Jump to content

2025 இற்கான பொது மற்றும் வங்கி விடுமுறையின் வர்த்தமானி வெளியீடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3   02 AUG, 2024 | 10:33 AM

image
 

2025 ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் வங்கி விடுமுறையின் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

image_2247fbb8ec.jpg

https://www.virakesari.lk/article/190064

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நியாயம் said:

வருடத்தில் 25 நாட்கள் விடுமுறை தினங்கள். 😁

அண்ணை 26 நாட்கள், அதில் 4 நாட்கள் சனி மற்றும் ஞாயிறுகளில் வருவதால் 22 நாட்களே விடுமுறை நாட்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

அண்ணை 26 நாட்கள், அதில் 4 நாட்கள் சனி மற்றும் ஞாயிறுகளில் வருவதால் 22 நாட்களே விடுமுறை நாட்கள்.

கவலை வேண்டாம் தம்பி வடக்கு, கிழக்கில் வரும் கதவடைப்புக்கள், காலநிலை காரணமாக கிடைக்கும் உதிரி நாட்கள், அரசாங்கம் அவ்வப்போது வழங்கும் போனஸ் விடுமுறைகள், அசாதாரண அரசியல்/நாட்டு சூழ்நிலைகள் மூலம் கிடைக்கும் ஓய்வு நாட்கள் எல்லாம் சேர்த்து, அத்துடன் சனி, ஞாயிறு வார விடுமுறைகளுடன் இணைந்து உங்கள் பாடு கொண்டாட்டம் தான்.  எப்படியும் ஒரு நான்கு, ஐந்து மாதங்கள் ஓய்வு நாட்கள் பார்க்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருடத்திற்கு 25 பொது விடுமுறை தினங்கள் என்பது அதிகம் தான். இதில் 12 பூரணை நாட்களை எடுத்து விட்டால், உலகில் மற்ற நாடுகளின் அளவை விட சில நாட்களே அதிகமாக இலங்கையின் கணக்கும் வருகின்றது.

இதை விட இலங்கையில் தனிப்பட்ட விடுமுறை நாட்கள், சராசரியாக, மூன்று வாரங்களும் கொடுக்கப்படுகின்றது. வருடத்தில் வேறு சில நாட்களிலும் வேலையை அங்கு தவிர்க்கக் கூடியதாக இருக்கின்றது.  எல்லாவற்றையும் சேர்த்தால் Work - Life Balance என்பது வாழ்க்கைக்கு சாதகமாக அங்கு சரிந்து விடுகின்றது............🤣.

நாட்டின் மொத்த உற்பத்தியும், அங்கே நிலையான போதிய வருமானமும் இருந்தால், இப்படியான இலகுவான வேலைப்பளு இருந்தால் பாதகம் இல்லை. ஆனால் நாட்டின் நிலையோ பல வருடங்களாக வங்குரோத்து நிலையில் அல்லவா இருக்கின்றது.

அமெரிக்கா இதற்கு நேர் எதிர். பொது விடுமுறை தினங்கள் 12, ஆனாலும் பல தனியார் நிறுவனங்களில் எட்டு நாட்கள், பத்து நாட்கள், இப்படி அவர்களின் இஷ்டத்திற்குத் தான் பொது விடுமுறையாகக் கொடுப்பார்கள். பெரும்பாலான வேலைகளில், ஆரம்பிக்கும் போது, தனி விடுமுறையாக இரண்டு வாரங்களே கொடுப்பார்கள். அதையும் ஒரு சேர எடுப்பதில், கொடுப்பதில், தயங்குபவர்களும் உண்டு.

ஆனாலும் இங்கு Work - Life Balance என்று கட்டுரைகள் வந்து கொண்டேயிருக்கும், கருத்தரங்குகள் நடந்து கொண்டேயிருக்கும். 'யுத்த நிறுத்தம்' வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வது போல.........😃.            

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.