Jump to content

முல்லைத்தீவில் கொக்கோ பயிர்ச்செய்கை வெற்றி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20240701-WA0003.jpg?resize=750,375

முல்லைத்தீவில் கொக்கோ பயிர்ச்செய்கை வெற்றி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கோ பயிர் செய்கை வெற்றியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைப் பொறுத்த வரையில் கொக்கோ பயிர் செய்கையானது இடை , ஈர வலயங்களில் அதிகளவாக பயிரிடப்பட்டு வருகின்றது.  இருப்பினும் உலர் வலயத்திலும் இப்பயிர் செய்கையினை மேற்கொள்ள முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் கொக்கொ செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதில் ஒரு முயற்சியாக டாக் சொக்லேட் செய்யும் பரிட்சாத்த முயற்சி வெற்றியளித்துள்ளதாகவும், இதன்மூலம் கொக்கோவில் இருந்து பல்வேறு வகையான பெறுமதி சேர் உற்பத்திகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

இதேவேளை கொக்கோவில் அதிகளவு இலிப்பிட்டு, புரதம், மாப்பொருள், நார்பொருள் மற்றும் அத்தியவசியமான அமினோ அமிலங்கள் என்பன காணப்படுவதால் கொக்கோ பயிர் செய்கையை  வடமாகாணத்தில் விஸ்தரிப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1390569

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கட்டுரை தகவல் எழுதியவர், குர்மிந்தர் கிரேவால் பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பஞ்சாப் மாநிலம், லூதியானாவுக்கு அருகில் உள்ள ராம்கர் சர்தாரன் கிராமத்தைச் சேர்ந்தவர் பக்ஷோ தேவி. பக்ஷோ தேவியின் சகோதரர் அஜய்குமார் அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். ஜனவரி 2024இல், ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்ணிவெடி வெடித்ததில் இறந்து போனார் அஜய்குமார். இந்திய ராணுவத்தின் இணையதளத்தின்படி, அக்னிவீர் திட்டத்தின் கீழ், இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு இந்திய ராணுவத்தில் பணியாற்ற தேர்வு செய்யப்படுகிறார்கள். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களில் 25 சதவீதம் பேருக்கு மட்டுமே நிரந்தர பணி வழங்கப்படும். அக்னிவீர் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்களின் ஆண்டுச் சம்பளம் ரூபாய் 4.76 லட்சத்தில் இருந்து தொடங்கி, சேவை முடிவடையும் வரை ஆண்டுக்கு ரூபாய் 6.92 லட்சம் வரை வழங்கப்படும். பணியிலிருந்து ஓய்வு பெறும்போது ரூபாய் 10.01 லட்சம் வழங்கப்படுகிறது. பணியில் இருக்கும் காலத்தில் அவர்களுக்கு ரூபாய் 48 லட்சம் மதிப்பிலான ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது. பணியின் போது இறந்தால் ரூபாய் 44 லட்சம் கூடுதல் மானியமாக வழங்கப்படுகிறது.   பட மூலாதாரம்,YT/RAHUL GANDHI படக்குறிப்பு,ராகுல் காந்தி தனது வீட்டிற்கு வந்தபோது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அக்னிவீர் திட்டத்தை ரத்து செய்வதாக கூறியதாக சரண்ஜித் சிங் கூறுகிறார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அக்னிவீர் திட்டத்தை எதிர்க்கின்றன. மக்களவை பொதுத் தேர்தல்களிலும், சபையின் முதல் அமர்விலும் தங்கள் அரசாங்கம் அமைந்தவுடன் அக்னிவீர் திட்டம் ரத்து செய்யப்படும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் கூறப்பட்டது. இது இந்திய ராணுவத்தின் திறன்களை மேம்படுத்துவதாக மத்திய அரசாங்கம் விவரித்தாலும், பல பாதுகாப்பு நிபுணர்களும் இந்த திட்டத்தை எதிர்க்கின்றனர். கடந்த திங்கட்கிழமை, 18வது மக்களவையின் முதல் அமர்வில் அக்னிவீர் திட்டத்தை கடுமையாக விமர்சித்தார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இது குறித்து அஜய் குமாரின் குடும்பத்தினர் கூறுவது என்ன? அவர்களுக்கு அரசின் நிதியுதவி முறையாக கிடைத்ததா? அஜய்குமாரின் குடும்பத்தினர் கூறுவது என்ன? பட மூலாதாரம்,GURMINDER GREWAL/BBC படக்குறிப்பு,அஜய்குமாரின் தந்தை கூலி வேலை செய்து வருகிறார் அஜய்குமாரின் தந்தை சரண்ஜித் சிங், ஜனவரி 18 அன்று மாலை தனது மகன் இறந்த செய்தியை அறிந்த தருணத்தை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார். மகனின் மரணம் அந்த வயதான தந்தைக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. "அன்று மாலை ஒரு கண்ணிவெடி வெடித்ததாக எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் மூன்று பேர் காயமடைந்தனர் என்றும், அவர்களில் ஒருவர் உங்கள் மகன் என்றும் கூறினார்கள்" என்கிறார் சரண்ஜித் சிங். சரண்ஜித் சிங்கிற்கு ஆறு பிள்ளைகள், அவர்களில் நான்கு பேருக்கு திருமணமாகிவிட்டது. அதில் இளையவர் அஜய்குமார். அஜய்குமாரின் மரணத்திற்காக தங்கள் குடும்பம் பெற்ற நிதியுதவி குறித்து சரண்ஜித் சிங் பேசுகையில், பஞ்சாப் அரசிடமிருந்து தனது குடும்பம் ரூபாய் 1 கோடி பெற்றுள்ளதாகவும், இதனுடன் சமீபத்தில் இந்திய ராணுவத்திடம் இருந்து ரூபாய் 48 லட்சம் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் அஜய்குமாரின் குடும்பத்தாருக்கு மத்திய அரசு மீது கோபம் உள்ளது. ''எல்லையில் பணியாற்றச் சென்ற எங்கள் மகன் இறந்ததற்கு, மத்திய அரசு எங்களுக்கு இரங்கல் கடிதம் கூட அனுப்பவில்லை'' என்கிறார்கள். அக்னிவீர் யோஜனா திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது. “தேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்றத்தில் பொய்யான கூற்றை தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூபாய் 48 லட்சம் மட்டுமே கொடுத்துள்ளனர்." “எங்கள் மகன் வீரமரணம் அடைந்த பிறகு அவருக்கான ஓய்வூதிய நிதி மற்றும் எந்த வசதிகளும் வழங்கப்படவில்லை. எங்கள் மகன் இறந்ததற்கு மத்திய அரசு எங்களுக்கு ஆறுதல் கூட கூறவில்லை." என்கிறார் சரண்ஜித் சிங்.   மக்களவையில் எதிரொலித்த அக்னிவீர் சர்ச்சை பட மூலாதாரம்,ANI கடந்த திங்கள்கிழமை மக்களவையில் பேசிய எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அக்னிவீர் திட்டத்தை கடுமையாக விமர்சித்தார். "ஒரு அக்னிவீரர் கண்ணிவெடியால் வீரமரணம் அடைந்தால் நான் அவரை தியாகி என்று சொல்கிறேன். ஆனால் இந்திய அரசும், நரேந்திர மோதியும் அவரைத் தியாகி என்று அழைக்கவில்லை. அவரை ‘அக்னிவீர்’ என்று அழைக்கிறார்கள். அவருக்கு ஓய்வூதியம் கிடைக்காது. அந்த வீட்டிற்கு இழப்பீடு கிடைக்காது. தியாகி அந்தஸ்து கிடைக்காது," என்று அவர் குறிப்பிட்டார். "இந்தியாவின் ஒரு ராணுவ வீரருக்கு ஓய்வூதியம் கிடைக்கும். ஆனால் அக்னிவீரரை சிப்பாய் என்று அழைக்க முடியாது. அக்னிவீர் ஒரு ‘யூஸ் அண்ட் த்ரோ’ தொழிலாளி. அவருக்கு ஆறு மாதங்கள் பயிற்சி கொடுத்து, ஐந்து ஆண்டுகள் பயிற்சி பெற்ற சீன வீரர்களுக்கு முன்னால் நிறுத்துகிறீர்கள்,” என்றார் ராகுல் காந்தி. "ஒரு ராணுவ வீரனுக்கும் மற்றொரு வீரனுக்கும் இடையே பிளவை உருவாக்குகிறீர்கள். ஒருவருக்கு ஓய்வூதியம், தியாகி அந்தஸ்து கிடைக்கிறது. மற்றவருக்கு ஓய்வூதியம், தியாகி அந்தஸ்து கிடைக்காது. பிறகு உங்களை நீங்களே தேசபக்தர் என்று சொல்லிக்கொள்கிறீர்கள். இது எந்தவிதமான தேசபக்தி,” என்று அவர் வினவினார். “நாட்டின் ராணுவத்துக்கு தெரியும், முழு நாட்டிற்கும் தெரியும், அக்னிவீர் திட்டம் ராணுவத்தின் திட்டம் அல்ல, பிரதமர் அலுவலகத்தின் திட்டம். அந்த திட்டம் பிரதமரின் யோசனை, ராணுவத்தின் யோசனை அல்ல என்பது ஒட்டுமொத்த ராணுவத்துக்கும் தெரியும்,” என்று அவர் குற்றம் சாட்டினார். ராகுல் காந்தியின் பேச்சை இடைமறித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “தவறான கருத்துகளை கூறி சபையை திசை திருப்ப முயற்சிக்கக் கூடாது,” என்றார். ”போரின் போது அல்லது எல்லைப் பாதுகாப்பு பணியின் போது அக்னிவீரர் மரணமடைந்தால் அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்,” என்றார் அவர். செவ்வாய்க்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதியும் ராகுலின் அறிக்கை தவறானது என்று விவரித்தார். இதன் மூலம் ஒரு பொய்யான பிம்பம் உருவாக்கப்படுகிறது என்றார் மோதி. அஜய்குமார் குடும்பத்தினருடனான ராகுலின் சந்திப்பு பட மூலாதாரம்,ANI கடந்த மே 29ஆம் தேதி, மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தி, மறைந்த அஜய்குமாரின் குடும்பத்தினரை சந்தித்தார். குடும்ப உறுப்பினர்களுடன் பேசிய அவர், அவர்களின் தேவைகள் மற்றும் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். ராகுல் காந்தி தனது வீட்டிற்கு வந்தபோது, அக்னிவீர் யோஜனா திட்டத்தை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்ததாகவும், தனக்கு ஆறுதல் கூறியதாகவும் சரண்ஜித் சிங் கூறுகிறார். தங்கள் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு உள்ளூர் எம்பி அமர்சிங்கிடம் தெரிவித்ததாகவும் சரண்ஜித் சிங் கூறினார். "ராஜ்நாத் சிங்கின் கூற்றில் எனக்கு உடன்பாடு இல்லை" என்று சரண்ஜித் சிங் தெரிவித்துள்ளார். ஏனைய இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியம் போன்ற பலன்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவும், அதனை பெற்றுத் தருமாறும் அஜய்குமாரின் குடும்பத்தினர் கோருகின்றனர். அஜய் குமாரின் சகோதரி பக்ஷோ தேவி, தனது சகோதரர் வழக்கமான முறையில் தான் ராணுவத்தில் சேர முயன்றதாகவும், ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஆவணங்கள் கிடைக்கவில்லை என்றும், அதனால் தான் அவர் அக்னிவீர் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர்ந்தார் என்றும் கூறுகிறார். சுமார் 6-7 மாத ராணுவ பயிற்சிக்குப் பிறகு, ஆகஸ்ட் மாதம் அஜய் குமார் வீட்டுக்கு வந்ததாகச் சொல்கிறார்கள். இதைத் தொடர்ந்து அவர் செப்டம்பர் மாதம் காஷ்மீரில் பணியமர்த்தப்பட்டார்.   அக்னிவீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இழப்பீடு பட மூலாதாரம்,GETTY IMAGES இறந்த அக்னிவீர் வீரர்களின் இழப்பீடு தொடர்பாக அரசின் அக்னிபத் யோஜனா திட்டத்தில் என்னென்ன பரிந்துரைகள் உள்ளன என்பதை இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் படிக்கலாம். இதன்படி, அக்னிவீர் திட்டத்தில் சேரும் வீரருக்கு அவரது பதவிக்காலம் முடியும் வரை 48 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படும். அக்னிவீர் திட்டத்தில் சேரும் ராணுவ வீரர்கள் இறந்தால், அவர்களுக்கான இழப்பீடுகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த பிரிவுகளுக்கு (X), (Y), (Z) என்று பெயரிடப்பட்டுள்ளது. ராணுவ சேவையின் போது ஏற்படும் விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் (Y) வகையில் சேரும். அத்தகைய சூழ்நிலையில், இறந்த ராணுவ வீரருக்கு 48 லட்சம் மதிப்பிலான ஆயுள் காப்பீடு, 44 லட்சம் இழப்பீடு, அவரது வேலையின் மீதமுள்ள சம்பளம் மற்றும் பிற நிதி உதவிகள் கிடைக்கின்றன. அக்டோபர் 2023இல் பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் உள்ள கோட்லி கலான் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான அம்ரித்பால் சிங், அக்னிவீர் திட்டத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டதாக இந்திய ராணுவம் கூறியது. அம்ரித்பாலின் குடும்பத்தினர் தங்கள் மகனுக்கு ராணுவத்தின் இறுதி மரியாதை கிடைக்கவில்லை என்று போராட்டம் நடத்தினர். ராணுவம் கூறுவது என்ன? பணியின் போது உயிரிழந்த அக்னிவீர் அஜய் குமாரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்ற புகாருக்கு ராணுவம் பதில் அளித்துள்ளது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், "அக்னிவீர் அஜய் குமாரின் உன்னத தியாகத்திற்கு இந்திய ராணுவம் தலை வணங்குகிறது. முழு ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. அக்னிவீர் அஜய் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டிய மொத்தத் தொகையில், 98.39 லட்சம் ரூபாய் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. " என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ''அக்னிவீர் திட்டத்தின் விதிகளின்படி, காவல்துறை சரிபார்த்த பிறகு உடனடியாக 67 லட்சம் ரூபாய் கருணைத்தொகை மற்றும் இதர பலன்கள் இறுதி கணக்கு தீர்வு மூலம் வழங்கப்படும். மொத்த தொகை சுமார் ரூ.1.65 கோடியாக இருக்கும். வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய உதவித்தொகை உடனடியாக வழங்கப்படுகிறது, அதில் அக்னிவீரர்களும் அடங்குவார்கள்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.   அக்னிபாத் திட்டம் என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் கீழ், அக்னிவீரர்கள் என்ற பெயரில் இந்திய ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் பணியில் இளைஞர்கள் இணைகின்றனர். அவர்களுக்கு இந்த நான்கு வருடங்களில் ராணுவப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படுகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களில் 25 சதவீதம் பேர் வரை ராணுவத்தில் நிரந்திர பணியில் சேர முடியும். இந்த இளைஞர்களின் வயது 17.5 முதல் 21 வயதுக்குள் இருக்க வேண்டும். எனவே, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறுவது அவசியம். ஆனால் ஒரு இளைஞர் 10ஆம் வகுப்பு படித்திருந்தால், பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற முயற்சிக்க பரிந்துரைக்கப்படுகிறது. அக்னிவீர் இளைஞர்கள் அரசாங்கத்திடமிருந்து தொடக்கத்தில் ரூபாய் 30,000 சம்பளம் பெறுகிறார்கள். பணியின் போது ஒருவர் 100 சதவீதம் மாற்றுத்திறனாளியாக மாறினால், அவருக்கு ரூ.44 லட்சமும், 75 சதவீத மாற்றுத்திறனாளியாக மாறினால் ரூ.25 லட்சமும், 50 சதவீத மாற்றுத்திறனாளியாக மாறினால் ரூ.15 லட்சமும் வழங்கப்படும். பணியில் இருக்கும்போது உயிரிழக்கும் இளைஞருக்கு அரசிடம் இருந்து ரூ.44 லட்சமும், மீதமுள்ள பணிக்கான ஊதியமும் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பயணத்தின் போது வழங்கப்படும் கொடுப்பனவுகள், ரேஷன்கள், சீருடைகள் மற்றும் கட்டணச் சலுகைகள் என அனைத்து சலுகைகளும் இவர்களுக்கும் வழங்கப்படும். ஜூன் 2022இல் மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை அறிவித்த பிறகு, ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் நாட்டின் பல பகுதிகளில் போராட்டம் நடத்தினர். ஜூன் 14ஆம் தேதி இத்திட்டம் அறிவிக்கப்பட்டு, ஜூன் 20ஆம் தேதி பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கிடையில், நாடு தழுவிய பந்த் அறிவிக்கப்பட்டதால், பல இடங்களில் ரயில்களும் நிறுத்தப்பட்டன. உண்மையில், இந்த திட்டத்தின் விதிகள் மற்றும் அதன் கீழ் வழங்கப்படும் வசதிகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இளைஞர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். https://www.bbc.com/tamil/articles/cydv3vg2rgzo
    • மேலே சிவப்பு எழுத்தில் கூறப்பட்டவை, இங்கு யாழில் விடுமுறைக்கு வன்னிக்கு போய் சும்மா மதவடியில் குந்தியிருப்போருடன் அரட்டை அடித்துவிட்டுவந்து அதுதான் முள்ளிவாய்க்காலில் இருந்த லட்சக்கணக்கான மக்களின் கருத்து என அம்புலிமாமா கதைசொல்லும் அப்பிரண்டிசுகளை இல்லைத்தானே!
    • 03 JUL, 2024 | 03:23 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) பெண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி போட்டி நிகழ்வின் நடப்பு ஒலிம்பிக் சம்பியனாக திகழும் அமெரிக்காவின் சிட்னி மெக்லாலின் லெவ்ரோன், தனது சொந்த உலக சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையை ஏற்படுத்தினார். அத்துடன் ஒலிம்பிக் அடைவு மட்டத்தை எட்டியதன் மூலம் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான தகுதியையும் அவர் பெற்றுக்கொண்டார். கடந்த ஞாயிறன்று நடைபெற்ற அமெரிக்க தடகள தகுதிகாணில் பெண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் பங்கேற்ற 24 வயதான சிட்னி மெக்லாலின் லெவ்ரோன் போட்டித் தூரத்தை 50.65 செக்கன்களில் நிறைவு செய்து, 50.68 செக்கன்கள் என்ற தனது முந்தைய உலக சாதனையை முறியடித்தார். இதன் மூலம் 5ஆவது தடவையாகவும் உலக சாதனையை முறியடித்தார். கடந்த ஞாயிறன்று நடைபெற்ற அமெரிக்க தடகள தகுதிகாணில் பெண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் 52.64 செக்கன்களில் நிறைவு செய்து இரண்டாமிடத்தை பிடித்த அன்னா கொக்ரல், 52.77 செக்கன்களில் நிறைவு செய்து மூன்றாமிடத்தை பிடித்த ஜெஸ்மின் ஜோன்ஸ் ஆகியோரும் மெக்லானினுடன் பாரிஸ் ஒலிம்பிக்குக்கான தகுதியை பெற்றுக்கொண்டனர்.   https://www.virakesari.lk/article/187600
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.