Jump to content

குறளோடு கவிபாடு - "குறள்: 413" & "குறள்: 628"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குறளோடு கவிபாடு - "குறள்: 413" & "குறள்: 628"


"குறள்: 413"


"அறிவு பரந்து கிடக்கும் உலகில் 
அயராது அதைத் தேடி சுவைக்க
அக்கம் பக்கம் யார் நின்றாலும் 
அச்சம் துறந்து கேள்வி கேட்டு 
அமுது ஞானத்தை செவி உண்ணட்டும்!"


"குறைந்த உணவை நிறைவாக அருந்தி 
குற்றமில்லா உயர்ந்த அறிவு கொண்ட 
குறைகள் அற்ற ஆன்றோர் போல்
குமிழி வாழ்வில் நிறைவு அடைய 
குன்றாய் நிலைக்க கேட்டு அறிவாய்!!" 


"குறள்: 628"


"இன்பம் கண்டும் துள்ளிக் குதிக்காதவன் 
துன்பம் வருகினும் துவண்டு விடான்! 
வண்ணவண்ணக் கனவில் மகிழ்ந்து உறங்குபவன் 
சின்னசின்ன தோல்வியிலும் தன்னை இழப்பானே
கூனிக்குறுகி மூலையில் ஒதுங்கி விடுவானே!"

 

"எண்ணம் நல்லதாய் வாழ்வை நோக்குபவன் 
திண்ணம் கொண்ட கொள்கை உடையவன் 
மண்ணில் விழுந்தாலும் எழுந்து நிற்பானே!
விண்ணை முட்டும் மகிழ்வு வருகினும் 
கண்ணைத் திறந்து உண்மை அலசுவானே!"


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

451054042_10225567466796294_5125386181701688453_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=EITVpbMga-8Q7kNvgGAQczj&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYDswZYiaXGLCW5ZcU4i-O3M_68eYdNaEm2DT74iMyvJfQ&oe=669D98C0 451458336_10225585500367122_8375502278707447963_n.jpg?stp=dst-jpg_p600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=E7iFnwLTmYAQ7kNvgFFH1t2&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYBK1NUuotAPILr0PuWX6y0Q7Ugz7ZybmvFt9AIkvaGnUA&oe=669D793F

 

 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.