Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிள் (Apple) நிறுவனத்தின் அடுத்த படைப்பான ஐபோன் 16 ப்ரோ (iPhone 16) மற்றும் ப்ரோ மேக்ஸ் (Pro max) கையடக்க தொலைபேசிகள் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களை கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய வகை ஐபோன் கைப்பேசிகளை அப்பிள் நிறுவனம் வழக்கத்தின்படி செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெளியிடவுள்ளன.

இந்த வருடம் வெளியாகவுள்ள ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் தொலைபேசிகளில் செயற்றிறன் மற்றும் கமாராக்களில் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்கள் காணப்படும்.

பிரகாசமான திரை

அந்தவகையில், ஐபோன் 16 ப்ரோ அளவில் பெரிய மற்றும் பிரகாசமான திரை, சமீபத்திய A18 ப்ரோ சிப், மேம்படுத்தப்பட்ட கமரா சென்சார்கள், பெரிய பேட்டரி மற்றும் மேம்படுத்தப்பட்ட இணைப்புத் தேர்வுகளைக் (Connectivity Options) கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது.

அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் ஐபோன் 16 ப்ரோ வகைகள் | Iphone 16 Pro And Pro Max Features

ஐபோன் 16 ப்ரோவின் தனித்துவமான அம்சங்களில் ஒன்றாக பெரிய OLED திரைகள் (டிஸ்ப்லே) இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

குறிப்பாக, ஐபோன் 15 ப்ரோவில் காணப்படும் 6.1 இன்ச் திரை அமைப்பை விட, ஐபோன் 16 ப்ரோ 6.3 இன்ச் ஸ்க்ரீனை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஏஐ திறன்

இதற்கிடையில், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 6.9 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் என்று கூறப்படுகின்றது.

அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் ஐபோன் 16 ப்ரோ வகைகள் | Iphone 16 Pro And Pro Max Features

கூடுதலாக, ஐபோன் 16 ப்ரோவின் பெசல்கள் (திரையின் எல்லை) வெறும் 1.2 மிமீ அளவிலும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 1.15 மிமீ அளவிலும் இருக்கும்.

16 ப்ரோ வகைகளில் அப்பிளின் சமீபத்திய A18 ப்ரோ சிப் இடம்பெறுவதால் கனிசமாக செயல்திறனை உறுதிப்படுத்தும்.

குறிப்பாக, அப்பிள் பயனர்களுக்கு ஏஐ திறன்களை மேலும் வழங்குவதற்கும் சாதனங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் அப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) உடன் தனிப்பட்ட ஏஐ சேவைகளையும் இந்த பிராசஸர் கொண்டு வரும்.

கமரா சென்சார்கள்

ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் இன் கமரா சென்சார்கள் பெரிய மேம்படுத்தல்களைப் பெறுமெனவும் இரண்டும் 48 மெகாபிக்சல் (Mega Pixel) அல்ட்ரா-வைட் (Ultra Wide) கமராவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் ஐபோன் 16 ப்ரோ வகைகள் | Iphone 16 Pro And Pro Max Features

விலையைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்கள் இருந்தபோதிலும், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்-க்கான ஆரம்ப விலைகள் அவற்றின் முந்தைகைகளைப் போலவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், ஆப்பிளின் அடுத்த பெரிய வெளியீட்டை நெருங்க நெருங்க, தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் ஆப்பிள் ரசிகர்களிடையே புதிய ஐபோன் 16 வகைகளின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகின்றது.

https://ibctamil.com/article/iphone-16-pro-and-pro-max-features-1723238349

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் சிறப்பம்சங்கள், விலை என்ன? இந்தியாவில் எப்போது கிடைக்கும்?

ஐபோன் 16 சிறப்பம்சங்கள் என்ன?

பட மூலாதாரம்,APPLE NEWSROOM

படக்குறிப்பு, ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்
10 செப்டெம்பர் 2024, 06:55 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான நிகழ்ச்சி, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கியூபெர்டினோவில் உள்ள ஆப்பிள் பார்க்கில் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு "இட்ஸ் க்ளோடைம்" என்று ஆப்பிள் நிறுவனம் பெயரிட்டிருந்தது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தங்களின் ஐபோன்கள் மற்றும் இதர தயாரிப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட்டது.

ஐபோன் 16 சீரிஸில் உள்ள ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஏர்பாட்ஸ் 4, ஏர்பாட்ஸ் மேக்ஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 போன்ற கருவிகளையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸில் உள்ள சிறப்பம்சங்கள் என்ன?

ஐபோன் 16 வரிசையில் நான்கு ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அவை முறையே ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 மேக்ஸ் ஆகும்.

செயற்கை நுண்ணறிவுடன் (Artificial Intelligence (AI)) கூடிய போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப, தங்களின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான ஆப்பிள் இண்டலிஜன்ஸுடன் இந்த போன்களை ஆப்பிள் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஆப்பிள் இண்டலிஜன்ஸுடன் புதிய வடிவமைப்பில், சிறப்பம்சங்களைக் கொண்ட ஐபோன்களை நாங்கள் வெளியிடுகின்றோம் என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் டிம் குக் தெரிவித்தார்.

"ஜூன் மாதத்தில் இந்த ஆப்பிள் இண்டலிஜன்ஸை வெளியிட்டோம். மிகவும் சக்தி வாய்ந்த எங்களின் இண்டலிஜன்ஸ் மென்பொருள் பல்வேறு வகையில் மிகவும் வித்தியாசமானது" என்றும் அவர் கூறினார்.

எழுத்துகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களிலும் இந்த ஆப்பிள் இண்டலிஜன்ஸின் பங்களிப்பை பயனாளர்கள் நன்றாக உணர முடியும். இது மட்டுமின்றி, போனின் செயல்திறன் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. டிஜிட்டல் உதவிக்கான சிரியின் செயல் திறனும் முன்பை விட சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆப்பிள் இண்டலிஜன்ஸ் மக்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தினாலும் கூட, உடனடியாக பயனாளர்கள் இதனை பயன்படுத்த இயலாது. ஆப்பிள் இண்டலிஜென்ஸை சில மாதங்கள் கழித்தே இந்த போன்களில் அப்டேட்டாக வழங்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. முதலில் இதன் 'பீட்டா' அம்சம் சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு, மற்ற நாடுகளுக்கு கொஞ்சம்கொஞ்சமாக விரிவுபடுத்தப்படும்.

சிறப்பம்சங்கள் என்ன?

பக்கவாட்டில் கேமராவின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் பட்டனுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேமரா செயலிக்குள் நுழைவது, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுப்பது, ஸூம் செய்வது, ஒளி அளவைக் கூட்டுவது, குறைப்பது போன்ற அனைத்தையும் இந்த பட்டன் மூலமே செய்ய முடியும்.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எளிமையாக எடுக்க இந்த சிறப்பம்சம் உதவும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.

ஆப்பிள் இண்டலிஜன்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, விஷூவல் இண்டலிஜன்ஸையும் பயனாளர்கள் பயன்படுத்த இயலும்.

ஆக்‌ஷன் பட்டன்

இந்த போனில் மற்றொரு சிறப்பம்சமாக ஆக்‌ஷன் பட்டனை அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம். ஒரே நேரத்தில் ஒரு செயலியில் இருந்து மற்றொரு செயலிக்கு மாற இந்த பட்டனை அழுத்தினால் போதும்.

உதாரணத்திற்கு இந்த பட்டனை அழுத்தி நீங்கள் ஃப்ளாஷ்லைட்டை ஆன் செய்ய இயலும். கேமராவை இயக்க முடியும். போனை சைலண்ட் மோடுக்கு மாற்ற இயலும். இவை தவிர்த்த, கூடுதல் அம்சங்களும் இருக்கிறது.

ஏ18 சிப்

ஆப்பிள் இண்டலிஜென்ஸை இயக்கும் வகையில் ஏ18 மைக்ரோசிப்பை இந்த சீரிஸில் உள்ள போன்களில் ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு வந்த ஐபோன் சீரிஸ் போன்களைக் காட்டிலும் இரண்டு தலைமுறை முன்னிலையில் உள்ளது இந்த மைக்ரோசிப்.

ஐபோன் 15 சீரிஸில் ஏ16 பயோனிக் சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏ18 மைக்ரோசிப், பேட்டரியின் செயல்திறனை அதிகரிக்கும்.

கேமரா

ஐபோன் 16 சீரிஸில் இடம் பெற்றுள்ள ஐபோன் 16 ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்‌ஸல் இரட்டை கேமராக்களை கொண்டுள்ளது. டெலிபோட்டோ லென்ஸ் 2 மடங்கு காட்சியை விரிவுபடுத்தும் திறன் கொண்டது.

ஐபோன் 16 ப்ரோவில் 5 மடங்கு காட்சியை விரிவுப்படுத்த இயலும்.

 
ஐபோன் 16 சிறப்பம்சங்கள் என்ன?

பட மூலாதாரம்,APPLE NEWSROOM

படக்குறிப்பு, ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பேட்டரி, நிறம், திரை, சேமிப்புத்திறன் என்ன?

வீடியோ ப்ளேபேக்குடன் ஐபோன் 16 ஸ்மார்ட்போன் 27 மணி நேரம் இயங்கும். ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட்போன் 33 மணி நேரம் இயங்கும்.

ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ் ஆகிய இரண்டு போன்களும் கருப்பு, வெள்ளை, இளஞ்சிவப்பு, டீல் நீலம், அல்ட்ராமரைன் நிறங்களில் கிடைக்கும்.

ஐபோன் 16 ப்ரோ, ப்ரோ மேக்ஸ் போன்ற போன்கள், கருப்பு மற்றும் வெள்ளை டைட்டானியம், நேச்சுரல் டைட்டானியம், டெசர்ட் டைட்டானியம் நிறங்களில் கிடைக்கிறது.

போனின் திரையைப் பொருத்தவரை, ஐபோன் 16 ஸ்மார்ட்போன் 6.1 அங்குலம் அளவுடையது. ஐபோன் 16 ப்ளஸ் - 6.7 அங்குலத்திலும், ஐபோன் 16 ப்ரோ 6.3 அங்குலத்திலும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 6.9 அங்குலத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களின் சேமிப்பு திறனானது 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபியாக உள்ளது. ஐபோன் ப்ரோவில் 1 டிபி (1TB) சேமிப்பு திறன் கொண்ட போன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் ப்ரோ மேக்ஸ் போனில் 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி சேமிப்புத் திறன் கொண்ட போன்கள் கிடைக்கின்றன.

 
ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்

பட மூலாதாரம்,APPLE NEWSROOM

படக்குறிப்பு, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் போனின் விலை ரூ. 1,44,900

இந்தியாவில் எப்போது கிடைக்கும்? விலை என்ன?

இந்த அனைத்து ஐபோன்களையும் வாங்க நீங்கள் இந்தியாவில் செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் ஆர்டர் செய்யலாம். செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் டெலிவரி செய்யப்படும்.

இந்தியாவில் ஐபோன் 16 போனின் விலை ரூ. 79,900-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 16 ப்ளஸ் போனின் விலை ரூ. 89,900 ஆகும். ஐபோன் 16 ப்ரோ போனின் விலை ரூ. 1,19,900 ஆகவும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் போனின் விலை ரூ. 1,44,900 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் அறிமுகப்படுத்திய இதர தயாரிப்புகள் என்ன?

இந்த நிகழ்வில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு முன்பு வெளியான இதர கடிகாரங்களைக் காட்டிலும் இது மிகவும் மெல்லியதாக இருக்கும் என்று தெரிவித்த ஆப்பிள் நிறுவனம், இந்த கடிகாரத்தின் செயல்திறன் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.

உடற்பயிற்சியின் ஈடுபடும் போது பயன்படுத்திக் கொள்ள ஏற்ற கடிகாரமாக இது அறியப்படுகிறது. ஆரோக்கியம் குறித்த தரவுகளையும் பயனாளிகள் அறிந்து கொள்ள இயலும். செப்டமர் 20-ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் இந்த கடிகாரத்தின் விலை ரூ. 46,900 ஆகும்.

இது மட்டுமின்றி, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 என்ற கடிகாரமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. மேலும் ஏர்பாட்ஸ் 4, ஏர்பாட்ஸ் மேக்ஸ் 2 - இயர்போன்களையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

 
ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 சிறப்பம்சங்கள் என்ன?

பட மூலாதாரம்,APPLE NEWSROOM

படக்குறிப்பு, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 கடிகாரம்

முதல் ஐபோனின் விலை என்ன தெரியுமா?

2007-ஆம் ஆண்டு மேக்வேர்ல்ட் எக்ஸ்போ என்ற கண்காட்சியில் முதன்முறையாக ஐபோன்களை அறிமுகம் செய்து வைத்தார் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ். அப்போது அது பலராலும் விமர்சனம செய்யப்பட்டது.

ஆனால் இன்று உலகில் மிகவும் செல்வ செழிப்பு மிக்க நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது ஆப்பிள். ஒவ்வொரு ஆண்டும் ஐபோன் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

ஆப்பிள் வெளியிட்ட முதல் ஐபோனில் தொடுதிரை, அகலமான திரை, ஐபாட் மற்றும் இணைய ப்ரவுசர் சிறப்பம்சங்களாக இடம் பெற்றிருந்தன. 16 ஜிபி சேமிப்பு திறன் மற்றும் 2 மெகா பிக்சல் கேமராவை கொண்டிருந்தது அந்த முதல் ஐபோன்.

இந்த நாளுக்காக நான் இரண்டரை ஆண்டுகள் காத்துக் கொண்டிருந்தேன் என்று அறிமுக விழாவின் போது சி.என்.என். இதழிடம் பேசிய ஜாப்ஸ் கூறினார்.

முதல் ஐபோனின் விலை ரூ. 16,500 ஆக இருந்தது.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.