார்த்தான். 'இவளின் [ரோசாவின்] உள்நோக்கம் அப்ப எனக்குப் புரியவில்லை. துவாயை தந்துவிட்டு போய் இருக்கலாம். அதை விட்டு என் உடலை தானே இழுத்து துடைத்ததுடன், தன் உடலை, அதே துவாயால் என்னை துடைக்கும் படி கெஞ்சியும் கேட்டாள். அந்த பெண்மை அழகு என்னை அறியாமலே உணர்வைத் தூண்டி அவளுடன் இணைத்துவிட்டது' அவன் முற்றிலும் எதிர்மாறான பொய் ஒன்றை கட்டவிழ்த்து விட்டான். அவன் இந்த நிமிடம் வரை ஏமாற்றி ஆடிய நாடகம், நடிப்பு அவளால் இன்னும் நம்பவே முடியவில்லை. இப்படி ஒரு மனிதனா? அவளை அறியாமலே கண்ணீர் ஓடிக்கொண்டு இருந்தது.
 
'வாங்க என் அம்மா, அப்பா என் பிறந்த நாள் கொண்டாட பார்த்துக் கொண்டு இருக்கினம், இம் முறை உங்களையும் எல்லோருக்கும் அறிமுகப் படுத்தி பெரிதாக செய்யப் போகிறார்கள், உங்க அம்மா, அப்பாவையும் அழைத்துள்ளார்கள், இவளுக்கு காசு கொடுத்தால் பேசாமல் போகிறாள், இதுகள் எல்லாம் ஏன் தான் பிறந்ததுகளோ? ' என அவன் கையை உரிமையுடன் பிடித்து தனக்கு நெருக்கமாக அவனை இழுத்தாள்!
 
'இது பழைய பிற்போக்கு காலம் அல்ல, நம்பினேன், காதலித்தேன் என ஒருவனை அறியாமல் கல்யாணத்தின் முன் தன்னைக் கொடுக்க, இளம் வயதில் பெண் நண்பி, ஆண் நண்பன் இன்று சகயம். இதில் துரோகம் என்று ஒன்றும் இல்லை. அவரவர் தங்கள் எல்லைகளை, பாதுகாப்பை உணரவேண்டும், அதை விட்டுவிட்டு ... ' ரோசாவை பார்த்து அவள் கூறினாள். 'எதோ உன்னைப் பார்க்க பாவமாய் தோன்றுகிறது, இந்த கொஞ்ச காசு, இனியாவது ஒழுங்காக வாழு ரோசா! ' என்று அவள் கூறிக்கொண்டு, காசோலை ஏடு ஒன்று எடுத்து எழுத தொடங்கினாள். அவனோ தன் புது நண்பியை அணைத்தபடி மறு பக்கம் பார்த்தபடி நின்றான். காசோலை எழுதி முடிந்ததும், அவள் அதை கொடுப்பதற்கு நிமிர்ந்தாள், ஆனால் ரோசா அங்கு இல்லை, அவள் அவர்களை விட்டு விலகி பல தூரம் போய்விட்டாள்! உடலில் மட்டும் அல்ல, மனதளவிலும்!
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
329129991_897787091374488_2953524461682736808_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=h1LZdZXM8twQ7kNvgH2-qkF&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYBfC3wralf22C_7tK949Vri9DvREO9PPdRhl0QZMLeAhw&oe=667DF57F 329009182_699322951840929_3728509426749800377_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=q_SukHbqZacQ7kNvgFsO5wn&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYAi-b2cgDWI-AqHIXPtdt25eWzwy_FhwATeuBmVsS8caA&oe=667E167F 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.