Jump to content

யாழில் முதியவரை கழுத்து நெரித்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது!


ஏராளன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
02 JUL, 2024 | 05:57 PM
image
 

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் முதியவர் ஒருவரை கழுத்து நெரித்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

63 வயதுடைய முதியவர் படுக்கையில் உயிரிழந்துள்ளதாக முதியவருடன் வசித்து வந்த இளைஞன் தெரிவித்துள்ளார். 

மரணத்தில் சந்தேகம் காணப்பட்டமையால், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதான வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.  

உடற்கூற்று பரிசோதனையில் முதியவர் கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.  

இந்நிலையில் முதியவருடன் வசித்து வந்த இளைஞனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர்  நேற்று திங்கட்கிழமை (01)   யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/187515

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "சித்திரம் பேசுதடி"     "சித்திரம் பேசுதடி சின்ன பெண்ணே சிறிதளவும் உனக்கு இதயம் இல்லையோ? கோத்திரம் கேட்கிறாய் காதலித்த பின்பு கோலம் ஒன்றை நீரில் போட்டேனோ?   பாத்திரம் அறியாமல் காதலை ஏற்றேனோ பாவியாய் இன்று அலைய விட்டாயோ?" "சாத்திரம் பார்க்கும் அழகு மாதே சாந்தமாய் கதைத்து கவர்ந்தது ஏனோ?   ஆத்திரம் வருகுதடி ஏமாந்து போனேனே ஆசையை வார்த்து மோசம் செய்தாயோ? காத்திரமான உறவு என்று நான் காலத்தை வீணாக்கி உன்னை நம்பினேனோ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • ஆறு மாதத்துக்கு கொழும்பு கத்தரிக்காய் கனடாவுக்கும் யுரோப்புக்கும் வராது சாரபாம்பு போல் இருக்கும் ஸ்பெயின் கத்தரிக்காய் தான் யுரோப்புக்கு. ஜமேக்காவில் தோட்டம் தப்பினால் கனடா மக்கள் கத்தரியை காணலாம். 
    • இந்த பராமரிப்பு இல்லங்களை உடனடியாக இழுத்து மூடினால் அங்கு தங்கவைக்கப்பட்டிருக்கும் சிறார்களின் கதி என்ன ?. அவர்களுக்கு தகுந்த தங்குவசதிகள் செய்துகொடுக்காமல் பராமரிப்பு இல்லங்களை பூட்டினால் சிறுவர்களின் பாதுகாப்பிற்கு அரசு உத்தரவாதம் வழங்குமா?இதுபோன்ற சிறுவர் இல்லங்களை தொடர்ச்சியான மேர்பார்வைக்குட்படுத்தி நிர்வாக சீர்கேடு ஏற்படாமல் தடுப்பது அரசின் கடமை.
    • நியாயம், மேலே உள்ள செய்திகள் வீரகேசரி, உதயன் மற்றும் தினக்குரல் செய்தித் தளங்களிலிருந்து இணைக்கப்பட்டுள்ளன. நீங்கள் குறிப்பிட்டதுபோல் தமிழ்வின் செய்தியை யாரும் நிரூபிக்கத் தேவையில்லை.  செய்தியின் பிரகாரம் இதற்குப் பொறுப்பான ஆறுதிருமுருகனும் அவர் சார்ந்த சிவபூமியுமே இங்கு கண்டனத்துக்கு உள்ளாகியதே தவிர சிறுவர் விடுதியின் அவசியம் பற்றியதல்ல. சிவபூமி பற்றிய விமர்சனங்களில் எதுவித மாற்றமுமில்லை. அது தவிர உங்கள் இரு கருத்துக்களிலும், நடைபெற்ற சம்பவத்தை - அது சட்டப்படி குற்றம் என்று தீர்க்கப்படாவிட்டாலும் கூட, இம்மியளவும் கண்டிக்கவில்லை என்பதையும் கவனியுங்கள். நன்றி.
    • இதைத்தானே கால காலமாய் சொல்கிரம் ஆனால் இங்கு என்ன நடக்குது என்றால் பெருமாள் சம்பந்தனை புகழ்ந்து எழுதினாலும் உடனே அதுக்கு எதிர்கருத்து போடுகிறேன் என்று கருத்தை படிக்காமல் எதிர்கருத்து போடுகிரம் எனும் போர்வையில் குப்பைகளை எழுதி கொட்டுவது வழமையானது . மற்றது இவ்வாளவு வயதாகியும் பதவியை வீட்டுகொடுக்காமல் இருந்தது அவர்களின் ஆதரவாளர்களின் உசுபேத்தல் சம்பந்தன் ஐயாவை விட்டால் திருகோனமலையில் வேறு யாரும் கிடையாது எனும் உசுப்பேத்தல் இனி யாருக்கு குத்துவார்கள் ? அதே போலத்தான் சுமத்திரன் விசுவாசிகளும் அவர் பிழை விடுகிறார் என்று தெரிந்தும் அவருக்கு ஆலவட்டம் பிடிப்பது . உண்மையில் எங்களின் உண்மையான அரசியல் பின்னடைவுக்கு முழுகாரணம் இந்த சம்பந்தன் சுமத்திரன் போன்ற அரசியல்வாதிகளுக்கு விசுவாசாமான கூட்டம் தான் . இந்த திரியிலும் ஏன் அனுதாபம் தெரிவிக்கவில்லை என்று ஒருவர் கோதாவில் இறங்கியதுதான் பிரச்சனை தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று தருகிறேன் என்று சொல்லி தான் பாரளுமன்றம் செல்கிறார்கள் சென்றபின் வழமை போல் சிங்கள அரசுக்கு சேவகம் செய்கிறார்கள் இதை சுட்டிகாட்டினால் உடனே அவர்களின் அடிவருடிகளுக்கு கோபம் பொத்து கொண்டு வருகிறது அதற்க்கு பதிலாக தேசிய தலைவர் மேல் பாய்வதும் புலிகளை இல்லாத பொல்லாத செயல்களை செய்ததாக மீண்டும் மீண்டும் இதே யாழில் எழுதுவது . முதலில் புலிகள் இல்லா விட்டால் தீர்வு கிடைக்கும் சொன்னவர்களை தேடிபிடித்து நாலு கேள்வி கேட்க தெரியாத வக்கற்ற ஜடம்கள் புலிகளை பற்றி விமர்சிக்கினமாம். இல்லை உங்கள் அரசியல் தலைவர்கள் சொன்னபடி நடக்கவில்லை ஏன் கேளுங்கள் மற்றபடி இந்த திரி 1௦௦ பக்கம் தாண்டினாலும் யானை  யானை தான் முயலுக்கு மூன்று கால்தான்.  
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.