Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
நவீன கவிதை / "நிழல்"
 
 
"என்னை பின்தொடரும் இருண்ட நிழலே
நான் நடக்க ஏன் நீயும் நடக்கிறாய்
சிலவேளை முன்னுக்கு நிற்கிறாய்
மறுவேளை பின்னுக்கு நிற்கிறாய்
குட்டையாய் தெரிகிறாய்
நெட்டையாய் தெரிகிறாய்
ஏன் உனக்கு இந்த கோலம்?"
 
"வெளிச்சத்தில் கூட்டாளியாய் வருகிறாய்
இருட்டில் ஏனோ ஒழிந்து விடுகிறாய் ?
நிழலே , உன்னை பார்த்து ரசிக்கிறேன்
என்றாலும் உன் கோலம் உண்மை சொல்லாது
கை விரல்கள் விந்தை காட்ட
நீ நாயாவாய், குருவியாவாய்
எப்படி உன்னை நம்புவது?
நான் ஏங்கி துடிக்கிறேன் நண்பனே!"
 
"உன்னை மதிலில் பார்க்கிறேன்
ஒரு கத்தி என் முதுகை குத்துகிறது
என் முதுகின் வழியாக ஊடுருவுகிறது
திரும்பி பார்க்கிறேன்
என் நண்பன் கை நீட்டி
பின்னாலே அழைக்கிறான்!
ஏன் என்னை ஏமாறுகிறாய்
எதற்காக பொய் சொல்லுகிறாய்
எனக்கு மிகுந்த வலியை உண்டாக்குகிறது
போய் விடு என்னை விட்டு!!"
 
"என் நிழலே எனக்கு ஏன் இப்படி செய்தாய்?
என் முதுகில் ஏன் குத்தினாய்?
நான் உனக்கு என்ன செய்தேன்..
நான் நினைத்தேன் நீ என் நல்ல நண்பன் என்று
அன்பே நிழலே உனக்கு இடமில்லை
தொலைந்து விடு என்னிடம் இருந்து!!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
295623647_10221376437303176_1068519928664882930_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=eJdOwoTPAkAQ7kNvgFBb8hy&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYAEWHw51KNhQ1Sfz5OKcHUf076sP4_ygmdxoxs2VWVaBw&oe=66AE80C3 295603801_10221376438463205_3612008227496436190_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=7uU5ZKpe8bUQ7kNvgGk_G9O&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYC466xjvJ2VBTJAHxyvoBmtAsc3YFFbAgOz6DeL99Wlkg&oe=66AE83B8 295455714_10221376444103346_4552806272742539707_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=np61R-OaMIgQ7kNvgGVfSyT&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYCV-gLD7wyJmVNXYME2P9YPj6vSDWHwDW_3wud795LjyA&oe=66AE9E8F
 


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.