Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"தமிழுடன் ஒரு விளையாட்டு" - 01
 
 
கைத்தொலை பேசி, முகநூல் போன்ற எந்த வசதியும் இல்லாத பண்டைய தமிழ் நகரம் ஒன்றில், ஒரு இளைஞன், தனது காதலை ஒரு இளம் பெண்ணிடம் தனிமையில் சந்தித்து சொல்ல விரும்பினான். அவளோ அவளின் தந்தையுடன் சென்று கொண்டிருந்தாள். தந்தைக்கும் மற்றும் வீதியால் செல்லும் மற்றவர்களுக்கும் தெரியாமல் தனது விருப்பத்தை அவளிடம், அவளின் பின் நடந்து கொண்டே உரையாடலாக கூறினான். அவளும் அதை நன்றாக விளங்கிக்கொண்டு, தானும் தமிழில் சளைத்தவள் இல்லை என்பது போல, விடுகதை யாகவே பதிலைக் கூறினாள். அதை புரிந்துகொண்டு, "நான் எப்போது வரட்டும்? " என்ற அவனின் அடுத்த கேள்விக்கும் அவள் மீண்டும் விடுகதையாகவே தமிழுடன் அழகாக விளையாடினாள். இப்போ அந்த தமிழுடன் ஒரு விளையாட்டை முழுமையாகப் பார்ப்போம்.
 
 
அவன்: "ஒருமரம் ஏறி
ஒரு மரம் பூசி
ஒரு மரம் பிடித்து
ஒரு மரம் வீசிப்
போகிறவன் பெண்ணே
உன் வீடு எங்கே?"
 
அவள்: "பாலுக்கும் பானைக்கும் நடுவிலே
ஊசிக்கும் நூலுக்கும் அருகிலே"
 
அவன்: "நான் எப்போது வரட்டும்?"
 
அவள்: "இந்த ராஜா செத்து
அந்த ராஜா பட்டம் கட்டிக் கொண்டு
மரத்தோடு மரம் சேர்ந்த பிறகு வந்து சேர்...."
 
ஒரு மரம் ஏறி - மரத்தாலான பாதுகையில் (செருப்பில்) ஏறி
 
ஒரு மரம் பூசி - சந்தன மரக் கட்டையைச் சந்தனக் கல்லில் தேய்த்து வரும் மர சாந்தை / சந்தனத்தை மேலே பூசி
 
ஒரு மரம் பிடித்து - (முதியவராகையால்) மர ஊன்று கோலைப்
பிடித்து
 
ஒரு மரம் வீசி - பனைமரத்தின் மட்டையாலான விசிறியை
(கையில் பிடித்து) வீசிக்கொண்டு போகிறவனின்
பெண்ணே உன் வீடு எங்கே உள்ளது?
என்று அவன் கேட்கிறான். அதை அவள் புரிந்து கொண்டு
 
‘பால் விற்கும் இடையர் வீட்டிற்கும் பானை செய்யும் குயவர்
வீட்டிற்கும் நடுவில், ஊசி செய்யும் கொல்லன் வீட்டிற்கும்
நூலைப் பாவோடும் சேணியன் (துணி நெய்பவர்) வீட்டிற்கும்
அருகில்’ என்று கூறுகிறாள்.
 
அவன் மகிழ்ச்சியுடன் ‘சந்திப்பதற்கு எப்போது வரலாம்’ என்று கேட்டான். அதற்கு அவள் ‘சூரியன் மறைந்து (இந்த ராஜா செத்து) சந்திரன் உதயமான பிறகு (அந்த ராஜா பட்டம் கட்டிக் கொண்டு), வீட்டிலுள்ளவர்கள் மரத்தால் செய்த கதவைச் சாத்தும் போது கதவும் மரத்தால் செய்த நிலையும் சேர்ந்து விடும், அந்தச்சமயத்தில் வந்து சேர்’ என்று கூறுகிறாள்.
 
எப்படி இருக்கிறது இந்த தமிழின் விளையாட்டு ??
No photo description available.
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
"தமிழுடன் ஒரு விளையாட்டு" - 02
[பண்டைய காலத்து சுந்தர கவிராயர் தனிப்பாடல்]
 
 
பண்டைய காலத்து சுந்தர கவிராயர் தனிப்பாடல் ஒன்றில் பதினொரு முறை 'மரம்' என்ற வார்த்தை திரும்பத் திரும்ப வருகிறது. ஒவ் வொருமுறையும் வெவ்வேறு மரத்தைக் குறிப்பதாக அமைந்து பொருள்படுகிறது. மரங்களைக் கொண்டு மன்னனின் வீரத்தையும், மகளிர் அவன் மேல் கொண்டுள்ள மதிப்பையும் விளக்குகிறார் சுந்தரகவிராயர். இவரது காலம், இடம் போன்ற வரலாற்று குறிப்புகள் ஒன்றும் அறியப்படவில்லை.
 
 
"மரமது மரத்திலேறி மரமதைத் தோளில் வைத்து,
மரமது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்தி,
மரமது வழியே சென்று, வளமனைக் கேகும் போது,
மரமது கண்ட மாதர் மரமுடன் மரமெடுத்தார்"
 
["The king climb on a horse carrying a spear on his shoulder
The king show a tiger - stab the tiger with spear and
The king went away, while return towards Palace
women show the king,they perform "Aalathi" to him "]
 
மரமது - அரச மரம் / peepal tree = (அரசு / KING)
மரத்திலேறி - மா மரம் / mango tree = மா என்பது குதிரை / HORSE
மரமதைத் தோளில் வைத்து - வேல மரம் = வேப்ப மரம் / margosa or neem tree = (வேல் / SPEAR){ஆலும் வேலும் பல்லுக்குறுதி}
மரத்தைக் கண்டு - வேங்கை மரம் / indian kimo tree, வேங்கை = புலி / tiger
மரமுடன் - ஆலமரம் / banyan tree
மரமெடுத்தார் - அத்தி மரம் / fig tree
 
Hence ஆல + அத்தி = ஆலத்தி, ie Aal + Athi = Aalathi
 
 
அரசன் ஒருவன். தன் தோளிலே வேல் தாங்கிக்கொண்டு குதிரையில் ஏறி வேட்டைக்குச் சென்றான். அங்கு அவன் ஒரு வேங்கைப் புலியைத் தன்னுடைய வேலால் குத்திக்கொன்றான். பின்னர் அரசன் தான் வந்த வழியே திரும்ம்பி தனது அரண் மனைக்குச் சென்றான். புலியைக் கொன்று வெற்றி வீரனாகத் திரும்பி வரும் மன்னனைக் கண்ட  மாதர்கள் அரசனுக்கு ஆலத்தி [ஆரத்தி] எடுத்து வரவேற்றனர் என்கிறது இந்த பாடல்.
12495216_10205701274833911_8707049302725736263_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=yhbs3RdrLl4Q7kNvgExaheV&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYAjhpDTSUmeXgtoLhrnbW3Y15XTWIyqlEhNTkNaNHYsAQ&oe=66AF41ED 12540884_10205701275553929_7755729338933900363_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=7Aohe6P7MakQ7kNvgHTl7zi&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYDlzaIvSGjPsfUCBkLzwMUEkXPtIZ7oPcOd8aXU2zf5jA&oe=66AF2D58 12509776_10205701276073942_6082119982880061300_n.jpg?stp=dst-jpg_p526x296&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=3xOGmngISxcQ7kNvgFHyM5D&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYDDgQPDRYbvuoWiJK6lNhGD1W3JUZTClnsEgHt9izWOtg&oe=66AF4AAF
 
 
 
 
  • நியானி changed the title to "தமிழுடன் ஒரு விளையாட்டு"
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றி  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.